செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

முகநூல்  நட்பு  எப்படி  இருக்க வேண்டும்

அன்பர்களே  !  அடியேன்  அன்புடன்  பணிவுடன்  புகலும்  முகநூல்  நண்பர்கள்  பற்றிய  கருத்து  யாதெனில்  -  நண்பர்கள் சிலர்   சில  நண்பர்களால் தொல்லை தொல்லை என்று
 நொந்துகொள்கின்றார்கள் - பண்பும்  பணிவும்  உண்மையும்  மனிதர்களுக்கு  உயிருக்கு  சமம்  என்று
நினைத்து  வாழும் மனிதர்களில்  ஒருவன்  யான்  - பண்பும்  பணிவும்  பக்குவமும்  இல்லாதவர்களை  நட்பு  வட்டத்திலிருந்து  அன்புடன்  விடுவித்தல்  நம்  மனதுக்கு  நிம்மதி ஆறுதல் - நிறையப்பேர்  என் கருத்துக்கு  விளக்கு   கொளுத்த வேண்டும்  என்று எதிர்பார்த்து  தெரியாதவர்களையெல்லாம்  நட்புக்  கூடையில்  சேர்ப்பது  நட்புக்  கூடைக்கு  நாமே தீ வைப்பதாகிவிடும் - நாலுபேர்  நல்ல  பண்பாளர்கள்
சிநேகமாக  இருந்து  பாராட்டினாலே  போதும்,  மற்று,  ஒருவர்  சிநேகத்துக்கு  வாளி  இறக்குகின்றார்  என்றால்  அவர்  துலாவிலிருந்தா  கப்பியிலிருந்தா  இல்லை கைவாளியா  என்று  அவர் யார் யாருக்கு
நண்பர் என்பதை  கண்டுகொண்டு  இறக்குங்கள்  இறக்கியபின்  வாளியில்   ஓட்டை  இருந்தால் கிணத்து  கட்டிலே அடிபடாது வெளியே  எடுத்து விடுங்கள் -  பண்பாளர்களுக்கு  கருத்தை பணிவாக  இயம்புபவர்களே  நேசமாக  இருப்பார்கள்  இருக்க முடியும்,  கருத்துக்கு விமர்சனம்  எழுதுகையில்
இயம்பியவர்  மனம் நோகாதபடி  பாணில்  ஜாம்  தடவுவது போல் எழுதவேண்டும்  எடுத்தேன்  கவிழ்த்தேன்  என்றால்  பின்  தேன்  பாழாகிவிடும்  என்பதை  பணிவன்புடன்  பகிர்கின்றேன் .

ஒருவரின்  எழுத்தின் பாங்கும்  நடையும்  அவர்  எம்மாதிரி  உயிர் என்பதை  காட்டிவிடும்
  அதை  கவனத்திற் கொண்டால்  பின்  அவரை  அணைப்பதா  விடுவதா  என்று முடிவெடுக்க முடியும்  சிலர்  சினிமா செய்திகளையும்  பாடல்களையுமே  நிரப்புவார்கள்  வேறு சிலர்  நகைச்சுவை  மட்டுமே  கலப்பார்கள்  இன்னும் சிலர்  எப்பொழுதும் சோகமும்  தத்துவமும்  உரைப்பார்கள் 
சகலதையும்  குழைத்து  வழங்குபவர்களே  சிறந்த  ஆக்குனர்கள் (படைப்பாளிகள்)  ஆவர்  என்பது  பணிவான  எண்ணம் .

வாழ்க நலம் 

அன்புடன்
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக