வியாழன், 31 ஜூலை, 2014



அமு  நாட்டில ஆசாக்   காம்பில
(யாழ் பேச்சு வழக்கில் எழுத்து )

உண்மையாத்தான்  கேக்கிறன்  நாங்கள்  என்ன  ஆக்கள்    எங்களுக்கெண்டு  ஒரு  கொள்கை  கோட்பாடு  ஒண்டுமில்லாத   ஆக்கள்  - ஏனுப்பிடி  சொல்றீர்  எண்டு  நீங்கள்  கேக்கலாம்,  பின்னைப்பாருங்கோ

  அமு  நாட்டில ஆசாக்   காம்பில அகதியா எங்கள  இருத்தினாங்கள்,  எங்களோட  பாகிஸ்தான்  பங்களாதேஸ்  சீக்கியர்  லெபனான்  எண்டு எல்லா நாட்டுக்காரரும்  அந்தக் காம்பில  இருந்தாங்கள்  எங்கடை  ஆக்கள்தான்  அதிகம்  ஆட்சியும் அதிகாரமும்  எங்கண்டை  ஆக்களிட்டத்தான்  அந்நியருக்கு சிரிச்சு  சிரிச்சு சேவகம்  செய்யிறதில  எங்களை  அழிக்க ஆரால முடியும்,  அந்தக்காலத்திய பாட்டன்  பூட்டன்  ரத்தம் சும்மாவே!!  ஊரில  இருக்கையுக்குள்ள ஒருநாள்  அப்புவிட்ட  கேட்டன்  எங்களுக்கு  எப்பிடியணை  உவ்வளுவு  வயலுகளும்  வளவுகளும்  வந்ததெண்டு,  அதெல்லாம்  அப்புக்காத்தா  உத்தியோகம்  செய்த  தன்ர  தேப்பன்  வாங்கிப்போட்டதுகள்  எண்டு  கிழவன்
சொல்லிச்சுது  அடுத்தநாள்  ஆச்சியிட்ட  அப்பு  சொன்னது  உண்மையே  எண்டு  கேட்டன்  மனிசி
அங்காலையும் இஞ்சாலையும்  பாத்துவிட்டு,  கேசுக்கு  காசு கட்ட  முடியாத  சனங்களிட்ட  ஏமாத்தி
மிரட்டி பறிச்சுப் போட்டதுகள் தான் உவ்வளவும்  எண்டு  ஆச்சி  உண்மைய  காதுக்குள்ள  கறந்துது

  வெள்ளைக்காரனோட  சேந்து  சமைச்சு போட்டதும்  எங்கடையாக்கள்தான்  அதுபோக   கூட்டல்  கழித்தல் பெருக்கல் பிரித்தலெண்டு சகல வேலையும்  எங்கட  சனத்தின்ர  கையில  மாதம் சம்பளமா  400 அமுனாட்டு  காசும் மாதப்படி  55ம்  எண்டு எடுத்துக்கொண்டு பெரிய லெவல் அடிச்சுக்கொண்டு  திரிஞ்சின,  குறிப்பிட்ட  ஆக்களுக்கே நெடுக  எப்பிடி  வேலை குடுக்கலாம்  மற்றாக்களுக்கும் சுழற்சி முறையில  வேலை  குடுக்கவேணுமெண்டு படங்களில எம்ஜிஆர்  நீதி  நியாயம்  கேட்டு  குமுறவது போலை குமுறினார்  கட்டையண்ணை,  மனிசன்  நாட்டில  நல்லா படிச்சு  உத்தியோகம் செய்த ஆள்  அவரும்  இன்னும்  ரெண்டு  மூண்டு  பேருமே  இங்கிலீஸ் பேசி வெள்ளைக்காரரோட  நல்லா கதைக்கிற ஆக்கள்,  இப்பிடி மனுஷன் நியாயங் கேட்டு  கதைச்சுபோட்டுதெண்டு அந்தண்டு இரவே கட்டையண்ணைக்கு  இருட்டடி போட்டுவிட்டாங்கள் வேலை செய்ற எளிய நாயளாரோ -   மஞ்சல்  சிவப்பு  பச்சை  எண்டு  மூண்டு நிறத்தில  மூண்டுநேர  சாப்பாட்டுக்கும் துண்டு தந்திச்சினம் 
காலமை  சாப்பாட்டை  ஆடிக்கு ஒருதடவை  ஆவாணிக்கு  ஒரு தடவை  எண்டே சாப்பிட்டனான் 
வட்டரும்  ஜாமும்  ரெண்டு  வட்ட பணிசும்  தருவினை   அலுப்புச்  சாப்பாடு,  பகல்  என்னென்னவோ
றைச்சியெல்லாம்  காச்சி; சொன்னா நம்பமாட்டியள்  ஆறு மாசமா  நூடில்ஸ்சைத்தான் சாப்பிட  தந்தாங்கள்  எண்டைக்காவது  ஒருநாளைக்கு  எண்டு  கூட  சோத்தை  கண்ணிலும்  காட்டயில்லை

ஊரில    மாட்டு  றைச்சிய கண்ணாலுங் கண்டதில்ல,  காம்பிலை   கண்டது கடியதெல்லாம்
போட்டாங்கள்  ஏன்  என்னது  எண்டு நாங்கள்   கேட்டதுமில்லை  பொருள்படுத்தினதுமில்லை
மற்ற  நாட்டாங்கள்  தங்களுக்கு இன்னது  வேணுமெண்டு  உரிமையா  கேட்டு  வாங்கினாங்கள்   கலாச்சாரம்  பண்பாடு கெடாமல் இருந்தாங்கள்  குறிப்பா  நல்ல  ஒற்றுமையோட  மதிப்பா  இருந்தாங்கள்.   எங்களோடை    ஐயர்மார்   மூண்டு  பேர்  இருந்தவை  ரெண்டுபேர்  ஒவருநாளும்  தயிருக்குள்ள வெங்காயத்தை  போட்டுக்கொண்டு  வந்து அதை போட்டே  சாப்பிட்டிச்சினம்
மூண்டாவது ஐயர்   அவர்  குசினியில  வேலை செய்தவர்,  மூண்டு தரம்  தண்ணிய தெளிச்சாரோ  என்னவோ  நல்லா  போட்டு பிடிச்சார்  மச்சத்தை,  எட இப்பிடி  ஒரு  டேஸ்ட்  இருந்திருக்குதெண்டு  முன்னம் தெரியாமல்  போட்டுதே எண்டபடி  கோப்பையில கண்ணுங் கருத்துமா  இருப்பார்,  அவர் மச்சம்  சாப்பிர்றதை  வேடிக்கை பாக்க  நாங்கள்  அவரை சுத்தி  இருந்து  கதை  கேக்குறது - டேய்  சாமியளே மச்சம்  சாப்பிட்டிருக்கின  தெரியுமே,  அதுபோக  இடத்துக்கு  ஏற்றாப்போல  மாறவேணும்,  நான்  என்ன காரணத்துக்காக  மச்சம்  சாப்பிர்றன்  எண்டு  கடவுளுக்கு நல்லாத்  தெரியும்  இதுகளுக்கெல்லாம்  முகானியும் பொறுப்பும்  அவர்தான்   எண்டு   சொல்லி  சிரிக்கச்   சிரிக்க    நல்ல பம்பலா  கதைப்பார்,  அந்த  இனிய ஐயா -  கை  நோகுது  நிப்பாட்டுறன்  இன்னொருநாள்  மிச்சத்தை பாப்பமே,  நன்றியுங்கோ  வாசிச்சதுக்கு அப்பநான்  வரட்டே,  டாட்டா .

ம.இரமேசு - தொன்மார்க்





´

 


 ஒன்றே  ஆதிமூலம்

அடியேன் இறை நம்பிக்கை உடையவன்

மத நம்பிக்கை இல்லாதவன், எல்லா


மதமும் எனக்கு ஒன்றே, இறைவன் முன்

எல்லோரும் அவரின் பிள்ளைகளே.

மனிதர்களே என் மார்க்கம் உன் மார்க்கமென்று 

பிரிந்தது நிற்கின்றார்கள். உண்மையான

இறை நம்பிக்கை உடையவர்கள் வன்முறைகளுக்கு

செல்ல மாட்டார்கள், இன்னொருவரை கொல்ல கனவிலும்

நினைக்க மாட்டார்கள், மதம் மதம் என்று வெறிபிடித்து

வாழும் மனிதர்களைக் கண்டு அவர்களுக்காக இறைவனிடம்

வேண்டுகின்றேன், அவர்கள் உன்னை மட்டும் நம்பட்டும் என்று.

வாழ்க நலம் - தேவன் ஒருவனே - எல்லோரும் உறவினரே

யாதும் ஊரே யாவருங் கேளிர் - வாழ்க நலம்


ம.இரமேசு - தொன்மார்க் 

வசந்தமாளிகை        வசந்தமண்டபம் 
(யாழ்  வழக்கில்  எழுத்து )

தெய்வானைப்பிள்ளை  ஆச்சி  யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில  சுகமில்லாமல்  கிடந்த நேரம்
பன்ரெண்டைகால்  பஸ்ஸை  பிடிச்சு  மைதிலி தன்ர   அம்மாவோட  யாழ்ப்பாணம்  போய்  ஆச்சிய வருத்தம் பாத்துவிட்டு, வெலிங்டனில சக்கை  போடு  போட்ட வசந்தமாளிகையை  போய்ப்பாத்தா
  250 நாளுக்கு மேல ஓடின  படம்  எப்பவும்  ஹவுஸ்புல்லா  ஓடின  படமெண்டுஅவளின்ர   மாமா
  சொல்லி சொல்லி பெருமைப்படுவார்  - மைதிலி நல்ல வடிவானவளாக  இருந்ததால கிடுகு வேலியும்
உயந்தது  பெடியளின்ர  சைக்கில்  சீற்றுகளும்  உயந்தது

அவளின்ர அம்மையாவோட  வேலைக்கு  போன  பெடியள் வசந்தமாளிகையை  வசந்தமண்டபம் பக்திப்படமெண்டு பொய் சொல்லி ஒருமாரி மனிசனை  ஒரு  சனிக்கிழமை கிளம்பப் பண்ணிப்போட்டாங்கள்,  மனுசனும்  நம்பி,  ஊர்வலம்  போற தேர்போல  சோடிச்சுக்கொண்டு 
மடிப்பு குலையாத  வேட்டி  சால்வை  சேட்டோட  வெளிக்கிட்டு  போய்  படத்தை  பாத்திருக்குது
என்ன  இன்னும்  முருகன்  பிள்ளையாரை  காணேல்லை  எண்டு  கையை  கும்பிடத்  தயாரா வைச்சுக்கொண்டு  இருக்க " ஏன்  ஏன்  ஒரு  கிண்ணத்தை ஏந்துகிறேன் " பாட்டு வர
அந்தப்பாட்டுக்கு ஆடினவளவை துடையை காட்டி  ஆட மனுஷன்  கொதியாகி வெளியில  வந்துட்டுது

 அப்ப மட்டும்  பக்திப்படம் எண்டு  சொன்னவங்கள்  மாட்டுப்பட்டிருந்தா  மனிசன்  அடிச்சே  கொண்டிருக்கும் .

 குறுக்கால  போவார்  பிரளுவாங்கள்  எண்டு  யாழ்ப்பாணத் திட்டல்  அத்தனையும்  மனுசன்ர  வாயால  வந்து போனது   தென்னம்பிள்ளைக்கு கீழ  படுத்துக்கிடந்த  நாய் தன்னைத்தான்  திட்டுறாராக்கும் எண்டு நினைச்சு  குலைக்க  மனிசனிருந்த  விசரில, பக்கத்தில கிடந்த   கிண்ணத்தால  ஒரே  ஏறி
 நாய் ஓடித்தப்பிட்டுது.

ரெண்டுநாள்  கழிச்சு  கடையடியில  பெடிப்பிள்ளையள் மனுசனிட்ட  வசமா  மாட்டுப்பட ,  ஏன்ரா   அவள் கொண்டுவந்து  துடைய முகத்துக்கு முன்னால  காட்டுறாள் குலுக்கிறாள்,  உதுதானே உங்களுக்கு  பக்திப்படம்   எண்டு  திட்டத் தொடங்கி கவுண்டமணியாச்சு மனிசன்,  பெடியள்  எடுத்த  ஓட்டம்  ஒலிம்பிக்கையும் வெல்லும் ,  நல்ல காலம்  மனுஷன்  இண்டையான்  படங்கள  பாக்காமல் போய் சேந்துட்டுது .

ம.இரமேசு
தொன்மார்க்






 

சுவாமி நித்தி

சுவாமி நித்தியானந்தாவை குறை சொல்ல முடியாது  இந்துமதக்   கடவுள்களே  காம இச்சைக்கு ஆளாகி அவமானம் அடைந்தகதைகள் இருக்கிறது  முனிவர்களும்  மதி மயங்கினார்கள்  அப்படியிருக்க  இந்தக்
கலியுலகில்  சாமியார் ஆனதால் நியாயமாக  ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய சிற்றின்ப  சுகம்  தவறிப்போகலாமா,  நித்தி யாரையம்  மானபங்கம்  செய்யவில்லையே  மனம் ஒத்தவளுடன் இன்பம்
கண்டார் -சாமி செய்தால் கன்னத்தில்  போடுவோர்  இதை மட்டும்  கோபிப்பது ஏனோ  பிறர் மீது விரல்
காட்டுவோர்  முதலில்  தம்மை  எண்ணிப்பார்க்க வேண்டும்  இந்நாள் வரை யாதொரு  குற்றமும்  செய்யாதவர்கள்  முதற்கல்லை எறியலாம் - வாழ்க நலம்

பணிவன்புடன்
ம.இரமேசு 

புதன், 30 ஜூலை, 2014

வணக்கம்   !  இக்  கதையை  நீங்கள்  நடிக்கலாம்  அல்லது  இயக்கலாம்  மக்களை  நன்கு கவர்ந்த  நகைச்சுவைக் கதை  - கதையை படித்து பலரும்  பாராட்டினார்கள் - படித்தே  இரசிக்கின்றார்கள்  என்றால்  அது  நாடகமாக அல்லது குறும்படமாக  வந்தால் நிச்சயம்  மக்கள்  இரசிப்பார்கள்  என்று எனக்கு நம்பிக்கை  உள்ளது  மிகுதி  உங்கள்  விருப்பு -  வாழ்க நலம்

உயிர்வரை இனித்தாய் புகழ் கே எஸ் துரை ஐயாவின் அலைகள் இணையப் பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து அநேகரால் பாராட்டப்பட்ட நகைச்சுவைக் கதை , முகநூல் நண்பர்களுக்காக மறு வெளியீடு

சவத்தை வைத்துக்கொண்டு அழாமல் இருப்பானேன்.

November 7, 2011

(சின்னக்கதை)
(சிரிக்கலாம் சிந்திக்கலாம் வாரீர்)

அது ஒரு சனிக்கிழமை முற்பகல் நாலு பக்கங்களிலிருந்தும் வந்த நண்பர்கள் கதவின் மணியோசையை அழுத்த கதவு திறக்கப்பட ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளே நுழைந்துகொள்கின்றார்கள் கொண்டுவந்த பைகள் வீட்டுக்கார நண்பரின்
கைகளுக்கு மாற்றப்படுகின்றது என்ன மச்சான் என்று கேட்க உள்ளே பாரன் என்று பதில் வருகின்றது பையை திறந்தால் பையுக்குள் ஆட்டு இறைச்சியும் மதுப்போத்தல்களும் உற்சாகமடைந்த வீட்டுக்காரன் இருங்கோ மச்சான் என்று கூறவும்
ஒவ்வொருவரும் மேசையை சுற்றி போடப்பட்டிருந்த கதிரைகளில் உட்காருகின்றார்கள் மதுபோத்தல்கள் மேசையின் நடுவில் வைக்கப்படுகின்றது ஆட்டு இறைச்சி சிறு துண்டுகளாக வெட்டுப்பட்டு
பாத்திரமொன்றுக்குள் பத்திரப்படுத்தப்படுகின்றது எல்லாபோத்திலையும் மேசையில வைக்காதே கொஞ்சத்தை குளிரவை என்கின்றார் குளிர்ப்பிரியர் ஐயோ குளிர்ந்ததை குடிக்க முடியாதுபல்லுகள் தாங்காது
கொஞ்சத்தை வெளியில் வை என்கின்றார் இன்னொரு மச்சான்
அப்படியே ஆகட்டும் என்கின்றார் வீட்டுக்கார மச்சான்,நீங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்த்து நானும் ஒன்று வைத்திருக்கின்றேன் என்று வீரியம் கூடிய சிவாஸ் ரீகல் என்ற பெயருடைய மது போத்தலை வீட்டுக்கார நண்பன் மற்றைய போத்தில்களின் மத்தியில் வைக்கின்றார் தானைத்தலைவனாக சிவாஸ் ரீகலும் அதனை சுற்றி நிற்கும் படை வீர்களாக கால்ஸ் பேர்க் டுபோர்க் எலிபன்ட் போத்தல்களும் மேசையில் நிமிர்ந்து நிற்கின்றன மச்சான் சாம்பல்போடும் தட்டை தா என்றுகொண்டே வெள்ளைக்காரர்கள் பற்றவைக்கும் வெள்ளைச்சுருட்டை வாயில் வைக்கின்றார் மச்சான் ஒருவர் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவர் சேர்ந்துகொள்கின்றார் சிறிது நேரம் வேலைத்தல விடயங்களையும்
மற்ற நண்பர்களைப்பற்றியெல்லாம் பேசிக்கொள்கின்றார்கள்

திடீரென ஒரு மச்சான் சற்று சத்தமாய் சொல்லுகின்றார்
சவத்தை வைத்துகொண்டு அழாமல் இருப்பானேன் என்று சொல்லியபடியே டுபோர்க் போத்திலஎடுத்து மூடியை திறந்து
மொட மொடவென அரைவாசியை காலி செய்கின்றார் மற்றவர்கள் கொல்லென சிரித்துக்கொண்டே தாங்களும்
விரும்பிய போத்தல்களை திறந்து குடிக்கின்றார்கள் ஒருவர் சொல்லுகின்றார் நான் என்றும் சிவனையே முதலில் கும்பிடுபவன் ஆகையால் சிவாஸ் ரீகலே போற்றி என்று சிரித்தபடியே அவரிடம் குவளை நீட்டப்பட அதற்குள் சிவாசை
ஊற்றி ஸ்கோல் என்று டேனிசு மொழியில் உற்சாகமாய் உரக்க சொல்லி உட்கொள்கின்றார்.

மச்சான் எங்கே உனது குவளை என்று வீட்டுக்கார நண்பனை கேட்க நான்சமைக்க வேண்டும் நீங்கள் அடியுங்கோ என்று அவர் சொல்ல இல்லை நீயும் எங்களுடன் அடிக்கவேண்டும் என்று அன்பு ஆறாய் ஓடுகின்றது அவர்களின் முதலாம் சுற்றில் ,
சரி எதுக்கும்
கொஞ்சமாய் விடு என்று சொல்லி தனது குவளையை கொடுக்கின்றார் வீட்டுக்கார மச்சான் .

மீண்டும் எல்லோரும் ஸ்கோல் என்று கூவி அன்பொழுக ஆரத்தழுவ கதவின் மணியோசை சிலிர்க்கின்றது
திறந்தவர்களுக்கு மகிழ்ச்சி ரெட்டிப்பாகின்றது அவர்களை விட வயதில் முதிர்ந்தவர் அவர்களின் அன்புக்கு
பாத்திரமானவர் வருகைதந்திருந்தார் - மாமா அங்கிள் என்று கத்தியபடியே அவரை அணைத்து உள்ளே அள்ளிச்செல்கின்றார்கள் அவருக்கு வசதியான இருக்கை போடப்படுகின்றது மாமா அங்கிள் என்ன குடிக்கின்றீர்கள்
என்று ஒருவர் கேட்க உடனே மாமா சொல்லுகின்றார் தம்பி மாமாவும் அங்கிளும் ஒன்று தான் ஒன்றில் மாமா
என்று கூப்பிடு அல்லது அங்கிள் என்று கூப்பிடு உடனே எல்லோரும் சிரியோ சிரியென்று சிரிப்பு

நான் காரோடி வந்தனான் சும்மா ஒருக்கா இவன் பெடியனை பார்த்துகொண்டு போவம் எண்டு வந்தனான்
என்றார் பெரியவர்- அங்கிள் குழப்பி அல்லது தேநீர் போடட்டுமோ? தேநீரை தா தம்பி என்றார் மாமா

அப்ப இண்டைக்கு பெரிய கொண்டாட்டம் போல என்று மாமா கேட்க வாழ்கையில இதெல்லாம் இல்லாமல்
என்ன வாழ்வு என்றார் ஒருவர் அர்த்த விழியுடன் உண்மையடா தம்பி ஆனா அளவுக்கு மீறி உதுகளுக்கு
அடிமையாகாமல் குடும்பத்தை கவனியாமல் இருந்துவிடக்கூடாது என்று பக்குவமாய் புத்தி சொன்னார்.

சமையலறையிலிருந்து குரல் வந்தது அங்கிள் இண்டைக்கு எங்களோட சாப்பிட்டு விட்டு
போகவேண்டும் என்று சாச்சை இல்லை நான் வீட்டை போகவேணும் அவள் காத்திருப்பாள் என்றார் மாமாஅங்கிள் .

அங்கிள் எழுந்து சமையலறைப்பக்கம் வந்து தம்பி இன்னொருநாள் பாப்பம் இண்டைக்கு நான் கட்டாயம் வீட்டுக்கு போகவேணும் என்றபடியே பிள்ளையள் அப்ப நான் போயிட்டு வாறன் என்ற
படி அங்கிள் வெளியேறினார்

அங்கிளுக்கு மனதுக்குள் பெடியளோடு குடிக்கவேண்டும் சாப்பிடவேண்டும் என்று பெரும் ஆசை இருந்தது மனைவியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து அடக்கி வாசித்து வெளியேறியது அவருக்கு மகிழ்வினை கொடுக்கவில்லை கட்டப்பட்டிருக்கும் மாடு போன்ற வாழ்க்கையை வாழ்வதாகவே மனதுக்குள் நொந்துகொண்டார் கடும் பசியுடன் வீட்டுக்கு வந்தவருக்கு இன்னும் தனது மனைவி சமையலை முடிக்காதது கண்டு கடும் எரிச்சல் வந்தது இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் ஏன்
இன்னும் சமையல் முடியவில்லை என்று காரணம் கேட்க மனையாள் சொன்ன பதில் ஆத்திரத்தை
மேலும் இரண்டாக்கியது அது என்ன பதில்- இண்டைக்கு தான் தொடர் எல்லாவற்றையும் தொகுத்து போடுவார்கள் அதை பாத்து முடித்து சமைக்க நேரமாகி விட்டது என்பதே .
கடுப்பான அங்கிள்அலுமாரி
பெட்டியுக்குள் கிடந்த “றிமிமாட்டீன்” போத்தலை பாத்து சொன்னார் சவத்தை வைத்துகொண்டு அழாமல் இருப்பானேன் என்று.

எழுத்து கற்பனை
ம.இரமேசு (பரடேசியா)
06 -11 -2011

மூன்றாம் சுழிக்கு இறுத்த பதில்

வணக்கம்  ஐயா ! ஆங்காங்கே  ஒரு  சில  ஆங்கில வார்த்தைகள்  வந்தால்  பொறுக்கலாம்  கட்டுரையின்  முக்கால்  பகுதியும்  ஆங்கிலமாகவே  இருக்கின்றது  என்பதே  எனது  வருத்தம்.  உங்கள்மீது  தனிப்பட  கோபம்  இல்லை,  எனது  கருத்தை  தெரிவித்தேன்  அவ்வளவுமே.  மற்று  அடியேன்  சொல்லவந்தது  ஆங்கிலேயர்  அன்றில்  வேறு  வெள்ளையர்கள்  நாட்டில்  அவர்களின் மொழியில்  எழுதும் போது  அந்நிய  மொழியினை  கலக்க  மாட்டார்கள்,  வேற்று மொழியினை   கலந்தால்  மக்கள் கோபமுற்று வழக்கு போட்டு விடுவார்கள்,   எழுதியவர்  தண்டம்  செலுத்தவேண்டி வரும்
அன்றில்  சிறைவாசம்  அனுபவிக்கவேண்டிவரும், சில ஆண்டுகள் முன்பு ஜெர்மனியில்  ஒரு எழுத்தாளர்  அந்நிய வாத்தையை  எழுதியதால்  சிறை சென்றார் என்பது நினைக்கத்தக்க .  ஆங்கில  மோக  அடிமைத்  தனத்தில்  வாழும்  தமிழ் நாட்டினரை  உங்களைப்  போன்ற நல்ல எழுத்தாளர்கள்  அவர்களை  அந்நிய மோகத்திலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்,  இப்படியே  மொழிப்பற்று  இன்றி  ஒவொருவரும்  கவனமின்றி   இருந்தால்  நாளை அம்மா  என்ற  சொல்லுக்கே  அகராதியை  புரட்டவேண்டியிருக்கும் - தமிழர்கள்தான்  தமிழுக்கு கொடி பிடிக்கவேண்டும்  நண்பர்களே, மாற்றான் வந்து கொட்பிடிக்க்மாட்டான் உணர்க .  தங்கள் மொழியின் மீது எத்தகைய  பற்றுதல்  வைத்திருக்கின்றார்கள்
மற்றைய நாட்டினர் என்று  ஜப்பான்,கொரியா, அரேபிய நாடுகள்,பிரான்ஸ்  இங்கிலாந்து  ஜேர்மன்  இத்தாலி  ஸ்கண்டினேவிய ,தென்னமரிக்க  நாடுகள் என்று
சென்று பார்த்தால்  புரியவரும்.  தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிங்கிலிசு  பேசும்  மக்களுக்கு
அவை புரிய வாய்ப்பில்லையே  - எனக்கு  பதில் தரும்  வாதம்  வேண்டாம்  சொல்லிய  கருத்தை  உள்வாங்கி  சிந்தித்து  செயலாற்றுங்கள்  அடியேன் எழுதியதில்  ஐயம்  இருந்தால் நன்கு  தமிழறிந்த
ஒருவரிடம்  சென்று  எனது  கருத்தை கட்டி  விளக்கம் கேளுங்கள் . வாழ்க நலம் .

செவ்வாய், 29 ஜூலை, 2014


கொள்ளையடிக்கும்  உந்தன்  முல்லை சிரிப்பால் 
என்னை மல்லிகை மணம் போல்  இழுக்கின்றாயே 
தேனோ நிலவோ தென்றலோ தெவிட்டாத அமுதோ நீ 
மா நிறத்து மேனிக்கு காவி  அணிந்த கன்னிமானே  வணக்கம் 

பூமணக்கும்  பொன்னோ  இல்லை  பூமி மயக்க வந்த பெண்ணோ 
நாமணக்க உன்னை கவிபாடும்  நாயகன்  வேதனை  அறியாயோ  
சேவலுக்கும் முன் விழித்து  உனைக்   காப்பேன்  என் கண்ணே 
கம்பன் பா  நாண  கவி புனைவேன்  உன்மேல்   என் பெண்ணே  


ஓவலுக்கும்  அடங்காது  என்தாகம் நின் தேன் கூவலுக்குள்  அடங்கிடுமே
தோசையுன்  தேகம் என்றால்  என் ஆசைதீர  அனைத்துண்ண  சம்மதமா 
 பாசையெல்லாம்  பேசும்  பூஜாவே  உன்னை நான்  தாஜா  பண்ணணுமா   
ஆசை  நிறைவேற்றும் அன்பு ஓசை நீ  அதனால் அமைதி    
கொண்டது மனமே 
                                   
                       
                                    
                                       ம.இரமேசு - தொன்மார்க் 

 
கலைகள்  வியாபாரம்  ஆகாத   வரையில்  கலையினை  மக்கள்  மதிப்பார்கள்  ஏற்பார்கள்

கலைகள்  வியாபாரம்  ஆகாத   வரையில்  கலையினை  மக்கள்  மதிப்பார்கள்  ஏற்பார்கள்  இன்றும்  பழைய படங்களையும்  பாடல்களையும்  மக்கள்  மதிக்க  காரணம்  யாதெனில்  அதிலே  வியாபாரத்
தன்மை  இன்றி  கலையின்  பேராளுமை இருப்பதே - கர்ணன்   குடியிருந்தகோயில்  அடிமைப்பெண்  ஆயிரத்தில் ஒருவன்  உலகம் சுற்றும்  வாலிபன்  போன்ற படங்களை  எத்தனை  முறை  பார்த்தாலும்  அலுப்பதில்லை  காரணம்  கலை வெளிப்பாடு  அற்புதமாக  அமைந்ததே   என்று  பெண்ணை  வைத்து
மார்பையும் இடையையும்  தொடையையும்  நம்பி படமெடுத்தார்களோ  அன்றிலிருந்து  அறுத்து எறியப்பட்டது கலை எனும் அரிய பொக்கிஷம், நாலு பெண்ணை  வைத்து கவர்ச்சியாக  படம்  பிடித்து  வெளிவிடலும் விபச்சாரமே, இனி  ஈழவர்  படைப்புகள்  கலையாக  மட்டும்  வரட்டும்  -  சாமிப்படம்
வைத்து  பூசை செய்து  தொடங்கும்  படம்  எழுத்தோட்டம்  முடிந்த  கையுடன்  அருவருக்கும்  ஆபாச  காட்சிகளையே  காட்டுகின்றது  நடிகை  என்றால்  பிகினியில்  போஸ்  கொடுக்க வேண்டும்  தோலை
காட்டவேண்டும் என்ற  தவறான அபிப்பிராயம்  இளசுகள் நெஞ்சில்  குடிகொண்டு  விட்டது  அதை உடைக்க  வித்திட்டது  எங்கள்  துரையையா  படம்  உயிர்வரை இனித்தாய்  அதை  தமிழ் உலகம்  காணவேண்டும்  பின்பு  சொல்லவேண்டும் கருத்து  - வாழ்க  நலம்

ம. இரமேசு 

திங்கள், 28 ஜூலை, 2014




அடியேன்  இறை நம்பிக்கை  உடையவன் 
மத நம்பிக்கை  இல்லாதவன்,  எல்லா
மதமும்  எனக்கு  ஒன்றே,  இறைவன் முன் 
எல்லோரும் அவரின் பிள்ளைகளே.
மனிதர்களே  என் மார்க்கம் உன்  மார்க்கம்
என்று  பாதகமான செயலலை செய்து
பிரிந்தது நிற்கின்றார்கள்.  உண்மையான
இறை நம்பிக்கை உடையவர்கள்  வன்முறைகளுக்கு
செல்ல மாட்டார்கள்,  இன்னொருவரை  கொல்ல  கனவிலும்
நினைக்க மாட்டார்கள்,  மதம் மதம்  என்று  வெறிபிடித்து 
வாழும்  மனிதர்களைக்   கண்டு அவர்களுக்காக  இறைவனிடம்
வேண்டுகின்றேன்,  அவர்கள்  உன்னை மட்டும்  நம்பட்டும்  என்று.
வாழ்க  நலம் - ஒன்றே தேவன் - எல்லோரும்  உறவினரே
யாதும் ஊரே  யாவருங் கேளிர் - வாழ்க நலம் 

ஞாயிறு, 27 ஜூலை, 2014

இப்படியும்  யுத்தம்
அன்பையும்  நட்பையும் மரியாதையையும் ஆழமாக  அடிமனதில்  வைத்துக்கொண்டு  நட்பாக நட்பை நிந்திக்காமல்  சண்டை செய்யுங்கள்  நாவால்,  அது  மேலும்  நட்பை  இறுக்கும்  வார்த்தைகளில் கவனம்  வேண்டும்  மறந்தும்  சுடுசொல்  சொல்லக்கூடாது மன மகிழ்வு
இன்ப யுத்தம்  குற்றமில்லை  காரணம் அதனால்  எவருக்கும்  வேதனையில்லை இரத்தமில்லை 
 யுத்தம்  முடிந்தால்  கனிவுடன்  விசாரியுங்கள் தோற்றவரை  கட்டிப்பிடியுங்கள்  நாகரிகம்  பேணுங்கள்
                             கத்தி வேண்டாம்  புத்தி மட்டும் போதும்
ம.இரமேசு

 
சிறை வென்ற செம்மல்  நெல்சன் மண்டேலா 

பொறுமை ஒரு நாள்  புலியாகும்  பொய்யும் புரட்டும் அதற்குப் பலியாகும்  என்ற கூற்றுக்கு ஒப்ப  பொறுமையாக  இருந்து  எகாதிபத்தியத்தை 
செயலிழக்க  வைத்தவர்  மண்டேலா  என்கின்ற  மாபெரும்  போராளி.

   கறுப்பின  மக்களுக்கு   சுதந்திரக்   காற்றை  சுவாசிக்க வழி  செய்த  ஒப்பாரும் 
மிக்காருமில்லாத்   தலைவர்  மண்டேலா,   அதிகார வெறி பிடித்தோரை  தனது  கருத்துக்களால்  துளைத்தெடுத்தவர்,   சிறையில் போட்டாலும்  ஆசை  வார்த்தைகள்  காட்டிய போதும்  கொண்ட கொள்கையில் குறியாய்  இருந்து  விடுதலை வாங்கி  விண்ணுயர்  புகழை அடைந்தவர்  அகிலம் போற்றும் மண்டேலா.
 
  தன்மானம் கொண்ட தரணியின் தனயன் தாழ்ந்த  ஆபிரிக்காவை  தலை நிமிர்த்திய ஆபிரிக்கத்  தலைமகன்  சின்னஞ் சிறியோரையும்  சேர்த்தணைத்து  செருக்களம்  புகுந்த மாவீரன்,  உலக வரலாற்றில்  நீண்டகால  சிறைவாசத்தை அனுபவித்தவர் 27 ஆண்டுகள்  ஆக்கிரமிப்பு வெறி கொண்ட  ஆங்கிலேய  அரசு  மண்ணின்  மைந்தனை  பொய்வழக்குகள் போட்டு சிறையில் வாட்டியெடுத்தது.

  கல்லை  உடைத்தார்  மண்ணை  அள்ளினார்  காலப்போக்கில்  மாறிடுவார்  மண்டேலா  என்று தப்புக்  கணக்கை  போட்டது வெள்ளையர் அரசு  இறுதியில்  வெட்கித்தலை குனிந்தது -  இனத்தை அழிப்போருக்கு  ஆயுத உதவிகள் கொடுத்து ஈழத்தின் அப்பாவி மக்களை சாகடிக்க கொத்துக்குண்டுகளை  கொடுத்த நாடும்(காங்கிரஸ் கட்சி)  காந்தியம்  மனிதாபிமானம்   என்று  மண்டேலாவுக்கு  நீலிக்கண்ணீர் வடிக்கிறது 5 நாள் துக்கம்  என்றுவேறு  சொல்லியது  பெரிய வேடிக்கை .

கொள்கையில்  குறியில்  உறுதியாய் இருப்போரை காலங்களோ  சிறைகளோ  சித்திரவதைகளோ    ஒன்றும்   செய்துவிட  முடியாது. 
 உடலை  வாட்டலாமே தவிர  உள்ளேயிருக்கும்   உண்மையை  தொடவே முடியாது.

  யாரது மண்ணிலே யாரது நாடகம்  எங்கோ இருந்து வந்த  வெள்ளைக்   கொக்குகள்
  கருப்பு மண்ணை  கொள்ளை கொண்டுவிட்டு  அம்மண்ணின்  உண்மையான  பிள்ளைகளை பிடித்து  கொலை செய்தது  கொள்ளை அடித்தது  வெறிச்  செயல்கள் யாவும் செய்தது.

 அடிமைகளாக்கி  அம்மக்களை கூவி விற்று   வியாபாரம்  செய்தது
   இன்றும்  அங்கிருந்து எழும்பவில்லை  ஆதிக்க வாசிகள்
  ஆபிரிக்காவுக்கும்  ஐரோப்பாவுக்கும்  என்ன சம்பந்தம்,   கொள்ளை செய்ய  புறப்பட்ட  கொடிய ஐரோப்பியர்கள்  அங்கிருந்து அள்ளியது ஏராளம்  மேலும் மேலும்  ஆயுத பலமில்லா நாடுகளிலிருந்து  கொள்ளை செய்யவே  விஞ்ஞான 
முறையில் கொள்ளைச்  செயல்கள் நடைபெறுகின்றன,  அணு அறிவும்  ஆயுத அறிவும்  அப்பாவி நாடுகளை அதன் மக்களை  அடிமைப்படுத்துகின்றது.
 
சித்திரக்கூடத்து  தேன்பாகில் விடத்தை  போடும் இழிசெயல் போல்   வெள்ளையர்கள் அணுகுமுறைகள்   ஆங்காங்கே  நடைபெறுகின்றது   பொய்யான  குற்றங்களைச்   சுமர்த்தி  அமைதியான  நாடுகளை  கொடிய ஆயுதங்களைக் கொண்டு  சுடுகாடாக்கி  தங்கள் 
ஆயுதங்களின்  பலத்தை சோதிப்பதும்  ஆணவத்துடன்  எகிறிக்  குதிப்பதும்  ஒரு புறமிருக்க  மறுபுறம்   மனிதாபிமானம் என்று பொய்  பேசுவதும் 
வெள்ளையர்கள் வாடிக்கையாகின்றது  இதையெல்லாம் அவ்வப்போது  பொங்கியெழுந்து  கண்டித்தவரே   நெல்சன் மண்டேலா. 

20 வயதில் குமிறிய  போராட்டம் 
அவரை  அரசியலுக்குள்  அழைத்து  சென்றது  22 வயதில்  அதிகார வர்க்கத்தினால்  தூக்கி வீசப்பட்டார்  காயம் பட்டார்  பயந்து  போய்விடாது  உரிமைக்குரலை  உயர்த்தினார்  அடிமேல் அடி அடித்தால்  அம்மியும் நகரும் என்ற  மென்முறையில்  பற்று வைத்து  போராடினார்.

  ஆரம்பத்தில்  வன்முறைப்  பாதைக்கு சென்றாலும் அதனால்  பயன் விளையாது என்ற உண்மையை  உணர்ந்து அதை ஆரம்பத்திலேயே கைவிட்டார் 
பொறுமையை  மனதில் குடியேற்றினார்  பொங்கியெழும் ஆணித்தரமான கருத்துக்களால்  வாதம் செய்தார் பெரிதாக அவரை   உலகம்  அறியாத  பொழுதுகளில் -  காந்திய வழியில் போராடினார்   பொறுமைக்கு  நிச்சயம் ஒருநாள்  வெற்றி கிடைக்கும் என்று நிரூபித்துக்  காட்டினார்  
 உலக மக்கள் நெஞ்சங்களில்  குடியேறினார்  அமைதியான 
பூப்போன்ற  புன்னகையால்  காண்பவரைக் கவர்ந்தார்.

  இதனால் அன்னாருக்கு  ஆழ்ந்த  அஞ்சலியையும்  மரியாதையையும்  சமர்பிக்கின்றேன்

ஆக்கம் 
அன்புடன் 
ம.இரமேசு

 

திங்கள், 14 ஜூலை, 2014

சில நேரங்களில் சில அறிவாளிகள் 

சிரித்தது வானம்  உரிமைகொண்டு அன்புகாட்டியது 
சூரியன் சினந்தது  மனதோடு கோபம் கொண்டது 
அது அகிலத்துக்கு வெளிச்சம் தரும் என்றால் 
அது  அறிவை  இருட்டாக்கியல்லவா வைத்தது 
பிந்திய  நிலவில்  சில  அநியாய  பிம்பங்கள் 
அவை அறிவாளிப்பிம்பங்கள்  ஆம்  அவைகளும் 
அற்ப விடயங்களுக்கு வானத்துடன்  நன்றியின்றி 
முறைக்கும்  நட்பை கெடுக்கும் - பறவைகள் 
அதன் கீழே  பட்டமாய் பறக்கும்  இனிய  சிலைகள் 
விலைகள்  இன்றி  விண்தொடும் நினைவுகள் 
ஆணவ  அறிவாளிகளுக்கும்  ஆற்றல்  உண்டு 
ஆனாலும் அவர்கள் வானத்தின் கீழே இருக்கின்றார்கள் 
நல்லவர் சினம் நிலையாது என்றது வானம் 
சில நேரங்களில் சில அறிவாளிகள் இல்லை 
அவர்களை என்ன பெயர் கொண்டு அழைப்பது 
என்றது பறவை  ஆத்திரம்  அறிவாளியின்  விழிகளையும் 
மறைக்கும் என்றது முகில்கள்  பயிர்கள் ஆமோதித்தன 

ஆக்கம் 
ம.இரமேசு