அனுபவி
இந்த உலகில் சட்டத்துக்கு உட்பட்ட வாழ்வின் இன்பங்களை ஒருவன் சுவைத்து முடிக்கும் போது அனுபவங்கள்
பெறுகின்றான், பல இடங்களுக்கு செல்வதனால் பல விதமான மனிதர்களுடன் அவ்வமயம் பழக நேரிடுகின்றது அதனால் மனிதர்களை அவர்களின் குணாதிசயங்களை கற்றுக்கொள்ள முடிகின்றது பயணங்களில் பொழுதுபோக்கு இடங்களில் கேளிக்கை விடுதிகளில் என இடங்களுக்கு ஏற்றாற்போல் மனிதர்கள் சிந்தையில் செயலில் மாறுபட்டே இருக்கின்றார்கள் ஆயினும் உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது .
வெளிநாட்டில் பல்வேறுபட்ட கலாசார வேற்று இனத்து மக்களுடன் பழகையில் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களை
அறிய முடிகின்றது யாருடன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற புரிதல் கிடைக்கின்றது பண்பாடு நாகரிகம் ஒழுக்கம்
எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று நன்றாகத் தெரியவருகின்றது. எமது மக்கள் பெரும்பான்மையினர் வெளியில்
செல்வது குறைவு தபால் நிலையம் வங்கி நகரசபை அங்காடிகள் வைத்தியசாலை இவ்விடங்கள் தவிர வேறு இடங்கள் செல்வது மிக மிக அருமை வீட்டுக்குள் இருந்து நன்றாக தொடர்களை பார்த்து மகிழ்வதே பொழுதுபோக்கு வெய்யில் காலங்களிற்கூட கடற்கரைக்கோ துறைமுகத்தடிக்கோ வருவது குறைவு வந்தால் ஐஸ்கிறீம் அல்லது
பிறிட்ஸ் (உருளைக்கிழங்குப் பொரியல்) வாங்கும் செலவு வரலாம் என்பதனால் வெளியில் போய் வீணாகக் காசையேன் கரியாக்குவான் என்று பல ஆண்டுகள் முன்பு ஒரு கெட்டிக்கார மனிதர் திருவாய் மலர்ந்தார் அவர் சொன்னதும் பல தமிழர்களுக்கு சரியாகவே தோன்றும் ,
பணத்தின் மீது பக்தி வந்தால் செலவு செய்து வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது என்பது என் பணிவான எண்ணம் - பணமும் வேண்டும் அனுபவிக்கவும் வேண்டும் என்பார் திருச்சி நாகமணி ஐயா , இந்த உலகில் கட்டிவிட்ட மாடு போல் மூன்றுவேளையும் வயிற்றை நிரப்பி தொழுவத்துக்குள்ளே சாணியை போட்டபடி மனிதனும் வாழவேண்டுமெனில் மனிதப்பிறப்பெதற்கு என்பது பேராசிரியர் நாகமணி ஐயா கேள்வி மனிதன் என்றால் நல்லது கெட்டது அறிய நாலு இடங்கள் சென்று நாலுபேருடன் பழக வேண்டும் என்பார் அந்த இனிய மனிதர்.
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக