திங்கள், 25 ஆகஸ்ட், 2014

நாலு எழுத்தை படி

நாலு  எழுத்தைப்   படி

நாலு  எழுத்தை  படி என்பதன்  பொருள்  மனிதன்  என்ற
நாலு  எழுத்தை  உணர்  (ம  னி   த   ன்  ) என்பதே. இரக்கம் , கல்வி
தொண்டு,  பண்பு  ஆகிய  நாலும்  உள்ளவரே  மனிதன்
என்றழைக்கத்   தகுதியுடையவர்  என்பது அதன் பொருளாகும்.
கல்வியறிவு  இருந்தும்  இரக்கம்  பண்பு  சேவை மனப்பாங்கு
இல்லாத பலரை  வாழ்வில் காண்கின்றோம்  அவர்களால்
சமுதாயத்துக்கு  எதுவித  பயனுமில்லை  தங்களின்  பசியை
ஆற்றி  தாங்கள் மட்டும்  செழிப்பாக  வாழ்வார்கள் - வீண் தர்க்கம்
புரியும்  ஆற்றல்  கொண்ட  அந்த சீவன்கள்  இன்னல் படுவோரின்
துன்பம் நீக்க எள்ளளவும் சிந்திப்பதில்லை .   அவர்களை
அறிவாசானும்  அறிவாட்டியும்  மனிதன்  என்று  மொழியவில்லை
"ஆற்றுவார்  ஆற்றல்  பசியாற்றல்  அப்பசியை
மாற்றுவார்   ஆற்றலின் பின் "  என்பது  அறிவாசானின்  கூற்று
எடுத்த காரியத்தை  முடிக்கவல்ல  சான்றோரும்  பசியடக்கி தவம்  செய்யும்
தவத்தில்  சிறந்த முனிவர்களும் கூட  பசித்தவர்களின்  பசியை  ஆற்றும்
சாதாரண மனிதனுக்கு  பின்னே என்று   வள்ளுவப்பெருமான்  கூறுகின்றார்
என்பதை  அனைவரும் நினைவில் இருத்தக்கடவது.

 அறிவாட்டி  கூறுவாள்
"ஈயார்  தேட்டைத்   தீயார்  கொள்வர்" என்று  அழுத்திக்கூறுகின்றார்
துன்பம் கொள்வோரின்  துயர்  போக்க  உதவாது  சேர்த்து வைக்கும்
செல்வம் ஒருநாள்  திருடர்களால்  திருடப்பட்டு  ஒழியும்  என்பது
ஆச்சி கூறும் எச்சரிக்கை  அதையே  ஐயனும்  சற்று  நீட்டிச்  சொல்வார்
"ஈத்துவக்கும் இன்பம்  அறியார்  கொல்தாமுடைமை
வைத்திழக்கும்  வன் கணவர் " என்று - வள்ளுவரும்
ஔவை பாட்டியும்   சும்மா  சொல்லுவார்கள்   என்று  தட்டிக்கழித்து
வாழ்பவர்களே  ஏராளம்பேர்  அவர்கள்  கல்விகொண்டோராகவும் இருப்பதே  வேதனை
 நிறைவான  பொருள்  வளம்  கண்டும் உதவ  எண்ணம்  கொள்ளாமல் இருக்கின்றார்கள்
என்பதே  ஆச்சரியம்.

லங்காசிறியில்  நோய் ஆற்றவும்   பசிபோக்கவும் நொந்தோர்  ஆதாரங்களுடன்
  உதவி கேட்டு கோரிக்கை வைக்கையில்   எளியவர்களின்  இன்னலை  போக்க
எண்ணம்  கொள்ளாத  உயிர்களே  இங்கு நடமாடுகின்றார்கள்  ஒரு  100  குரோண்
 கொடுத்து  உதவ மனம் கொள்வதில்லை .

இங்கு  அடியேன்  அமரர்களான  அன்னை தந்தை  பெயரால்  ஒரு மனிதாபிமான
உதவிச் சேவையை  நடத்துகின்றேன்  இதுவரை  6 குடும்பங்களுக்கு 
ஒரு சில  நல்லவர்களின்  உதவியுடன்  சிறு  பொருளுதவி  அனுப்பி
அவர்களின்  இன்னல்  துடைத்திருக்கின்றேன்,  200 பேர்கள்  வாழும்
நான் வசிக்கும் நகரில்  ஒரு சிலர்  தவிர  பெரும்பாலானோர் 
உதவிசெய்ய  முன்வருவதில்லை  புறமிருந்து  கற்பனைக்கதை பேசி
என்னை  இழிவுரை   செய்பவர்களாகவே  இருக்கின்றார்கள்  அவர்களையும்
அன்புடன் மதிக்கின்றேன்  நாளை  மனம்  மாறி  அவர்களும்  என்னுடன்
தொண்டாற்ற  வருவார்கள்  கை கொடுப்பார்கள்  என்ற  நம்பிக்கையில்.

ஒரு  நல்ல காரியம்  நாம் செய்ய  முயலுகையில்  மாற்று  கருத்தும்
வீண் பழி  உரைக்கும்  சீவன்களும்  தமிழர்களுக்குள்  எழுவதொன்றும்
புதியதன்றே - மாறுவது மனம்   சேருவது  இனம்  - எல்லோரும்  வாழ்வோம்
இன்னலுறுவோரையும்  வாழவைப்போம்  அன்றே  நாம் மனிதர் .

ம.இரமேசு






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக