உனக்கு என்னடா தெரியும்
தமிழ்ப் பாடத்தில் கெட்டிக்காரன் என்று எனது மதிப்புக்குரிய ஆசரியர் அமரர் நடராசா கோயில் கேணியில் கால் கழுவும் போது என் அன்னையிடம் சொல்லியிருக்கின்றார் அதை என்னிடம் சொல்லி என்னை உச்சி முகர்ந்தாள் என் தாய் மரியாதைக்குரிய ஆசிரியர் செல்வராசா அவர்களிடம் ரமேசுக்கு டியூசன் சொல்லிக்கொடுங்கள் கணித்தத்தில் அவன் மக்காக இருக்கிறான் என்று கேட்ட என் தந்தைக்கு அவர் சொன்ன பதில் அவனுக்கு அடிப்படையே தெரியாது என்னால் முடியாது அவன் முட்டாள் - என்வீட்டு கண்ணாடிக்கு முன் நின்று என்னை நான் கேள்விகேட்டேன் டேய் ரமேஸ் உனக்கு என்னடா தெரியுமென்று, என் உள் மனம் சொன்னது உனக்குத்தான் நல்லா தமிழ் எழுத வருமே அதையே உன் வெளிப்புக்கு பயன்படுத்தென்று அதன்வழி நான் சென்றதன் விளைவே இன்று என்னை பல முகநூல் நண்பர்களும் அவர்கள் வாயாடியதால் வெளியில் இருப்போரும் என்னை மதிப்பதும் புகழ்வதும் போற்றுவதும் - உன்னை அறிந்தால் நீ தலை நிமிரலாம் என்ற தத்துவம் பொய்யல்ல.
(இதை மேடை போட்டு பேசும் அளவுக்கு வளரவில்லை அப்படி பேசினால் அடுத்த மேடைக்கு இலட்சம் ரூபா கொடுப்பார்கள் என எண்ணுகின்றேன் நாட்டில் நடக்கும் நடப்பு அதுதானே இல்லையா அன்பர்களே )
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக