பொது மகள்
பிறந்தாள் புழுதியிலே
வளர்ந்தாள் புழுதியிலே
வாழ்ந்தாள் புழுதியிலே
தேய்ந்தாள் புழுதியிலே
மாய்ந்தாள் புழுதியிலே
எரிந்தாள் புழுதியிலே
ஏதும் இல்லை அவள்
வாழ்வினிலே வாழ்வினிலே
நாளும் தன்னை உருக்கினாள்
நாலுபேர் உண்டனர் வாழ்ந்தனர் .
சிந்திக்காப் பொழுதுகளில் .
கார்கள் வந்தன
கதவுகள் திறந்தன
காசுகள் பறந்தன
சொற்கள் கருகின
நேசங்கள் சுருங்கின
வாசங்கள் மறைந்தன
வண்ணங்கள் தேய்ந்தன
வடிவுகள் போயின
ஓலங்கள் நிறைந்தன
துன்பங்கள் சிரித்தன
வாழ வேண்டும்
நிலமும் வானும்
கடலும் காற்றும்
மறையும் வரை
நான் வாழவேண்டும்
ஏனென்றால் அவளை
நிதமும் பார்க்க வேண்டும்
அவளோர் அழியா அழகி
அவள் பெயர் தமிழ்
அவளை படிக்க
ஒரு பிறவி போதாது
ஆக்கங்கள்
ம.இரமேசு
பிறந்தாள் புழுதியிலே
வளர்ந்தாள் புழுதியிலே
வாழ்ந்தாள் புழுதியிலே
தேய்ந்தாள் புழுதியிலே
மாய்ந்தாள் புழுதியிலே
எரிந்தாள் புழுதியிலே
ஏதும் இல்லை அவள்
வாழ்வினிலே வாழ்வினிலே
நாளும் தன்னை உருக்கினாள்
நாலுபேர் உண்டனர் வாழ்ந்தனர் .
சிந்திக்காப் பொழுதுகளில் .
கார்கள் வந்தன
கதவுகள் திறந்தன
காசுகள் பறந்தன
சொற்கள் கருகின
நேசங்கள் சுருங்கின
வாசங்கள் மறைந்தன
வண்ணங்கள் தேய்ந்தன
வடிவுகள் போயின
ஓலங்கள் நிறைந்தன
துன்பங்கள் சிரித்தன
வாழ வேண்டும்
நிலமும் வானும்
கடலும் காற்றும்
மறையும் வரை
நான் வாழவேண்டும்
ஏனென்றால் அவளை
நிதமும் பார்க்க வேண்டும்
அவளோர் அழியா அழகி
அவள் பெயர் தமிழ்
அவளை படிக்க
ஒரு பிறவி போதாது
ஆக்கங்கள்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக