அல்லாவை மட்டும் மதிப்பவர்க்கு
அல்லாவை மட்டும் மதிப்பவர்க்கு ஆபிரகாமும் அப்துல்லும் ஆறுமுகமும் ஒன்று
அகிம்சை அல்லா தவரின் கோட்பாடுகளை மதிப்போர்க்கே மாற்றார் அமரார்
கொள்கையெனக் கொண்டோர் கொலைவெறிச் சட்டம் அல்லாவின் பெயரால்
சரியா என்று கொண்டு வெட்டி பலியிடுதல் வீரமோ வேண்டுதலோ அன்போ ?
மனிதரில் மாற்றுக் களைகளுமுண்டு அவர்க்கு அன்பே சிறை அடித்து வெட்டி
அறுப்பதன்று - என் அன்புச் சகோதரா, உன்னை படைத்தவனே என்னையும்
படைத்தான் துரோகியையும் படைத்தான், தண்டனை கொடுக்க நமக்கு
ஏது தகுதி , படைத்தவனே பார்ப்பான் தண்டனையை , அவனை
நம்பாதவனே வகுப்பான் ஹரியா சட்டத்தினை - உண்மை அன்பு நேர்மை
பாசம் மென்மை இதுவே அல்லா சொன்ன வேதம்
வாழ்க வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக