செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

மேன்மக்கள் 

வாழ்வில் வறுமை வந்த பொழுதிலும் அல்லது வேறு என்ன காரணங்களாலோ கீழ்நிலை அடைந்தபோதும் நல்ல பண்புள்ள ஒழுக்கமுடைய தர்மத்துக்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற மனிதர்கள் தீய வழியில் சென்று முன்னேற எத்தனிக்க மாட்டார்கள் குற்றங்கள் செய்ய வெட்கப்படுவார்கள் செய்யவும் மாட்டார்கள் எந்நிலையிலும் நன்நெறி பிசகாது, இருப்பதை வைத்து நேர்மையாக வாழ்வார்கள் அதுவே மேல் மக்களின் பண்பு.  மட்டுமல்லாது  வறிய  நிலையிலும்  இல்லை  என்று  கேட்பவர்களுக்கு  இருப்பதை  பகிர்ந்து  கொடுக்கும்  குணமுடையவர்களே  உயர்ந்த  போற்றுதலுக்குரிய மக்கள் 

"இலனென்னும்  எவ்வம்  உரையாமை  ஈதல் 
குலனுடையான்   கண்ணே  உள"   

நல்ல குணமுடைய  பிறப்பில்  வந்தவர்களுக்கே  இல்லை  என்று  சொல்லாது 
கேட்போருக்கு  உதவும்  குணம்  இருக்கும்  அவர்களே  மேன்  மக்களாவர்.   

ம.இரமேசு.
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக