நினைவில் நிலைத்த நேரங்கள்
சிறு வயது முதல் இன்றுவரை எத்தனை வெய்யில் கண்டேன் எத்தனை மழையைக் கண்டேன் , மரங்களின் அடியில் தோன்றும் நிழல்கள் கண்டேன் எத்தனை அழகு என்னவொரு இதம் தரும் குளிர்ச்சி, குளிர்ச்சியான நல்லதண்ணிக் கிணற்று நீர் வாயில் போட நாவல்ப்பழம் விளாங்காய் கொய்யாக்காய் மாங்காய் நெல்லிக்காய்,அம்மன்கோயில் தென்றலும் அய்யானார் கோயிலடியில் வீசும் கடற்காற்றும் ஆலமர நிழலும் அழகிய பெடியளின் சிரிப்பும் பெருமிதமும் அரவணைப்பும் கேலியும் கிண்டலும் கோயிலடிச்சுண்டலும் அடிபாடும் கோபமும் பின் நேசமும்
ஆகா என்னவொரு அருமையான காலம் இனிமை இனிமை மறக்கமுடியாத செழுமை , அதோ ! பேரழகன் வாறான் சிறிது நேரத்தில் மதியழகன் வருகின்றான் பிறகு சபாவும் பகீரதனும் மனோகரனும் நேசகாந்தனும் அருமுருகுவும் திருமுருகுவும் தேவராசாவும் வருகின்றார்கள் சந்தைக் கட்டில்
கூடி வகுப்பு பாடம் பரிமாறி கேள்விகள் கேட்டு நொடிகள் அவிழ்த்து எம்ஜிஆர் சிவாஜி பற்றிக் கதைத்து பாடல்கள் பாடி
உறவினர்களில் பெரியவர்கள் வரும்போது மௌனமாகி, படிப்புமில்லை பாடமுமில்லை என்னடா செய்யிறியள் என்று
பேச்சு வாங்கி, செல்வராசு வாத்தியார் சைக்கிலைக் கண்டால் அரை உயிர் போய்வரும் பயத்தில் ஓடி ஒளிந்து
ஈச்சங்காட்டுக்கு போவமே என்று சொல்லி நடை யெடுக்க அதைக்காணும் செல்லமணி ஆச்சி " ம் வச்சதை எடுக்கப்
போகினம் சனி ஞாயிறு வந்தாக்காணும் வீடுவாசலில இருக்கினையே" என்று தன்பாட்டுக்கு ஒரு தாள ஓலம் போட அதைக்கேளாத தூரத்துக்கு ஒன்றாய் நாம் ஓட்டமெடுக்க வேலியுக்குள் நின்று இதையெல்லாம் பார்த்த சிவா டேய் நில்லுங்கோடா நானும் வாறன் எண்டு சொல்லி பொட்டுக்குள்ளால் அவசரப்பட்டு பூர முதுகை மட்டைகள் விறாண்டி உரச ஆ என்றபடி பூந்து ஓடிவந்து சேர எல்லோரும் ஈச்சங்காட்டுக்குள் நுழைவோம் அங்கே நமக்கு எந்த வேலையும் இல்லை என்ன சனங்களின் கண்களிலிருந்து தூர இருந்தோம் இஸ்டத்துக்கு கதைக்க முடிந்தது சத்தமாக பாடமுடிந்தது, பசுமையான வயல்கள் ஆங்காங்கே மேயும் பசுமாடுகள் புதர்களுக்குள் பறக்கும் குருவிகள் செண்பகங்கள் கிளிகள் காகங்கள் அண்டாங்காகங்கள் உழைக்கும் தோட்டக்காரர்கள் கந்தவன அப்புவுக்கு மூன்று கல்லை வைத்து தேநீர் எரித்த தடயமாக இருக்கும் சாம்பல் பெயர் தெரியா இனிக்கும் சிறிய பழங்கள் நஞ்சு என்று பெடியள் சொல்லும் கறுப்பு மை போன்ற பழங்கள் முறிந்து கிடக்கும் பனைமரங்கள்
பனைமரச்சோலைகள் வலது பக்கம் வெள்ளையனின் தோட்டம் அவன்மீது கொண்ட அச்சம் ஆனாலும் தைரியமும் இருந்தது காரணம் எங்களை தொட்டால் அதை வீட்டு பெரியவர்களிடம் சொல்லி அவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவார்கள் பெரியவர்கள் என்ற நினைப்பால்,வெள்ளையன் ஒரு முரடன் அவன் மேய வந்த ஆட்டைப் பிடித்து பனை மரத்துடன் சாற்றி அடித்து போட்டவனாம் - விழுந்து கிடக்கும் நொங்குகளை எடுத்து பகிர்ந்து உண்டோம் ஆளுக்கு ஒரு கண் என்று சிலசமயம் நிறையவே கிடைக்கும் நல்ல வேட்டை உடல் அலுப்பு என்னவென்று தெரியாத வயது துணிவும் சுறுசுறுப்பும் நிரம்பிக்கிடந்தவயது இதெல்லாம் முற்பகல் ஆட்டங்கள் பிற்பகல் பாரதி பாடியபடி பாரதி விளையாட்டுக்கழகம் ஆம் மாலை முழுவதும் விளையாட்டு விளையாட்டு விளையாட்டு , கழக நிதிக்காய் கல்லறுத்தார்கள் படக்காட்சி நடத்தினார்கள் நம்மில் வயது கூடியோர் அதன் பயன் சீருடை (ஜேசி) வாங்கப்பட்டது அந்த நாளை திருநாளாக நினைத்து மகிழ்ந்தோம் பொது வளவில் பாயாசம் காய்ச்சிக் குடித்தோம் அடைந்த மகிழ்ச்சி பெரிது பெரிது பிறகு
பந்து பந்து பந்து பூட்ஸ் பூட்ஸ் பூட்ஸ் ஓட்டம் ஓட்டம் அடி அடி கோல் கோல் பாரதி விளையாட்டுக்கழகம் எங்கள் கழகப்பெயர் ஊக்குவிப்பார் இன்றி தாமாக வளர்ந்த கழகம்
1980 இல் நடந்த வலிகாம் மேற்கு போட்டிகளில் கலந்து வந்த அத்தனைக் கழகங்களுக்கும் தோல்வியை பரிசளித்து ஸ்கந்தா பாடசாலை மைதானத்தில் வல்வைக் கழகமொன்றை
தண்ட உதைகள் மூலம் வென்று யாழ் மாவட்டத்தில் பாடும் மீனுடன் மோதி பெரும் பட்டாளமாக அவர்கள் ஆதரவு இருக்க நாம் விரல் விட்டு எண்ணும் ஆதரவாளர்களைக்
கொண்டு மனந்தளராது இடைவேளைவரை தாக்குப் பிடித்து பின்னரே தோல்விகண்டு யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையடைந்தோம் எமது கழக வீரர்கள் நால்வர்
யாழ் மாவட்ட கழகத்துக்கு தெரிவாகியது எங்களுக்கு பெரும் பெருமையைத் தந்தது இவையெல்லாம்
12,13,14,15, வயதுகளிலே நடந்த கூத்துக்கள் , கள்ளங்கபடம் தெரியாப் பிள்ளைகள், நடுத்தரமும் அதற்கு கொஞ்சம் மேலே வசதியுமாக வாழ்ந்தவர்கள் குடும்பத்துப் பிள்ளைகள், நிம்மதியான உறக்கங்கள் வந்துபோன காலங்கள். இன்னும் வரும் நினைவுகள்.படிக்கச் சுவைக்கக் காத்திருங்கள்
ஆக்கம்
ம . இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக