எண்ணத்தில் மலர்ந்தவை
நல்ல உணர்வுகளை கெட்டுப்போகாது சிந்தையென்னும் பிரிட்ஜில் (குளிரி ) அடையுங்கள்
கெட்ட நினைவுகளை குப்பை தொட்டிக்குள் போட்டு விடுங்கள்
மலரின் வாசம்போல் மனம் இருந்தால் எல்லோரும் மகிழ்வர்
எறும்பின் மேலாடையை எடுத்து உலகின் ஓட்டையை மூடமுடியாது
யார் சொன்னாலும் கேட்காதவன் அடிவாங்கினால் தானாக மாறுவான்
ஒருவருக்கு ஒரு விடயம் தெரியவில்லை என்றபோது தெரிந்தவன் திமிர்கொள்வான்
பிறரை அடக்கியாளுமுன் உன்னை வலியவர் முன் நினைத்துப்பார்
பிறருக்கு விருந்து கொடுக்க தெரியாதவர்கள் நெஞ்சில் இரக்கம் பண்பாடு இராது
குழையும் வண்டில் ஏறும் வண்டிலும் குழைமேலேறும் எவரும் குறைந்தவரில்லை
இன்மையிலும் இருக்கின்றது என்பவன் உள்ளம் நிறைந்தவன் இருந்தும் இல்லை என்பவன் மோசமானவன்
வெட்கப்படு இழிவான காரியங்கள் செய்ய - நன்மை செய்ய நாணாதே
ஒருவரை ஏமாற்றி உல்லாசம் கொள்ள நினையாதே நாளை உன்னை ஒருவர் ஏய்ப்பார்
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக