இராமனுக்குப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம்
விசுவரத முனிவரின் மகன் இராவணன் பிறப்பால் பிராமண குலத்தை சார்ந்தவன் இராவணன்
அவனை கொன்றதனால் இராமனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்தது காரணம் பிராமணனை கொலை செய்தால் பிரம்மகத்தி தோஷம் பிடிக்கும் இராமன் சத்திரியன் ஆதலால் அவனுக்கு அத்தோசம் பிடித்துக் கொண்டது அதையிட்டு மனம் வாடிய இராமன் மானாவாரியில் சிவனை நோக்கி வேண்ட சிவனின் தரிசனம் கிட்டியது மூன்று இடங்களில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஸ்டை செய்து உனது தோஷத்தை போக்குவாயாக என சிவன் கூறவும் அதன்படி முன்னேஸ்வரத்தில் முதலாவதாக சிவலிங்கத்தை வைத்து பிரதிஸ்டை செய்து அடுத்து திருமலை செல்ல மனைவி சீதையுடன் புஷ்பக வானூர்தி ஏறினார் இராமன் அப்படி அவர் பிரதிஸ்டை
செய்ய உண்டானதே திருக்கோணேஸ்வரம் அதன் பின் ராமேஸ்வரம் பறந்து அங்கும் சிவலிங்கத்தை வைத்து பிரதிஸ்டை செய்து தனக்கு பிடித்த தோஷத்தை ஓட்டினார் என்பது அறியக்கிடக்கும்புராணச் செய்தி.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக