புதன், 3 டிசம்பர், 2014

சைக்கிளே  சைக்கிளே  உனக்கு நன்றி 
எத்தனை எத்தனை  இடங்களுக்கு 
பயணப்பட  உதவினாய் 
காற்றை மட்டுமே உனக்கு  கொடுத்தேன்
வேறு என்ன செய்தேன்  சில  வேளைகளில் 
எண்ணை  விடக்கூட மறந்ததுண்டு  நீ  அழுது 
காட்டிய பிறகே  ஒயில்  விட்டதுண்டு  
சக்கரங்களே  உங்களின் தொண்டே  தொண்டு 
நடுத்தர  மக்களுக்கு இருக்கும் மலிவு விலை 
போக்கு வரத்து  நீதானே   சைக்கிளே 
மிகவும் தொலைவிலுள்ள இடங்களுக்கும் 
செல்ல சலியாது உதவும்  நண்பன்  நீயன்றோ 
அன்று  மாமாக்கள் சித்தப்பாக்கள் 
 திருக்கேதீஸ்வரம்  கிளிநொச்சி 
வவுனியா  தொண்டமனாறு  வல்லிபுரம்
 நாகர்கோயில் சாவகச்சேரி என்று 
அராலியிலிருந்து  நீண்ட தொலைவில்  இருக்கும்
 இடங்களுக்கு உன்மீது அமர்ந்து
உழக்கி சவாரி செய்தார்களே  
உன்னை  நினைக்கையில்  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 
நன்றி  சைக்கிளே  நன்றி  .
 
ஓரு எழுத்து வார்த்தைகள் !!!
அ – எட்டு, அழகு, சிவன்
ஆ – பசு, ஆன்மா, எருது
இ – ½-யின் தமிழ் வடிவம்...
ஈ – ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி
உ – சிவன், ஆச்சர்யம், இரண்டு
ஊ – ஊன், இறைச்சி, உணவு
எ – வினா எழுத்து, ஏழு
ஏ – அம்பு, வினாப் பெருக்கம்,இறுமாப்பு
ஐ – தலைவன், அரசன், வியப்பு, ஆசான்
ஓ – மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை
ஒள – உலகம், ஆனந்தம்
க – கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா – சோலை, காத்தல், காவல்
கி – இரைச்சல் ஒலி
கு – பூமி, உலகம், குற்றம்
கூ – பூமி, உலகம், கூகை
கை – உறுப்பு, ஒழுக்கம், சிறகு,ஒப்பனை
கோ – அரசன், தலைவன், பசு, இறைவன்
கெள – கொள்ளு, தீங்கு, பற்று
சா – சாதல், இறத்தல், சோர்தல்
சி/சீ – இகழ்ச்சி, இலக்குமி,வெறுப்பு
சு – விரட்டுதல், சுகம், மங்களம்
சே – எருது, சிகப்பு, மரம்
சை – கைப்பொருள், அருவெருப்பு, ஒலி
தா – தருதல், கொடுத்தல், கேடு
தீ – நெருப்பு, சினம், தீமை, நரகம்
து – உண், அசைதல், உணவு
தூ – வெண்மை, தூய்மை, பகைமை
தே – தெய்வம், கடவுள், அருள்
தை – மாதம், தைத்தல், அலங்காரம்
நா – நாக்கு, நடு, அயலர்
நீ – முன்னிலை
நே – அன்பு, அருள், நேயம்
நை – நைதல், வருந்துதல்
நொ/நோ – துன்பம், நோய்
ப – நூறு
பா – பாட்டு, அழகு, பாதுகாப்பு
பி – அழகு, பிறவினை விகுதி
பீ – பெருமரம், மலம்பூ – மலர், பூமி, பிறப்பு
பே – நுரை, மேகம், அச்சம்
பை – பசுமை, கைப்பை, இளமை (பையன்)
போ – போதல், செல்லுதல்
ம – சந்திரன், சிவன்
மா – பெரிய, விலங்கு, மேன்மை,மாமரம்
மீ – மேலே, உச்சி, ஆகாயம்
மூ – மூப்பு, முதுமை, மூன்று
மே – அன்பு, மேன்மை, மாதம், மேலே
மை – அஞ்சனம், கண்மை, இருள், மலடு
மோ – மோத்தல், முகர்தல்
ய – 10 தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா – யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம்
வ – கால் பாகம்
வா – வருதல், தாவுதல், உண்டாக்குதல்
வி – அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ – மலர், விரும்புதல், பறவை
வை – கூர்மை, வைத்தல், வைக்கோல்
வௌ -கைப்பற்று, ஒலிக்குறிப்பு,திருகு

திங்கள், 1 டிசம்பர், 2014

பாலகத்து  மூச்சை  பனிக்கக்  கண்டாய் 
நான் பாதையில்  ஓடிய  அழகுகண்டாய்
நாலரை மணி விடியலிலே மெலிதாய் 
குளிர்ந்து பேருந்துக்காய்  காத்தது கண்டாய் 
 
 
படு பாதகத்து   பாரதப் பட்டாளம் 
சிங்கத்து செறுநர் வந்திருந்து
வதைகள் பல செய்த போதிலும் 
வணங்காமுடியாய்  வானம் நோக்கி
 உயர்ந்து  நிற்கும்  வடிவான  மரமே
 நீ  மானமுள்ளவன் .


எத்தனை ஆண்டுகள்  சென்ற போதிலும்
உன்னை கண்டவரெல்லாம்  மாண்ட போதிலும்
சுந்தர வடிவாய்  சுழலும்  சுடரே 
நின் வாழ்நாள்  நீண்டு  வளரட்டும்.


 
எண்ணிலடங்கா  உணர்வுகளுக்குள்
நின்   இன்ப துன்ப வேளைகளும்   அடக்கம்
கண்ணில்லா  மனிதர்கள் கொண்ட
கோலங்களுக்கு நீயே சாட்சி
உனக்கு மட்டும் வாயிருந்தால்
உலகத்து   ஊடகங்கள்
உன் பக்கம் வந்திருக்கும்.


பேயோ  இல்லை பிசாசோ
என்று நீ எண்ணியிருப்பாய்
இந்தியத்தின்  ஈனப்பட்டாளம் கண்டு
உன்னருகில்த்தானாமே  அந்த
நாகங்கள்  குடியிருந்தன  கொஞ்சக்காலம்
கொடுமைகளின்  சீற்றம்  உன்னை
அசைக்கவில்லை - நீ வாழ்க வாழ்க .

ம,இரமேசு

 
அன்றைய கால மக்கள்  எந்தத் துறையில் இருந்தாலும் மிளிர்ந்தார்கள் காரணம் செய்யும் தொழிலில்  பயம் பக்தி  மரியாதை கொண்டிருந்தார்கள்.   இன்று கதை நன்றாக  இருந்தால் எந்த  ஆளும் நடிக்கலாம் படம்  வெற்றி பெறும் - இப்பொழுது  இருக்கும் நடிகர்களில் எவருக்கு முகபாவத்தை மாற்றி மாற்றி காட்டத்தெரியும்,   சிவாஜி  எம்ஜிஆர்  எம் ஆர் ராதா நாகேஷ்  நம்பியார் எஸ் வி சுப்பையா  பாலையா  முத்தையா   ரங்கராவ்  வீரப்பா அசோகன்  மனோகர்  ராமதாஸ்  போல் .  ஆனால் கோடிக்கணக்கில் 
சம்பளம்   வாங்கி பெரிய  பெரிய  வீடுகள் கட்டி  சொத்துக்கள் சேர்த்து  வைத்திருக்கின்றார்கள், இதில் முதல்வர்  ஆசை வேறு -  உலகநடப்பு,   உள்  வெளி  அரசியல் விவகாரம் , தமிழ்நாட்டு  கிராமங்களின் நிலை,  மனிதர்களின்  வாழ்வுநிலை,  நதிகள், குளங்கள்  பற்றிய  கணக்கு புள்ளிவிபரங்கள்  என்ன என்று தெரியுமா ,  பதவிக்கு வந்தால் அவற்றைப் பற்றி  அறிய ஆளை வைப்பார்கள்  அவ்வளவே -  ஐயா டி எம் எஸ்  மரணச் சடங்கில் சிவாஜி  பிள்ளைகள் ஊரில் இருந்தும்  கலந்து கொள்ளவில்லை.  இது  சிவாஜி குடும்பத்துக்கே இழுக்கு.   நன்றி மறந்த செயல்,  சிவாஜியின்  பாடல் நடிப்புக்கு குரலால்  உயிர்கொடுத்த  ஒப்பாரும்  மிக்காருமில்லா பாடகனுக்கு அவர்கள்   செலுத்திய  நன்றிக்கடன்  இதுதான்.

  தமிழ் நாட்டின் கலைத்துறையில் சிவாஜி எம் ஜி ஆருக்கு  ஈடு இணையான கலைஞன்  பாடகர் திலகம் டி எம் எஸ் . நடிகர்களுக்கு மட்டுமின்றி  இரசிகர்களுக்கும்  பாலமாக  இருந்து பாடிக்கொடுத்தவர்  டி எம் எஸ்  ஐயா என்றால் மிகையில்லை.    கச்சேரிகள் ஈட்டிய பொருளை    ஏழை மக்களுக்கு கொடுத்து உதவிய மாமனிதர். அவர் கோடிகளை  கொண்ட  கலைஞனாக  இல்லாததனால்  எல்லோரும் மறந்துவிட்டார்கள், அந்த மகா  மனிதனை கலைஞனை  என்பது தமிழ் நாட்டுக்கே வெட்ககேடு, இழுக்கு. அவர் மட்டும் வேறு நாட்டிலோ பக்கத்து மாநிலங்களிலோ  பிறந்திருந்து   பாடியிருந்தால்  அவரை  மிகவும் போற்றிக்  கொண்டாடியிருப்பார்கள்.  தமிழ் நாட்டில்  விளம்பரம் செய்பவர்களுக்கும்,  இனிப்பாய் பேசி  நாடகமாடுபவர்களுக்குமே  காலம். அவர்மட்டும் கோடீஸ்வரனாக  இருந்து நயமாக  நடித்துப்பேசியிருந்தால்  எல்லோரும் சொந்தம் கொண்டாடிக் கொண்டு  சென்றிருப்பார்கள், தங்கத்தேரில் வைத்து  இழுத்திருப்பார்கள். குறிப்பாக  ஒருவர்  சொல்லுவார்  பெரிய கலைஞர்களைப் பார்த்து "அவரின் பிள்ளை நான்" என்று.  எங்கே தொலைந்தார் அந்த ஆள்,  மரணச் சடங்குக்கே சமுகமளியாது?  ஒரு  மாபெரும்  தமிழ்நாட்டின்  குரல் வித்தகன் 50 ஆண்டுக்கும் மேலாக   பாடி  மக்களை மகிழ்வித்தவர் மரணித்தார் ,  அதற்கு  அஞ்சலி  அன்றில் இரங்கல்  தெரிவிக்கக்கூட   எண்ணாது தாமும் கலைஞர்கள்  என்ற பெயரில்  வாழ்கின்றார்கள் தமிழ் நாட்டில்.  இந்த  அலட்சியத்தை கண்டிக்க எந்தப்  பத்திரிகையும் இல்லை தமிழ்நாட்டில்  என்பது மாபெரும்  வேதனை.

டி எம் எஸ்,  பக்தன்
ம.இரமேசு