சனி, 2 ஆகஸ்ட், 2014

வணக்கம் - விபரிக்க முடியாத  சோகங்களை,  நெஞ்சைப்  பிளக்கும்  துயரச்  செய்திகளை  எழுத்தில் கொண்டுவரும் திறன் பெற்றீர்  - இப்படியான  அல்லது  இதற்கும் மேலான  துன்பங்கள்  வரும்  போரிட்டால்  என்பதை அறிவால்  உணர்ந்தே  படித்தவர்கள், பெரியவர்கள்  போர், வன்முறை 
வேண்டாம்  என்றார்கள்   எவர்  உணர்ந்தார்  கேட்டார்  நல்லோர் சொல்.  எல்லாம்  எனக்குத்  தெரியும் என்று சென்றார்  கருவிகளை நம்பியே அழிவின் பாதையைத்  தேர்ந்தார்  அழிந்தார்,  உண்மைகள்  சொல்வோர்  ஏனென்று கேட்ப்போர்  தலைகளைப்
பறித்தார்,  தரித்திரம்  தாண்டவமாட வழிகள்  செய்தார் - தமிழர்  என்ற  நினைப்பால்  தலை கொடுத்த தம்பியருக்காய் அண்ணன்மாருக்காய் சகோதரியருக்காய்  நெகிழ்ந்தே  மக்கள்  கை கொடுத்தார் - உண்மையில்  எவரும்
இரத்தத்தையும்  இறப்பையும் அவலத்தையும் தரும்  யுத்தத்தை உள் மனதுடன்  ஏற்கவில்லை  ஏற்கவும் முடியாது - காவடியை  தூக்கிவிட்டார்கள்  நம்  பிள்ளைகள்  சரியோ தப்போ  ஆடிமுடிக்கட்டும் என்று
அமைதியாக  நின்றார்கள்  அவலங்கள்  கண்டார்கள் - நெஞ்சை நோகவைக்கும்  செய்திகள்  தாங்க முடியவில்லை  . - அமைதிகண்டு  வாழ்க நலமே .

(ஊழிற் பெருவலி யாவுள  மற்றொன்று
 சூழினும் தான்  முந்துறும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக