சனி, 30 ஆகஸ்ட், 2014

நேற்றொரு  தெரிந்தவன்

நேற்றொரு  தெரிந்தவன்  தொலைபேசியில்  வந்தான்   நான்  நிறைய காசு சேர்த்து  வைத்திருக்கின்றேன்
வெளிநாட்டில்  3 வீடுகள்  கார்   வான் ,  இந்தியாவில் ஒரு  பண்ணைவீடு,  இலங்கையில்  2 பெரியவீடுகளும்   தோட்டங்களும்  எனக்கு  இருக்கிறது,  வைத்தியர்  சொல்லிவிட்டார்  உனக்கு
சர்க்கரை நோய்  இனி நீ கண்டதும் சாப்பிடக்கூடாது  என்று  எனக்கு  என் வாழ்வை நினைத்தால்
கவலையாக  இருக்கிறது  பணம் இருந்தும் அதை அனுபவிக்கத்   தெரியாமல் இருக்கிறேன்  10 காசு
செலவளிப்பதற்கு  10 நிமிடம்  சிந்திப்பேன் அதனால் ஒன்றையும்  அனுபவிக்க முடியவில்லை
ஆசையிருக்கு  அனுபவிக்க  அங்கு இங்கு செல்ல , ஆனால் காசு கரைந்துவிடும் என்று  கட்டுப்படுத்தி
வைத்துள்ளேன் என்னை,  இளமையிலும்  ஆசைக்கு ஒரு இடமும் சென்றதில்லை   அனுபவித்ததில்லை 
வீட்டுக்குள்ளே இருந்து டிவி  பார்த்தே  25 ஆண்டுகளையும்  போக்கிவிட்டேன் இப்போ  வயது 50,   25
ஆண்டு இளமையை  அநியாயமாக்கி விட்டேன்  இன்னும்  சில  ஆண்டுகளில்  சாவேன்  என்  சொத்துக்கள் எனக்கு  பிரயோசனமின்றி  போகப்போகுது  என்பதே  என் கவலை என  ஒப்பாரி வைத்து
அழுதான்  அந்த  -------.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக