செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

அம்மா தாயே  நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி 

கங்கை சூடியான்  பாதியங்கம்  கொண்டவளே 
நம்பியை ஏந்தி   நயினை  வந்தமர்ந்தவளே 
அமுதசுரபியால்  அன்னமிடும்  நயினையாளே 
உன்  நாமம்  சொன்னால்  நம் கேடு கெடுமே 

நமையாதரிக்க  யாருமிலை யென்றுவந்தாயோ  தேவி 
வேலை ஈன்ற நாகம்மா எம்மை நாளும் காரம்மா 
தோணியேறி  செல்கையிலே துணை நமக்கு  நீயே 
வானாய்  மண்ணாய்  கடலாய் காற்றாய்  எல்லாம் தாயே 

மனமுள்ளோர்  கரங்களுக்கு  பண  வசதி  கொடுதாயே 
நல்ல  வழிக்கு  மாறி விட்டோரை  ஆதரி அம்மா தேவி 
உதவும்  கைகளுக்கு துணையளிக்க மனங்  கொடுப்பாய்  
அன்னையே நீயன்றில்  எனக்கு வேறு  யாருமில்லையம்மா 

அம்மா தாயே  நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி 
அம்மா தாயே  நயினையாளே நாகம்மாளே போற்றி போற்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக