செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

தமிழன் ஞானத்துக்கு அன்புக்கு ஈடு இணையேது .

தமிழன் ஞானத்துக்கு  அன்புக்கு ஈடு இணையேது .

யாதும் ஊரே  யாவருங் கேளிர் தீதும் நன்றும்  பிறர் தர வாரா ,  நோதலும் தணிதலும் அவற்றோரன்ன , சாவதும் புதுவதுவன்று முனிவின் இல்லாததொன்றுமிலவே , வாழ்தல் இனிதென மகிழ்ந்தொன்றுமிலவே, விண்ணொடுவானம்  தண்துளி தலியியானது , கல்பொருது இரங்கும் மல்லற்  பேராற்று நீர் வழிப்படும் புனைபோல்  ஆருயிர் முறையே வழிப்படும் என்பது  திறவோர் காட்சியின் தெளிந்தனம்  ஆதலின்  மாட்சியில் பெரியோரை  வியப்பதுமிலவே  சிறியோரை இகழ்வது
அதனிலுமிலவே . 

நம்மை  நாமே  அறிவோம்  எமக்குள் ஓடுவது  பன்னீரா  சாக்கடையா  அதிகமென்று   நமக்கே  நன்றாகத்  தெரியும்  முழுவதும் பன்னீருமல்ல   சகலமும்  சாக்கடையுமல்ல  நல்லவர்களாக
காட்ட சிறு நாடகம்  நமக்குள்ளே  நடக்கின்றது  அதனால்  பெரும்பாலும் நல்ல எண்ணங்கள்
அறம், தர்மம்  உள்ளுக்குள்ளேஉருளுது  சாக்கடையெண்ணமெலாம்   சந்தனமாக நாளும்
சுத்தீகரிக்கப்படுகின்றது  இது நல்ல அறிகுறி.

நானே ராஜா  ராணி  என்ற போதையழிகின்றது  எல்லோரும்  இனிதாக வாழவேண்டும்
எல்லோரையும் மதிக்க வேண்டும்  என்றே  அறிவும் மனமும்  இந்த விடயத்தில்  காதலர்போல்
ஒன்றாகின்றது  எனக்காக  அன்பு செய்ய  நட்புகொண்டாட  இனிய இதயங்கள்  பூமிப்பந்தில்
நிறைய  இருக்கின்றன  என எண்ணுகையில்  பெரும் மகிழ்வும் தெம்பும்  உண்டாகின்றது
எத்தனை  வசதிகள் ஆடம்பரங்கள்  குவித்து  பெரும் செல்வத்துடன் வாழ்ந்தாலும்  அதனால்
காண்பது  இறுதியில் என்ன என்று ஆழமாக  சிந்தித்தால்  எந்தவித  இனிமையுமல்ல
என்ன இது  ஒரு  ஆசைக்கு  அடிமையாகும் வாழ்வே  ஆலமரத்தடியில்  ஒரு  துண்டை
கட்டிக்கொண்டு  இருப்பவனும்  வாழ்கின்றான்  கோடீஸ்வரனும்  வாழ்கின்றான் 
நாளும்  ப்ரியாணி  உண்பவன்  ஒரு பக்கம்  நாளும்  பிச்சை எடுத்து  உண்பவன்  மறுபக்கம்
இருவருக்கும் பொது வேண்டுதல்   உயிருடன் இருப்பது  மட்டுமே அதுவே  உண்மை உண்மை
"வாழ்தல் இனிதென  மகிழ்ந்தொன்றுமிலவே"   என்ற கணியனின்   வரிகளின்  உண்மை
எளிமையை நிலையாமையை  உணர்த்துகின்றது    "சாவதும் புதிதல்ல"  என்ற  அவரின்  வரி  மரண பயத்தை விரட்டிவிடுகின்றது. உனக்கு முன்னால் இறந்தவர்கள் எத்தனையோ கோடி
அதை நினைத்துப்பார்த்து  நிம்மதியாக  வாழ்  சாவை எண்ணி நிதம்  பயப்படாதே என்று  கூறுகின்றார்.

மாட்சியில் பெரியோரை  வியப்பதுமிலவே  சிறியோரை  இகழ்வது அதனிலுமிலவே  என்றார்  கணியன் - 30 வெள்ளிக்காசை கண்டவுடன்  காட்டிக்கொடுத்தான்  அதுநாள் வரை  இயேசுவை போற்றிய யூதாஸ் -  அரசியலில் இகழப்பட்ட  தலைகளை  தஞ்சம்  என்று  கூடியபின் பாராட்டி மகிழ்பவர்களுமுண்டு. அரிய பெரும்  உண்மையை  எளிதாக சொல்லிய கணியன் பூங்குன்றன்  தான்  வாழ்ந்த  ஊரைவிட்டு  ஒரு  நூறு கல்லுக்கு  மேல் சென்றிருப்பாரோ  தெரியவில்லை  ஆனால்  உணர்வும் மனமும்  புரிந்து கூறுகின்றார் " யாதும் ஊரே யாவருங் கேளிர் " என்று. எல்லா இடமும் ஒன்றே நமது  இடமே   எல்லோரும் நமது   உறவே - 5 கண்டங்களிலும்  வாழும்  மக்களை  அன்பால்  இணைத்து பார்த்த  மகா ஞானி   அமெரிக்க  அரசியலாளர்கள்  தங்கள் நஞ்சுகளை  விற்பதற்கு  கீழை நாடுகளுக்கு கூறும்  தந்திர  வார்த்தை  குளோபல் நட்பு  உலகமயமாக்கல் இணைவு இதை  2000 ஆண்டுகளுக்கு முன்  அன்பை  காட்ட  கருணையுடன்  சொன்னவர்  கணியன்  ஒரே  ஒரு  பாட்டை  மட்டும் கூறி  2000 ஆண்டுகள்  கழிந்தும் மக்கள் மனதில்  குடியிருக்கும் பெருமைமிகு  மனிதர்  கணியன்  பூங்குன்றனார்   அவரின்  வார்த்தையை ஐநா  சபையில்  சொல்லி  கைதட்டு வாங்கியவர்  இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள்   வெள்ளையர்கள்   எழுந்துநின்று அந்த வார்த்தைக்கு  மரியாதை  கொடுத்தார்கள் என்றால்  இதைவிட  தமிழன் ஞானத்துக்கு  அன்புக்கு ஈடு இணையேது .

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக