வணக்கம் அன்பு நண்பர்களே - நெஞ்சில் நிற்கும் வரிகள்
சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .
இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )
அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )
நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )
நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )
தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)
பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)
பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)
வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)
உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)
கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )
இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் .
அன்புடன்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக