வெள்ளி, 25 ஏப்ரல், 2014

காய்ந்த பூக்கள் (1)
கிழவனும் கிழவியும் ஆளையாள் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்தனர் கிழவன் வாயில் வெற்றிலை அரைபட கிழவி பாக்கை குடுவையில் போட்டு இடித்துக்கொண்டே இடைக்கிடை கிழவனை பார்த்தா உடலில் பலமிருந்தபோது கிழவன் கிழவியை எப்பொழுதும் அணைப்பதிலேயே குறியாயிருந்தார் அது  கிழவிக்கும்  பெரும் மகிழ்வை கொடுத்தது இன்பவாழ்வு அன்பெனும் நூலினூடாக நகர்ந்து வந்தது இப்போதும் கிழவனுக்கு உள்ளத்தில் ஆசையுண்டு உடலில் தெம்பில்லை காலவோட்டம் தந்த முதுமை அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது .




 ஒண்டரை சுண்டு அரிசியை போட்டு மூண்டு திரளியில அரைச்சகுழம்பு ரெண்டு திரளியிலசொதி வேலிக்கு நட்ட வாதனாராணியிலையை  ஒடிச்சு றால் போட்டு வறை என்று அவர்கள் நாட்கள் நகர்ந்தது எனக்கென்னவோ இந்த பெரிய கல்வீடு
பிடிக்கேல்லை பழைய வளவுக்குள்ள இருந்த மண்வைச்ச  சுவரும் ஓலையாலை  வேஞ்ச குடிசையுந்தான் நிம்மதி  அதிலதான் குளிர்ச்சியும் இருந்தது  என்று அடிக்குரலில் கிழவன் அடிக்கடி இருமி இருமி  கிழவியிடம் சொல்லி கொண்டிருந்தார்    என்ன செய்யிறது தான் உழைச்சு கட்டின இந்த கல்வீட்டிலதான் நாங்கள் இருக்கவேணுமெண்டு சொல்லிபோட்டு பெடி போய் கொழும்பில வாடகை வீட்டில இருக்குது இஞ்சை மாற்றம் கிடைச்சா பெடி இஞ்சை வந்துவிடும் எங்களுக்கும்
நிம்மதி பிள்ளையை பாத்துக்கொண்டே இருக்கலாம் நாங்களும் பழைய குடிசை வீட்டுக்கு போகலாம் ஆனா பெடி எங்கள அங்கை  போகவிடான் என்றா கமலக்கிழவி

 
ஒட்டற்ற பேத்தியை கேட்டு வந்தது என்ன சொல்ல என்றா கிழவி என்னவோ அவனுக்கு கடிதத் துண்டை போட்டு கேள் என்றார் கிழவனார்
சோடாக்கடையில போய் சிவத்திட்ட சொல்லு பெடி கடிதம் எழுதி போட்டுவிடும் அவனிட்ட அட்ரசும் இருக்கு நீ  அனுப்பிற காசு  குடுத்தா 
போது மென்றார் கிழவனார் இந்தா கிளம்புறன் என்று சொல்லிக்கொண்டே கிழவி நடையை கட்டினா  சோடா கடைக்கு





 நாலுபேர் கடையில் சாமான்கள் வாங்க நின்றார்கள் கிழவி குந்தியிருந்து வெத்திலையை மடிச்சு போட்டு ரெண்டு துப்பல் துப்பி முடிய ஆட்கள் நகர்ந்தனர்
சமயம் நோக்கியெழுந்த கிழவி தம்பி என்று நீட்டி எல்லா விசயத்தையும் நாலாம் பேருக்கும் தெரியாமல் சொல்லி காசையும் குடுத்துபோட்டு திரும்ப வீட்டுக்கு நடக்கவும் முடக்கில திரும்பின சாந்தம்மா கிழவியை கண்டு குஞ்சி குஞ்சி என்று கத்தி கூப்பிட
கூப்பிட்ட சாந்தம்மாவை மெதுவாக திரும்பி பார்த்த கமலக் கிழவி சிரிசுக்கொண்டே நிக்க உங்கையெல்லாம் உலாத்தா தெரியும் எங்கண்டை  வீட்டை
மட்டும் வர ஏலாதாக்கும் ஆ என்றா சாந்தம்மா 



 எடி பிள்ள நான் எங்கையடி உலாத்துறன் ஒரு முக்கியமான அலுவல் அதுதான் வெளிகிட்டனான்   எங்களுக்கு தெரியாமல் அதென்ன முக்கியமான அலுவல் வீட்டை வாவன் சொல்றன் இஞ்சிநேயுக்குள்ள பறையிறவிசயமில்ல வீட்டை வா என்றா கிழவி ஐயோ நான் சித்தங்கேணி வசுவை பிடிக்கவேணும் வார கிழமை வாறன் என்றுவிட்டு சாந்தம்மாதனக்குள் என்னவா இருக்கும் என்ற சிந்தனையுடன் பஸ்ஸை பிடிக்க வேகமாக நடந்தா

தொடரும்
 

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வன்னியில் கண்ட கொடூரம் மூன்று நோக்குகள்
April 20, 2014
பேசிப்பேசி எழுதியெழுதி ஒருவராலும் முடிக்கமுடியாத இதயத்தில் விழுந்த வேதனை வடுக்கள் நாம் வன்னியில் கண்ட கொடூரம் நம் மண்ணில்..
இப்படி ஒரு மனிதப் படுகொலை இராட்சத மனித அழிப்பு நிகழும் என்று கனவிலும் கண்டிருக்கமுடியா அவலமது..
நலம் சூழ்ந்த வளமண்ணில் வாழ்ந்த தமிழர்கள் வாயடைத்து நிற்க இதுதான் சமயம் சிதைக்க எனக் கருக்கொண்டோர் சிதைத்து சின்னாபின்னமாக்கி தமிழர்களை அவர்கள் தம் இன்ப வாழ்வை மண்மூடி நிறைத்தார்கள்.
இன்று ஒரு அழகான சிறுமி வன்னி மண்ணில் கொடியோர் செயலால் தனது கால்களை இழந்தும் தனது மன வைராக்கியத்தின் ஈடுபாட்டால் புலமைப்பரிசில் தேர்வில் வெற்றி பெற்று கல்வியில் தேறி இருக்கும் காட்சி கண்டு மனம் நெகிழ்கிறது.
இதுதான் மனித வெற்றி. நமக்கு கால்கள் கைகள் கண்கள் காதுகள் சரியாக இருந்தும் எத்தனை பலவீனங்கள் வாழ்க்கையில் நம்முடன் ஒப்பிட்டால் கெங்காதரன் பவதாரணி – கலைமகள் வித்தியாலயம் . முள்ளியவளையில் தரம் 6இல் கற்கின்றார்அவள் சாதனை சிகரம் .


மனம் போனபடி அறிவை சரியாக பயன்படுத்தாது எல்லாம் புரிந்தும் புரியாமல் வாழ்கின்றோம், என்ன நடக்கின்றது என்பது நமக்கே இருட்டாக தெரிகின்றது.
வழி பிழை என்று திருத்தினாலும் நம்மை அறியாது ஒரு மடமை வந்து சூழ்கின்றது என்பதை அனுபவத்தில் கண்டவர்கள் மட்டுமே அறிவார்கள்.
பெரும் அறிவாளர்கள் சிந்தனைச் சிற்பிகள் தங்கள் சொந்த வாழ்வை அழகாக வாழத்தெரியாது அல்லல் பட்டு இறந்திருப்பதை வரலாறு சொல்லி தருகின்றது நமது காலத்தில் கவிஞர் கண்ணதாசன் பட்ட துன்பங்கள் பெரிது என்பதை அவரே கைபட எழுதிக் காட்டியுள்ளார் என்பது அனைவருக்கும் எடுத்துக்காட்டாகும்.
எல்லாம் அறிந்த தர்ம ராசாவும் சூதாடி எல்லாம் இழந்தார் ஊழின் பெரு அடிக்கு ஆளாகாதார் ஒருவருமில்லை எமது முயல்வுகள் மட்டுமே எங்களை உயர்த்தும்.
உயர்ந்த இடங்களில் இருந்தே நமது உய்வுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றது உயர்ந்த இடங்களில் இருப்போர் கீழே இறங்கி வந்தாலே மனிதகுலம் உய்யும் இல்லையேல் அழிந்து ஒழிவதே முற்றாகும்.
நதியின் இறக்கம் நீரைப் பருக வழிவகுப்பதை எளிதாக நோக்கின் அனைத்தும் புரியும் உயர்ந்த வானிலிருந்து கொட்டும் புனலால் மண்ணில் அனைத்தும் விளைகின்றது மழை மட்டும் கொட்டாவிட்டால் மண்ணுலகம் மயானமாகிவிடும் உலகம் தோன்றியதிலிருந்து மழை கொட்டுகின்றதால் இன்றளவும் மானிடம் வாழுகின்றது.
ஆனால் மனிதனை மனிதனே அழிக்கின்றான் என்பதே அறிவுக்கேடு அறிவியலில் பெரிய இடத்தை அடைந்துவிட்டதாக மார்பு தட்டி என்ன பயன்..?
அயலாரை அமைதியாக வாழச் செய்யத் தெரியாத அறிவால் வெறுமனே உபகரண கண்டு பிடிப்பினால் மனிதகுலம் நிம்மதி அடைந்து விடுமா – ஆழ்ந்த ஞானம் இருப்பவர்களிடமே இன்னொரு உயிருக்கான சுதந்திரம் நிம்மதி என்பன எத்தனை முக்கியம் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
அதை படித்து உண்மையாக ஒழுகின் அனைவருக்கும் உண்டாகும் சாந்தி சமாதானம் நல்வாழ்வு என்பதனை அறிவில் சிறந்த அரசியலாளர்கள் உணரவேண்டும் .
அனைவரையும் நிம்மதியாக வாழவைக்க அயராது பணியாற்றவேண்டும் அகிலம் குளிரவேண்டும் அனைவரும் மகிழவேண்டும் .
அன்புடன்
ம.இரமேசு

புதன், 16 ஏப்ரல், 2014

சிந்தனையும் செழிப்பும் 

எத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றைய செயல் வினைக்கும் சரியாக பொருந்துகின்றது ஔவையின் ஆக்கமும் வள்ளுவர் குறளும் மற்று அறிஞர்கள் ஆக்கங்களும் என்றால் அவர்களின் சிந்தனை வளம் வலிமையானது என்று ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு கருத்துக்கு இடமில்லை 

இவ்வுலகில் பிறர் துணையின்றி எவரும் தனித்து வாழ முடியாது பணம் நெல்லாகாது நீராகாது - ஒருவரின் தேடுதலில் உழைப்பில் இன்னொருவர் தங்கியிருக்கின்றார்
ஆதலினால் வளைந்தும் நிமிர்ந்தும் குறுகியும் கூனியும் நிலைமைகளுக்கு ஏற்ப ங போல வாழவேண்டும் என்கின்றார் ஔவையார் , அதன் கருத்து ஓணான் (பச்சோந்தி) போல் வாழ்வதென்று அர்த்தம் கொள்ளக்கூடாது எல்லோரிடமும் பகை இன்றி அவரவர் இயல்புக்கு ஏற்றவாறு நாம் நம்மை சுதாகரித்துக்கொண்டு நடத்தல் நல்லது பாதுகாப்பு என்பதே. அன்புக்கு வளை ஆணவத்துக்கு எதிராக நிமிர் பண்புக்கு சமன் செய் என்பதை எழுத்தின் உருவிலேயே காணலாம்.

ஞானமும் கல்வியும் ஆயிரம் அறிந்தும், கொண்டும் என்ன பயன் வயிறு பசிக்கையில் உணவின்றேல் எல்லாம் தூர விலகிவிடும்
ஐந்துகண்டங்களையும் கட்டியாளும் அரசனென்றாலும் அனைத்தும் தெரிந்த விற்பன்னனென்றாலும் சோறின்றில் சுருங்கி மடிவர். - தேர் கொண்ட மன்னன் எங்கே , பேர்சொல்லும் புலவன் எங்கே, ஏர்கொண்ட உழவன் இன்றி , போராடும் வீரன் எங்கே.
அனைத்தும் ஆகாரத்துக்கு பின்னாலே , உணவில் தன்னிறைவை கண்ட பின்னரே நாடோ மனிதனோ பிற விடயங்களை சிந்திக்க முடியும் - "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்னே".

வேட்டையாடிய மனிதன் அடுத்துவரும் நாட்களுக்கு மாமிசத்தை பதப்படுத்தி வைத்ததனாலேயே மேற்கொண்டு செழிக்க சிந்திக்க அவனுக்கு நேரமிருந்தது இதன் அடிப்படையிலேயே இன்று சிந்தித்து செயலாற்றும் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கின்றது
அவர்கள் கவனம் அன்றாட தேவைகளின் பக்கம் திரும்பினால் சுறுசுறுப்பு குறைந்து நாட்டு முன்னேற்றத்துக்கு சிந்திக்க முடியாது என்ற உண்மை அதற்குள் புதையுண்டு கிடக்கின்றது,

மனிதனின் பேராசை தன்னை சார்ந்த புறவாழ்வியல் பற்றியே அதிகம் சிந்திக்க வைக்கின்றது இனம் சார்ந்த பிறர் சார்ந்த சிந்தனை அருகிக்கொண்டே செல்கின்றது அளவுக்கு மீறிய ஆடம்பரங்களை வாழ்வுக்கு அறிமுகம் செய்ய செய்ய வியாபாரம் பெருகி மனிதம்
குறைந்து செல்கின்றது என்பதனை அறியலாம்

யாதும் ஊரே யாவருங்கேளிர் என்ற கணியன் பூங்குன்றனைப்போல விரிந்த இதயம் கொண்டவர்கள் இன்றைய உலகில் விரல் விட்டு எண்ணிவிட கூடியவர்களே இருப்பர்.

நச்சை பரப்பி சக மனித உயிர்களை கொலைசெய்யும் நச்சு எண்ணம் கீழ்த்தரமானது அதை செய்வோர் மேலான நாற்காலிகளில் இருப்பது சகிக்கமுடியாதாது .

கொடுமைகள் அநீதிகள் செய்வோர் அதற்காக வருந்துவதுமில்லை தான் செய்யும் இழிசெயல்களுக்காக கண்ணீர் சிந்துவதுமில்லை
"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் ; நெஞ்சத்து அவலம் இலர்" எத்தனை உண்மை இதையே கண்ணதாசனும் சொன்னார் - தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே என்று தங்கள் அதிகாரங்களை தொடர்ந்து நீடிக்க மனிதாபிமானம் அற்று செயலாற்றும் செயிலினை காட்டிலும் பதவியை துறந்து சந்நியாசியாகலாம் என்று தோன்றுகின்றது .
எத்தனை அறிவு இருந்தென்ன

எத்தனை அறிவு இருந்தென்ன அடுத்த வேளை சோற்றுக்கு கையில் பணம் இல்லை என்றால் அவன் முட்டாளே என்பது இன்றைய நிலை 
ஆனால் வள்ளுவன் என்ன சொல்கிறான் - பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றினை பற்றுக பற்று விடற்கு - இதன் வழி நோக்குங்கால் பணத்தை
நாடாதே ஆனால் உயிர்வாழ முடியாது பிச்சை எடுக்க நேரிடும் இதெல்லாம் மேலோட்டமாக பார்க்கையில் உண்டாகும் தெளிவு ஆழமாக நோக்கினால் அதன் வீரியம் பெரிதாகும் சகல வசதிகளுடனும் இருக்கும் ஒருவன் பேராசை பிடித்து மேலும் மேலும் என எண்ணும் வேளை அக்குறளை படித்தால் எச்சரிப்பது போல உணரலாம் - காசு சேர்க்க தெரியாதவன் முட்டாள் சேர்க்க தெரிந்தவன் அறிவாளி இதுவே இன்றைய உலக உண்மை காசே அனைவரையும் ஆளுகின்றது .அன்பு பாசம் மதிப்பு மரியாதை எல்லாம் காசால் கட்டப்பட்டுள்ளது காசு கூடக் கூட கட்டு இறுகும் காசு குறையக் குறைய கட்டு இளகும் இதுவே உண்மை ஆனால் பணத்தை மதியாது பண்பை மதிக்கும் மனிதர்களை பணம் ஒன்றும் செய்துவிட முடியாது அவர்கள் எந்நிலையிலும் மனிதனை மனிதனாகவே மதிப்பார்கள் செல்வத்தை நோக்கார்கள் அவர்களே உண்மையான ஆழ்ந்த அறிவாளிகள் அப்படியான மனிதர்கள் விரல் விட்டு எண்ணத்தக்க நபர்களாகவே நம்மவர்களில் இருக்கிறார்கள்
பிட்டும் எம்ஜிஆரும்

முன்பு ஒருநாள் எம்ஜிஆர் பிட்டு வித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரிடம் பிட்டின் விலை கேட்டிருகின்றார் அப்பெண் சொன்ன விலைக்குரிய 
மொத்த பணம் அவரிடம் இல்லாததால் பின்னர் தருவதாக கூற வைத்திருக்கும் பணத்துக்கு வாங்கேன் என்று பெண் சொல்ல நம் வீட்டில்
நிறைய பேர்கள் உள்ளோம் என்னிடம் இருக்கும் காசுக்கு வாங்கின் எல்லோருக்கும் போதாது என்றிருக்கின்றார் சரி அப்புறம் தா என்று பெண் அவர்
வேண்டிய பிட்டை பொதி செய்து கொடுத்தார் உடனே எம்ஜிஆர் கேட்டார் நான் ஏமாற்றிவிட்டால் என்று அதற்கு பெண் சொல்லியிருகிறார் உன் காசு வந்தால் வியாபாரம் வராவிட்டால் தர்மம் என்று நெகிழ்ந்த எம்ஜிஆர் சென்று சிறிது காலத்தில் அப்பெண்ணின் பணத்தை கொடுத்துவிட்டார்
பின்னாளில் முதல்வரானதும் அப்பெண்ணுக்கு பெரிதாக உதவி செய்ய நினைத்து பலரை வைத்து பல இடங்களில் பிட்டுக்கார பெண்ணை தேடியும்அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லையாம் அதனால் மிகுந்த வருத்தம் கொண்டாராம் .

புதன், 9 ஏப்ரல், 2014

அந்தக்கால நினைவுகள் 

பச்சை வயல்கள் மீது பச்சை கிளிகள் பறந்து களித்தன மண்ணிலே காய்களும் கனிகளும் விளைந்து கிடந்தன அக்காவும் தங்கையும் அண்ணனும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் மாமாவும் மாமியும் தாத்தாவும் பாட்டியும் உற்றாரும் உறவினர்களும் அமைதியாக 
அவரவர் நிம்மதியுடன் வாழ்ந்த காலங்கள் இரவு வந்தால் திருவிழாக்கள் நாடகங்கள் இசைக்குழுக்கள் வில்லுப்பாட்டு சின்ன மேளம் 
என்று தமிழர்களுடன் கலைகள் கைகோர்த்து நடந்த காலம் இடையிடையே நிதியுதவிக்கான காட்சி என்று தூசு தட்டி படங்கள் காண்பிக்கப்பட்டது அதுபோலவே விளையாட்டு கழகங்கள் சனசமூக நிலையங்களின் நிதிக்காக நாடகங்கள் நடத்தப்பட்டது
கிட்டியடி, தாச்சி, மாபிளடி,கீத்தான் கட்டு,சுண்டிப்பொத்தல் , கைப்பந்தாட்டம் , துடுப்பாட்ட போட்டிகள் ,உதைபந்தாட்ட போட்டிகள் சனிக்கிழமை வந்தால் குடிகாரர்களின் சண்டித்தன கூவல்கள் என்று கிராமம் அல்லோல கல்லோலப்பட்டது

நாற்பதை தாண்டியவர்கள் குழுமியிருந்து இரசித்து சீட்டு விளையாட அதி அக்கறையுடன் அதை பார்த்தபடி ஆட்டுக்கு குழை குத்தும் தொந்தி பெருத்தவர்கள் தோளிலே ஒரு துவாய் துண்டுடன் நிற்க இன்னொரு முற்றிவரும் கூட்டம் அரசியல் சினிமா என்று
நிறையவே பேசியது ஒருவன் சைக்கிலில் ஒரு காலை போட்டு மறு காலை தரையில் ஊன்றியபடி சிரித்து சிரித்து பேசுவான் திடீரென ஒருவன் உனக்கு கனக்க தெரியுமே என கேட்க்க மற்றவன் ஏதோசொல்ல ஒரு சிறு அடிபாடு அதை அருகில் நிற்பவர்கள் பிடித்துவிட
இரண்டு பாதையில் கூட்டம் பிரிந்து செல்லும் சில மாதங்களின் பிறகு இருவரும் நேசமாகி சிரித்து பழகுவார்கள் - செக்கல் மீன் வாங்கி வந்து பால் சொதி வைத்து பச்சையரிசியுடன் சாப்பிட்ட சுவைக்கு ஈடாக எதை சொல்ல முடியும்

நல்ல பண்பாடு நிறைந்த வாழ்க்கை பெண்களை கேலிசெய்வது கிடையாது காதல் செய்வதும் குறைவு காரணம் பயம் மானம் மரியாதை என்ற பிரச்சினை தடைகள் அதிகம், வேலை ஒன்று நிரந்தரமாக கிடைத்தபிறகே காதல் பற்றி எண்ணங்கள் எழுந்தது
அதுவும் பாதி, மனதுடன் கரைந்தது, ஊருக்குள் ஒன்று இரண்டு பெண்களே அழகிகளாக இருந்தார்கள் மற்றதெல்லாம் சுமாருக்கும் கீழேதான் தங்களை அழகு படுத்தவும் அந்த பெண்களுக்கு தெரிந்திருக்கவில்லை பொருளாதாரமும் பெரிதாக இருந்ததில்லை செருப்பை அணிந்து நடந்தது ஒரு சில பெண்களாகவே இருந்தார்கள் அழகிய பெண்களை பார்த்து கண்சிமிட்டவென்று தலை மயிரை
வளர்த்துக்கொண்டு ஒரு சில பெடியங்கள் பக்கத்து ஊர்களுக்கு சைக்கிலில் வட்டமடித்தார்கள் அவர்களை கொசப்புகள் என்று
ஒழுக்கசீலர்கள் புறக்கணித்தார்கள் காலத்தின் ஓட்டத்தில் அந்த கொசப்புகள் எங்கோ சென்று மறைந்தார்கள் சவுதிக்கு சிங்கப்பூருக்கு
சென்று வந்த மாமாக்கள் சித்தப்பாக்கள் அவர்கள் தந்த டிசேட்டுக்கள் அந்தியெட்டி கிரியை செய்ய வான் பிடித்து கீரிமலைக்கு
சென்றது அங்கே கடலில் குளித்துவிட்டு குடிச்ச தேநீரும் உண்ட வாய்ப்பனும் உற்றார் உறவினரின் அன்பான பேச்சுக்கள்
அரவணைப்புக்கள் மறக்க முடியாத கல்வெட்டுக்கள்

ஈச்சங்காடு குளதத்தடி குலனை கோணாங்கேணி என்று கூட்டமாக சுற்றி திரிந்தது மாங்காய் விழுத்தியது நீந்தியது பயித்தங்காய் பிடிங்கியது நொங்கு வெட்டியது சண்டிலிப்பாய் சீரணியம்மன் கோவிலுக்கும் சித்திரை வருடப்பிறப்புக்கு மானிப்பாய் மருதடிக்கும் வயல்களிநூடே நடந்தது, சிப்பிலி சுடலை பால்கோப்பி, அதன் சுவை, ஆகா அபாரம்
வரம்புக் கட்டு , மதவடி , வாசக சாலை , கேணியடி ,கோயிலடி என்று பெடியள் தரித்து கூடிப்பேசி மகிழ்ந்தார்கள் , பால்க்கார மணியம், கடைக்கார பாலு, சோடாக்கடை சிவமண்ணை , சீனத்தி கடை , டியூசன் வாத்தியார் முருகப்பெருமான் , சைக்கில் கடை செட்டியாரப்பு ,கள்ள இளநீர் இறக்கி குடித்து குதூகலித்தோர் , குழப்படி செய்து கிழவிகளிடம் திட்டு வாங்கியோர் அப்பப்பா எத்தணை அழகிய அமைதியான காலம், இரவு 9:30 காட்சிக்கு வெலிங்டனுக்கும் வின்சருக்கும் ராஜாவுக்கும் ராணிக்கும் கல்லுண்டாய் வெளியூடே சைக்கிலில் சென்றார்கள்
நெஞ்சிலே எந்தப் பயமுமில்லா காலங்கள் நிம்மதி நிறைந்திருந்த நேரங்கள், சன்னதிக்கும் திருகேதீஸ்வரத்துக்கும் சைக்கில்கள் சுழன்றது நெஞ்சில் உரமும் உடலில் பலமும் எதையும் சந்திக்கும் துணிவும் இருந்தது எதற்கும் ஒருவரும் பயப்படவில்லை எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்தார்கள் இனி வருமா அந்தக்காலம் ?

ஆக்கியது
அன்புடன்
ம.இரமேசு
காலத்தால் மறக்கமுடியா கவிஞர் வாலி - சில பகிர்வுகள் 

உலகத் திரைப்பட வரலாற்றில் இப்படியொரு கவிஞரை தமிழுலகே கண்டது - 1956 ல் எழுதத் தொடங்கியவர் ஏறத்தாழ 56 வருடங்கள் எழுதி 
பெரும் புகழுடன் விண்ணேறியிருக்கின்றார் இனிய பாடல்கள் வலம் வந்த காலங்களில் கடும் போட்டிகளுக்கிடையில் சிக்கி சிகரம் தொட்டவர் 
வாலி ஐயா , அவரின் பொறிபறக்கும் பாடல்கள் உள்ளங்களை தட்டிக் கிளப்பியது நம்பிக்கையை விளைத்தது அறிவை சொன்னது எச்சரித்தது
பின்னாலிருந்து மாபெரும் வலிமைமிகு வரிகளை கடுமையாக சிந்தித்து இயல் செய்தவருக்கும் அதை இசை செய்தவர்களுக்கும் கிடைக்காத பெருமைகளை பொய்யாக வாயசைத்து நாடகம் செய்தவர்கள் தட்டி சென்றனர் என்பது காலம் காட்டி நிற்க்கும் உண்மை

குரலரசு அமரர் டி எம் எஸ் மறைவை மறக்க முடியாது தவிக்கையில் மணிவண்ணனும் மடிந்தார் இப்போ இரண்டாம் திரைக்கவியரசு வாலி யாரும் விண்ணேறி விட்டார் 2013 ஒப்பற்ற வித்தகர்களை தனுக்குள் இழுத்து விட்டது, வாலியின் கவி வரிகளும் டி எம் எஸ் குரலின் எழுச்சியும் இல்லை என்றால் எம் ஜி ஆர் புகழ் இந்தளவுக்கு உய்ர்ந்திருக்குமா என்பது நியாயமான கேள்வியே- திருச்சி வானொலி நிலையத்தில் வாலியின் "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" பாடலை பாடிவிட்டு, தம்பி நன்றாக எழுதுகின்றீர்கள் சென்னை வந்து என்னைப் பாருங்கள் என்று வாலியின் வாழ்வுக்கு முதலாவது படியை நிமிர்த்தி கட்டியவர் அமரர் டி எம் எஸ், பிறகு பலரின் ஆதரவுகள் கைகூட பல படிகள் உயர்ந்து கவியரசருக்கு இணையாக கோலோச்சியவர் வாலி ஐயா அவரின் எழுத்துக்களில் படிப்பறிவற்ற பாமரர்களும் அறியும் படியான கருத்துக்கள் மின்னியது

"கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருவது யாரோ" என்று எழுதிய அந்த வரிகளே என்னை முதல் முதலாக யார் இதை எழுதியவர் என்று கேள்வி கேட்க்க வைத்தது , "வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு" என்ற வரிகளில் அழகும் மீனவர்கள் பெருமையும் துலங்கியது "ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்" என்ற வரிகளில் மீனவத்தொழிலின் அபாயம் எத்தகையது என்று உணர்த்தியது, வாலி எந்த உணர்வுடன் எழுதினாரோ அதை பிசகு படாது உணர்வூட்டி குரலால் நடித்தே பாடிக்கொடுத்தார் டி எம் எஸ் , கலையில் அவர்கள் ஒன்றிணைவு ஒற்றுமை கவனம் பக்தி பொறுமை சிரத்தை அளவிட முடியாதது அது ஒரு பொற்காலம் .

வாலி ஐயா வரிகளால் கோலம் போட்டு கவியரசர் கண்ணதாசனுக்கு பெரும் போட்டியாளராக விளங்கினார் இது யார் எழுதிய பாடல் என்று இரசிகர்கள் தடுமாறினார்கள் இசை கூட்டிய இசையமைப்பாளர்களும் தடுமாறினார்கழென்றால் அவரின் ஆளுமை எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம், வாலி என்று பெயர் கொண்டதன் காரணமோ என்னவோ கண்ணதாசனின் பலம் அரைவாசி அவரிடம் சென்றுவிட்டதோ என்று எண்ண வைக்கின்றது, "நான் ஆணையிட்டால் அது
நடந்து விட்டால் " என்று அவர் எழுதிய பாடலே இன்றளவும் பேர் எழுச்சி பாடலாக தமிழர்களின் அரசியல் விழாக்களில் ஒலிக்கிறது " மாதவிப் பெண் மயிலாள் " பாடலில் அவரின் இலக்கியத்தரம் விண்ணை தொடுகின்றது, "உயர்ந்த மனிதன்" என்ற காலத்தால் மறக்க முடியாத படத்தில் அத்தனை பாடல்களையும் எழுதி நட்சத்திரமாக மின்னியிருக்கின்றார் "அந்தநாள் ஞாபகம் " பாடலை கண்ணதாசனே எழுதியிருப்பார் என்று எல்லோரும்நினைப்பார்கள் ஆனால் அந்த நினைப்பை தவிடு பொடியாக்கி விட்டவர் வாலி ஐயா - பாட்டை கேட்டுவிட்டு நண்பர்கள் இது கண்ணதாசன் எழுதியது என்றும் இல்லை வாலி என்றும் தம்முள் சர்ச்சைப்பட்டு பிறகு படமாளிகை சென்று எழுத்தோட்டம் கண்ட பின்னரே ஓ வாலிதான்எழுதியிருக்கின்றார் என்று வியந்து தோல்வியை ஒப்புக்கொண்டதுண்டு அந்தளவுக்கு புலமை வெளிப்பாடு வாலி ஐயாவிடமும் இருந்தது, முந்தநாள் குழந்தைகளும் துள்ளி குதிக்க அவர்கள் இரசனைக்கும் இறங்கி எழுதியவர் வாலி ஐயா அவரின் இழப்பு தமிழர்களுக்கு பேரிழப்பு - அவர்களின் உண்மை அமைதியடைய ஆண்டவன் அருள் புரிவாராக .

பகிர்வு
ம.இரமே
சு 
சிந்தனையும்  செழிப்பும் 


எத்தனை  ஆண்டுகள்  கடந்தும்  இன்றைய  செயல் வினைக்கும்  சரியாக பொருந்துகின்றது  ஔவையின்  ஆக்கமும்  வள்ளுவர் குறளும்   மற்று அறிஞர்கள்  ஆக்கங்களும் என்றால்  அவர்களின் சிந்தனை வளம்  வலிமையானது  என்று ஒப்புக் கொள்வதைத்தவிர வேறு  கருத்துக்கு இடமில்லை  

 இவ்வுலகில் பிறர்  துணையின்றி எவரும் தனித்து  வாழ முடியாது  பணம்  நெல்லாகாது நீராகாது - ஒருவரின் தேடுதலில் உழைப்பில்   இன்னொருவர் தங்கியிருக்கின்றார் 
ஆதலினால்  வளைந்தும்  நிமிர்ந்தும் குறுகியும் கூனியும்  நிலைமைகளுக்கு ஏற்ப  ங போல  வாழவேண்டும்  என்கின்றார்  ஔவையார் , அதன் கருத்து  ஓணான் (பச்சோந்தி)  போல்  வாழ்வதென்று  அர்த்தம் கொள்ளக்கூடாது   எல்லோரிடமும்  பகை இன்றி  அவரவர்  இயல்புக்கு ஏற்றவாறு  நாம்  நம்மை சுதாகரித்துக்கொண்டு  நடத்தல்  நல்லது பாதுகாப்பு என்பதே. அன்புக்கு  வளை   ஆணவத்துக்கு எதிராக  நிமிர்  பண்புக்கு  சமன் செய்  என்பதை எழுத்தின்  உருவிலேயே  காணலாம்.   

ஞானமும்  கல்வியும்  ஆயிரம் அறிந்தும், கொண்டும்  என்ன  பயன்  வயிறு பசிக்கையில்  உணவின்றேல் எல்லாம்  தூர விலகிவிடும் 
ஐந்துகண்டங்களையும்  கட்டியாளும்  அரசனென்றாலும்  அனைத்தும்  தெரிந்த  விற்பன்னனென்றாலும்   சோறின்றில்  சுருங்கி மடிவர். - தேர் கொண்ட  மன்னன்  எங்கே  , பேர்சொல்லும் புலவன் எங்கே,  ஏர்கொண்ட  உழவன் இன்றி ,   போராடும் வீரன் எங்கே.
அனைத்தும் ஆகாரத்துக்கு  பின்னாலே , உணவில்  தன்னிறைவை  கண்ட பின்னரே  நாடோ  மனிதனோ  பிற விடயங்களை  சிந்திக்க முடியும்  - "ஆற்றுவார் ஆற்றல்  பசியாற்றல்  அப்பசியை  மாற்றுவார் ஆற்றலின் பின்னே".

வேட்டையாடிய மனிதன்  அடுத்துவரும்  நாட்களுக்கு மாமிசத்தை  பதப்படுத்தி வைத்ததனாலேயே  மேற்கொண்டு  செழிக்க  சிந்திக்க  அவனுக்கு நேரமிருந்தது  இதன் அடிப்படையிலேயே   இன்று  சிந்தித்து  செயலாற்றும் பணியாளர்களுக்கு  அதிக  ஊதியம் கிடைக்கின்றது 
அவர்கள் கவனம் அன்றாட தேவைகளின் பக்கம் திரும்பினால்  சுறுசுறுப்பு குறைந்து நாட்டு முன்னேற்றத்துக்கு சிந்திக்க முடியாது என்ற  உண்மை  அதற்குள் புதையுண்டு கிடக்கின்றது,

மனிதனின்  பேராசை தன்னை சார்ந்த  புறவாழ்வியல் பற்றியே அதிகம் சிந்திக்க வைக்கின்றது இனம் சார்ந்த  பிறர் சார்ந்த  சிந்தனை  அருகிக்கொண்டே செல்கின்றது அளவுக்கு மீறிய  ஆடம்பரங்களை வாழ்வுக்கு அறிமுகம் செய்ய செய்ய  வியாபாரம் பெருகி  மனிதம் 
குறைந்து செல்கின்றது  என்பதனை  அறியலாம் 

யாதும்  ஊரே  யாவருங்கேளிர்  என்ற  கணியன்  பூங்குன்றனைப்போல  விரிந்த  இதயம்  கொண்டவர்கள்  இன்றைய உலகில்  விரல் விட்டு எண்ணிவிட கூடியவர்களே  இருப்பர். 

நச்சை  பரப்பி  சக மனித  உயிர்களை  கொலைசெய்யும் நச்சு   எண்ணம்  கீழ்த்தரமானது  அதை செய்வோர்  மேலான  நாற்காலிகளில்  இருப்பது   சகிக்கமுடியாதாது  .  

கொடுமைகள்  அநீதிகள் செய்வோர்  அதற்காக  வருந்துவதுமில்லை  தான்  செய்யும்  இழிசெயல்களுக்காக  கண்ணீர் சிந்துவதுமில்லை 
"நன்றறி  வாரிற்  கயவர்  திருவுடையர் ; நெஞ்சத்து  அவலம் இலர்"  எத்தனை  உண்மை   இதையே  கண்ணதாசனும்  சொன்னார்  - தவறுக்கு  துணிந்த  மனிதன் அழுவதில்லையே  என்று  தங்கள்  அதிகாரங்களை  தொடர்ந்து  நீடிக்க  மனிதாபிமானம்  அற்று  செயலாற்றும்  செயிலினை  காட்டிலும்  பதவியை  துறந்து  சந்நியாசியாகலாம்  என்றே   தோன்றுகின்றது .

சிந்தனைகளுடன் 
ம.இரமேசு 
தமிழும் ஒரு நதியே 

அப்பன்  தெய்வப்புலவன் வள்ளுவன்  பொழிந்த  தமிழ் 
அன்னை  ஔவை  அன்பாய்  சொன்ன தமிழ் 
அப்பன்  தெய்வக்கவிஞன் கம்பன் வரைந்த தமிழ் 
அப்பன்  மகாகவி பாரதி  போற்றி மதித்த  தமிழ் 
பாரதி தாசனும்  கண்ணதாசனும் பட்டுகோட்டையும்  வாலியும்  பாடி மகிழ தந்த தமிழ் - தேமதுர  தமிழ் ஓசை  திக்கெங்கும்  பரவ  இன்று அகிலமெங்கும்  அடைந்து கிடக்கிறது  அன்னைத்தமிழ்  அழியாத முதுமொழி  அடங்காத  வீறு மொழி  வேற்றாரும் பயின்று  படைத்த மொழி 
பாரினில் தன்னிகரற்ற  தாய் மொழி என்றால் அது  தமிழே.


யாருக்கு கர்வம் அதிகமென்று கேட்டால், தமிழை அதிகமாக கற்றவர்களுக்கே கர்வம் அதிகமென்பேன் அழகி தன்
அழகை நினைத்து கர்வம் கொள்வாள் அவள் கர்வம் குறிப்பிட்ட காலங்களின் பின் அடங்கிவிடும் ஆனால் தமிழ் படித்தவன் கர்வம் அவன் சிதையில் எரியுமட்டும் இருக்கும், ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட பாரதி யாம் என்று தன்னை மிதக்க விழிக்க என்ன காரணம் , யாம் என்று
பெரிய செல்வந்தர்கள் அரசர்கள் சொல்வார்கள் அப்படியிருக்கையில் பாரதி தன்னை யாம் என்று மொழிந்தாராயின் அவர் கற்று வைத்திருந்த தமிழின் வீரியமே அவரை விம்மி புடைக்க செய்தது ஆக தமிழை படித்தவன் முன்பு எவனும் இரண்டாம் படியே, தமிழே எதையும் ஆளும் திறன்கொண்டது
அதன் முன்பு எல்லாம் தோல்வியை தழுவும் அதனாலேயே தமிழுக்கு அனைத்தும் எதிராக இருக்கின்றது தமிழ் அத்தகைய ஆற்றல் கொண்டது
எந்நிலையிலும் உயிர்வாழத்தக்கது கொட்டிய குண்டுகளுக்குள்ளும் மிஞ்சியவர்கள் குடிக்க தண்ணீருமின்றி வாழ்ந்தார்களே தப்பித்தார்களே அதுதான் தமிழின் பலம் மேல்நோக்கினால் கரடுமுரடாக அழுக்காக தெரியும் ஆனால் உள்ளுக்குள் உயிரும் மெய்யுமாக ஒரு உயிர்மெய் நதி சுத்தமாக சத்தமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது அது எக்காரணங் கொண்டும் அடங்காது நிற்காது ஓடிக்கொண்டேயிருக்கும் . நதி நிற்பதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதனாலேயே அதற்கு நதி என்று பெயர் தமிழும் ஒரு நதியே
அன்புடன் 
ம.இரமேசு 
தமிழும் ஒரு நதியே

யாருக்கு கர்வம் அதிகமென்று கேட்டால் யான் சொல்வேன் தமிழை அதிகமாக கற்றவர்களுக்கே கர்வம் அதிகமென்பேன் அழகி தன்
அழகை நினைத்து கர்வம் கொள்வாள் அவள் கர்வம் குறிப்பிட்ட காலங்களின் பின் அடங்கிவிடும் ஆனால் தமிழ் படித்தவன் கர்வம் அவன் சிதையில் எரியுமட்டும் இருக்கும், ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட பாரதி யாம் என்று தன்னை மிதக்க விழிக்க என்ன காரணம் , யாம் என்று
பெரிய செல்வந்தர்கள் அரசர்கள் சொல்வார்கள் அப்படியிருக்கையில் பாரதி தன்னை யாம் என்று மொழிந்தாராயின் அவர் கற்று வைத்திருந்த தமிழின் வீரியமே அவரை விம்மி புடைக்க செய்தது ஆக தமிழை படித்தவன் முன்பு எவனும் இரண்டாம் படியே, தமிழே எதையும் ஆளும் திறன்கொண்டது
அதன் முன்பு எல்லாம் தோல்வியை தழுவும் அதனாலேயே தமிழுக்கு அனைத்தும் எதிராக இருக்கின்றது தமிழ் அத்தகைய ஆற்றல் கொண்டது
எந்நிலையிலும் உயிர்வாழத்தக்கது கொட்டிய குண்டுகளுக்குள்ளும் மிஞ்சியவர்கள் குடிக்க தண்ணீருமின்றி வாழ்ந்தார்களே தப்பித்தார்களே அதுதான் தமிழின் பலம் மேல்நோக்கினால் கரடுமுரடாக அழுக்காக தெரியும் ஆனால் உள்ளுக்குள் உயிரும் மெய்யுமாக ஒரு உயிர்மெய் நதி சுத்தமாக சத்தமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது அது எக்காரணங் கொண்டும் அடங்காது நிற்காது ஓடிக்கொண்டேயிருக்கும் . நதி நிற்பதில்லை ஓடிக்கொண்டே இருக்கும் அதனாலேயே அதற்கு நதி என்று பெயர் தமிழும் ஒரு நதியே
111

எத்தனை அறிவு இருந்தென்ன

எத்தனை அறிவு இருந்தென்ன அடுத்த வேளை சோற்றுக்கு கையில் பணம் இல்லை என்றால் அவன் முட்டாளே என்பது இன்றைய நிலை 
ஆனால் வள்ளுவன் என்ன சொல்கிறான் - பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றினை பற்றுக பற்று விடற்கு - இதன் வழி நோக்குங்கால் பணத்தை
நாடாதே ஆனால் உயிர்வாழ முடியாது பிச்சை எடுக்க நேரிடும் இதெல்லாம் மேலோட்டமாக பார்க்கையில் உண்டாகும் தெளிவு ஆழமாக நோக்கினால் அதன் வீரியம் பெரிதாகும் சகல வசதிகளுடனும் இருக்கும் ஒருவன் பேராசை பிடித்து மேலும் மேலும் என எண்ணும் வேளை அக்குறளை படித்தால் எச்சரிப்பது போல உணரலாம் - காசு சேர்க்க தெரியாதவன் முட்டாள் சேர்க்க தெரிந்தவன் அறிவாளி இதுவே இன்றைய உலக உண்மை காசே அனைவரையும் ஆளுகின்றது .அன்பு பாசம் மதிப்பு மரியாதை எல்லாம் காசால் கட்டப்பட்டுள்ளது காசு கூடக் கூட கட்டு இறுகும் காசு குறையக் குறைய கட்டு இளகும் இதுவே உண்மை ஆனால் பணத்தை மதியாது பண்பை மதிக்கும் மனிதர்களை பணம் ஒன்றும் செய்துவிட முடியாது அவர்கள் எந்நிலையிலும் மனிதனை மனிதனாகவே மதிப்பார்கள் செல்வத்தை நோக்கார்கள் அவர்களே உண்மையான ஆழ்ந்த அறிவாளிகள் அப்படியான மனிதர்கள் விரல் விட்டு எண்ணத்தக்க நபர்களாகவே நம்மவர்களில் இருக்கிறார்கள்.

ம.இரமேசு 
ஈழங்கண்ட ஓர் அறிஞன் அமரர் ஏ.கே. கந்தையா (காபன் கந்தையா )

தமிழ் ஈழத்துக்கு கிடைத்த மாபெரும் அறிவு பொக்கிஷம் அமரர் ஏ கே கந்தையா அவர்கள் - வேலணை மத்திய மகாவித்தியாலயம் , யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயம் பாடசாலைகளுக்கு அதிபராக இருந்தவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் கணிதத்திலும் பெரும் புலமை கொண்டு விளங்கினார் அராலி வடக்கில் பிறந்து வட்டுக்கோட்டையில் வாழ்ந்து அமரரானார்

யாழ்ப்பாண வரைபடத்தின் மகுடமாக திகழும் அராலியில் கணபதியார் சேதுப்பிள்ளை தம்பதிகளுக்கு 1905ல் மூன்றாவது பிள்ளையாய் பிறந்தவர் அமரர் ஏ , கே .கந்தையா.

ஆரம்பக்கல்வியை துணவியூர் அமெரிக்க சேவா நிலையத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணக்கல்லூரியிலும் பயின்றார்.

பின்னர் இளவாலை ,தெல்லிப்பளை ,மாத்தறை , கல்முனை,சாவகச்சேரி , வேலணை, யாழ் மத்தி ஆகிய இடங்களில் ஆசிரியராகவும் பின் அதிபராகவும் கடமையாற்றினார்.

1945 முதல் 1950 வரை வேலணை மத்திய கல்லூரியில் முதலாவது அதிபராக திகழ்ந்தார்,  
களுவாஞ்சிகுடி பாடசாலையில் கடமையாற்றி அவ்வூர் மாணாக்கர்களை சிறப்பு சித்திகள் அடைய வைத்த பெருமைக்கு ஆளானார்.

பின்னர் மாறுதல் இடம் வருகையில் அன்னாரின் சேவையில் மகிழ்ந்த கல்முனை வாசிகள் அவரை தங்களூர் பாடசாலைக்கே நிரந்தரமாக்க அன்று மேலிடங்களில் கெஞ்சி கேட்டார்களாம் மேலிடங்கள் மறுதலித்ததனால் கல்முனை மக்கள் பெருந்துயர் கொண்டதாக செவிச்செய்திகள் .

தமிழ் ஈழத்துக்கு கிடைத்த மாபெரும் அறிவு பொக்கிசம் அமரர் ஏ கே கந்தையா அவர்கள், வேலணை மத்திய மகாவித்தியாலயம் , யாழ் கனகரத்தினம் மகாவித்தியாலயம் பாடசாலைகளுக்கு அதிபராக இருந்தவர்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் கணிதத்திலும் பெரும் புலமை கொண்டு விளங்கினார்,குறிப்பாக ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த புலமையும் ஆங்கில இலக்கிய அறிவும் அளப்பரியது என்று அவரின் ஆளுமை அறிந்தவர்கள் கூற்று.

அவரின் கையெழுத்தழகை கண்டு மெய்ச்சிய அவரின் சம கால நண்பர்கள் அவரை “காபன் கந்தையா” என்று அழைத்தார்கள்.

அவரின் அறிவுத்திறனை மெச்சி அன்று மாணவர்களாக இருந்தவர்கள் அண்மையில் அவர் நினைவலைகளை போற்றி கனடா நாட்டில் விழா எடுத்து மகிழ்ந்திருக்கின்றார்கள்.

அவர்கள் வேறுயாருமல்ல வேலணை மத்தியகல்லூரி பழைய மாணவர்களே, தங்கள் ஆசானை நன்றி மறவாது இத்தனை நீண்ட வருடங்கள் சென்ற பின்னரும் நினைவில் வைத்து போற்றும் அவர்கள்
அன்பும் பண்பும் குருபக்தியும் மிக மிக மேன்மையானது, இறுக்கமானது வலியது பெரியது.

யாழில் மட்டுமின்றி அன்னாரின் பெயரும் புகழும் அன்றைய இலங்கை கல்விமான்கள் மத்தியில் எல்லா இடங்களிலும் மல்லிகை மணமாக பரவியது என்றால் பொய்யில்லை.

கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல்,கற்றவர்களை அதிகம் விரும்புவார், பெரும் கல்வியாளர்கள் ஆரவாரம் செய்யாது அமைதியாக இருப்பார்கள் நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் அதனால்தானோ என்னவோ திருவள்ளுவர் சொல்லியிருக்கின்றார் “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து” என்று.

அடியேன் சிறு பராயத்தில் அவர் வீட்டில் அவருடன் இருந்து சோறுண்டது என்றும் அழியாத இன்ப நினைவு, சிறுவனாக இருந்த என்னிடம் மிகவும் கனிவாக இனிதாக பேசியிருந்தது அவரின் உன்னத மகா பண்பாகும்.

அனைவரையும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் நடத்திய பெரியவரை நேசிக்காத நெஞ்சங்கள் இல்லை , எந்நேரமும் கையில் பெரிய புத்தகம் ஒன்றை ஏந்தி படித்தபடியே இருப்பார்.

மிக மிக முக்கியமான விடயங்கள் என்றாலே மற்றவர்களுடன் பேசத்தலை நிமிர்வார், தான் பிறந்த அராலி மயிலியற்புலம் கந்தசாமி கோயிலில் வருடா வருடம் அன்னதானம் வழங்கி தர்ம காரியங்களும் செய்து வாழ்ந்தார்.

தனது பிள்ளைகள் எல்லோரையும் நன்கு கல்வி கேள்விகளில் சிறப்புற வைத்தார் , அன்னாரின் மூத்த
புதல்வர் அமரர், பாலகிருஷ்ணன் பொறியாளராக விளங்கினார், இளையமகனார் ராதாகிருஷ்ணன் வைத்தியராக கனடாவில் வாழ்கின்றார்.

பேரன் வைத்திய நிபுணராக விளங்குகின்றார் , ஒருவர் கல்வியாளராக இருந்தால் அவரை சார்ந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்கள் என்று எல்லோருக்குமே பெருமை, இன்றோ ஈழத்தவர்கள் எல்லோருக்கும் பெருமை உண்டாகின்றது.

நம்மண்ணில் இலைமறை காயாக ஒருவர் பெரும் அறிவாளியாக இருந்தார் என்பதை அறிகையில் பெருமிதமே .

நினைவு
ம . இரமேசு
234

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

25 வருடங்கள் டென்மார்க்கில் சிரித்ததும் அழுததும் சிந்திக்க வேண்டியதும்

June 7, 2012

.
.
.
.
.
.
இலங்கையில் மேற்கொண்டு பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வு இல்லை என்று உணர்ந்து தமிழர்கள் பல்வேறு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள் இன்றும் இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
டென்மார்க்கில் பெரும்பான்மையான தமிழர்கள் குடியேறி 25 வருடங்கள் நிறைவுகண்டுள்ள நிலையில் நாங்கள் எப்படி வாழ்ந்து வந்தோம் எப்படி வாழவேண்டும் என்று பார்க்கும் தருணமிது.
நாம் இங்கு வருமுன்னர் துருக்கியரே அந்நிய இனமாக இங்கு வாழ்ந்து வந்தார்கள்.
நாம் இங்கு வரும் போது எங்களுடன் ஈரானியர்களே வந்தவர்கள்.
இன்று எமது தமிழ்மக்களே மற்றைய இனத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு அனைத்து வழிகளிலும் முன்னேறியிருக்கின்றார்கள்.
கல்வியிலும் வியாபாரங்களிலும் பொருளாதாரத்திலும் நமது தமிழர்கள் பெருவளர்ச்சியினை கண்டுள்ளது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கின்றது.
பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதிலும் அவர்கள் அம்மா அப்பா பேச்சு கேட்டு நடக்கும் விதத்திலும் கலை கலாச்சாரங்கள் பண்பாடுகளை பேணிப்பாதுகாப்பதிலும் நம்மவர்கள் யாருக்கும் குறையவில்லை,
சிலர் கண்மூடித்தனமாக சரியாக சிந்தியாது முன்பு வாழ்ந்திருந்தாலும் இன்று சிந்தித்து நல்வழி செல்லுவது பெரிதும் மகிழத்தக்கதே.
நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருதல் இனிமையாகப் பேசுதல் உபசரித்தல் இன்முகம் காட்டுதல் மெருகேறிக்கொண்டே வருகின்றது.
ஊர்களாலும் பிரதேசங்களாலும் அந்நியமானவர்களாக இங்கு வந்திருந்தோம் இன்று ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகள் போல் இங்கு ஒன்றாக வாழுகின்றோம் இது போற்றத்தக்கதொன்றே.
ஒன்றாக வேண்டும் பிரிவை நீக்கவேண்டும்.
இத்தனைகாலமாக வெள்ளைக்காரர்களிடம் கற்றுக்கொண்டது பொறுமையும் பிணக்கில்லாமல் வாழ்வதும் எப்படி என்றே..!
நண்பர்களுடன் இனியவார்த்தைகளை பரிமாறுதல் நல்ல சினேகிதம் நீடிக்க வழிவகுக்கும் விடுத்து தூசிப்பதை வாடிக்கையாக்கினால் வீணான வம்புகள் வளரும்.
நாங்கள் எங்கள் ஊரிலே பெரிய ஆள்களாக இருந்தோம் ஆகா ஓகோ என்று வீணான பெருமை பேசுதல் பண்பாகாது.
நல்ல மனிதர்களிடம் அவ்வாறான பேச்சுக்கள் பேசி தரத்தை குறைத்தல்அறிவாகாது என்பதனை அனுபவத்தால் உணரலாம்.
டென்மார்க்கில் எல்லோரும் சரி சமமே இதனை இத்தனை வருடங்களில் யாராவது அறிந்திருக்காவிடில் அறிந்திடுவீர்களாக.
நீ யார் என்று அரசு பார்க்கவில்லை உனது பிரச்சினை என்ன வென்றே பார்த்து அகதியாக ஏற்று உன்னை தனது நாட்டில் இருக்க விட்டது ஆதலால் இத்தனை வருடங்கள் எமது உயிர்களை காத்து தந்த டென்மார்க்நாட்டுக்கு நன்றி சொல்லுவோம்.
நாலு வேற்றினத்தவர்களுடன் பழகவேண்டும் அவர்களிடமிருக்கும் நல்லவற்றைப் படித்துக்கொள்ளவேண்டும் அவர்களுடன் கூடிக்களிக்கையில் சமத்துவம் பேணுதல் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
விட்டுக்கொடுத்து நாகரிகமாகப் பேசுவது எப்படியென்று அறிந்து கொள்ளலாம் அதன்காரணமாக எளிதில் மற்றவர்களுடன் நட்பாகப் பழக முடியும்,
நமது நாக்கை அடக்க அடக்க நம்மீது பிறர் விருப்பம் கொள்வார்கள் என்பது அறிந்து தெரிந்த உண்மை.
பொருளின்றி வாயாடுபவர்களிடம் நேர்மை கண்ணியம் ஒழுக்கம் வற்றியிருக்கும்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”(குறள் 127 )
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமெனில் பணம் மட்டும் போதாது மனம் வேண்டும் நல்ல குணம் வேண்டும்,
ஆடம்பரமாக விழா நடத்துவதனாலோ அன்றில் விலையுயர்ந்த வண்டிகள் வைத்திருப்பதனாலோ பெருமைகள் வராது.
இல்லார்க்கு உதவும் மனத்தாலும் கொடுக்கும் நல்ல குணத்தாலுமே
நல்ல மதிப்புள்ள மனிதர்களால் ஆன்றோர்கள் சான்றோர்களினால் மதிக்கப்படுவீர்கள் போற்றப்படுவீர்கள் அதுவே உண்மையான பெருமையாகும்.
நல்ல கலைஞர்களை ஆசிரியர்களை தமிழர்கள் இங்கு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியினை எல்லோருக்கும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்களின் பொறுமை கடமை என்றும் மதிக்கப்படுதல் வேண்டும் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழூட்டி நடனம் பயிலவைத்து நமது கலைகள் கலாச்சாரங்களை அழியாமல் காக்கும் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டுதலுக்குரியவர்கள் அவர்களே கலாச்சார காவலர்களுமாகின்றார்கள்.
இரண்டு விதமான மொழி கலாச்சாரம் பண்பாடுகளுக்குள் மாறிமாறி நுழைந்து கொள்ளும் பிள்ளைகளின் மனோவியல் மிகவும் பாரமானதே.
பெற்றோரை திருப்பதிப்படுத்த அவர்கள் படும் கடுந்துன்பம் மிகவும் கடினம் இங்கிருக்கும் இலகு வாழ்வியலிலிருந்து கட்டுப்பாடுகள் நிறைந்த தமிழ் வாழ்வியல் கோட்டைக்குள் புகுந்து கொள்ள நிறையவே குனிதல் வேண்டும்.
இதனால் பிள்ளைகளுக்கு விளைவது நல்ல பயனே பெற்றோருக்கு பெருமிதமே.
நம்மிடம் நன்றாகப் பழகியவர்கள் நம்மை விட்டுச் செல்கையில் மனம் வெந்தது, போலிப்பேச்சினால் நடிப்பால் புழுகினால் ஏமாற்றுதல்களினால் பொல்லாத்தனம் புரிந்தவர்களால் அழுதோம் ,
எதிர்பாராமல் கிடைத்த உதவிகளால் வரவுகளால் மகிழ்ந்தோம், நல்ல மனிதர்களை சோதனையான காலத்தில் கண்டுகொண்டோம்.
பேரலையாலும் போரலையாலும் நம்மினம் அடிபட்டு செத்தபோது நாமிங்கிருந்து துடித்தோம் அழுதோம் அமைதியும் நிம்மதியும் உண்டாகிடும் வேளைகளில் வேதனைகள் நீங்கும் அந்த நல்ல
வேளைக்காக காத்திருக்கின்றோம்.
மொத்தத்தில் அழுகைபாதி சிரிப்புப்பாதி 25 வருட ஏதிலார் மண்ணில் இன்பமும் துன்பமும் கலந்ததே இவ்வுலகவாழ்வு அதிலிருந்து யாரும் தப்ப முடியாது .
ஆகையினால் குறுகிய இவ்வுலக வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க விரும்பின் மும்மலங்களை அகற்றி முடிந்தளவு எல்லோருக்கும் இன்முகம் காட்டுவோம் இனிமையாகப்பேசுவோம்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார், கொல்தாமுடைமை
வைத்திழக்கும் வன் கணவர் (குறள் 228 )
எழுத்தாக்கம்,
ம.இரமேசு

ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் – நூலாய்வு றமேஸ் மணிவாசகம்

August 5, 2010
பெறுமதி என்பது நமது துணிவே என்று நூலால் முழக்கமிடுகின்றார். ஆழம் அறியாமல் காலை விடுவோர்க்கு நல்லதொரு எச்சரிக்கை மணி , ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல்
ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் என்ற நூல் தற்போது சகல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஈழமுரசு பத்திரிகை சென்ற மாதம் சிறப்பு விமர்சனம் எழுதியிருந்தது. சென்னை, திருச்சி, சேலம், மதுரை போன்ற நகரங்களில் கூட இந்நூல் பரவலாக்கப்பட்டுள்ளது. அதுபோல உலகத்தின் பல நாடுகளிலும் இந்த நூல் பரவல் செய்யப்பட்டு வருகிறது. டென்மார்க்கிலும் சகல நகரங்களுக்கும் சிறப்பு வாசிப்பிற்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் சிறந்த தமிழ் ரசிகரும், தமிழ் ஆர்வலருமான ரமேஸ் மணிவாசகம் எழுதிய ஆய்வு இம்முறை இடம் பெறுகிறது. தமிழ் நேசம், தமிழ் திரைப்பட ரசனை என்று பல்துறை ஆற்றலாளராக தன்னை வளர்த்துவரும் றமேஸ் தற்போது டென்மார்க் பரடைசியா நகரில் வாழ்ந்து வருகிறார். அவர் அனுப்பியுள்ள நூலாய்வுக் கட்டுரை இங்கே இடம் பெறுகிறது.
முகமன் :
வணக்கம் என்ற சொல்லுக்கு எத்தனை வீரியம் உள்ளதோ அத்தனை வீரியத்தை நூலாசிரியரின் புன்முறுவலில் காணலாம் என்றால் அது புழுகில்லை. ( அவர்களை அடியேன் நேரில் காணும் பொழுதுகளில் )
சுவைதரும் பலாக்கனிகள் :
ஆழம் அறியாமல் காலை விடுவோர்க்கு நல்லதொரு எச்சரிக்கை மணி , ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் , என்ற நூல் என்றால் அது பொய்யில்லை.
படமெடுக்க எத்தனிக்கும் அன்பர்கள் படித்து கற்க வேண்டிய விடயங்களை நூல் அகப்படுத்தியுள்ளது. படமெடுத்து புண்பட்டவர்களை நூலாசிரியர் அங்கங்கே மன வெம்பலுடன் குறிப்பிட்டுள்ளார்.
இரசனையின் இராசாவாக தன் தந்தையார் வாழ்ந்ததை எண்ணி, வேடிக்கையாக நூலில் குறிப்பிட்டிருப்பது படித்து சுவைக்க பலாக்கனியாய் இனிக்கிறது. ( இரண்டாவது உலக மகாயுத்தத்தில் கொழும்பில் விமானங்கள் குண்டுவீச, உலகம் அழிந்தாலும் காரியமில்லை எனக்கு சினிமாவே முக்கியம் என்று குண்டு வீச்சுக்கு பயப்படாது படம் பார்க்கப் போன ஆசிரியரின் தந்தையின் சினிமா நேசம் )
அதுமட்டுமன்றி தனக்கு திரைப்படங்கள் தந்த பேரின்பங்களையும், பாலக வயதில் படங்களின் பத்திரிகை விளம்பரங்களை வைத்து அவற்றை பராவணம் செய்ததையும் ஒழிவு மறைவு இல்லாமல் பால் மனதுடன் நூலில் பகிர்ந்துள்ளமை ஆசிரியரின் கபடமில்லா மனதிற்கு எடுத்துக் காட்டாகிறது.
சுட்டிக் காட்டலும் நற்பண்பும் :
அன்றைய ஈழத்து அரசியலாளர்கள் ஈழத்தின் திரைப்படத்துறை வளர்ந்து வருவதை குறுகத் தறித்ததையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பெரும்பாலான தமிழர்களை திரைப்படங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன என்பது விடுபட முடியாத உண்மையே. ஆயினும் எத்தனைபேர் தங்களின் உணர்வுகளை உண்மையாக வெளிக்கொணருவார்கள் என்பது கேள்விக்குறியே.
தான் சார்ந்த உணர்வின் உண்மைகளை சொல்வதனால் எங்கே கேலிக்குரியவனாவேனோ என்கிற துணிச்சலின்மையே பலரையும் ஆக்கிரமித்துள்ளது என்பது நிசம். இங்குதான் நூலாசிரியர் கி.செ.துரை அவர்கள் முத்தைத் தாங்கும் சங்காகிறார். பெறுமதி என்பது நமது துணிவே என்று நூலால் முழக்கமிடுகின்றார்.
முயற்சி ஒன்றை மேற்கொண்டு முடிக்கும்வரை விழுங்கிவிடத் துடிக்கும் முதலைகளிடம் அகப்படாது முன்னேறி, நீச்சலடித்து முழுதாய் தன்னைக் காத்துக் கொண்ட செய்திகளையும் நூலில் விறுவிறுப்புடன் நகர்த்துகிறார்.
மனிதர்கள் தூங்கலாம் மாமனிதர்கள் தூங்குவதில்லை. ஆம் ! எடுத்துக் கொள்ளும் காரியங்களின்மேல் தாகம் அதிகமானால் அக்காரியத்தை முடித்து வெற்றி பெறுமட்டில் அயராதவர்களே மாமனிதர்களாவர். அதற்கு நூலாசிரியர் எப்படிப் பொருத்தமாகிறார் என்பதை நூலைப் படிக்கும்போது நாமுணரலாம்.
அலைகடல் அணைக்கும் அன்பு மக்கள் குடியிருக்கும் வண்ண மலர்களின் மடியில் புன்னகை பூக்கும், புயல்களை வெல்லும் பூமியாம் வல்வை மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் ஒத்துழைப்புக்களையும் நூல் நன்றியுடன் நினைவு கொள்கிறது.
போற்றியவர்களை போற்றியும், தூற்றியவர்களை தான் முன்னேற மன உரத்தைத் தந்தவர்களாக்கியும் மனதில் கொண்டு நூலில் வரவேற்கின்றார் நூலாசிரியர். என்னே உயர்ந்த பண்பு என்று வியந்து நிற்கின்றேன்.
இதுவரை படிக்காவிட்டால் உடன் படியுங்கள்.
றமேஸ் மணிவாசகம் – ( 75514964 ) பரடைசியா 05.08.2010

சவத்தை வைத்துக்கொண்டு அழாமல் இருப்பானேன்.

November 7, 2011
சவத்தை வைத்துக்கொண்டு அழாமல் இருப்பானேன்.

November 7, 2011

(சின்னக்கதை)
(சிரிக்கலாம் சிந்திக்கலாம் வாரீர்)

அது ஒரு சனிக்கிழமை முற்பகல் நாலு பக்கங்களிலிருந்தும் வந்த நண்பர்கள் கதவின் மணியோசையை அழுத்த கதவு திறக்கப்பட ஒவ்வொருவரும் வீட்டுக்குள்ளே நுழைந்துகொள்கின்றார்கள் கொண்டுவந்த பைகள் வீட்டுக்கார நண்பரின்
கைகளுக்கு மாற்றப்படுகின்றது என்ன மச்சான் என்று கேட்க உள்ளே பாரன் என்று பதில் வருகின்றது பை...யை திறந்தால் பையுக்குள் ஆட்டு இறைச்சியும் மதுப்போத்தல்களும் உற்சாகமடைந்த வீட்டுக்காரன் இருங்கோ மச்சான் என்று கூறவும்
ஒவ்வொருவரும் மேசையை சுற்றி போடப்பட்டிருந்த கதிரைகளில் உட்காருகின்றார்கள் மதுபோத்தல்கள் மேசையின் நடுவில் வைக்கப்படுகின்றது ஆட்டு இறைச்சி சிறு துண்டுகளாக வெட்டுப்பட்டு
பாத்திரமொன்றுக்குள் பத்திரப்படுத்தப்படுகின்றது எல்லாபோத்திலையும் மேசையில வைக்காதே கொஞ்சத்தை குளிரவை என்கின்றார் குளிர்ப்பிரியர் ஐயோ குளிர்ந்ததை குடிக்க முடியாதுபல்லுகள் தாங்காது
கொஞ்சத்தை வெளியில் வை என்கின்றார் இன்னொரு மச்சான்
அப்படியே ஆகட்டும் என்கின்றார் வீட்டுக்கார மச்சான்,நீங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்த்து நானும் ஒன்று வைத்திருக்கின்றேன் என்று வீரியம் கூடிய சிவாஸ் ரீகல் என்ற பெயருடைய மது போத்தலை வீட்டுக்கார நண்பன் மற்றைய போத்தில்களின் மத்தியில் வைக்கின்றார் தானைத்தலைவனாக சிவாஸ் ரீகலும் அதனை சுற்றி நிற்கும் படை வீர்களாக கால்ஸ் பேர்க் டுபோர்க் எலிபன்ட் போத்தல்களும் மேசையில் நிமிர்ந்து நிற்கின்றன மச்சான் சாம்பல்போடும் தட்டை தா என்றுகொண்டே வெள்ளைக்காரர்கள் பற்றவைக்கும் வெள்ளைச்சுருட்டை வாயில் வைக்கின்றார் மச்சான் ஒருவர் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவர் சேர்ந்துகொள்கின்றார் சிறிது நேரம் வேலைத்தல விடயங்களையும்
மற்ற நண்பர்களைப்பற்றியெல்லாம் பேசிக்கொள்கின்றார்கள்

திடீரென ஒரு மச்சான் சற்று சத்தமாய் சொல்லுகின்றார்
சவத்தை வைத்துகொண்டு அழாமல் இருப்பானேன் என்று சொல்லியபடியே டுபோர்க் போத்திலஎடுத்து மூடியை திறந்து
மொட மொடவென அரைவாசியை காலி செய்கின்றார் மற்றவர்கள் கொல்லென சிரித்துக்கொண்டே தாங்களும்
விரும்பிய போத்தல்களை திறந்து குடிக்கின்றார்கள் ஒருவர் சொல்லுகின்றார் நான் என்றும் சிவனையே முதலில் கும்பிடுபவன் ஆகையால் சிவாஸ் ரீகலே போற்றி என்று சிரித்தபடியே அவரிடம் குவளை நீட்டப்பட அதற்குள் சிவாசை
ஊற்றி ஸ்கோல் என்று டேனிசு மொழியில் உற்சாகமாய் உரக்க சொல்லி உட்கொள்கின்றார்.

மச்சான் எங்கே உனது குவளை என்று வீட்டுக்கார நண்பனை கேட்க நான்சமைக்க வேண்டும் நீங்கள் அடியுங்கோ என்று அவர் சொல்ல இல்லை நீயும் எங்களுடன் அடிக்கவேண்டும் என்று அன்பு ஆறாய் ஓடுகின்றது அவர்களின் முதலாம் சுற்றில் ,
சரி எதுக்கும்
கொஞ்சமாய் விடு என்று சொல்லி தனது குவளையை கொடுக்கின்றார் வீட்டுக்கார மச்சான் .

மீண்டும் எல்லோரும் ஸ்கோல் என்று கூவி அன்பொழுக ஆரத்தழுவ கதவின் மணியோசை சிலிர்க்கின்றது
திறந்தவர்களுக்கு மகிழ்ச்சி ரெட்டிப்பாகின்றது அவர்களை விட வயதில் முதிர்ந்தவர் அவர்களின் அன்புக்கு
பாத்திரமானவர் வருகைதந்திருந்தார் - மாமா அங்கிள் என்று கத்தியபடியே அவரை அணைத்து உள்ளே அள்ளிச்செல்கின்றார்கள் அவருக்கு வசதியான இருக்கை போடப்படுகின்றது மாமா அங்கிள் என்ன குடிக்கின்றீர்கள்
என்று ஒருவர் கேட்க உடனே மாமா சொல்லுகின்றார் தம்பி மாமாவும் அங்கிளும் ஒன்று தான் ஒன்றில் மாமா
என்று கூப்பிடு அல்லது அங்கிள் என்று கூப்பிடு உடனே எல்லோரும் சிரியோ சிரியென்று சிரிப்பு

நான் காரோடி வந்தனான் சும்மா ஒருக்கா இவன் பெடியனை பார்த்துகொண்டு போவம் எண்டு வந்தனான்
என்றார் பெரியவர்- அங்கிள் குழப்பி அல்லது தேநீர் போடட்டுமோ? தேநீரை தா தம்பி என்றார் மாமா

அப்ப இண்டைக்கு பெரிய கொண்டாட்டம் போல என்று மாமா கேட்க வாழ்கையில இதெல்லாம் இல்லாமல்
என்ன வாழ்வு என்றார் ஒருவர் அர்த்த விழியுடன் உண்மையடா தம்பி ஆனா அளவுக்கு மீறி உதுகளுக்கு
அடிமையாகாமல் குடும்பத்தை கவனியாமல் இருந்துவிடக்கூடாது என்று பக்குவமாய் புத்தி சொன்னார்.

சமையலறையிலிருந்து குரல் வந்தது அங்கிள் இண்டைக்கு எங்களோட சாப்பிட்டு விட்டு
போகவேண்டும் என்று சாச்சை இல்லை நான் வீட்டை போகவேணும் அவள் காத்திருப்பாள் என்றார் மாமாஅங்கிள் .

அங்கிள் எழுந்து சமையலறைப்பக்கம் வந்து தம்பி இன்னொருநாள் பாப்பம் இண்டைக்கு நான் கட்டாயம் வீட்டுக்கு போகவேணும் என்றபடியே பிள்ளையள் அப்ப நான் போயிட்டு வாறன் என்ற
படி அங்கிள் வெளியேறினார்

அங்கிளுக்கு மனதுக்குள் பெடியளோடு குடிக்கவேண்டும் சாப்பிடவேண்டும் என்று பெரும் ஆசை இருந்தது மனைவியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து அடக்கி வாசித்து வெளியேறியது அவருக்கு மகிழ்வினை கொடுக்கவில்லை கட்டப்பட்டிருக்கும் மாடு போன்ற வாழ்க்கையை வாழ்வதாகவே மனதுக்குள் நொந்துகொண்டார் கடும் பசியுடன் வீட்டுக்கு வந்தவருக்கு இன்னும் தனது மனைவி சமையலை முடிக்காதது கண்டு கடும் எரிச்சல் வந்தது இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் ஏன்
இன்னும் சமையல் முடியவில்லை என்று காரணம் கேட்க மனையாள் சொன்ன பதில் ஆத்திரத்தை
மேலும் இரண்டாக்கியது அது என்ன பதில்- இண்டைக்கு தான் தொடர் எல்லாவற்றையும் தொகுத்து போடுவார்கள் அதை பாத்து முடித்து சமைக்க நேரமாகி விட்டது என்பதே .
கடுப்பான அங்கிள்அலுமாரி
பெட்டியுக்குள் கிடந்த “றிமிமாட்டீன்” போத்தலை பாத்து சொன்னார் சவத்தை வைத்துகொண்டு அழாமல் இருப்பானேன் என்று.

எழுத்து கற்பனை
ம.இரமேசு (பரடேசியா)
06 -11 -2011
 
 

வந்த விருந்தினரை வரவேற்கப் பழகுவோம் . ஆக்கம் : ம. இரமேசு

November 24, 2011
தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
நாமக்கல் கவிஞர் பெருந்தகையின் வரிகளை வைத்து ஒரு பார்வை வரைபு- இன்று வருத்தம் யாதெனில் நல்ல தமிழர்கள் குறைந்து போதலே தமிழரின் விருந்தோம்பலுக்கு இணையாக வேறு யாரையும் முன்வைத்து பார்க்க முடியாது என்று பெயரெடுத்தவர்கள் தமிழர்கள் ,ஊரிலே வாழ்ந்த காலங்களில் நமக்கு பெரிதாக அறிமுகமில்லா வீடுகளுக்கு முக்கிய தேவைகள் நிமிர்த்தம் சென்றால் இருங்கோ தம்பி என்று முறுவல் செய்து முதலில் சுடச்சுட தேநீரையோ குழப்பியையோ தருவார்கள் அந்த வீட்டு தாய்மார்கள் பின்னர் விடயம் பேசப்படும்,அதுவே பகல்வேளை என்றால் உணவருந்தும்படி வற்புறுத்தும் நல்ல தமிழர்கள் வாழ்ந்தார்கள். இன்று அப்படிப்பட்ட தமிழர்கள் குறைந்து கொண்டு வருவது தமிழர்கள் குணத்துக்கு வந்து சேர்ந்த இழுக்காகும்.
ஒரு வீட்டில் ஒரு வேளை உண்டிருந்தால் அந்த உண்டி தந்தவரை உயிருள்ளவரை உறவாகவே கருதி வாழ்ந்த இனம்.இன்று யாரைப்பார்த்தாலும் வேலை வேலை பணம் காசு
காசு காசு என்று ஒரே ஓட்டம் பேராசையின் விளைவு ஓய்வின்றி நிம்மதியின்றி இயந்திர வாழ்வு , ஊரிலிருந்தபொழுது தந்தையர்கள் ஒரு தொழில் செய்தார்கள் ,போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று அறத்துடன் வாழ்ந்தார்கள்,பேராசைகள் இல்லாமல்,
வரும் வருமானத்தில் இனிமையாக மதிப்பு குறையாமல் வாழ்க்கை நடத்தவில்லையா வெளிநாட்டை நம்பியா பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்,சிந்தித்தால் வெளிச்சம் உருவாகும் உண்மையான வாழ்க்கை எதுவென்று புலப்படும்.
வீட்டுக்கு வருவோரை சிரித்து வரவேருங்கள் நீங்கள் விரும்பி கஷ்டப்பட்டு சமைத்து கொடுப்பதற்குதான் விருந்தோம்பல் என்று பொருளாகும் கடையில் வாங்கி கொடுப்பதோ விற்பவர்களிடம் விண்ணப்பித்து வாங்கி கொடுப்பதோ எந்நாளும் முறையான விருந்தோம்பலாகாது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொருவரும் தங்களை கேட்டுப்பார்க்கவேண்டும் எப்பொழுது யாரை எத்தனை காலத்துக்கு முன் கடைசியாக உபசரித்தோம் என்று.
வசதிகளும் பொருளாதாரமும் குறைந்து வாழ்ந்த காலங்களில் மனத்தாலும் மாண்பாலும் பண்பாலும் நிறைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள், இன்று பொருளாதார வசதிகள் அனைத்துமிருந்தும் குணத்தால் குன்றிப்போயிருக்கின்றது தமிழினம் வெளிநாடுகளில், சிரிப்பதற்கே சிலருக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது வாடிய முகம் திமிர்பிடித்த விழி நோக்கு என்னை விட யாரென்ற நடை நிம்மதியிழந்த கோலம் பணிவில்லா வாயசைவு ,நான் இப்படியான பெண்களை ஆண்களை கண்டு எனக்குள் நினைப்பது நீண்ட நேரம் தொலைக்காட்சி தொடர்களை பார்த்துவிட்டு அதில் காட்டப்பட்டதை நினைவுகளில் தாங்கிக்கொண்டு முகத்தை அலம்பாமல் சந்தைக்கு வந்த மந்தைகளில் ஒன்றாக வருகின்றனரோ என்று
என்ன செய்வது அவரவர் அறிவுக்கு ஒப்ப அவரவர்களின் வெளிப்பாடுகள் காலம் அன்றில் இக்கட்டுரை பாதை மாறுவோரை நேர்வழிக்கு திருப்பினால் அனைவருக்கும் நன்றாகும்.
அடுத்து ஒப்பனை பற்றி பார்த்தால் எங்கள் பிள்ளைகளை போற்றலாம் சில தமிழக பெண்களுடன் ஆண்களுடன் ஒப்பிட்டால் சென்றவார நீயா நானாவில் ஒருத்தி சொல்கின்றாள் உயிரைவிடவும் தயார் உதட்டு சாயத்தையும் ஒப்பனையையும் விடமுடியாது என்று ஆளைப்பார்த்தால் பெய்த மழையில் நனைந்துவந்த ஒற்றைவால் குருவிபோல் இருந்தாள், இன்னொருத்தி சபை என்றும் பாராமல் கணவனையே மதிப்பின்றி கதைக்கின்றாள்.
ஆங்கிலம் நன்றாக பேசுகின்றாள் ஆனால் தமிழ் நாகரிகம் தெரியவில்லை அவளுக்கு, எங்கள் மத்தியிலும் சிலதுகள் தலையில் தண்ணி தெளிக்க வேண்டி அதிபூச்சு அடிமையாகி திரிவதுண்டு ஆயினும் தன்மானமுள்ள தமிழன் ஒருவாறு புத்திசொல்லி திருத்தி வைத்துவிடுவான் ,எழில்பொங்கும் திருமுகத்தில் குங்குமம் சிரிக்க பண்புநடை போடும் தமிழிச்சியின் அழகுக்கு உலகில் ஈடும் இணையுமில்லை அவள் உதட்டுமேலே சிவப்பு சாயம் தீட்டமாட்டாள் நல்ல தமிழருக்கு
உரிய பண்பை மாற்றமாட்டாள் பல்லிளித்து சபைகளிலே மேடைகளிலே வாயாடமாட்டாள் தன் கருத்தைமட்டும் அடக்கத்துடன் அறிவிப்பாள் அவளுக்குண்டு
மரியாதை.
அகிதிலாருக்கு என்றும் உண்டு அவமரியாதையே,இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதே.இஸ்லாம் சொல்லுகின்றது பிறர் கண்களுக்கு தெரியாமல் வாழ முனைபவளே உத்தமி பத்தினி என்று, மேடையில் ஏறி சாரியை(புடவை) காட்டும் நோக்கில் குனிந்தும் வளைந்தும் வெட்கம் அறவே இன்றி பல்லைகாட்டி சிரிச்சு பவிசு காட்டவென்றே தாங்களாகவே ஒரு சதத்துக்கும் உதவா நிகழ்வுகளை மேடையேற்றி கொள்(ல்) கின்றனர்
தமிழகத்து தமிழ் அழிப்பு தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்வுகளை
கண்ணுறும் நமது சிலர் அதனை பின்பற்றி தமிழர் பண்பாட்டை சிதைக்க கூடாது என்பது பண்பாளர்களின் விருப்பம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும் ,இல்லையேல் பின் வரும் தலைமுறை தவறான பாதைக்கு சென்றுவிடும் ,ஆதலினால் அன்புத்தமிழர்களே பேதங்கள் மறந்து நல்ல தமிழர்களாக
வருங்காலத்தில் இன்முகம் காட்டி இனிதே வாழ்வோம்.
ஆக்கம்
ம.இரமேசு
24 -11 -2011