உயர்ந்தாள்
இருப்பது சில நாள் இறப்பது ஒரு நாள்
கடப்பது இடை நாள் அதில் படைப்பது திருநாள்
நினைப்பது நெடுநாள் அவள் கிடைப்பது நந்நாள்
மணப்பது பெருநாள் மக்கள் பிறப்பது மகிழ்நாள்
வாழ்நாள் இந்நாள் என்றாள் இனித்தாள் பனித்தாள்
பலநாள் சிரித்தாள் பண்பாடினாள் ஆடினாள் பாடினாள்
அயர்ந்தாள் உறைந்தாள் எழுநாள் எழுந்தாள் உழைத்தாள்
கொண்டான் மகிழ கொடுத்தாள் குளிர்ந்தாள் உயர்ந்தாள்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக