ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

அப்பாவிப் போலிகள்

அவன் + பிரவுன் - இவர்களை  உண்மையான நண்பர்கள்  என்று நம்பியல்லவா  தன்னை  முழுமையாக
இனிமையாக  வெளிப்படையாக  காட்டினான்  இந்த நாதாரிகள்  வெளியில் சென்று  சொல்லி சிரிப்பார்கள்  என்று அவன்  நினைத்திருந்தால் பேசாது  இருந்திருப்பானே  ஏன்  இவர்கள்  இப்படி ?
அறிவற்ற  இந்த பட்டிக்காடுகளுடன்   சேர்ந்ததும்  பேசியதும் பிரவுனின் குற்றமே .

பொழுதுபோக்க  அங்கும் இங்கும் சென்று  அவர்கள்  கொடுப்பதை  உண்டுவிட்டு   நல்லவன்  ஒருவனை    வேண்டுமென்றே  மற்ற  குடும்பங்களுக்கு  தூற்றி  சொல்வது இல்லாதது  பொல்லாததை
சொல்லி மற்றவர்கள்  மனங்களில் பிரவுன்  கெட்டவன்  என்னும்  நினைப்பை  விதைத்து அறுவடை கண்ட  நாதாரிகள்  நாதாரிகளே - வேற்று  நாட்டாருடன்  நாலு வார்த்தை  பேசி உறவாடத் தெரியாது
ம்மாண்டி  போல இருந்துவிட்டு   பணத்தை மட்டும்  சேர்த்து  காரும்  வீடும் வாங்கி  கட்டிய  தொழுவத்து மாடுகள் போல  வாழுகின்றார்கள்  குடிகேடர்கள் - வறியவர்கள் ஏழைகள்  கேட்கும் உதவிகளுக்கும்  உதவார்கள்  இரங்கார்கள்  பேச்சு மட்டும்  பெரிய  விண்ணர்கள் போல்  இந்த  மனிதர்களை  பார்த்தே  கனலானான்  எட்டயபுரத்தான்  

சொந்த சகோதர்கள்  துன்பத்தில்  சாதல்  கண்டும் சிந்தை இரங்காரடி  எத்தனை  வருத்தம்  இருந்திருக்கும்  பாரதிக்கு  இல்லாவிட்டால்  இப்படி  கொதித்து  எழுதியிருப்பாரா  அனைத்தும்
படித்து  கிழித்தவர்கள் என்போரும்  தங்களுக்கு  மரியாதை கிட்டும் பேர் வரும்  என்ற எதிர்பார்ப்புடன்
சில  காரியங்கள்  செய்கின்றார்களே   தவிர  அவர்களும்  பொதுவில் இரக்கம்  இன்றியே  வாழ்கின்றார்கள்  மேடைகள்  அதில்  அலங்கார வாய் மின்னல்கள்  என்று  போலிகளாக  வாழ்கின்றார்கள்-  நல்ல நெஞ்சங்கள்   இதுகளை  கண்டு வேகின்றது  துடிக்கின்றது.

ம.இரமேசு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக