இப்படியும் சீவன்கள்
(கற்பனை )
(கற்பனை )
காரச் செத்தல் முகங்கள் கண்டேன் கடுகதி ரயிலினிலே -செல்கின்றார் கொழும்புக்கு
உயர்ந்த மாக்களாம் தாமென்ற நினைப்புடன் அசிங்கமான கனல் பார்வை பயணங்கள்
சிரித்திடவும் குலாவிடவும் தெரியாத பண்பில்லா படித்தவர்கள் பயணிக்கின்றார் ரயிலினிலே
கல்லோயா நானாறு குருநாகல் கொழும்பென்று ஓடுகிறார் சளைக்காமல் உழைக்கப் பிழைக்க
கொழும்பில் உழைத்து கொடிகாமத்தில் வயல் வாங்கினார் வீடோ தூரத்தில் உரும்பிராயில்
ஆசை ஆசை கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டே தின்னாமல் குடியாமல் சேர்த்தகாசு
காசெல்லாம வயலாகி வளவாகிப் போனது வந்தது யுத்தம் சேர்த்தது களவாகிப் போனதே
சின்னம்மா பெடியன் சிறப்பாக படித்து பேராதனை போக வழியற்று நிக்கையிலே உதவாத மனசு
காணியெல்லாம் பறிபோக கையிலிருந்த காசுடன் கதறி அகதியாக பறந்துவந்தார் பிரான்சுக்கு
கூட்டிட்டார் அள்ளிட்டார் வெளிநாட்டில், உள் நாட்டில் செய்திருந்தால் அவருக்கு வேறு பெயர்
இன்னும் திருந்தவில்லை மாறவில்லை குணமும் போகவில்லை அறியாமை இருளில் வாழ்கின்றார்
அங்கே இனிமேல் ஆர்போவான் என்றிருந்தார் நாலு காசு சேர்த்தவுடன் நாடு பார்க்க பறக்கின்றார்
நப்பியாய் நாதாரியாய் வெப்பி வெப்பி வாழ்ந்தார் வெளிநாட்டில் ஒர்குண்டூசி தன்னும் உதவியதில்லை
தனக்கில்லையென தவித்தபோது தத்தளித்தபோது உதவிய நாட்டை நன்றி மறந்தே தூற்றுகின்றார்
காகக் கூட்டிலே தான் குயிலாம் கூவுகின்றாராம், தன்மையில்லாத தறுதலை புகலும் புளி வார்த்தை
தண்மையும் இல்லை வண்மையும் இல்லை தானும் மனிதனென்று தலை கிறுக்கி திரிகின்றார்
ம.இரமேசு - தொன்மார்க்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக