செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சாதுர்யம்


ஒரு முதலாளியிடம்  இரண்டுபேர்  வேலை கேட்க சென்றார்கள்
இரண்டுபேரையும்  தனித்தனியாக  அழைத்து  அவர்களைப்பற்றிய
விபரங்களை  முதலாளி  வினாவினார்  இருவருமே  சம திறமை
உள்ளவர்கள்  என்பதை  அறிந்த  முதலாளி  இருவரையும்  சற்று
காக்க வைத்துவிட்டு  சிறிது  நேரத்தால்  ஒருவரை  அழைத்து
உங்களுக்கு  சகல  திறமையும் உண்டு  ஆனால்  உங்களுக்கு
வேலை தர  என்னிடம்  வேலையில்லை என்று பொய்யாக
சொன்னார்  அதற்கு அந்த  வேலை தேட சென்றவர்  சொன்னார்
எனது  துரதிஸ்டம் (வாழ்நாள் பயன்) எனக்கு  வேலையில்லாதது
போய்வருகின்றேன்  என்றுவிட்டு  புறப்பட்டார் 


அடுத்து  மற்றவரை  முதலாளி  அழைத்து  முதல் வந்தவருக்கு 
கூறியதையே  கூறினார்  அதற்கு  இரண்டாவதாக வந்தவர்
சொன்னார்  அட  ச்சா   எனது  திறமையை  உள்  வாங்க
உங்கள்  நிறுவனத்துக்கு  கொடுத்து வைக்கவில்லையே
என்று  உடனே  முதலாளி  எழுந்து  உங்களை  பணிக்கு
அமர்த்துகின்றேன்  என்று  கைலாகு கொடுத்தார் .


ம.இரமேசு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக