சனி, 2 ஆகஸ்ட், 2014

சொல்ல முடியமா இனியும் சொல்ல முடியுமா

சொல்ல  முடியமா  இனியும்  சொல்ல முடியுமா

குளத்தடி  கோயிலடி  மடத்தடி  மதவடி
கடையடி  காலையடி  மாவடி சந்தையடி
கிணத்தடி  பள்ளியடி சலூனடி சைக்கில்கடையடி
வயலடி வரம்படி கடலடி கரையடி எண்டு
எங்க  பாத்தாலும் தமிழர்  ஒற்றுமியில்லாதவை
எண்டு  நாங்களே  எங்களுக்குள்ள  கதைச்சு  கதைச்சு
வாய்  நொந்தது  ஒரு காலம்

சின்ன நாடாம்  சிறிய  சனத்தொகை  நிறைந்ததொரு
நல்ல நாடாம்  டென்மார்க்கு - அங்கையொரு  தமிழாளாம்
செல்லத்துரை அவற்ற  பேராம்    மனுஷன்  ஒரு பேக்காயாம்
 பள்ளிக்கூட  வாத்தியாரா  இருந்துவந்து  நாடகம் நடிப்பு
கவிதை கட்டுரை பேப்பர்   அது இது எண்டு எல்லாத்தையும்
தலையில சும்மக்கிற கெட்டிக்கார மனுசனாம்

 எட மனிசன்  இப்ப  சினிமாப்படமுமல்லே எடுத்து விட்டிருக்கிறார்
அந்தமாரிப்படமாம்  "உயிர்வரை  இனித்தாய்" எண்டு  படத்துக்கு பேராம்
முந்தி எங்கடை ஆக்களின்ர  படமெண்டா  உவங்களுக்கு என்ன தெரியும்
எண்டு சொன்ன சனமெல்லாம்  உயர்வரை  இனித்தாயை பாக்க  பிச்சு புடுங்குதாம்
சனமெண்டா  சனமாம்  கடவுளே  நல்லூர் சன்னதி  நாகம்மாளாச்சி  கோயில்
தேருக்கு  போற  கூட்டம் போல  படத்துக்கு  சனமாம்

கதை உப்பிடியிருக்க  படத்தை  பிரான்சிலையும்  ஓட  அலுவல்  நடந்திருக்கு
அங்கயிருக்கிற நடிக்கிறவை பாடுறவை  எழுதுறவை ரேடியோக்கள் டிவியள்
முக்கியமா  கடைக்காரர் பேப்பர் நடத்துறாக்களெண்டு எல்லாரும்  நினைக்க முடியாத  ஒற்றுமையா
எட  எங்கண்ட  தமிழாளின்ர  படம்  நாங்கள்  முன்னுக்கு நிண்டு  வரவேற்கவேணுமெண்டு
தங்கட  அலுவலை  சுருட்டி  வைச்சு போட்டு  அந்தமாரி  ஒற்றுமையா  படத்தை ஓட்டி
கலக்கி விட்டிருக்கினையாம் - பத்தாதுக்கு  டிக்கேட்  இல்லாததாலை படம் பாக்காமல்  போன
ஆக்களுக்காகவும் அந்தண்டு பாக்க முடியாமல்  போனவைக்காகவும்  திரும்பவுமல்லே  காட் டப்போகினையாம் -  கதை  உப்பிடியிருக்க லண்டன்  அமேரிக்கா  கனடா  மற்ற நாடுகளில  இருக்கிற  தமிழ் ஆக்களெல்லாம் இஞ்சை எப்ப  இஞ்சையெப்ப  எண்டு  நுனிக்காலில  நிக்கினையாம்
என்ர  மருமேன்  சிங்கப்பூர்ல இருக்கிறான்  அவனும் ஒருநாள்  என்னிட்டை கேட்டான்  சிங்கப்பூர்ல
எப்ப ஓடுமெண்டு,  வாத்தியார்  சிங்கப்பூர்  மலேசியா  ஆக்களுக்கு  காட்டாமல்  எமாத்துவாரே !
மனிசன்  கட்டாயம் அங்கையுங்காட்ட  அலுவல்  செய்யாமலே  இருப்பார்  - இப்ப சொல்லுங்கோ
இனியும்  சொல்லேலுமே  நாங்கள்  ஒற்றுமையில்லாத  ஆக்களெண்டு  , ஒரு காலத்திலை  அப்பிடி
இருந்திருக்கலாம் இனி  எங்கடை  பிள்ளையள்  ஒற்றுமைக்கு  நாங்கள்தானெண்டு பேரெடுப்பாங்கள்
அதில  ஆருக்கும்  சந்தேகம் வேண்டாம் - பிள்ளையள்  தலை  நிமிந்திட்டாங்கள்  இனி  எல்லாம்  நல்லாத்தான்  நடக்கும் .

(வெற்றிக்கு  உழைத்த  தொண்டர்கள்  யாவருக்கும்  படைப்பாளியாக  கலைஞனாக  மிக்க  நன்றியினை
நெகிழ்வுடன்  தெரிவிக்கின்றேன்) -  வாழ்க  நலம்

ம.இரமேசு  -  தொன்மார்க்







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக