வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

பாம்பின்  தலையை  நக்குவதற்கு  சமம்
பிறன் மனைவியை  கொள்தல் 

பாம்பின்  தலையை  நாக்கினால்  நக்கியவன்  கெதி  என்னாகும்  என்று  அனைவரும் அறிவார்கள்
அது போன்ற  ஒரு  செயலே  அயலவன் அன்றில் நண்பன்  மனைவியை  தன்  மகிழ்வுக்கு கவர்வது .

அம்பல்  அயலெடுப்ப,  அஞ்சித் தமர்பரீ இ,
வம்பலன் பெண்மரீஇ  மைந்துற்ற - நம்பும்
நிலைமையில்  நெஞ்சத்தான்  துப்புரவு,  பாம்பின்
தலைநக்கி  யன்னது  உடைத்து .

அம்பல் - இழிசொல்
அயலெடுப்ப - அயலவர் பேச
அஞ்சி - பயந்து
தமர்  பரீஇ- சுற்றத்தார்  வருந்தியிருக்க
வம்பலன் - அயலான்
பெண் மரீ இ -   மனைவியை  தழுவி
மைந்துற்ற  - மகிழ்ந்து 
நம்பும்  - அதை நிலையான  இன்பமென நம்பும்
நிலைமை இல் - உறுதியற்ற  நிலை
நெஞ்சத்தான் துப்புரவு  -  நெஞ்சமுடையவன்  துணிவு
பாம்பின் தலை நக்கி - விஷம் நிறைந்த  பாம்பின்  தலையை நக்குவது
ய (அ ) ன்னது -  போன்ற
உடைத்து - பயனற்ற  ஆபத்தான  செயலாகும் .

நாலடியாரிலிருந்து  -  ம.இரமேசு                                                                                                            
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக