பிட்சாரியாக்களும் துப்புரவும்
நான் சந்தித்த பிட்சாரியாக்காரர்கள் இதிலே வருகின்றார்கள்
சில ஆண்டுகள் முன்பு இரவுக் கேளிக்கைக்கு சென்றிருந்தேன் சமூகத்துடன் கலக்க வேண்டி, வீடுதிரும்பும் முன்னர் சிறிய பசியெழ ஒரு பிட்சாரியாவில் ஏதாவது வாங்கி சாப்பிடுவோம் என்று சென்றிருந்தேன் அதன் உரிமையாளர் டென்மார்க்கிலிருந்து 3500 கிலோ மீற்றர் தள்ளியிருக்கும் நாட்டினன்
உள்ளே டெனிஸ் குமரர்களும் குமரிகளும் நிறைந்திருந்து வாயசைத்தார்கள்
சிலர் வரிசையில் வேண்டுவதை விண்ணப்பிக்க நின்றிருக்க நானும்
அவர்கள் பின்னே நின்றிருந்தேன் திடீரென வெளியில் சென்ற கடையின்
உணவு தயாரிப்பாளர் வெளியே வீசப்பட்டுக்கிடந்த உணவு வைக்கும் காகிதக்கோப்பைகளை தனது வெறுங்கையால் பொறுக்கினார் பின்பு அவற்றை குப்பைத்தொட்டிக்குள் போட்டார் பின்பு கடைக்குள் வந்து
கைகளை கழுவாது அதே அசுத்தக் கரங்களால் மாவை பிசைந்து தட்டினார்
இதை பார்த்து பொறுக்கமுடியாது நான் அவனிடம் வாய்திறந்தேன் நண்பா குப்பைகளை அள்ளிய பின்னர் உங்கள் கைகளை கழுவ வேண்டாமா இப்படி
நீங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் கருதாது உணவு தயாரிப்பில்
ஈடுபடலாமா என்றேன் அவர் தகுந்த பதில் தரமுடியாது சினப்பட்டு
தனது நண்பனுக்கு ஏதோ சொன்னார் அவர் என்னிடம் பிரச்சினை வேண்டாம் என்றார் நான் பிரச்சினைக்கு வரவில்லை நியாயத்தை கேட்க்கின்றேன் என்றேன் துப்புரவு முக்கியமல்லவா இவர் கரங்களில் நிச்சயம் தெருவின் புழுதி உறைந்திருக்கும் தானே என்றேன் அவரும் பதிலின்றி ஓய மேலே பேசி பயனில்லை என்று நினைத்துவிட்டு நான் வீட்டுக்கு சென்றுவிட்டேன்
பிட்சாரியாக்கள் உணவு சுற்றும் காதங்கள் சிறு தட்டுக்களை நுகர்வோர் வீதியில் எறிந்தால் அவற்றை பிட்சாரியாக்காரர்களே பொறுக்கி எடுத்து குப்பைத்தொட்டிக்குள் போடவேண்டும் என்ற வெங்காய சட்டம் இருக்குமிடம், சுத்தம் செய்யாத பிட்சாக்காரரின் அனுமதி பறிக்கப்படும் தொடர்ந்து குறிப்பிட்ட பிட்சாரியாக்காரர் தொழிலை செய்ய முடியாது.
அடுத்து பக்கத்து நகரில் பேருந்து ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற படித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் மதிய இடைவேளைக்கு கபாப் வாங்க ஒரு எண்ணைவள நாட்டுக்காரரின் பிட்சாக்கடைக்கு சென்றேன் வெளியில் இருந்து சிகரெட் புகைத்தார் அந்தக் கடைக்காரர் நான் உள்ளே சென்றதும் சிகரெட்டை எறிந்துவிட்டு வந்து என்ன வேண்டும் என்றார் ஒரு கபாப் என்றேன் கையை கழுவ வேண்டுமென்ற பொறுப்போ சிந்தையோவின்றி மாவில் கை வைக்க தயாரானார் சுத்தம்பற்றி கதைத்தால் வீண் தர்க்கம் செய்வார் போலிருந்தது அவரின் முகபாவம் ஒரு பொய்யை வேறு வழியின்றி வள்ளுவரின் அனுமதியுடன் புகன்றேன், மன்னிக்கவும் சஞ்சியை (பேர்ஸ் ) மறந்து விட்டேன் எனது விண்ணப்பத்தை (ஓடர்தவிர்க்கவுமென்றுவிட்டு சென்றுவிட்டேன் .
உணவை பிறருக்கு தயாரிக்கையில் ஏனோ தானோ
என்று வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் பற்றி அக்கறையில்லாது
அசுத்தமான முறையில் தயாரிப்பது மிகவும் தவறு அது தர்மமுமில்லை
காசு வந்தால் போதும் என்ற நினைப்பே முக்கியம் என்று கருதி வாடிக்கையாளரின் ஆரோக்கியம் கருதாது நடந்துகொள்வது பெரும் பாவம்
பண்பற்ற அநாகரிக செயல், சிந்தனை அற்ற மனவூனர்களே அப்படி செய்வோர் பிறகு எத்தனை சாமி கும்பிட்டும் தொழுதும் மன்றாடியும் பயனில்லை இறைவன் கருணை கிடையவே கிடையாது - லண்டனில் ஒரு
கோழிப்பொரியல் விற்கும் தமிழரின் கடையில் வேலை செய்தவர் மூக்கில்
கைவிடுவதை பார்த்து வாடிக்கையாளர்கள் அருவருத்து வெளியில் சென்றார்கள் அந்த தொழிலாளிக்கு அன்றுடன் அக்கடையில் வேலையும் போயிற்று சங்க விழாக்கள் நடக்கையில் அவதானித்திருக்கின்றேன் இடது கையால் உணவை எடுத்து வழங்குவது போன்ற அருவருக்கும் செயல்களை, அதன் பின்னர் கூடியவரையில் நம்மவர் விழாக்களுக்கு செல்வதையும் தவிர்த்துவிட்டேன் வலது கையால் அகப்பையை பிடித்து
இடது உள்ளங்கையில் ஊற்றி சுவை பார்ப்பது என்று நம் தமிழர்கள் பலர்
இருக்கின்றார்கள் அவ்விடத்திலே சொல்லி கெ ட்ட பெயர் எடுப்பது என்
வாடிக்கை இம்மாதிரி செயல்களை கண்டால் பொறுக்க முடிவதில்லை
அகப்பையை இடது கையால் பிடித்து வலது கையில் ஊற்றி சுவை பாருங்கள் என்று அக்கணமே சொல்லிவிடுவேன் ஓ ரமேஸ் சொல்லுறது
சரிதான் என்று மாற்றிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள் எங்கும் எதிலும்
துப்புரவு முக்கியம் முக்கியம் .
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக