திங்கள், 31 மார்ச், 2014

நெஞ்சின் உண்மையுடன் 

திரையில் வைக்கப்பட்டுள்ளது உழைப்பு அதை மதிப்பதும் விடுவதும் உங்கள் பொறுப்பு 

22/03/2014 என் வாழ்வில் பெரும் மகிழ்வான நாள் நான் முதல் முதல் நடித்த - உயிர்வரை இனித்தாய் திரைப்படம் டென்மார்க் கேர்ணிங் நகரில் இரண்டு 
திரைகளில் காண்பிக்கப்பட்டது என்னை திரையில் பார்த்து மகிழ்ந்தேன் இப்படி பிரமாண்டமாக இருக்கும் என்று படம் பிடிக்கும் பொழுது நான் 
நினைக்கவில்லை, அற்புதம் - கே எஸ் துரை என்னும் பிரபல கலைஞர் ஆசிரியர் பன்முகம் கொண்டவர் படத்தை அருமையாக இயக்கியுள்ளார் வசந்த் - நர்மினி ஆகியோர் நாயகன் நாயாகியாக
அற்புதமாக நடித்திருக்கின்றார்கள் இன்றைய கால ஓட்டத்தில் ஒரு வெளிநாடு வாழ் இளம் பெண்ணின் காதலையும் விரக்தியையும் மாறுபட சொல்கிறது கதை
நாயகி தான் ஏற்ற பாத்திரமாக மாறி இரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளி வாங்கியுள்ளார் நாயகன் முற்றிலும் எதிர்பாரா கதாநாயகன்
வழமையாக நாம் காணும் 10 பேரை அடித்து துவைக்கும் முரட்டு ஆள் அல்ல சிரிக்க வைக்கும் ஒரு சராசரி பொடியன் போல நாயகன் அசத்தியிருக்கின்றார் அதை நுணுக்கம் நிரம்பிய கண்ணோடு பார்த்தாலே புரியும் ஆனாலும் நாயகி தன் அபார நடிப்பால் முந்தி நிற்கின்றார் முதல் படத்திலேயே வெற்றி கொடி கட்டி விட்டார் இன்னும் 25 ஆண்டுகள் இவர்கள் நாயகன் நாயகியாக வலம் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

வாழைப்பழம்
பாத்திரத்தில் சுபேந்திரா சிரிக்க வைத்து இன்றைய தமிழக சிரிப்பு நடிகர்களை முந்திவிட்டார் இனிமேல் அவருக்கு வாழைப்பழம் சுபேந்திரா என்றே சுட்டப்படும் என்பதில் படம் பார்த்த ஒருவருக்கும் ஐயமிராது -- நாயகனின், நாயகியின் அப்பா அம்மா வேடங்களில்
நடித்தவர்கள் தொழில் முறை கலைஞர்களையே தூக்கி அடித்துவிட்டார்கள் தங்களின் ஈடுபாடான அற்புத நடிப்பால், இரமேசு! பெரிசு பாத்திரத்தில் வந்து இரண்டே காட்சியில் நடித்தாலும் நெஞ்சில் நிற்கின்றாய் என்று என்னை இரசிகர்கள் பாராட்டினார்கள் நகரசபை உறுப்பினர்
பதவியில் இருக்கும் அரசியலாளர் நண்பர் ஜெயக்குமார் என்னை பலதடவைகள் பாராட்டியதோடு நின்று விடாது காட்சியின் பின் நடந்த விமர்சன கருத்தரங்கிலும் என்னை பாராட்டி எனக்கு பெரும் இனிப்பை ஊட்டிவிட்டார் எனக்கு பொறுப்பையும் அதிகரித்துவிட்டார் அடுத்த தயாரிப்பில்
எனக்கு நீண்ட பாத்திரம் தருவதாக இயக்குனர் அவர்களும் சொல்லி என்னை பாராட்டியது என் வாழ்வில் நான் பெற்ற பேரின்பங்களில் ஒன்று
என்பதை மிகுந்த அடக்கத்துடன் இயம்புகின்றேன் என்னை பிடித்த உயிர்வரை இனித்தாய் காய்ச்சல் இன்னும் நிற்கவில்லை, பூங்காவில் புகைத்தபடி வந்து அட்டகாசம் செய்பவரை கண்டித்து நாயகி விரட்டும் காட்சி அருமை அதில் அவரின் உண்மையான அப்பாவே நடித்திருக்க அதை எள்ளளவேனும் நினையாது பொதுநலம் பேணும் பெண்ணாக அசத்தியுள்ளார் நர்மினி இப்படி பல இடங்களில் தனது நடிப்பை தூக்கி எழுப்பியுள்ளார் ,கவிதை படிக்கையில் அவர் காட்டும் முக பாவங்களுக்கு நான் மட்டும் கோடீஸ்வரனாக இருந்தால் சில கோடிகளை பரிசாக
கொடுத்திருப்பேன், ரோஜாவை பிரிக்கும் நாயகனின் செயலை பார்த்து நாயகி சொல்லும் சொல் நாகரிக பண்பின் உச்சி அதை எழுதிய ஆசிரியருக்கு என்ன கொடுத்தாலும் குறைவே, இப்படி நிறைய நிறைய இருக்கின்றது இந்த உயிர்வரை இனித்தாய் படம்பற்றி பேச ஒருமுறை
பார்த்துவிட்டு புளுகின்றி இவ்வளவு எழுதும் நான் மீண்டும் மீண்டும் பார்த்தால் இன்னும் நிறைய எழுதலாம், பொய்யும் புளுகும் எழுதி சோறு
சாப்பிட வேண்டிய நிலையில் என்னை டென்மார்க் வைக்கவில்லை என்பது உண்மை ஆகையால் இங்கு எழுதிய அத்தனையும் உண்மை இல்லை பொய் எழுதினாய் என்று உலகத்தமிழன் ஒருவன் குற்றம் சுமத்தினால் அவனுக்கு பதில் சொல்ல என்றும் தயார்.

150 - 200 கோடிகளை கரைத்து ஜிகினா புளுகு புளுகும் திரை வியாபாரிகளின் முகத்திரையை விலக்கி உண்மையை பாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் நிரூபித்துள்ளார்கள் இங்கே பணி புரிந்தவர்களுக்கு உதவியாள் இல்லை ஒப்பனை ஆளும் இல்லை ஒவ்வொரு கலைஞனும் பன்முக ஆற்றல் வாய்ந்தவர்களாக தலைக்கனம் இல்லாதவர்களாக இருந்ததால் தங்களை அவர்களே எல்லா நிலைக்கும் தயார் செய்து கொண்டார்கள் அத்தகைய ஆற்றல் கொண்டவர்களை தனது அனுபவ ஞான ஆற்றலால் உள்வாங்கியவர் இயக்குனர் கே எஸ் துரை
பாரிசில் இருந்து வந்த இரா குணபாலன் தயாநிதி ஆகியோர் படத்துக்கு பாயசமாக அப்பளமாக ஊறுகாயாக இருந்து சுவையூட்டியிருக்கின்றார்கள்
ஒரு சிறுவனும் படத்தில் தன்பங்கை அடிதூள் கிளப்பியுள்ளான் எனக்கு பக்கத்தில் இருந்து படம் பார்த்த அச்சிறுவன் தான் வரும் இடங்களை சிரித்து மகிழ்ந்து இரசித்த காட்சியை நான் கண்டு இரசிக்க இறைவன் எனக்கு வாழ்நாள் பயன் கொடுத்தமைக்கு நன்றி .அவன் கரங்களை பற்றி அவனுக்கு மகிழ்வை தெரிவித்தேன் அவன் கைகள் குளிராக இருந்தது காரணம் அவன் பெரிய சோழன் பொரியலை (போப் கோன்) வைத்து சுவைத்தபடியே படத்தை இரசித்தான் தான் படத்தில் வந்த இடத்தில் சோழனை சுவைக்க மறந்து கையை வெளியில் வைத்திருந்தான் அப்பொழுதே நான் அந்த பிஞ்சின் கையை அன்பாக பிடித்தேன் அதுகணமே குளிர்ந்து என்பதை அறியலுற்றேன் மனம் நெகிழ்ந்தது

படத்தின் அதி உச்சம் பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதங்களுமே மட்டுமின்றி கதையை ஒட்டியே வரும் பாடல்களின் கருத்தாழமுமே
பண்பாட்டுக்கு இழுக்காக எழுதும் பாடலாசிரியர்களுக்கு இலட்சங்களில் ஊதியம் கொடுக்கும் தமிழர்களே இப் படத்துக்கு எழுதியவர்களுக்கு
என்ன கொடுக்கப்போகின்றீர்கள் இறுவெட்டுக்களை வாங்கி பாட்ல்களை இரசிப்பதே நீங்கள் செய்யப்போகும் மரியாதையாகவிருக்கும்

பின்னணியில் இயங்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் ஆற்றல் உலக தரத்துக்கு ஈடானது என்று நெஞ்சை நிமிர்த்தி எங்கும் சொல்ல தயாராக இருக்கிறேன் அதற்கு எனது 42 ஆண்டு திரைப்பட இரசனை பலம், டெசூபன் என்ற இளந்தமிழன் செய்த வேலையை உலக இயக்குனர்கள் கண்ணுறுவராயின் அடுத்த நொடியில் அவன் டாலரில் இலட்சங்களையோ கோடிகளையோ எண்ணி வாங்கும் ஆளாவான் மென்மையான
தோற்றம் இளமல்லிகை சிரிப்பு என்று பண்பின் சிகரமாக பிரகாசிக்கும் டெசூபன் திறமையோ திறமை, யார் யாருக்கோ எழுவாயும் இன்றி பயனிலையும் இன்றி காசு உள்ளதால் பெரிய விருதுகள் கொண்டாட்டங்கள் கொண்டாடுகின்றார்கள். உலகத்தமிழா ! பார் ஒருமுறை, புலம் பெயர் தமிழன் படைப்பை சமைப்பை பிறகு சொல்லு நெஞ்சின் நீதியின் படி உன் கருத்தை , இங்கே யாரும் பகட்டு காட்டவில்லை பொய்யாக
நெளிந்து சுழிந்து புளுகவில்லை, திரையில் வைக்கப்பட்டுள்ளது உழைப்பு அதை மதிப்பதும் விடுவதும் உங்கள் பொறுப்பு ,.உலகெங்கும் வாழும்
தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களில் உயிர்வரை இனித்தாய் படத்தை திரையிட்டு கண்டு களிக்கவேண்டும் என்பதே புலம் பெயர் கலைஞர்கள்
கபடமின்றி அன்புடன் வேண்டுவது. - குறிப்பாக சொல்லும் பொது நியதி - நெல்லுக்கும் உமியுண்டு நீருக்கும் நுரையுண்டு ஆதலால் படத்தில்
சில சில சறுக்கல்கள் இருக்கலாம் ஆனால் நாயகி தனது நடிப்பால் அனைத்தையும் சீராக்கி விடுகின்றார் என்பதே முடிவான உண்மை .
படம் பார்த்து முடிந்ததும் உங்கள் நெஞ்சில் ஓங்கி நிற்பவர் நாயகி நர்மினி நர்மினி நர்மினி நடிப்பு நடிப்பு நடிப்பு உயிர்வரை இனிக்கும்.

நெஞ்சின் உண்மையுடன்
ம.இரமேசு

புதன், 19 மார்ச், 2014

நினைவில் நிலைத்த நேரங்கள் 

சிறு வயது முதல் இன்றுவரை எத்தனை வெய்யில் கண்டேன் எத்தனை மழையைக் கண்டேன் , மரங்களின் அடியில் தோன்றும் நிழல்கள் கண்டேன் எத்தனை அழகு என்னவொரு இதம் தரும் குளிர்ச்சி, குளிர்ச்சியான நல்லதண்ணிக் கிணற்று நீர் வாயில் போட நாவல்ப்பழம் விளாங்காய் கொய்யாக்காய் மாங்காய் நெல்லிக்காய்,அம்மன்கோயில் தென்றலும் அய்யானார் கோயிலடியில் வீசும் கடற்காற்றும் ஆலமர நிழலும் அழகிய பெடியளின் சிரிப்பும் பெருமிதமும் அரவணைப்பும் கேலியும் கிண்டலும் கோயிலடிச்சுண்டலும் அடிபாடும் கோபமும் பின் நேசமும்
ஆகா என்னவொரு அருமையான காலம் இனிமை இனிமை மறக்கமுடியாத செழுமை , அதோ ! பேரழகன் வாறான் சிறிது நேரத்தில் மதியழகன் வருகின்றான் பிறகு சபாவும் பகீரதனும் மனோகரனும் நேசகாந்தனும் அருமுருகுவும் திருமுருகுவும் தேவராசாவும் வருகின்றார்கள் சந்தைக் கட்டில்
கூடி வகுப்பு பாடம் பரிமாறி கேள்விகள் கேட்டு நொடிகள் அவிழ்த்து எம்ஜிஆர் சிவாஜி பற்றிக் கதைத்து பாடல்கள் பாடி
உறவினர்களில் பெரியவர்கள் வரும்போது மௌனமாகி, படிப்புமில்லை பாடமுமில்லை என்னடா செய்யிறியள் என்று
பேச்சு வாங்கி, செல்வராசு வாத்தியார் சைக்கிலைக் கண்டால் அரை உயிர் போய்வரும் பயத்தில் ஓடி ஒளிந்து
ஈச்சங்காட்டுக்கு போவமே என்று சொல்லி நடை யெடுக்க அதைக்காணும் செல்லமணி ஆச்சி " ம் வச்சதை எடுக்கப்
போகினம் சனி ஞாயிறு வந்தாக்காணும் வீடுவாசலில இருக்கினையே" என்று தன்பாட்டுக்கு ஒரு தாள ஓலம் போட அதைக்கேளாத தூரத்துக்கு ஒன்றாய் நாம் ஓட்டமெடுக்க வேலியுக்குள் நின்று இதையெல்லாம் பார்த்த சிவா டேய் நில்லுங்கோடா நானும் வாறன் எண்டு சொல்லி பொட்டுக்குள்ளால் அவசரப்பட்டு பூர முதுகை மட்டைகள் விறாண்டி உரச ஆ என்றபடி பூந்து ஓடிவந்து சேர எல்லோரும் ஈச்சங்காட்டுக்குள் நுழைவோம் அங்கே நமக்கு எந்த வேலையும் இல்லை என்ன சனங்களின் கண்களிலிருந்து தூர இருந்தோம் இஸ்டத்துக்கு கதைக்க முடிந்தது சத்தமாக பாடமுடிந்தது, பசுமையான வயல்கள் ஆங்காங்கே மேயும் பசுமாடுகள் புதர்களுக்குள் பறக்கும் குருவிகள் செண்பகங்கள் கிளிகள் காகங்கள் அண்டாங்காகங்கள் உழைக்கும் தோட்டக்காரர்கள் கந்தவன அப்புவுக்கு மூன்று கல்லை வைத்து தேநீர் எரித்த தடயமாக இருக்கும் சாம்பல் பெயர் தெரியா இனிக்கும் சிறிய பழங்கள் நஞ்சு என்று பெடியள் சொல்லும் கறுப்பு மை போன்ற பழங்கள் முறிந்து கிடக்கும் பனைமரங்கள்
பனைமரச்சோலைகள் வலது பக்கம் வெள்ளையனின் தோட்டம் அவன்மீது கொண்ட அச்சம் ஆனாலும் தைரியமும் இருந்தது காரணம் எங்களை தொட்டால் அதை வீட்டு பெரியவர்களிடம் சொல்லி அவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவார்கள் பெரியவர்கள் என்ற நினைப்பால்,வெள்ளையன் ஒரு முரடன் அவன் மேய வந்த ஆட்டைப் பிடித்து பனை மரத்துடன் சாற்றி அடித்து போட்டவனாம் - விழுந்து கிடக்கும் நொங்குகளை எடுத்து பகிர்ந்து உண்டோம் ஆளுக்கு ஒரு கண் என்று சிலசமயம் நிறையவே கிடைக்கும் நல்ல வேட்டை உடல் அலுப்பு என்னவென்று தெரியாத வயது துணிவும் சுறுசுறுப்பும் நிரம்பிக்கிடந்தவயது இதெல்லாம் முற்பகல் ஆட்டங்கள் பிற்பகல் பாரதி பாடியபடி பாரதி விளையாட்டுக்கழகம் ஆம் மாலை முழுவதும் விளையாட்டு விளையாட்டு விளையாட்டு , கழக நிதிக்காய் கல்லறுத்தார்கள் படக்காட்சி நடத்தினார்கள் நம்மில் வயது கூடியோர் அதன் பயன் சீருடை (ஜேசி) வாங்கப்பட்டது அந்த நாளை திருநாளாக நினைத்து மகிழ்ந்தோம் பொது வளவில் பாயாசம் காய்ச்சிக் குடித்தோம் அடைந்த மகிழ்ச்சி பெரிது பெரிது பிறகு
பந்து பந்து பந்து பூட்ஸ் பூட்ஸ் பூட்ஸ் ஓட்டம் ஓட்டம் அடி அடி கோல் கோல் பாரதி விளையாட்டுக்கழகம் எங்கள் கழகப்பெயர் ஊக்குவிப்பார் இன்றி தாமாக வளர்ந்த கழகம்
1980 இல் நடந்த வலிகாம் மேற்கு போட்டிகளில் கலந்து வந்த அத்தனைக் கழகங்களுக்கும் தோல்வியை பரிசளித்து ஸ்கந்தா பாடசாலை மைதானத்தில் வல்வைக் கழகமொன்றை
தண்ட உதைகள் மூலம் வென்று யாழ் மாவட்டத்தில் பாடும் மீனுடன் மோதி பெரும் பட்டாளமாக அவர்கள் ஆதரவு இருக்க நாம் விரல் விட்டு எண்ணும் ஆதரவாளர்களைக்
கொண்டு மனந்தளராது இடைவேளைவரை தாக்குப் பிடித்து பின்னரே தோல்விகண்டு யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையடைந்தோம் எமது கழக வீரர்கள் நால்வர்
யாழ் மாவட்ட கழகத்துக்கு தெரிவாகியது எங்களுக்கு பெரும் பெருமையைத் தந்தது இவையெல்லாம்
12,13,14,15, வயதுகளிலே நடந்த கூத்துக்கள் , கள்ளங்கபடம் தெரியாப் பிள்ளைகள், நடுத்தரமும் அதற்கு கொஞ்சம் மேலே வசதியுமாக வாழ்ந்தவர்கள் குடும்பத்துப் பிள்ளைகள், நிம்மதியான உறக்கங்கள் வந்துபோன காலங்கள். இன்னும் வரும் நினைவுகள்.படிக்கச் சுவைக்கக் காத்திருங்கள்
ஆக்கம்
ம . இரமேசு
நினைவில் நிலைத்த நேரங்கள் 

சிறு வயது முதல் இன்றுவரை எத்தனை வெய்யில் கண்டேன் எத்தனை மழையைக் கண்டேன் , மரங்களின் அடியில் தோன்றும் நிழல்கள் கண்டேன் எத்தனை அழகு என்னவொரு இதம் தரும் குளிர்ச்சி, குளிர்ச்சியான நல்லதண்ணிக் கிணற்று நீர் வாயில் போட நாவல்ப்பழம் விளாங்காய் கொய்யாக்காய் மாங்காய் நெல்லிக்காய்,அம்மன்கோயில் தென்றலும் அய்யானார் கோயிலடியில் வீசும் கடற்காற்றும் ஆலமர நிழலும் அழகிய பெடியளின் சிரிப்பும் பெருமிதமும் அரவணைப்பும் கேலியும் கிண்டலும் கோயிலடிச்சுண்டலும் அடிபாடும் கோபமும் பின் நேசமும் 
ஆகா என்னவொரு அருமையான காலம் இனிமை இனிமை மறக்கமுடியாத செழுமை , அதோ ! பேரழகன் வாறான் சிறிது நேரத்தில் மதியழகன் வருகின்றான் பிறகு சபாவும் பகீரதனும் மனோகரனும் நேசகாந்தனும் அருமுருகுவும் திருமுருகுவும் தேவராசாவும் வருகின்றார்கள் சந்தைக் கட்டில் 
கூடி வகுப்பு பாடம் பரிமாறி கேள்விகள் கேட்டு நொடிகள் அவிழ்த்து எம்ஜிஆர் சிவாஜி பற்றிக் கதைத்து பாடல்கள் பாடி
உறவினர்களில் பெரியவர்கள் வரும்போது மௌனமாகி, படிப்புமில்லை பாடமுமில்லை என்னடா செய்யிறியள் என்று
பேச்சு வாங்கி, செல்வராசு வாத்தியார் சைக்கிலைக் கண்டால் அரை உயிர் போய்வரும் பயத்தில் ஓடி ஒளிந்து 
ஈச்சங்காட்டுக்கு போவமே என்று சொல்லி நடை யெடுக்க அதைக்காணும் செல்லமணி ஆச்சி " ம் வச்சதை எடுக்கப் 
போகினம் சனி ஞாயிறு வந்தாக்காணும் வீடுவாசலில இருக்கினையே" என்று தன்பாட்டுக்கு ஒரு தாள ஓலம் போட அதைக்கேளாத தூரத்துக்கு ஒன்றாய் நாம் ஓட்டமெடுக்க வேலியுக்குள் நின்று இதையெல்லாம் பார்த்த சிவா டேய் நில்லுங்கோடா நானும் வாறன் எண்டு சொல்லி பொட்டுக்குள்ளால் அவசரப்பட்டு பூர முதுகை மட்டைகள் விறாண்டி உரச ஆ என்றாபடி பூந்து ஓடிவந்து சேர எல்லோரும் ஈச்சங்காட்டுக்குள் நுழைவோம் அங்கே நமக்கு எந்த வேலையும் இல்லை என்ன சனங்களின் கண்களிலிருந்து தூர இருந்தோம் இஸ்டத்துக்கு கதைக்க முடிந்தது சத்தமாக பாடமுடிந்தது, பசுமையான வயல்கள் ஆங்காங்கே மேயும் பசுமாடுகள் புதர்களுக்குள் பறக்கும் குருவிகள் செண்பகங்கள் கிளிகள் காகங்கள் அண்டாங்காகங்கள் உழைக்கும் தோட்டக்காரர்கள் கந்தவன அப்புவுக்கு மூன்று கல்லை வைத்து தேநீர் எரித்த தடயமாக இருக்கும் சாம்பல் பெயர் தெரியா இனிக்கும் சிறிய பழங்கள் நஞ்சு என்று பெடியள் சொல்லும் கறுப்பு மை போன்ற பழங்கள் முறிந்து கிடக்கும் பனைமரங்கள் 
பனைமரச்சோலைகள் வலது பக்கம் வெள்ளையனின் தோட்டம் அவன்மீது கொண்ட அச்சம் ஆனாலும் தைரியமும் இருந்தது காரணம் எங்களை தொட்டால் அதை வீட்டு பெரியவர்களிடம் சொல்லி அவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவார்கள் பெரியவர்கள் என்ற நினைப்பால்,வெள்ளையன் ஒரு முரடன் அவன் மேய வந்த ஆட்டைப் பிடித்து பனை மரத்துடன் சாற்றி அடித்து போட்டவனாம் - விழுந்து கிடக்கும் நொங்குகளை எடுத்து பகிர்ந்து உண்டோம் ஆளுக்கு ஒரு கண் என்று சிலசமயம் நிறையவே கிடைக்கும் நல்ல வேட்டை உடல் அலுப்பு என்னவென்று தெரியாத வயது துணிவும் சுறுசுறுப்பும் நிரம்பிக்கிடந்தவயது இதெல்லாம் முற்பகல் ஆட்டங்கள் பிற்பகல் பாரதி பாடியபடி பாரதி விளையாட்டுக்கழகம் ஆம் மாலை முழுவதும் விளையாட்டு விளையாட்டு விளையாட்டு , கழக நிதிக்காய் கல்லறுத்தார்கள் படக்காட்சி நடத்தினார்கள் நம்மில் வயது கூடியோர் அதன் பயன் ஜேசி (சீருடை) வாங்கப்பட்டது அந்த நாளை திருநாளாக நினைத்து மகிழ்ந்தோம் பொது வளவில் பாயாசம் காய்ச்சிக் குடித்தோம் அடைந்த மகிழ்ச்சி பெரிது பெரிது பிறகு 
பந்து பந்து பந்து பூட்ஸ் பூட்ஸ் பூட்ஸ் ஓட்டம் ஓட்டம் அடி அடி கோல் கோல் பாரதி விளையாட்டுக்கழகம் எங்கள் கழகப்பெயர் ஊக்குவிப்பார் இன்றி தாமாக வளர்ந்த கழகம் 
1980 இல் நடந்த வலிகாம் மேற்கு போட்டிகளில் கலந்து வந்த அத்தனைக் கழகங்களுக்கும் தோல்வியை பரிசளித்து ஸ்கந்தா பாடசாலை மைதானத்தில் வல்வைக் கழகமொன்றை
தண்ட உதைகள் மூலம் வென்று யாழ் மாவட்டத்தில் பாடும் மீனுடன் மோதி பெரும் பட்டாளமாக அவர்கள் ஆதரவு இருக்க நாம் விரல் விட்டு எண்ணும் ஆதரவாளர்களைக் 
கொண்டு மனந்தளராது இடைவேளைவரை தாக்குப் பிடித்து பின்னரே தோல்விகண்டு யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையடைந்தோம் எமது கழக வீரர்கள் நால்வர்
யாழ் மாவட்ட கழகத்துக்கு தெரிவாகியது எங்களுக்கு பெரும் பெருமையைத் தந்தது இவையெல்லாம் 
12,13,14,15, வயதுகளிலே நடந்த கூத்துக்கள் , கள்ளங்கபடம் தெரியாப் பிள்ளைகள், நடுத்தரமும் அதற்கு கொஞ்சம் மேலே வசதியுமாக வாழ்ந்தவர்கள் குடும்பத்துப் பிள்ளைகள், நிம்மதியான உறக்கங்கள் வந்துபோன காலங்கள். இன்னும் வரும் நினைவுகள்.படிக்கச் சுவைக்கக் காத்திருங்கள் 
ஆக்கம்
ம . இரமேசு
காலம் தந்த குரல் வள்ளல் காலமானாரோ !

உன்னையே நீ அறிந்தாய் உலகுக்கு தேன்வார்த்தாய்
என்னையே நான் தந்தேன் ஐயா எனையாட்கொண்டாய்
மண்ணையே பொன்னாக்கும் செந்தேன் நின் குரல்வளம்
மண்ணில் இனியார் பாடுவார் உன்போல் விண்போல்

பாட்டுக்கு ராஜாவாக இருந்தீரே பழனி முருகனடிசென்றீரோ
நாட்டுக்கு நல்ல குரல் காட்டினீரே நானிலமும் மகிழ்ந்ததுவே
போதுமென்று நினைத்தீரோ முருகன் பொற்பாதங்கள் பணிந்தீரோ
உம் பிரிவால் எமையழுக செய்தீரே செவிகளும் துடித்ததுவே

விண்முட்டும் குரெலெடுத்து வீசிநீரே வெண்மேகம் கலந்தீரோ
கண்முட்டும் காலம்வரை கேட்டிடவே கம்பீர குரல்தந்து போநீரோ
மண் மாந்தர் சேவைமுடித்து விண்ணுலக சேவைக்கு சென்றீரோ
இனியெந்நாளும் உன்போல பாட்டிசைக்க இனி யார்வருவாரோ

சிவலோக பதவி பெற்று அந்த ஈசுவரனை குரலால் மயக்க சென்றீரோ
பாட்டு மன்னன் வருகை கண்டு பரந்தாமன் பதாகை வைப்பானோ
முருகன் மயிலேற்றி ஏழுலகும் கேட்க்க இசைத்திடு என்பானோ
இந்திர லோகத்துக்கு இன்குரல் வந்ததென்று இந்திரனும் மகிழ்வானோ

எந்திரமும் வாய்மூடும் உன்குரல்கேட்டால் எந்த தந்திரமும் இனிக்காது
எங்கள் டி எம் எஸ் குரல்போலே இனி இன்னொருவன் இவர்போலில்லை
நல் வேல்முருகன் பக்தன் தன் குரலால் தமிழாண்ட கோமான் 
அவர் உண்மை அமைதி கொள்ள அவர் முருகன் துணை செய்வான்

ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி

ஆக்கம்
டி எம் எஸ்
பித்தன்
ம. இரமேசு
இரு விழிகள்  அழுவதற்கு  போதவில்லை 

இரு கண்கள் அழுவதற்கு  போதவில்லை  ஆறாய் கண்ணீர் ஓடுது 
அட்டகாசங்களும்  ஆய்கினைகளும் எல்லை இன்றி  நீளுது ஆளுது 
எத்தனை  எத்தனை மனிதரை  பிணமாக்கி  இரத்தம்  பார்த்தார்கள் 
இன்னும் அடங்கவில்லை  இனவெறி  கொலை வெறி இரத்தவெறி 
முற்றாத பிள்ளைகளை  முதியோரை  சாகடித்தும் முடியலை ஏடு 
தொடருது  கொலைவெறி  இனவெறி கைது  மனிதமில்லா கூடு 
பக்குவமாகி  பத்து நாளான  பிள்ளையை  நெஞ்சம்,இன்றி நீசர் நீர் 
தூக்கி  சென்று  என்னதான்  விசாரணை  செய்வீரோ அம்  மலரிடம் 
மா பாவம் செய்யும்  மா தலைவர்கள்  பாபத்தை   மண் தாங்காது 
மனிதம்  அழுகிறது  உங்கள்  செய்கைகள்  கண்டு  நீரோ  களிப்பில் 
நெருப்பாய் கொதிக்கிறது நெஞ்சம்  கொடும் நீசர்கள்  செயல் கண்டு 
என்ன நினைத்து  இறைவா  எம்மை  வாட்டி  வதைக்க வழிசெய்தாய் 
காட்டு மனங்கொண்டே  சிலர் காணாது  துடியாது  தூங்கி  எழுகின்றார் 
தாங்க முடியவில்லை  நெஞ்சம் வேதனையால்  விம்முகின்றது 
என்ன பாபம்  செய்தாரோ   தமிழர்  சொல்லொணா  சோகம் கொள்ள 
தமிழன்னை  துயிலுரித்து உதைக்கின்றார் உலகம்  வேடிக்கை காண 
தடுப்பவர்  இல்லை  காப்பவர்  இல்லை கடவுளே  இறங்கி வாராயோ 

ஆக்கம் 
வேதனையுடன் 
ம.இரமேசு

Raajaa raam mokan roi

மனித மகான்  "ராஜா ராம் மோகன்ராய்"

மதத்தால் மயங்கியோரை  விழிக்க  கூவிய சேவல்  "ராஜா ராம் மோகன் ராய்"14 ஆகஸ்த்து 1774 ல்  வங்காள  மண்ணில்  விளைந்த மனித  மாணிக்கம்  ராஜாராம்  மோகன் ராய் பெரும் தனவந்தர் குடும்பத்தில்  பிறந்து வளர்ந்தவர்  கல்வி கேள்விகளில்  நிறைந்த  மனிதர் 
புதிய இந்தியாவை  நிறுவியவர் என்று அழைக்கப்பட்டவர்  முதன்முதலில்  1828 இல்  பிரம்மசமாசம்  என்னும் சீர்திருத்த  இயக்கத்தை தொடங்கியவர் 
இந்துமத   சமய  சடங்குகளுக்கும்  மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக  போராடியவர்  நோக்கம்  நன்றென்றால்  நன்றாம்  பிறரை நோகடிக்கும்  என்றால் தவறாம்  என்று நெஞ்சை  நிமிர்த்தி போராடிய  மறுமலர்ச்சியாளன்  மானிட யோகி  மனிதாபிமானி  எட்டு மொழி அறிந்த அறிஞன்  பண்பாளன்  பாசச்சூரியன் பாரத மைந்தன்  இருண்ட  நெறிக்கு  வெளிச்சம்  காட்டி  கொடிய செயல்களுக்கு  மூடு விழா எடுத்த  மூதறிஞன்  "ராஜாராம் மோகன் ராய் " மனித குலம்   குறிப்பாக இந்திய  பெண்ணினம்  போற்றவேண்டிய  பேராளன்  பெருமனிதன்  சந்தண மனமுடையோன்  சமதர்ம வாதி  சக்கரக்கோலோன்  சனாதனத்தில்  திருத்தம் கண்ட  சாவி ஊரார்  உறங்கையிலே  உன்னத விடியலுக்காய்   விழித்து கூவிய   சேவல்
 
  
                                                ஆண்களின்  பாலியல்  கொடுமை  தாங்காத   சில மனைவியர்  தங்கள்  கணவன் மார்களுக்கு  உணவில்  விடம் 
வைத்து கொன்றிருக்கின்றார்கள் அதனை  அறிந்த  ஆண்கள் தங்களுக்கும்  தமது மனைவியர்கள்  துரோகம்  செய்தால் என்ற பயத்தில் இயற்றப்பட்டதே உடன்கட்டையேற்றும்  கொடும்  சட்டம் இதனை  மதத்தின் சடங்காக்கியது  மகா  கொடுமை ,  தர்மம்  சொல்லும் நெறிக்கு  கட்டுப்பட்டவர்களே அநியாய  கொடுங் கொள்கையை  வகுத்தார்கள்  என்ற  இழி சொல்லுக்கு  இந்து மத  மேதாவிகள் தள்ளப்பட்டார்கள்,  மனிதனை  மதம்  தன்  கட்டுக்குள்  கொண்டு வந்து அதை சமூகம் அங்கீகரித்து  நடக்க பொய்க்கதைகளை சொல்லி நம்ப வைத்து  ஏமாற்றியது,   மதத்தை சடங்கை  ஒப்புக்கொள்ளா  மனிதர்களை சமூகம் அது இதுவாகவே நோக்கியது தள்ளியும் வைத்தது  கணவன் இறந்தால்  பெண்  வெளியே  வரத்  தடை   வந்தால்  சகுனம்  பார்த்து ஒதுங்குதல்  என்று அறிவுக்கு எட்டாத  செயல்களில் இன்றும்  இந்து தத்துவங்கள்  பாய்கின்றது  மதத்தை காட்டி  பிழைக்கும் சோம்பேறிகளின் வழக்கு அவர்களின் சீரான வாழ்வியலால் வெல்லப்பட்டது அதற்கு ஒழுங்கீனர்களாக வாழும் பெருங் கூட்டத்தினர் உரம்போட்டு வளர்த்தெடுத்தனர்  என்பதே வெளிச்சமான உண்மை நான் நானாக நடக்க  மண்ணில்  சுதந்திரமில்லை  இறைவன்  என்பவனே ஒத்துக்கொள்ள  மாட்டாத  சடங்குகள்  உண்டாக்கப்பட்டு அதை இறைவன் பெயரால்  நடைமுறையாக்கி  ஒரு கூட்டம் தங்களை வல்லாதிக்கமாக்கி  கொழுத்து நிற்கின்றது  

 

                                                                                                                                                                                                                                      ஆக்கம்  செய்யும்  கருவிகள்  கண்டுபிடிப்பதில்  நேரம்  செலவாகாது  விழாக்களிலும் சடங்குகளிலுமே  மக்கள்  நேரத்தை செலவிட்டார்கள்  பொறிகள்  இணைக்கப்பட்டு நாட்டு மக்களின்  வாழ்வியல் இலகுவாக்க  வழிகள்  காணப்படவில்லை தொழிலில் பாகுபாட்டை  புகுத்தி சாதிகள்  பிரித்து 
சண்டைகள்  போட்டு  அறிவினை  பின் தள்ளி  மானிடம்  மந்தமானதே  மதத்தினால்  ஏற்பட்ட  விபரீதம் என்பதனை  வரலாறுகள்  சொல்லி நிற்கின்றன  இதே  நிலையில்  இல்லாது  வெள்ளையர்கள்  ஆக்க வேலைகளில்   அறிவை  செலவு செய்து  அகிலம்  வெல்லும்  பலம்  பெற்று 
இன்று  நிமிர்ந்து  நிற்பதனை  பார்த்து  மெச்சுகின்றோம்  வெள்ளையன்  சொன்னால் செய்தால்  சரியாக  இருக்கும் எனுமளவிற்கு  நினைக்க 
வெள்ளையர்கள்  வளர்ச்சி  சகல  துறைகளிலும்  கோலோச்சுகின்றது  நம் முன்னோர்கள்  தியான  ஞான  மொழி  விற்பன்னம்  கண்டார்களே  
தவிர  நடைமுறை வாழ்வியலுக்கான  கருவிகள்  படைப்பதில்  முன்னேற்றம் காணவில்லை  என்பதே  உண்மை  அதனால்  நமக்கு  நல்ல சந்தைகள் 
கிட்டாது  நாடும்  பறிபோனதே  வரலாறு  நமக்குள்  இருக்கும்  அறிவீனங்கள்  துடைக்கப்படவேண்டும்  அறிவியலில்  முன்னேறி  அதிசயங்கள்  படைக்க வேண்டும்  எமது  வருங்கால  சந்ததி  அறிவியலில்  புதிய  சாதனைகளை  நிகழ்த்த வேண்டும்  தமிழர்கள்  அறிவியலில்  பெரும்  வல்லுனர்கள்  என்று அகிலம் பாராட்ட வேண்டும்.

ஆக்கம் 
ம.இரமேசு