தர்மம் செய்
இதைத்தான் இங்கு கேட்கின்றேன் அதனால் என்மீது வெறுப்படைகின்றார்கள் தங்கள் கற்பனைக்கு ஏதோவெல்லாம் தங்களுக்குள் பேசி என்னை தீண்டத்தகாதவன் போல் நோக்குகின்றார்கள் இங்கு வாழும் அறிவாளிகள்- நோக்குவது மட்டுமில்லை தங்களை சார்ந்தவர்களுக்கும் சொல்லி புறக்கணிக்க பாடு படுகின்றார்கள் என் செல்வங்கள் அவர்கள் நினைப்பை
மாற்ற நான் இன்னும் இன்னும் நல்லது செய்வேன் என்னையும் மேலும் மேலும் திருத்துவேன்
பொதுவாக ஒருவர் ஆற்றும் நல்ல செயலை அதன் பெறுமதியை மட்டுமே கண்ணோடவேண்டுமே தவிர அவர் யார் என்ன ஊர் கருப்பா சிகப்பா சாதியென்ன விவாகரத்தானவரா இல்லையா மது அருந்துவாரா சூதாடுவாரா மேற்கொண்டு சகல பாடிகள் என்ன என்ன என்பதெல்லாம் அறிந்தே
ஆதரவு நல்குவேன் என்பது எங்ஙனம் அறிவாகுமோ - அரிசிக்கும் உமியுண்டு கடலுக்கும் நுரையுண்டு
100% சுத்தமானவர்கள் உலகில் ஒருவருமிரார் கடவுள்களே எத்தனை அசிங்கமான செயல்களை
செய்திருக்கின்றன என்று படிக்கின்றோம் அப்படியிருக்க இக் கலியுலகில் தூய்மையான மனிதனாக
எல்லோரும் இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் அனைவருக்கும் ஒரு சில கருப்பு பக்கங்கள் வாழ்வில் இருக்கும் அவற்றை விடுத்து ஆகக் குறைந்தது இல்லாதவர்களுக்கு
கொடுத்து உதவ இதயம் வேண்டும் அதில் கண்ணோட்டம் வேண்டும் என்பதே என்றும் மனிதருக்கு
இருக்க வேண்டிய பண்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக