எங்கள் எல்லோர் முதுகிலும் அழுக்கு இருக்கின்றது
அதை சற்று கழுவ உதவி புரியும் சவர்க்காரமாக
எழுத்தாளனின் எழுத்து இருக்க வேண்டும்
ஒரு வட்டம் போட்டு அதற்குள் மட்டும் நின்று எழுதாது
சகலதையும் தொடவேண்டும் என்பதுவே ஒரு நல்ல
எழுத்தாளனுக்கு அடையாளம் .
சமூக அவலங்களை , அறத்தை சிந்திக்க மறுப்போரை
சிந்திக்க செய்ய எழுத்து அமையவேண்டும்
வெறுமனே காதல் கவிதை
எழுதி யாருக்கும் பயனில்லை
படிப்பவர்களுக்கு ஒரு நியாயத்தை சொல்லும் எழுத்தே எழுத்து
பேசுவார்களோ பிரச்சினை வருமோ என்று
பயப்படுபவர்களால் சமூக விழிப்புக்கு ஒன்றுமே
சொல்ல முடியாது உண்மைகள் உரைக்கின்
போலிகளுக்கு உறைக்கவே செய்யும் அதனால்
அவர்கள் ஆத்திரங் கொள்ளலாம் ,
ஆத்திரம் கொள்வதை காட்டிலும் கருத்தை சிந்தித்து
தம்மை மறுபரிசீலனைக்கு உட்படுத்துதலே அறிவானவர்கள்
செயல் - தனிநபர் அன்றில் குறிப்பிட்ட சமூகத்தை
இழிவு செய்வதாக எழுதக்கூடாது பொருந்தா விடயங்கள்
மடைமையை பண்பான ரீதியில் சுட்டி காட்டலாம்
தவறான விடயங்களை சுட்டி காட்டுகையில் அது
தம்மை இழிவு படுத்துகின்றது என்று எடுத்தல் அறிவீனம்
எழுதுவோரின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் .