வெள்ளி, 31 ஜூலை, 2015

என்ன செய்கிறோம் நாமெனத் தெரியாமல் செய்யும் இந்தப் பிள்ளைகளை இறைவா மன்னிப்பீராக
என்றார் யேசுநாதர் தன்னை சிலுவையில் அறைந்த போது.
தன்னை சுட்டவனை ஒன்றும் செய்யாதீர்கள்
என்று சொல்கையில்
சாதாரண காந்தி மகாத்மாவானார்.
தான் குண்டடிபட்ட நிலையிலும் அண்ணனைப் பாருங்கள்
என்று சுட்ட எம் ஆர் ராதாவுக்காக இரங்கினார்
எம்ஜிஆர் என்ற பொன்மனச் செம்மல்.
ஏழைகளுக்கு உதவ பொருள் கேட்ட
அன்னை தெரேசா முகத்தில் காறி
துப்பினான் ஒரு பணக்காரன், அதை
துடைத்துவிட்டு அன்னை சொன்னார்
எனக்கானதை தந்துவிட்டீர்கள் இனி
ஏழைகளுக்கானதை தருவீர்களாக.
நமக்கு தவறிழைப்பவரை
பதிலுக்கு தண்ணடிக்கக்கூடாது என்ற மாபெரும் புனித பண்பு வர அறிவில் பக்குவம் வேண்டும்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இறுதிவரை மகிழ்வாக இருக்கலாம்.

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, ...மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..
நன்றி மோகன்தாஸ் சாமுவேல்

ஒரு புதிய வானம்
பூவின் மெல்லிய
மலரானைத் தரிசித்ததே
...
கவர்ந்த காலம் கண் சிவக்க
சிரித்து அணைத்ததே
வானம் சிந்தும் பன்னீர்
அவனைக் குளிப்பாட்டியதே
முத்தில் ஒரு நீலம் அவனை
வாரிக்கொண்டு
வா வா என்று சிரித்ததே
புன்னகைப்பூக்கள்
அவன் வதனம் கண்டு
வெட்கித்தலை குனிந்ததே
தேமதுரத் தமிழ் அன்னை
தன் பிள்ளையென வாரினளே
கலாமு உனக்கொரு சலாமு .
செங்கவி
ம.இரமேஸ்
டென்மார்க்
அலைகள் பத்திரிகையில் வெளிவந்திருக்கும் எனது எழுத்தாக்கம்
Top
Tamil Latest News
Subscribe to AlaikalNews FeedSubscribe to AlaikalComments

Categories: உலகம்
சிந்தனை
சினிமா
செய்தி
டென்மார்க்
பழமொழி
பிரபலம்
மற்றயவை

Browse > Home / மற்றயவை / காலத்தை ஆளும் கலாம்
காலத்தை ஆளும் கலாம்
July 31, 2015
வெண்ணிலவின் ஒளி பட்டு தண்ணிலவின் குளிர்கண்டு பனிபடர்ந்த புற்களில் காகங்களும் வேறு பறவைகளும் எதை எதையோ தேடின. அவன் படுக்கையைச் சுருட்டி வைத்துவிட்டு சோம்பல் முறித்தான், அசையும் அலைகளை உற்றுப்பார்த்தான் யோசித்தான்
சில பறவைகள் கடலின் மேலே அழகாகப் பறந்து சென்றன இவை எங்கே எதற்காகப் பறக்கின்றன, ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு . மகனே என்றவாறு தேநீருடன் வந்தார்
தந்தை, கையில் தேனீரைப் பணிவுடன் வாங்கிய மகன் சற்றுச் சோர்வாக இருந்து யோசிப்பதைக் கண்ட தந்தை சொன்னார் , மகனே இந்த வானில் பறக்கும் பட்சிகளைப்பார்த்தாயா எந்தத் துணையும் இன்றி இறக்கைகளை மட்டுமே நம்பி முடியும் என்ற குறிக்கோளுடன் எதற்கும் அஞ்சாது பறக்கின்றன.
மேலே வானம் கீழே ஆழி இடையில் தங்க ஒரு மரமில்லை கொத்தியுண்ண அவைகளுக்கு எதுவுமில்லை முகில்களைக் கிழித்து விரைகின்றன தங்களுக்கான எதையோ தேடி, தேடச் செல்பவனுக்கு மனதில் தைரியம் வேண்டும் பயம் கூடாது வேகம் வேண்டும் . கடந்த இரண்டு நாட்களாக நீ எதைப்பற்றி யோசனை செய்கின்றாய் அது என்ன வென்று அறிவேன் மகனே . வடக்கே தனியாகச் சென்று மேற்படிப்பைப் படிக்க வேண்டியுள்ளதே புரியாத மொழி வித்தியாசமான யாவும் எப்படி சமாளிப்பேன் என்பதையிட்டே நீ துயரப் படுகின்றாய் என்பதை அறிவேன். பயம் வேண்டாம் வருங்காலத்தில் எப்படி எவரிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உனக்கு உண்டு சென்று வா மகனே வென்று வா நலமாக .
மாமனிதர் அமரர் அப்துல் கலாமுக்கு தந்தை கூறிய அறிவுரைகளே மேலே காண்பது.
எந்த அமெரிக்கா பாதணிகளைக் கழட்டிப் பரிசீலித்து உள்ளே நுழைய அனுமதித்ததோ அதே அமெரிக்கா நேற்று தனது தேசியக் கொடியை அம்மனிதருக்காகத் தாழ்த்தித் தலை குனிந்து வணங்கியது. கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும் உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழவேண்டும், ஆம் உலகம் கலாமுக்காக கண்ணீர் சிந்துகின்றது .
மாபெரும் சபைகளில் நீ நட ந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று உலகம் போற்றிப் புகழ்கின்றது மாமனிதர் அப்துல் கலாமை.
குடும்பத்து உறவு சிறு பதவி கண்டாலே குடும்பம் கார்வாங்கி மாளிகை கட்டி எழுப்பம் காட்டும் நாட்களில், நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தும் எவ்வித ஆடம்பரங்களுக்கும் அடிபணியாது வாழ்ந்த குடும்பம் அப்துல் கலாம் ஐயாவின் குடும்பம் – நேற்று கலாமின் சகோதரர் பேருந்தில் பயணித்திருக்கிறார் உடன் பிறந்தானின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, கலாமின் சாயல்போலவே அவரது சாயலும் இருந்ததைக்கண்ட ஒரு பிரமுகர் அவரைத் தனது மகிழுந்தில் ராமேஸ்வரம் அழைத்துச் சென்றிருக்கின்றார் .
நாலு வார்த்தை ஆங்கிலம் படித்தால் தாய்மொழியை மறந்துபோகும் தமிழினத்தில் தோன்றி மாபெரும் சபைதனில் கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற உலக ஒற்றுமையை, உறவைத் தமிழில் எடுத்தியம்பி மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ப்புலவன் இதைச்சொன்னார் என்றபோது உலகமாக சபை எழுந்து நின்று கரகோஷம் எழுப்பிக் கலாமைக் கட்டித்தழுவிப் பாராட்டியது – எங்கு சென்றாலும் எதை மறந்தாலும் ஐயன் வள்ளுவனை மறவாது கொண்டு சென்றவர், இன்று ஐயன் சொன்ன முறையில் வாழ்ந்து ஐயனுடன் சங்கமித்தார். காலத்தை தனதாக்கியவர்களையே காலமானார்கள் என்பார்கள் . ஆம், கலாம் காலத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
வாழ்க அப்துல்கலாம் . வாழ்க அவர் வாழ்ந்த வாழ்வு. வாழ்க அவர் புகழ்.
ஆக்கம்
ம.ரமேஸ்

திங்கள், 13 ஜூலை, 2015

விந்தை  மகிழ்வு


ஆழ்மனத்தின் விழிப்புகள்
அந்தகார இருட்டுக்களில்
நிலை குலைந்து தடுமாறும்
வேளைகளில் மனிதன் குணம் மாறும்
பூரணத்து  முழுமை
பூத விகாரம்
கண்ணும் காதும்
விண்ணை நோக்க
விழும் பனித்தி துளிகள்
நெஞ்சை நனைக்கும்
கிளிகள் பறக்கும்
காக்கைகள்  இறகடிக்கும்
வானம் மகிழும் நேரம்
ஒரு வன்மான் காட்டில்  பசியுடன்
மான் தேடும்
அந்தகார விழுமியம்
அகிலத்தை ஆட்கொள்ளும் நேரம்
புதிய பிறப்புக்கான  வெள்ளம்
அழகிய தோட்டங்களில் பாய்ச்சப்படும்
புதிய சொந்தம் பிறந்தால்
எங்கிருந்தோ வந்த  பாசம்
  மனதை  மீட்டும்
மொழி  பேச வழி  வந்த செல்வம்
வளரும் காலம்  விந்தை  மகிழ்வு.


செங்கவி
ம.ரமேஸ்
டென்மார்க்    

செவ்வாய், 12 மே, 2015

இங்கே  ஆண்கள்  இப்போ  தனியாக  வாழவே விரும்புகின்றார்கள்  எனது நண்பர்  பெரும்  உழைப்பாளி  தனியாகவே  வாழ்கின்றார்  - நான்  கேட்டேன் நீங்கள்  திருமணம் செய்யலாமே
ஒரு பெண்ணை  என்று.   அதற்கு  அவர்  -  ஏன்  நான் நிம்மதியா  இருப்பது  உங்களுக்கு  பிடிக்கவில்லையா  என்றார் - பதிலுக்கு  நான் அப்போ  பெண்ணுடன்  வாழ்பவர்கள்  எல்லோரும்
நிம்மதி இழந்தா  வாழ்கின்றார்கள்  என்றேன்.   ஒரு அலட்சியச்  சிரிப்பு விடையாகக்   கிட்டியது.
 
வாய்  நீளம்   எங்கும்  அதிகரிப்பே  - லேடீஸ் வாயிலருந்து ஓவரா  வார்த்தைகள் வரப்படாது
என்பார்  எம் ஆர்  ராதா,   ஆனால்  அவர் பெண்களுக்காக அவர்கள் முன்னேற்றத்துக்காக  என்றும்
ஆதரவாக  என்போல்  குரல் கொடுத்தவர்  - சிங்கப்பூர்  பெண்டாட்டியானாலும்  சரி  ஜேர்மன்  பெண்டாட்டியானாலும்  சரி,    பெண்டாட்டி என்று  வந்துட்டா  அவளுகள்  வாயை
கட்டவே முடியாது  என்பார்,  நாய்  வாயைக் கட்டிய மந்திரவாதி கவுண்டமணி (படம் : ஊருவிட்டு ஊருவந்து) - அனுபவாயில்களாக வந்த  வசனங்கள்  - சில  பெண்களின்  வாயால்  தற்கொலை  செய்த  ஆண்களை    அறிவேன் -மரியாதையின்றி  வார்த்தைகள்  நச்செரிப்புகள்  அசுத்தம் - சற்று
நட்புடன்  பழகினால்  எல்லை மீறும் வாயாடித்தனம்  / சக மாணவியின் வாயாடித்தன   அலட்டல் பொறுக்க முடியாது கன்னத்தில்  அறைந்தான்  எனது  சக  மாணவ  நண்பன்.  அன்றிலிருந்து  அப்பெண்  நல்ல திருத்தம் .

அண்மையில்  ஜெர்மனியில்  கண்டேன்  அப்பெண்ணை,   பழைய  நினைவை  எண்ணிக்கொண்டோம்
அன்று  அந்த  அடி  தன்னை  சிந்திக்க வைத்ததனால்  இன்று  நல்ல படி  கணவருடன்  வாழ்கின்றாராம் .
சிலருக்கு  சாம பேத தண்டம்  உதவுகின்றது -  எனக்கு  வன்முறை பிடிக்காது . பிடித்து  வெளியில்
விடுவது  சிந்திக்க  அடங்க  . "இனிய உளவாக இன்னாத  கூறல்  கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" 
 ஏராளம்    ஏராளம்

வில்லெடுத்து  அம்பெய்தி  விழுத்தியது  ஒன்று  அது தமிழ்

நல்ல சொல்  மறந்து  நம் தமிழர்  வாழ்வது  என் கொல் சொல்

லொள்ளு  ஆப்பு  மச்சி   என்றெல்லாம்  எழுதுகிறார் பேசுகிறார்

பண்பில்லை  நாகரிகமில்லை  வெறுமனே  நகைச்சுவையே வாழ்

பக்குவம்  நிறையா மண்டைகளுடன்  நானே  ராசா  ராணி நினைப்பு
எழுத்துப்பிழைகள்  நிறைய  தமிழென்றால்  அவ்வளவு  அலட்சியம்

நல்லபடி சொன்னால் நீர் என்ன பண்டிதரோ என்று கேள்வி கேட்கின்றார்
தம் நிலைக்கு வெட்கிப்பது  இல்லை  விசமக்கதைகள்  ஏராளம்  ஏராளம்

புதன், 25 மார்ச், 2015

சேரன் பிறந்தமலை செங்கொடி பறந்தமலை
பாருக்கு பாடம் சொன்ன மலை
பகுத்தறிவு தந்த மலை
வேலைப் பழிக்கும் விழியார் மலை
வீறு கொண்டே விற்கொடி பறந்த மலை
காருண்ட மேகங்கள் நீர் வடித்தே
கலையின்பம் தந்த மலை
கானகப் பொழுதினிலும் வானகம்
விழித்த மலை
வேதங்கள் பிறந்த மலை பிடி வாதங்கள்
கலைந்த மலை
ஞாலத்தில் உயர்ந்த மலை ஞாயிறு
சிரிக்கும் மலை
ஓரத்தில் நின்றே ஊர்க்குருவி உலக
அதிசயமோவென விழிக்கும் ஓவ மலை
தென்றல் வந்து ஓயும் மலை தென்மலைக் குமரிகள் ஆடும் மலை
பண்டைத் தமிழின் பண்பாட்டு மலை
இன்றைக்கும் மலையான மலை எழில் காட்டி பூம் பொழில்
சுவைக்கும் எங்கள் தமிழ் மலை
நர்த்தனமே நாதன் வேலை
அவன் நடனம் அவனி ஆட்டம்
எத்தனை இடர்கள் வரினும்
நமச்சிவாயன் பேர் சொல்ல பறக்கும்
கர்த்தரிலும் புத்தரிலும் காலம் வாழும்
கர்த்தர் கண்களிலே ஞானஒளி வீசும்
காரிருள் சோதனைகள் வேதனைகள்
கர்த்தர் கருணையினால் நன்றே தீரும்
நேரம் நல்ல நேரம் நேசம் மிகுந்த வாசம்
பாசம் கொண்ட மனிதர் நெஞ்சம் யேசுநாதர் வாழும் இல்லம் அங்கு பரமனும் தஞ்சம்
மாலை நல்ல வேளை அன்னை மரியாளை நினை வாழ்வில், கார்காலம்
எங்கு வரினும் நம் காளி மாதா காப்பாள்
இங்கு நெல்லின்றி ஏது ஓட்டம்


பொய் வடியாக் காடு
மெய் முட்டும் முகடு
எவ்வுயிர்க்கும் இனிய வீடு
கையும் காலும் சுழலும் ஏடு
பச்சையாடை கட்டிய பூமா தேவி
அவள் பிரசவத்தில் பொன் நெற் குழவி
அச்சிலா உலகிழுக்கும் வண்டி
அதில் எல்லோர்க்குமுண்டு பயணம்
பால் பேதம் போற்றாள்
எல்லோர்க்கும் பசியாறக் கொடுப்பாள்
தாழ்ப்பாள் இல்லாத தங்கச் சுரங்கம்
தரணிக்கு நீயன்றில் ஏது அரங்கம்
ஆதவன் உனைக் கண்டு மகிழ
அதனால் உண்டானதோ வெளிச்சம்
முதுகு வளையுமளவு சுளகு நிறைப்பாய்
கலப்படம் இல்லாத கொடுப்பனவு
கவலையில்லாத வாழ்வு
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
இங்கு நெல்லின்றி ஏது ஓட்டம்


செங்கவி
ம.ரமேஸ்
டென்மார்க் 

செவ்வாய், 10 மார்ச், 2015



ஆசிரியர்: எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டோர்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பக்கங்கள்: 215, ஆண்டு: 2004, விலை: ரூ 70. அண்மையில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் பேசினார். பேசும் போது கால்டுவெல் தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்று குறைபட்டுக் கொண்டதாக சொன்னார். பல நேரங்களில் நமக்கு இந்த விஷயம் சொல்லப்படுகிறது. ‘இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது.’ பெரும்பாலும் நாம் இதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் கொஞ்சமும் இந்த விஷயத்தை சிந்தித்து பார்ப்பது கிடையாது. உண்மையிலேயே நமக்கு வரலாற்று உணர்வு கிடையாதா? முரணான உண்மை, வடிவேலுவின் பிரபல திரைப்பட நகைச்சுவை போன்றது – வரலாற்று உணர்வு உண்டு; ஆனால் கிடையாது. வரலாற்று உணர்வு என்றால் என்ன என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய பார்வையில் எது வரலாற்று உணர்வோ, அதுதான் உண்மையில் ’வரலாற்று உணர்வு’ என்று கடந்த இருநூறு முன்னூறு ஆண்டுகளாக நமக்குக் கூறப்பட்டு வருகிறது. அதிகாரம் சார்ந்த மைய வரலாற்று ஓட்டமாக அது ஆரம்பித்தது. பேரரசர்களாலும் பெரும் சாம்ராஜ்ஜியங்களினாலும் ஆனது. வின்ஸெண்ட் ஸ்மித் போன்ற காலனிய வரலாற்றாசிரியர்கள் அத்தகைய ஒரு வரலாற்றினை முன்வைத்தார்கள். மேற்கூறிய காலனிய சாம்ராஜ்ஜிய மையப் பார்வை வரலாற்றுடன் மற்றொரு வரலாற்றுப் பார்வையை இணைத்து மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்றவர்கள் முன்வைத்தனர். இது இனமைய வரலாற்றுப் பார்வை. சாம்ராஜ்ஜியவாத காலனியமும், மதமாற்ற நோக்கங்களும் இணைந்து முன்வைத்த இந்த வரலாற்றுப் பார்வைகளில், இந்திய வரலாறு என்பது (படையெடுத்த அன்னிய) ஆரிய – (தோற்கடிக்கப்பட்ட பூர்விக) திராவிட இனங்களின் போராட்ட வரலாறாகவே முன்வைக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து தொடர் படையெடுப்புகள் மூலமாக தோற்கடிக்கப்பட்ட இந்தியா. இந்தியாவின் தலைவிதியே அன்னியர்களிடம் தோற்றுக்கொண்டே இருப்பதுதான். இதில் இறுதியாக வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு ஒரு நல்ல சமூக மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ’எனவே, மக்களே ஆங்கிலேயரிடம் விசுவாசமாக இருங்கள். ஆங்கிலேயப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலேயர்கள் அளிக்கும் பார்வையில் உங்கள் வரலாற்றைப் பாருங்கள். ஏனென்றால் உஙகள் வரலாறு புராண சுமைகளால் கழிவுகளால் குழம்பியிருக்கிறது. அதிலிருந்து வரலாற்றைப் பிரித்தெடுக்க ஆங்கிலேய பண்பாட்டு முதிர்ச்சி தேவைப்படுகிறது’. தேவர்களும் அசுரர்களும் இனங்கள் ஆனார்கள். எல்லாம் இன மோதல்களின் அடிப்படையில் சிந்திக்கப் பட்டது. இல்லாத வரலாறு உருவாக்கப் பட்டது. இந்த வரலாற்றைக் குறித்த அறிவே இந்தியர்களுக்கு இல்லையே! வரலாற்று அறிவு இல்லாதவர்கள் இந்தியர்கள்! சொந்த வரலாறு தெரியாதவர்கள் தமிழர்கள்! அடுத்து வந்தவர்கள் மார்க்சியர்கள். இவர்களும் சமூகப் பிளவுகளையே சமூக வரலாற்றைக் காணும் சட்டகமாக முன்வைத்தார்கள். சமூக உறவுகள், உற்பத்தி உறவுகளால் தீர்மானிக்கப்படும் மோதல் போக்கு கொண்டு, அவற்றின் மூலம் மட்டுமே முன்னகரும் சமுதாய வரலாறு. மார்க்சிய பொன்னுலகு வரும் வரை அதிகார சக்திகளினால் மட்டுமே வரலாறும் பண்பாடும் உருவாக்கப்படும். மக்கள் பண்பாடோ அடக்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும். இந்தப் பார்வையிலும், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு கிடையாது என்றும், அதை அறிவுஜீவிகள் உருவாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. காலனிய வரலாற்றுப் பார்வைக்கும் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வைக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. இந்திய மக்கள் வரலாற்றுணர்வு இல்லாதவர்கள் என்றும், அவர்களின் பண்டைய வரலாற்றை உருவாக்கும் அதிகாரம் ஒரு சில அறிவுஜீவிகளுக்கு, அவர்களின் மார்க்சிய சித்தாந்த்தத்தால் அல்லது மேற்கத்திய பண்பாட்டு அறிவால், கையளிக்கப் பட்டுள்ளது – என இந்த இரண்டு பார்வைகளும் நம்புகின்றன. ஆனால், மூன்றாவது பார்வை ஒன்று உள்ளது. அப்பார்வை இந்திய வரலாறு முழுமைத் தன்மையுடனும், குவித்தன்மையற்ற முறையிலும் எழுதப்பட்டு வந்துள்ளது என்று கருதுகிறது. செப்பேடுகள், நாட்டுப்புறப் பாடல்கள், கல்வெட்டுக்கள், சடங்கு முறைகள், தல புராணங்கள் என இவை அனைத்திலுமாக, இந்தியப் பண்பாட்டுப் புலத்தில் வரலாற்று நினைவு தலைமுறை தலமுறையாக பாதுகாக்கப்பட்டும் சேகரிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டு காலனியப் பார்வை நம்மை அந்த வரலாற்றுச் சேகரிப்பிலிருந்து வெகுவாக வெட்டிவிட்டது. இன்றைய வரலாற்று ஆய்வாளன் இந்திய வரலாற்றைப் பார்க்கும் பார்வை ஒரு அன்னியனின் பார்வை. சுவிட்சர்லாந்தையோ அல்லது டென்மார்க்கையோ சேர்ந்த ஒரு அன்னியநாட்டு மாணவன் இந்திய கிராமப் புறத்துக்கு வருகிறான என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் எப்படி அந்த கிராமத்தின் வரலாற்றை அணுகுவானோ அதற்கும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறோ சமூகவியலோ படித்த ஒரு ஆராய்ச்சி மாணவன் இக்கிராமத்தின் வரலாற்றை அல்லது பண்பாட்டை அணுகுவதற்கும், எவ்வித வேறுபாடும் இருக்காது என்றே கருத வேண்டியுள்ளது. ஒருவேளை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவனிடம் ஒரு அதிகப்படி சுமையாக மார்க்சிய சித்தாந்த பார்வையும் சேர்ந்து இருக்கலாம்! cover_srமூன்றாவது பார்வை மூலம் இந்த அன்னியப் படுத்துதலிலிருந்து மீண்டு வந்து, இந்திய வரலாற்றை அதன் குவித்தன்மையற்ற மூலங்களிலிருந்து நாம் உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டும் ஒரு முயற்சியாக, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரனின் ’வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’ என்னும் இந்த நூலைச் சொல்ல வேண்டும். வலங்கை மாலை ஒரு வில்லுப்பாட்டு நூல். சான்றார் (நாடார்) சமுதாயத்தின் வலங்கை உய்யக்கொண்டார்கள் பிரிவின் தோற்றம் முதல், வரலாற்றுக்காலங்களில் இச்சமுதாயத்தின் வளர்ச்சி, எழுச்சி, மறு எழுச்சி என அனைத்தையும் கதைப் பாடல்களாக்கி, சான்றார் சமுதாய குல தெய்வ, குடும்ப ஊர்க் கோயில் திருவிழாக்களில் இதைப் பாடுவது இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை நிலவியுள்ளது. இப்பாடலின் வரலாற்றையும், அதனுடன் இப்பாடல் கூறும் தொன்மக் கதையில் குறியீட்டுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் வரலாற்றுத் தரவுகளையும் ராமச்சந்திரன் விவரிக்கிறார். காலப் பயணம் என்று சொல்லத்தக்க விறுவிறுப்புடன் இது நிகழ்கிறது! உதாரணமாக, வித்யாதர மகரிஷி நாக கன்னியரை மண்ந்த்தால் உருவான சந்ததிகள் சான்றோர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவள் பத்திரகாளி. வித்யாதரர் என்பதை வானவர் என்பதுடனும், இப்பதம் தமிழக மன்னர்குல பெயராகவும் பயன்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டுகிறார். இன்றைய அறிதல்கள் அல்லது பெருமிதக் கற்பிதங்களைக் கொண்டு நம் பழைய வரலாற்றினை மீட்டெடுக்க முயல்வது பல அபத்தங்களை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, ‘நான்காவது வர்ணம்’, ‘சூத்திரர்’ என்கிற பதங்கள் கீழ்மையானவை என்கிற எண்ணம், நம் பொதுபுத்தியிலும், நமது அறிவுலக பொதுபுத்தியிலும் நன்றாக பதித்திந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் யதார்த்த தரவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன. உதாரணமாக, வேங்கி அரசு ‘சதுர்த்தான்வயர்’ அல்லது சூத்திர குலத்தவராகத் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்ட வெலநாண்டி அரசர்கள் வசம் சென்றதையும், அவர்களுக்கு “சோடர்” என்ற பட்ட பெயர் இருந்ததையும் ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார். காகதீய அரசர்களும், அரவீடு ரெட்டிய அரசர்களும் தம்மை சூத்திர குலத்தவர் என்றே பெருமையுடன் கூறிக்கொண்டனர். க்ஷத்திரிய சமுதாய வெளிக்குள் குடியானவர் குலங்கள் நுழைந்த இந்த நிகழ்ச்சி, க்ஷத்திரிய முறைப்படி பூணூல் அணிந்து வேதம் பயின்றனவாக கலிங்கத்துப்பரணி குறிப்பிடும் முதல் குலோத்துங்க சோழனது ஆதரவில் தான் அதன் முழுமையான முனைப்பை எய்திற்று என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் ராமச்சந்திரன் (பக். 65-66). சோழப்பேரரசின் வீழ்ச்சி, இஸ்லாமியப் படையெடுப்பை எதிர் கொள்ள தமிழ் மக்களை திரட்ட வேண்டிய அவசியம் இவற்றால் பல சமூக மாற்றங்களைத் தமிழ்நாடு எதிர்கொண்டது. “கிபி 12-13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியா முழுமையுமே இஸ்லாமிய ஊழி வெள்ளத்தில் சிக்கித் தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தி, தென்னிந்தியாவிலும் இந்த வெள்ளம் பரவவிடாமல் தடுக்கின்ற ஒரு ஜனநாயகக் கூட்டணியே, சம்புவரையர், வாணர் மற்றும் ஹொய்சளர் கூட்டணியாகும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார் (பக். 68). இந்த சமுதாய அலை மோதல்கள் சான்றோர் சமுதாயத்தின் சமூகவெளியைப் பாதித்தன என்று சொல்லும் ராமச்சந்திரன், நாடார் சமுதாயத்தினரின் பாரம்பரிய அரச குலத்தன்மைக்கு வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இருந்தமையை பல தரவுகளின் மூலம் காட்டுகிறார்: அரசகுலம் என்பது போர்த்தொழிலையும் குடிகாவலையும் (’பிரஜானாம் பரிபாலனம்’) தன் பரம்பரை உரிமையாகக் கொண்ட குலம் … தமிழகச் சான்றார் குலத்தில் பேரறமுடையார், அடக்கமுடையார் என்ற இரு பிரிவுகள் உள்ளன என்று கொங்கு நாட்டுத் திருமுருகன் பூண்டிச் சான்றார் மடத்துப் பட்டயம் குறிப்பிடுகிறது. பேரறமுடையார் என்ற பிரிவில் சேனாதிபதி என்ற வடசொல்லின் பிரிவாகிய ஏனாதி, பணிக்கன், எழுநூற்றுவர், வலங்கை உய்யக் கொண்டார் போன்ற பிரிவுகள் இருந்தன என கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. … வலங்கை உய்யக் கொண்டார் என்ற பிரிவினர் ’வலங்கை உய்யக் கொண்ட வாள்வீரர்’ எனக் கிபி 17 ஆம் நூற்றாண்டு வில்லுப்பாட்டில் குறிப்பிடப்படுகின்றனர். சோழ அரச குலத்தொடர்புடைய போர் வீரர்களான இவர்கள், காளியைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். கிபி 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சேர்ந்த சிங்களாந்தகபுரம் (பெரம்பலூர் மாவட்டம், துறையூர் அருகிலுள்ள ஊர்) கல்வெட்டில் வலங்கை உய்ய கொண்டார் என்ற இப்போர் வீரரின் புராணச் சிறப்பு “ஸ்ரீ அமராவதிக்குத் தலைவர்” என்ற பட்டத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இக்குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்ற முசுகுந்த சோழன் கதையுடன் தொடர்புறுகின்றது. மகதை நாடாள்வான் எனப்பட்ட வானாதிராயனை ஒடுக்கி வணிகர்களுக்குப் பாதுகாப்பு அளித்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஐம்பொழில் பரமேசுவரியைக் குலதெய்வமாகக் கொண்ட ஐந்நூற்றுவர் என்ற வணிகப் பிரிவினர் வலங்கை உய்யக் கொண்டார்களுக்குப் பலவிதமான சிறப்புகள் செய்தார்கள் என்றும் தங்கள் தோளில் அவர்களை தூக்கிச் சுமந்தனர் என்றும் அதனால் வலங்கை உய்யக் கொண்டார்கள் செட்டி தோளேறும் பெருமாள் என்ற சிறப்பு பட்டம் பெற்றனர் என்றும் அறிகிறோம் (பக்.162-3) சான்றார் குலத்தவர் க்ஷத்திரிய போர்வீரர்களாக மட்டுமல்லாது, அந்த போர்க் கலைகளை சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் ஆசான்களாகவும், தோழர்களாகவும் இருந்தனர். ஒரு கலையில் ஒருவருக்கு ஆச்சாரியனாக இருக்கும் ஒருவர், மற்றொரு கலையில் அல்லது அறிவுத்துறையில் அன்னாருக்கு சீடராகவும் இருக்க முடியும். ராமச்சந்திரன் கூறுகிறார்: seppedu_copper_platesசேரநாட்டில் சான்றார் பிரிவினர் சேர வம்சத்தவராக இருந்தனர். சேரமான் பெருமாள் அரசர்கள் பனம்பூமாலையை அணிந்த அரசகுலத்தவர் ஆவர். கி.பி எட்டாம் நூற்றாண்டில் இராசசேகரன் என்ற மன்னன் சேரமான் பெருமாளாக இருக்கையில், காலடியில் ஆதிசங்கரர் பிறந்தார். இந்த இராசசேகரன் ”சௌகான்” (சோவன் என்ற ஈழச்சான்றார் பட்டத்தின் திரிபு) குலத்தவன் என்றும், ஆச்சார்யன் (களரி ஆசான்) என்றும், ஆதி சங்கராச்சாரியாரின் நெருங்கிய நண்பனாகவும், பின்னர் சீடனாகவும் இருந்தவன் என்றும், கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மாதவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்ட ”சங்கரவிஜயம்” என்ற சமஸ்கிருத நூல் தெரிவிக்கின்றது. இம்மன்னன் தொடக்கக்காலத்தில் ஆதி சங்கரருக்கு களரிப்பயிற்சியின் அல்லது அங்கக்கலையின் நுட்பங்களைக் கற்பித்தான் எனது நம்மால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஓர் உண்மையாகும். சான்றார் குல மடத்துப் பட்டயமான கருமாபுரம் செப்பேடு, சான்றார் குலத்து முன்னோர் ஒருவரைக் குறிப்பிடும் போது, ‘மன்னருக்கு மன்னராம் சங்கராச்சாரியாருகுக் தயவுடன் உபதேசம் தானருளிச் செய்தவன்’ என்று குறிப்பிடுகின்றது. இக்குறிப்பு இராசசேகரனையும் அம்மன்னன் கற்பித்த அங்கக்கலைப் பயிற்சியையுமே சுட்டுகிறது எனத் தெரிகிறது (பக்.164). இன்று ஹிந்து வீடுகளிலெல்லாம் கொண்டாடப்படும் நவராத்திரியும் ஆயுத பூஜையும், ஒருகாலத்தில் பாப்பார சான்றார் எனும் சான்றார் குலப்பிரிவினரின் குல உரிமையாக, ஆயுத பூஜை – காளி வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. அது கலைமகள் பூஜையாக இடைக்காலத்தில் மாறி, பின்னர் ஜனநாயக யுகத்தில் காலனிய எதிர்ப்புக் குரலுக்கும் அணி சேர்க்கும் விதமாகப் பரந்து விரிவானது என்று ஒரு கருத்தையும் முன்வைக்கிறார் ராமச்சந்திரன் (பக். 180-196). இறுதியாக சில கேள்விகள் எழலாம். இத்தகைய ஆராய்ச்சிகளால் என்ன பயன்? பழம்பெருமை, குலப்பெருமை, சாதிப்பெருமை பேசுவதுதானே இது? இந்தக் கட்டுரையில் முதலில் கூறியது போல, இந்திய வரலாறு என்பது குவித்தன்மையற்றது. அது அறிவுலக ஏ.சி. சுவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமல்ல. சனங்களுடன் சடங்குகள், கதைப்பாடல்கள், இறைத் தொன்மங்கள் மூலமாக பகிர்ந்து வளர்க்கப்பட்ட ஒரு கூட்டு நினைவாக விளங்குகிறது. indian_native_history_2நமது கல்வி அமைப்புகள் மேற்கத்திய அறிதல் முறையையும், மேற்கத்திய வரலாற்றாடலையும் மட்டுமே ஒரே அறிதல் முறையாகவும், ஒரே அறிவு சேகர முறையாகவும் முன்வைக்கின்றன. இதன் விளைவாக, காலனிய கதையாடல்கள் ’வரலாறு’ என்ற பெயரில், இனமோதல்களையும் குழு மோதல்களையும் உருவாக்குகின்றன. அன்னிய ஆயுத வியாபாரிகள் முதல் உள்ளூர் சாதி-அரசியல் பிரமுகர் வரை இந்த சமுதாயப் பிளவினால் லாபமடைகிறார். சமுதாயம் நஷ்டமடைகிறது. இந்தியாவின் வரலாற்றில், சாதி எனும் சமூக-தொழில் குழுமம் ஒவ்வொன்றுக்கும், சமூகப் பெருவெளியில் உயர்நிலைகளும் ஏற்பட்டுள்ளன; தாழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெருமித வரலாறு உள்ளது. அந்த வரலாறு அந்த சமூகக்குழுவின் தனி வரலாறு அல்ல. பிற சமுதாயக் குழுக்களுடனான உறவுகளுடன் இணைந்து பின்னப்பட்ட வரலாறு. இந்த உறவுகளை உள்ளடக்கிய கதையாடல்களை, இந்திய வரலாற்று மரபு சமரசப் புள்ளிகளின் மூலமாகவே பாவியுள்ளது. மோதல்கள் பெரும்பாலும் தொன்மக் குறியீடுகளாக மாற்றப்பட்டு வரலாற்றுக் கசப்புக்களை உருவாக்க விடாமலும், நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தவும் செய்துள்ளது. இன்றைய வரலாற்று மாணவன் இதையே பெரும் அடக்கத்துடன் இந்திய வரலாற்று மரபிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தெளிவான எடுத்துக்காட்டைக் காணலாம். அரசகுல சான்றார்களில், பேரறமுடையார் பிரிவில், எழுநூற்றுவர் என்கிற பிரிவு உள்ளது. இந்த ’எழுநூறு’ என்ற எண்ணிக்கை, சிங்கள நாட்டிற்கு 700 வீரர்களுடன் சென்று ஆட்சியைக் கைப்பற்றிய கலிங்க அரசன் விசயனின் தொடர்பைக் குறிக்கின்ற எண்ணிக்கையாக இருக்கலாம் என்கிறார் ராமச்சந்திரன் (பக்.163). அப்படி என்றால், சிங்களவரும் சரி, தமிழரும் சரி, இருவேறு இனத்தவரல்லர் என்றாகிறது. ஒருவரோடு ஒருவர் உறவுள்ள சமுதாயக்குழுக்கள். தாயாதிகள். ஆம், வரலாற்று மோதல்களும், இணக்க பிணக்கங்களும் இருந்திருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகள் ஒருவரையொருவர் கொன்றழிக்கும் இனவெறி வேறுபாடுகள் அல்ல. அப்படியானால், சிங்கள பேரினவாதிகளால் கொல்லப்பட்டும், திராவிடம் பேசி உசுப்பேத்திய தமிழக ’உடன்பிறப்புக்களால்’ முதுகில் குத்தப்பட்டும் ஈழத்தமிழர் சந்தித்துள்ள பேரழிவுக்கு எது காரணம்? மாக்ஸ்முல்லர்-கால்டுவெல் கும்பல்கள் வித்திட்டு, காலனியம் வளர்த்து, காலனியம் உருவாக்கிய ‘வரலாற்று இனவுணர்வே’ காரணம். காலனிய, மார்க்சிய வரலாற்று அறிஞர்களோ, இந்திய வரலாற்றினையும் இத்தகைய மோதல் போக்கு கொண்ட ஒரு போர்க்களமாக மாற்றவே முயற்சி செய்கின்றனர். ஒரு தந்திரமான சிறு குழு, அறிவற்ற பெருமந்தையை அடக்கியும், ஏமாற்றியும் வந்ததாகவே வரலாற்றைக் காணவும், சமைக்கவும் முற்படுகின்றனர். அதில் அவர்கள் பல நேரங்களில் பொய்யான கதையாடல்களை உருவாக்கவும் தயங்கவில்லை. இவர்களுக்கு இந்திய வரலாறு பதியப்பட்டு வளர்க்கப்பட்ட விதம் ஏமாற்றம் அளித்ததில் வியப்பில்லை. எனவேதான் காலனிய ‘வரலாற்றறிஞர்களும்’, அவர்களின் கூலிப்படை சந்ததிகளான உள்ளூர் மார்க்சிய அறிவுசீவிகளும், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவில்லை என்கிற அதே கதையை கூறிவருகின்றனர். s_ramachandran நடுவில் நிற்பவர்: எஸ்.ராமச்சந்திரன் (நன்றி: திண்ணை.காம்) உண்மையான வரலாற்றினைத் தம்முள் கொண்ட நம் தொன்மங்கள், நம் கதைப்பாடல்கள், நம் சடங்குகள் அவற்றைக் கற்றுத்தேர, அதன் மூலம் நம் வருங்காலத்தைச் சமைக்க நம்மை அழைக்கின்றன. ஆனால் அதற்குத் தேவை எளிய அரசியல் சூத்திரஙகள் அல்ல. கடும் உழைப்பும் தெளிந்த அறிவும். இந்த உழைப்புக்கும் அறிவுக்குமான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ‘வலங்கைமாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்’. வரலாற்று, சமூகவியல் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பண்பாட்டு மீட்டெடுப்பில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் முக்கியமாகப் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது. - See more at: http://www.noolulagam.com/2011/09/12/2305/#sthash.TVUNMggj.dpuf

திங்கள், 9 மார்ச், 2015

சிறிய கூடுகளுக்குள் வாழும் பெரிய எண்ணங்கள் - பறவைகள் .
பெரிய கூடுகளுக்குள் வாழும்  சிறிய  மதிகொண்டோராய் - மனிதர்கள் .
கருத்தியல் வாதம் , பொருளியல் வாதம்  இரண்டும் அறிந்தும் அறியாமலும்
காலம் ஓட்டும்  கல்வி மான்கள், தனி  மனித விழுமியங்கள் , சமூக  விழுமியங்கள்
எதற்கு  என்ன சொன்னாலும்,  அதற்கு  பதில் வைத்திருப்பார்கள்,  செயலில்  c o க்கள். 
செய்பவன் மீது ஐயம்  காரணம் அனுபவம்  - பின் என்ன தான்  செய்ய  கண்ணீர் துடைக்க ?
கவிதையும், கட்டுரையும்,  ஏனையவையும் எழுதி  சபாஸ் கேட்டுவிட்டு  நாளும்
காய்ச்சி  உண்டு கொழுத்து  வாழ்ந்து  சாக  வேண்டியதுதானா?????????

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015


தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லை
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லை


திருடித்தான்  களவாடித்தான்   கொள்ளையடித்துத்தான்
வாழ்வது என்று முடிவெடுத்தவர்களை எந்த சட்டமும் ஒன்றும்  செய்ய  முடியாது.


என்ன அதிசயம்   அல்லது கேவலம் -  நாட்டின்  சொத்தை கொள்ளை அடித்தார் என்று 
சட்டம் தண்டிக்கின்றது அவருக்கு  சிறப்பான கவனிப்புகளுடன் கூடிய  சிறப்புச் சிறை
கொடுக்கப்படுகின்றது . இதுதான்  சம நீதியா - கொழுத்த செல்வத்தில்  இருந்து கொண்டு
மேலும் மேலும்  ஆசைப்பட்டு  மக்களுக்கு செல்ல வேண்டிய  பணத்தை  தாமே  அறிவு பூர்வமாக
கொள்ளையடித்து  நாட்டில் பெரிய புள்ளிகளாக  நடமாடி  கொள்ளைக்காரர்களாக  இருக்கும்
வல்லமை கொண்ட கொள்ளையர்களுக்கே   கடுமையான   தண்டனை  கொடுத்து  வாட்ட வேண்டும்.
அங்ஙனம் செய்தாலே பின்னால்  வரும்  ஒரு  அரசியலாளன்  பயந்து மக்கள் சொத்தில் கை வைக்காது இருப்பான் .  இன்று என்ன  நாட்டில்  நடக்கின்றது ?  அரசியலாளர்கள்   கொள்ளை அடித்தால் வசதியான கவனிப்புகள்   கிடைக்கும் நிலையென்றால்   இனி   எவர்தான் ஒழுக்கமாக  அரசியலில் இருப்பார்கள்? இதற்கு   ஏன்   சட்டம்?   சிறை ?   மருந்து வாங்க , பசி  வேதனை   என்று  ஒரு ஏழை  எங்காவது  திருடினால்   அடி உதை  இன்னோரன்ன  கொடுமைகள் அந்த ஏழைக்கு   . 


குற்றவாளியான  முன்னாள் அரசியலாளருக்கு  நாட்டின்  பிரதமர்  வாழ்த்து செய்தி சொல்கின்றார் என்றால்  ஒவ்வொரு குடிமகன் மனதிலும்  என்ன எண்ணம்  ஓடும் . அரசியலில் இருந்து கொண்டு கொள்ளை அடிக்கலாம்  ஒன்றும் வெட்கமில்லை என்றே  கருத்துக்கொள்வான் - ச்சீ  வெட்கம்.
 

வீதி  விடுப்பு




நான்  நூல் நிலையத்திலிருந்து கண்ணாடியினூடாக  வீதியில் அமைந்திருக்கும்  அந்த  கொசோவோ நாட்டு மனிதரின்  கடையை பார்க்கின்றேன் . அதிகமாக முஸ்லீம்களே  அங்கு வந்து வட்ட வட்ட  ரொட்டிகளை  (சப்பாத்திபோன்றது )  அள்ளிக்கொண்டு போகின்றார்கள் ,  பழங்களையும் தாராளமாக  வாங்கிக்கொண்டு செல்வது அவர்களின் பைகளுக்குள்  தெரிகின்றது.   இது நாளும் நான்  நூல்நிலையத்திலிருந்து காணும் காட்சி.  தெருவின்  நடை பாதையில்  மரக்கறிகள் , பழங்கள்  அழகாக பெட்டிகளில் வைத்திருக்கின்றார் அந்த இனிய மனிதர் .  உள்ளே முஸ்லீம்களின் மார்க்கப்படியான  பாவம்  நீக்கப்பட்ட   இறைச்சிகள் (கலால் )  விற்பனையில் இருக்கின்றது.  அந்த கொசவோ மனிதரும் மனைவியும் பிள்ளைகளும்  ஓடியோடி உள்ளே உழைக்கும் காட்சி  பார்க்க அழகாக இருக்கும் .
ஆனால்  எங்கள்  செல்வங்கள் (தமிழர்கள்)  யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.
நான்  நூல் நிலையத்திலிருந்து கண்ணாடியினூடாக  வீதியில் அமைந்திருக்கும்  அந்த  கொசோவோ நாட்டு மனிதரின்  கடையை பார்க்கின்றேன் . அதிகமாக முஸ்லீம்களே  அங்கு வந்து வட்ட வட்ட  ரொட்டிகளை  (சப்பாத்திபோன்றது )  அள்ளிக்கொண்டு போகின்றார்கள் ,  பழங்களையும் தாராளமாக  வாங்கிக்கொண்டு செல்வது அவர்களின் பைகளுக்குள்  தெரிகின்றது.   இது நாளும் நான்  நூல்நிலையத்திலிருந்து காணும் காட்சி.  தெருவின்  நடை பாதையில்  மரக்கறிகள் , பழங்கள்  அழகாக பெட்டிகளில் வைத்திருக்கின்றார் அந்த இனிய மனிதர் .  உள்ளே முஸ்லீம்களின் மார்க்கப்படியான  பாவம்  நீக்கப்பட்ட   இறைச்சிகள் (கலால் )  விற்பனையில் இருக்கின்றது.  அந்த கொசவோ மனிதரும் மனைவியும் பிள்ளைகளும்  ஓடியோடி உள்ளே உழைக்கும் காட்சி  பார்க்க அழகாக இருக்கும் .
ஆனால்  எங்கள்  செல்வங்கள் (தமிழர்கள்)  யாரும் வந்து போவதாக இதுவரை காண வில்லை.
போரென்றால்  மக்கள் சாவார்கள் தானே  என்று தமிழர்கள் சாவை ஆமோதித்தவளை   தலைமேல் தூக்கிக்  கொண்டாடி, அவள்  கொள்ளையடித்தாள் , என்று  குற்றம் சாட்டப்பட்டு  சிறைக்குப்  போனதற்கு  193 தமிழர்கள்  அவளுக்காக  சோகம் தாழாது  தற்கொலை செய்ததும் இந்த  பிரபஞ்சத்துக்குள்ளே  நடந்த வெட்கம்  மிகு துயரம் வேடிக்கை ,  அது மட்டுமா   மோடி அவளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுகின்றார்,   யாரின் பிறந்தநாள்!! மக்கள்  சொத்தை கொள்ளையடித்து கொட நாட்டில்  அரண்மனை கட்டி வைத்திருக்கும்  முன்னாள் ஆட்டக்காரிக்கு  இந்நாள் குற்றவாளிக்கு
நாட்டின் பிரதமர் வாழ்த்து சொல்லும் பக்குவத்தில்  அரசியலும்   தலைகளும்  நகர்கின்றன . மானஹ்த்துக்கும் மரியாதைக்கும் பண்புக்கும் அறத்துக்கும்   உயிர்வாழ அனுமதி கேட்க வேண்டிய நிலையில் உலக நடப்புகள் ,  கடவுள் பெயரால்  மனித  கழுத்துக்களை  அங்காலே  வெட்டுகிறான்
கைதி என்று பிடித்த  வெள்ளையர்களின்  கழுத்தை ஒரு கும்பல் தண்டனை என்று  அறுக்கின்றது .
வன்னியிலே மக்கள் சோற்றுக்கு அவதிப்படுகின்றார்கள் அனுப்ப கொஞ்சம்   காசு தாங்கோ என்றால் என் தமிழன்   குண்டியை காட்டுகின்றான் ,  முந்தநாள்  எனது நகரில் உள்ள  செல்வங்களிடம்   உதவி செய்யுங்கள் என்று கோரியிருந்தேன்  இந்நேரம் வரை  ஒருவர் கூட  அழைக்க வில்லை  உதவி செய்ய.
ஏறத்தாழ 250 பேர்கள்  வாழும் நகரம் ,  இதுவே  வருகிற சனிக்கிழமை  பிறந்தநாள் விழா   அல்லது திரைப்படம்  என்றால்   கேள்விகள் கேட்டு ஆடைகள் வாங்க ஆயிரங்களில் செலவு  நடந்துகொண்டிருக்கும் ,  ஆதரவில்லார்க்கு ஆதரவளிக்க  ஒரு பிட்சா  வாங்கும்  60 குறோண்  தர
எண்ணார்   நம் தமிழ் உறவுகள்.  இவர்களுக்குள்   சிரித்துப் பேசி  வாழ வேண்டும்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

கவியரசின்  வடிப்பில்


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

புதன், 25 பிப்ரவரி, 2015

வணக்கம்  நண்பர்களே.


இதனால்  ஊரிலே  (வன்னி)  பசியின் கொடுமை தாங்க முடியாது  பெருந்துன்பம் அனுபவித்து இறுதியில்  விபச்சாரம் செய்யும் நிலைக்கு செல்ல விருந்த பெண்ணை  ஒருவாறு மீட்டிருக்கின்றோம்.
அப்பெண்ணுக்கு நிரந்தர  தொழில் ஒன்றை  கொடுத்து அவருக்கான எதிர்கால  வாழ்வை அவரே
சொந்தமாகப்   பார்க்கும் நிலைக்கு கைதூக்கி விட்டு  உதவ வேண்டியது எமது பொறுப்பாகின்றது
போரில்  வீசப்பட்ட குண்டில் கணவனையும் மூன்று பிள்ளைகளையும் இழந்து  இன்று ஒரு கைக்குழந்தையுடன்  தவிக்கின்றார் .  ஆதலினால் உங்களால் முடிந்த  பொருள் தந்து  உதவும் படி  அன்புடன் வேண்டுகின்றேன் .


எனது தொலை பேசி  -
52699910


நெட்  பாங்க் 


Ramesh  Manivasagam
sydbank


reg - 7051


kontonr - 0001073960



செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அடி - தொடர்  7

நேராக  அதிபர்  அறைக்குள் சென்ற முத்தர்  கடுங் கோபத்துடன் கேட்டார்,   நாதன் வாத்தியோட  பேசவேணும் .

அதிபர்  - ஐயா கொஞ்சம் மரியாதையா  பேசவேணும் நீங்கள். 

முத்தர்-   மரியாதை எங்கை ஆருக்கு  எப்பிடி குடுக்கிறதெண்டு  எனக்குத் தெரியும்.   வாத்தியை  கூப்பிடுங்கோ ,  பிள்ளையளை  நாலு  விசயம் படிக்கச்  சொல்லி   உங்களிட்டை  அனுப்பினா
அடிக்கிறது உதைக்கிறது  கண்ட மாதிரி திட்டுறது பேசுறது,  இதுதான்  உங்களுக்கு தெரிஞ்ச  மரியதையாக்கும் -பின்னை  என்ன  நீங்களே சொல்லுங்கோவன் என்று அதிபரைப்  பார்த்து கடுப்புடன்
கேட்டார் முத்தர்  .

அதிபர் - எல்லாம் கேள்விப்பட்டனான்  ,  பிழைதான்,  ஐயா  இனிமேல்  அப்படி  நடக்காது பார்த்துக்கொள்ளுறன்  என்று அதிபர்  சமாதானம் சொல்லவும்,  நாதன் ஆசிரியரை  அழைத்துவர  அனுப்பிய  மாணவன்  அவரை அழைத்து வந்து விட்டு தனது வகுப்புக்கு செல்ல,  இவர்தானே
என்று  கேட்ட முத்தர்  புலிபோல்  பாய்ந்து  நாதனை  தாக்கி  கீழே  விழுத்தி விட்டு  சில தூசண
வார்த்தைகளையும்  பரவி விட்டு  இரத்தம்  ஏறிய   சிவப்புக்கண்ணுடன்  பாடசாலையை விட்டு  மின்னலாக  வெளியேறினார் --  படிப்பிக்கிறாங்களாம்    பாடம்,  முதல்ல  வாத்தியளுக்கு  சரியா
படிப்பிக்க வேணும்  என்று  புறு  புறுத்தபடி  முத்தர்  தவறணை  நோக்கி  நடந்தார்,  குளிர்ந்த கள்ளால்  ஆத்திரத்தை  அணைக்க------

தொடரும் -------

திங்கள், 23 பிப்ரவரி, 2015

யாழ் இந்துக்கள் (பிராமணர் தவிர்ந்த)  மச்சம் சாப்பிடுபவர்கள் என்பதால்  இந்திய இந்துக்கள்  (பிராமணர்கள்)  ஈழ இந்துக்களை  இந்துக்களாக  மதிப்பதில்லையென,   மிக நல்ல  இருநாட்டு
சமூக  உறவுகளை  ஆராய்ந்த  அறிஞர்  ஒருவர் கூற கேள்வியுற்றேன் .  கோப்பன்ஹாகன் அகதிகள் முகாமில் இருந்த உத்தரப்பிரதேசத்து இந்திய  பிராமணர் ஒருவர்  மாட்டு மாமிசம் உண்டது கண்டிருக்கிறேன்  அவர்  சகல  மாமிசமும் உண்டார் .  அதுபோல்  யாழ் குருக்கள் ஒருவர்  கோழி  சாப்பிட்டதை  ஜெர்மன் அகதிகள்   முகாமில் கண்டேன் . பாகிஸ்தானின் தந்தை  என்றழைக்கப்படும் ஜின்னா   பன்றி இறைச்சியை மிகவும் விரும்பி  உண்பவர் என்று,  தமிழருவி மணியன் ஐயா பேச்சில் கேட்டிருக்கின்றேன் . இங்கு என்னுடன் வேலை செய்த  ஈரானியர்  பன்றி இறைச்சியை  சாப்பிட்டது  கண்டிருக்கின்றேன்.  வேறும் சில  ஈரானியர்கள் (இசுலாத்தில் பற்றில்லாதவர்கள்) முன்பு பன்றிமாமிசத்திலாலான சிப்சுகள்   உண்டதைக் கண்டிருக்கின்றேன் . ஆக  எல்லாம் நமது மனமே . மாடு தின்பவன் நாடுகளுக்கே (ஐரோப்பா, அமேரிக்கா) தொழில் செய்ய ஆசைப்பட்டு  இந்திய  பிராமணர்கள்  படையெடுக்கின்றார்கள்  நாளும் . சமயம் சொல்லி  மக்களின்  உணவு விருப்புகளை  எவரும்  தடுத்தல் ஏற்புடையதல்ல - அவனவன் வாங்கும் இறைச்சி அவனவன்  வீட்டு அடுப்புக்குள்ளே . அன்று யாகங்களுக்குள்  போட்ட  குதிரை  ஏனை  மிருகங்கள்  யாவும்  பிராமணர்களால்  உண்ணப்பட்டதாக புராணம்  சொல்வதாக  அறிஞர்கள்  கூறுகின்றார்களே ,  குசேலர்  அவலுடன்  செல்கையில்  கிருஷ்ணன் ஆமை வடை உண்டுகொண்டு  இருந்ததாக  சுலோகம்  சொல்வதாக  கதாப்பிரசங்கம்  செய்த பிராமணப் பெண்ணே  ஒத்துக்கொண்டு  கூறியதைக் கேட்டிருக்கின்றேன்.   பாகிஸ்தானில் மற்றைய முஸ்லீம் நாடுகளில் வாழும்  முஸ்லீம் அல்லாத பிற மதத்தவர்கள் ரமழான் காலத்தில்  சிரமப்படுகின்றார்கள்,   உணவு  விடுதிகள் திறப்பதில்லை   மற்று மத மக்கள்  உணவு உண்பதை முஸ்லீம்கள்  ஏற்பதுமில்லை அக்காலத்தில்.  இதுவும்  முஸ்லீம் நண்பர்களிடமிருந்து  தெரிந்து கொண்ட உண்மை,  அவ்வகையில்  அதுவும் ஏற்க முடியாது.   ஆக  எங்கு எங்கு பெரும் பான்மை இருக்கின்றதோ அங்கே அது வைப்பதே சட்டமாகின்றது.

 
சீகன் பால்க் நினைவு தினம் பிப்ரவரி 23, 1719
பிறந்த தினம் ஜூன் 20, 1682
நினைவு தினம் பிப்ரவரி 23, 1719
** இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே ஆகும்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.
1682 ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள புல்ஸ்னிட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.பெற்றோர் பர்த்தலோமேயு - கத்தரின் .இவருடைய தந்தை பர்த்தலோமேயு நவதானியங்களை விற்பனை செய்து வந்த வணிகர்.சீகன் பலவீனமான தேகத்தைக் கொண்டிருந்தார்.சீகன்பாலின் தாயார் பக்தி நிறைந்தவர்.இவரின் தாயார் மரணப்படுக்கையில் கூறி வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகனுக்குச் சிறுவயதாயிருக்கும் போதே தாயார் இறந்து போனார். தாயை இழந்த இரண்டே வருடத்தில் தந்தையையும் இறந்தார்.
சீகன்பால்க் ஆரம்பக் கல்வியை புல்ஸ்னிட்ஸ் மற்றும் காமென்ஸ் ஆகிய இடங்களில் உள்ள லத்தீன் பாடசாலைகளில் பயின்றார். இவர் 12ஆம் வயதில் கோயர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கல்வி கற்றார். பள்ளியின் பதிவேட்டில் இவரது பெயருக்கு அருகில் சரீரத்திலும், ஆன்மாவிலும் வளர்ச்சியடையாத மாணவன் (in body and soul an immature person) என எழுதப்பட்டிருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நற்செய்தி சார்பான மறைமெய்மை சார்ந்த (Evangelical Mysticism) வட்டத்துக்குள் அறிமுகமானார். இவர் திருமறையைத் தொடர்ந்து படித்ததினாலே மறைமெய்மைக் கொள்கையினால் முற்றிலும் இழுக்கப்படாமல் உணர்ச்சி வசப்படும் அனுபவத்துக்கும் வேதாகம அறிவுக்கும் சமநிலைத் தந்து இரண்டையும் தனக்கு முக்கியமானதாய் வைத்திருந்தார். நற்செய்தி சார்பான மரைமெய்மை (Mysticism) அனுபவம் இவரை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற உதவியது. இவருக்குள் ஓர் அற்புதம் நிகந்தது. இதன் விளைவாக இவரது வாழ்வில் அடிப்படை மாற்றம் தோன்றியது. இந்த மாற்றத்திற்கு பிறகு சாட்சி பகர உந்துதலும் மிஷனரி அருட்பணியில் ஆர்வமும் இவரில் எழுந்தது.
1702 ஆம் ஆண்டு சீகன்பால்க் பெர்லின் பட்டணத்தில் உயர்கல்விக்காகச் சேர்ந்தார்.உடல் நலம் சரி இல்லாததால் இவருக்கு 9 மாதங்கள் கல்வி தடைபட்டது. 1703 ஆம் ஆண்டு இறையியல் கல்விக்காக ஹலே சென்றார். அங்கும் இவர் அடிக்கடி
உடல் நலம் சரி இல்லாமல் இருந்தார்.அங்கு இவர் எபிரேய மொழியைக் கற்றார்.
சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய உடல் பலவீனத்தினால் இவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பணி அழைப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இருப்பினும் கடவுளின் விருப்பம் என்று எண்ணி அதை ஏற்றுக் கொண்டார். சீகன்பால்க் மற்றும் ஹென்ரிச் புளுட்ச்சோ (Henrich Pluetchau) ஆகிய இருவரும் லுத்தரன் சபை பேராயரால் அபிஷேகம் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது.மன்னர் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றனர்.
அப்போஸ்தலர் நடபடிகளின் நூலின் அடிப்படையில் ஓர் சிறப்பு செய்தியை மன்னரின் குடும்பத்திற்கு சீகன்பால்க் அளித்தார். அந்த நாள் முதல் அரச குடும்பத்துடன் மிகுந்த நட்பு ஏற்பட்டது. இவரது மரணம் வரை அந்த நட்பு தொடர்ந்தது.
1705ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதி இருவரும் மன்னர் சார்பில் அவருடைய செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பயணத்தின் போது, கப்பலில் இறந்தவர்களின் சடலங்களைக் கடலில் வீசியெறிவதையும், அலைகளாலும், புயல்களாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டதையும் நேரடியாகக் கண்டார சீகன்பால்க். தனது கடற்பயணத்தை மரணக் கல்விச் சாலை (Academy of death) என்று குறிப்பிட்டார். இவர் இந்தக் கடற்பயணத்தின் போது The General School of True Wisdom என்னும் புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் பின்னர் 1710 ஆண்டில் டென்மார்க் இளவரசி சோபியாவின் உதவியால் வெளியிடப்பட்டது.
இருவரும் ஏழு மாதக் கப்பல் பயணத்தில் 1706ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் இந்தியாவில் தமிழ்நாட்டின் கடற்பகுதியான தரங்கம்பாடியை வந்தடைந்தனர்.. தரங்கம்பாடிக்கு வர அனுமதியாமல் மூன்று நாட்கள் கப்பலில் தங்கும் நிர்பந்தத்தை ஆளுநர் ஏற்படுத்தினார்.அனைத்து சூழ்நிலைகளும் இவர்களுக்கு எதிராய் செயல்பட்டன. டென்மார்க் அரசனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் என்று மக்கள் இவர்களை சந்தேகிக்கப்பட்டனர்.இந்தியாவில் சீர்திருத்த திருச்சபை முதல் மிஷனரிகள் அனைத்து பிரச்சனைகளையும் துன்பங்களையும் சகித்தனர். பின்னர் அடிமைகளாக எண்ணப்பட இந்திய ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் சென்று தங்கினர்.
சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். முதலியப்பா என்ற இந்தியர் சீகனுக்கு உதவியாளரானார்.எல்லய்யா என்பவரிடம் தமிழ் கற்றார். சீகன் தன்னைச் சுற்றியிருந்த தொழிலாளர்களால் பேசப்படும் போர்ச்சுக்கீசையும், தமிழையும் கற்றார்.
தனது மொழிபெயர்ப்பாளரான அலப்பூ மூலம் 5,000 தமிழ் வார்த்தைகளைத் தெரிவு செய்து மனப்பாடம் செய்தார். கடற்கரை மணலில் விரலால் எழுதி தமிழ் எழுத்துக்களைப் பழகினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார்.
சீகன்பால்க் ஐரோப்பியர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்தயும் தமிழர்களுக்காக முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.
ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயத்தை ஏற்படுத்தினார்.
சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் இவர் வாங்கினார். பொறையாற்றில் காகிதத் தொழிற்சாலையை நிறுவினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார்.
சீகனின் மிஷனெரிப் பணிக்கு, கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஹாசியஸ் பெரிதும் இடையூறாகவே இருந்தார். இந்தியர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று ஹாசியஸ் கருதினார்.சீகனின் வீட்டிற்குள் நுழைந்து ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த இவரைக் கைது செய்தனர். கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு மாத சிறைவாசத்தில் இரண்டு ஜெர்மன் வீரர்கள் இவருக்கு உதவி செய்தனர் .இருவரும் ஜன்னல் வழியாக காகிதமும் பேனாவும் மையும் சீகனுக்குக் கொடுத்து உதவினர் .அங்கு ‘The God pleasing State of a Christian’, ‘The God pleasing Profession of Teaching’ என்னும் இரு சிறிய புத்தகங்களை இவர் எழுதினார்.
தமிழ்நாட்டு மக்கள் கிறிஸ்துவில் எப்போதும் நிலைத்திருக்க போதனைகள் மட்டும் போதாது, வேதமும் அவர்கள் கைகளில் அவர்களின் மொழியிலே கொடுக்கப்பட வேண்டும் என்று சீகன்பால்க் எண்ணினார். எனவே சீகன் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
மொழி இவருக்குப் புதிது.யாரும் வேதத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கவில்லை.வேதத்தில் பல வார்த்தைகளுக்குச் சரியான பதங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஸ்கிமிட்டின் (Schmidt) கிரேக்க புதிய ஏற்பாடு, லத்தீன் வல்கேட், மார்ட்டின் லூத்தரின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு முதலானவைகளை ஆதாரமாகக் கொண்டு, டேனிய, போர்ச்சுக்கீசிய வேதாகமங்களின் உதவியுடன் புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலையை 1711 மார்ச் 31இல் முடித்தார். இந்தியாவில் தமிழ் மொழியில்தான் முதலாவதாக வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவினார்.இதுவே இந்தியாவைன் முதல் அச்சுக்கூடம் ஆகும்.தமிழில் முதலில் அச்சிடப்பட்டது தம்பிரான் வணக்கம் என்ற நூல் ஆகும்.
1715, ஜூலை 15ஆம் தேதி தமிழ் புதிய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. இவ்வரிய தொண்டினால் வேதம் தமிழில் வாசிக்க ஏதுவாயிற்று. சீகன்பால்க்கின் தமிழ் நடை எளிமையானது. இவர் தம்மை சுற்றியிருந்த சாதாரண மக்களுடைய தமிழ் நடையிலேயே மொழிபெயர்த்திருந்தார். இந்தியாவிலேயே முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே ஆகும்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க்.
சீகன்பால்க் பத்து வருட மிஷனெரிப் பணிசெய்யத பின்னர், தான் பிறந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றார். இவர் தன்னோடு மலையப்பன் என்ற இளைஞனையும் அழைத்துச் சென்றார். கடல் பயணத்தில் மலையப்பன் உதவியோடு பழைய ஏற்பாட்டில் யோசுவா புத்தகம் வரை மொழி பெயர்த்தார். 1715ஆம் ஆண்டு ஹாலேயில் வைத்து சீகன்பால்க் எழுதிய தமிழ் இலக்கணப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.இவர் மரியா டாரதியை திருமணம் செய்தார்.1716ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா வந்தனர். இவர்கள் 1716 ல் தரங்கம்பாடியில் இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
மொழிபெயர்ப்புப் பணியோடு சீகன்பால்க் சில புத்தகங்களையும் எழுதினார். தென்னிந்தியாவின் மதக் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், ஆசாரங்கள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி ஜெர்மன் மொழியில் 44 அதிகாரங்கள், 332 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமும், தமிழ் நாட்டு தெய்வங்களின் பரம்பரையைப் பற்றிய ஒரு புத்தகமும் எழுதினார்.
நீதி வெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி என்ற புத்தகங்களை ஒன்று சேர்த்து ‘நானாவித நூல்கள்’ என்ற புத்தகத்தையும் ஆக்கினார். லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம் எழுதினார். தமிழ் - ஜெர்மன் அகராதியையும் சீகன் எழுதினார். சபையார் பாடுவதற்காகப் பல பாடல்களை மொழிபெயர்த்தார். ஐரோப்பிய ராகங்களுக்கு இசைந்த ஞானப்பாட்டுகளும், தமிழ் ராகங்களுக்கு ஏற்ற கீர்த்தனைகளையும் இயற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிச் சிறிய வினா - விடை புத்தகமும் இவரால் எழுதப்பட்டது.
1719ஆம் ஆண்டு, பிப்ரவரி 23ஆம் தேதி தரங்கம்பாடியில் தமதி 37ஆம் அகவையில் காலமானார்.முதல் இந்திய வேதாகம மொழிபெயர்ப்பாளருமான பர்த்தலோமேயு சீகன்பால்க் 37 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்தார்.
அடி-   6 தொடர்

ஸ்டேசனுக்கு வந்த மதியையும்  மற்ற பெடியங்களையும்  சண்முகத்தார்  மகிழ்வு முகங் காட்டி  வீட்டுக்கு  அழைத்துச்  சென்றார் . மல்லிகா  சின்னம்மா , புட்டும்  சம்பலும்  முட்டைப்பொரியலும்
செத்தல்மிளகாயும் வெங்காயமும்  பொரித்து  மீன் பால்ச்சொதியும்  வைத்து  சாப்பாட்டு மேசையை
அழகாக்கினா .  நெல்லுப்பானைக்குள்ளே  பழுக்க வைத்த  தங்கள்  தோட்டத்து வாழைப்பழச்   சீப்பை சண்முகத்தார்  சாப்பாட்டு மேசையில்  கொண்டு வந்து  வைத்து  விட்டு,  தானும் குளிக்க  துவாயை எடுத்துக்கொண்டு  வாவிக்கு  சென்றார் .

என்னடாப்பா  எப்படியிருக்கு  வாவிக்குளியல்  என்று  சண்முகத்தார்  அன்பாகக் கேட்டார்  -  நேசன்--   அருமை  மாமா  நல்லா  இருக்குது  இப்பிடி குளிக்கிறது இதுதான்  முதல்த்தடவை  , நானும்  தான்  என்று  மதியும்  மற்று எல்லோரும் சொல்லி மகிழ்ந்து  தண்ணீரில் முங்கி எழுந்தார்கள்,  நான் இதைப்போல  முன்னம்  மலைநாட்டில் குளிச்சனான்  அங்கை  கொஞ்சம்  ஒடுக்கமா  வாய்க்கால் போல  இருக்கும்,  இது கொஞ்சம் அகண்டு இருக்குது என்றான் சச்சி   - சரி சரி கன நேரம்  குளிச்சால்  குளிறேறிவிடும்   காணும் போங்கோ,  போய்ச்  சாப்பிடுங்கோ  என்றார்  சண்முகத்தார்,  தானும் வாவியில் குளிக்க  தயாரான படியே .
தொடரும் ---

  

வியாழன், 12 பிப்ரவரி, 2015



மென்மலர்  உள்  வைத்த வென் கா
விசும்பு வளி  அழியா    ஆழி இருத்திட 
ஆர்கலி   அசைவொன்று   வியப்புறு நோ
விசைந்து வளம் பாடி உவன்றிருக்க
வந்தோ  அருமழை  ஆழி  மேவ
மலர் மிசை  நின்று   காத்த மச்சு
 வென்  கா காவாகா காவலாகியதே


பொருள் விளக்கம்

மெல்லிய பூவில் இட்டு என் காதலை
காற்று அணைக்காதுஆழ்கடலில்  வைத்தேன்
அங்கு வந்த மீனொன்று அதிசயித்து
அதை பார்த்து மகிழ்ந்து சுற்றி நீந்தியது
அப்பொழுது  மழை கடல் மேல் பொழிந்தது
அந்த மீன்  பூமேல் நின்று என் காதலை
பாது காத்தது.

செங்கவி
ம.இரமேசு 
பூந்தென்றல்  முத்தமிட்டு  புறப்பட்ட  தமிழே
பாரைந்து பாசைக்கும்  தாயகத் திகழ்பவளே
தாயைப்பழித்தாலும்  தண்ணீரை  பழிக்காதே
என்று பூமிக்கு புத்தி சொன்ன  பொன்னேரழகே
கண்ணன்றோ நீ நமக்கு  காலமெல்லாம் துதிப்போமே 
அடி - தொடர் 3

யாழ் புகையிரத நிலையம்  அடைந்த  மதியும் நண்பர்களும் , அன்றுதான் புகையிரத நிலைய  பரபரப்பைக்  கண்டார்கள். சச்சி  பயணச் சீட்டை ஐவருக்கும் எடுத்துவர  எல்லோரும் மேடைக்கு சென்றார்கள் ,  நேசன் கேட்டான்--  என்ன சனமாடா,  உவ்வளவும் எங்கையடா போகுதுகள் ?
சச்சி - சிரித்தபடி,  எங்கையாவது  கொம்பனிகளில  இங்கிலீசு படிச்ச தொழிலாளியளா  வேலை செய்வினம் , என்னது இங்கிலீசு படிச்சும் தொழிலாளியோ  என்று  நேசன்  ஆச்சரியமாகக்  கேட்டான்.
பின்ன  கொம்பனியை  தூக்கி  இந்தாபிடி  எண்டு  கொடுப்பாங்களே , அங்கை   கணக்கு பார்க்கும்
தொழிலாளிகள் ,  மேற்பார்வை செய்யும்  தொழிலாளிகள்தான்  படிச்ச  யாழ்ப்பாணத்தாரும் என்று சச்சி 
சொல்லி  முடித்தான் .  அப்ப உத்தியோகம்  என்றாங்களே  என்றான்  பகி,  அதுவும் ஒரு  தொழில்தான்
கொஞ்சம்  மரியாதைக்காக  அப்படி சொல்லுவினம்  என்றான் மதி.

இப்படி  ஐவரும்  தம்முள்  கதைத்துக்கொண்டிருக்க  ஏழுமணி   மெயில்  எறும்புபோல்  ஊர்ந்துகொண்டு வந்து நின்றது . சித்திரா  அழுதபடி  லேஞ்சியால் (கைக்குட்டை ) தனது  கண்ணீரை
துடைத்துக்கொண்டிருந்தாள்   அவள் கணவன் மனோ  சவுதிக்கு  போகின்றான்  பிரிவுத்துயர்
குறுந்தொகையை வென்று  கண்ணீரானது . இனி  ஒன்பது மாதத்தால்த்தான்  ஊருக்கு வருவார்  மனோ.
ஏற்றிய  மீன், கருவாடு , புகையிலை  ஏனைய  பொருட்களின் காசு வாங்கப்  பயணிக்கும் முதலாளிகளையும்  ஏற்றிக்கொண்டு  மெயில் மெல்ல  கோண்  எழுப்பியபடி  முன்னோக்கி நகர்ந்தது
டாட்டா காட்டும் கைகளால்  ஸ்டேசன்  நிறைந்தது  மெயில்  பிரியாவிடையுடன்  கிளம்பியது கொழும்பு நோக்கி ----

தொடரும்.
 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

எல்லிஸ் ஆர் டங்கன், காதல் செய்வதை சொல்லிக்கொடுக்கின்றார் , தியாகராஜா பாகவதருக்கும் எம் ஆர் சந்தானலட்சுமிக்கும்   அம்பிகாபதி படத்துக்காக (பாகவதரின் அம்பிகாபதி)
மேலதிகத் தகவல் - பின்னாளில் பாகவதர் பொருளாதார கஸ்டம் அனுபவிக்கையில் சிவாசிகணேசன் தான் நடிக்கும் அம்பிகாவதியில் ஒரு பாத்திரம் ஏற்க அழைத்தும், புலி புல்லை தின்ன சம்மதிக்க வில்லை.

...
இந்த டங்கன் இயக்கியதே எம் ஜி ஆர் நடித்த மந்திரி குமாரி அதில் ஒரு வாழ்ச்சண்டைக் காட்சியில் பெரிய பாரங் கல்லில் முதுகுப்பக்கத்தை சாய்த்தபடி எம்ஜிஆர் சண்டை போடவேண்டிய காட்சி எடுக்கப்பட்டது, காட்சி திருப்தி அளிக்கவில்லை என்று திரும்பத்திரும்ப படமாக்கப்பட்டது .
பாறாங் கல்லின் வெப்பத்தால் எம்ஜிஆர் அணிந்திருந்த பட்டு சட்டை பொசுங்கி எரிந்து விட்டது .
எம்ஜிஆருக்கு டங்கன் மேல் கடுங் கோபம், டங்கன் அருகில் சென்று வாழை எறிந்துவிட்டு
எம்ஜிஆர் சொன்னது > ஐ நோ ஐ, யு நோ யு .
சின்னமணி

 ஈழத்தின் மூலை முடுக்கெல்லாம்  மும்மாரி போல்  வில்லிசை  பொழிந்தவர் 
சின்னமணி ஐயா. "வில்லுப்பாட்டாம் இண்டைக்கு ராவாவைக்கு"  என்று யாழ்ப்பாணத்தில்   நண்பர்கள்  மத்தியிலும் வீட்டிலும் பேச்சு அடிபடும்  போது,  பசித்தவனுக்கு   பசி   போய்  மகிழ்வு நிறையும். தமிழ், அருவிபோல்  கொட்டியது அவரால் , முன்னால்  அமர்ந்து  பார்க்கும் இரசிகர்களை
பார்த்து கண்சிமிட்டி  வில்லடிக்கும் பாங்கு , இனிய புன்னகை பூத்த முகம்  பார்க்கப் பார்க்க தெவிட்டாது .

காலச் சூழலுக்கு ஒப்ப   கதைபேசி  மயக்கும்  மந்திரக் கலைஞன்  - அவரின்  வில்லிசை  கேட்டு
சிரிக்காதவர்களை  ஈழநாட்டில் விரல் விட்டு எண்ணி விடலாம் . இனிய தமிழ்,  கணீரென்ற  குரல்,
காந்தம் போல் வசீகரிக்கும்  வதனம்,  மெல்லிய பட்டுப்போல் தென்றலில் அசையும் உடல் மொழி
இன்னும்  என்னென்ன இனிமைகள்  இருக்குமோ  அவற்றை  சின்னமணி  ஐயாவுக்கு உவமானமாக
சொல்லலாம் . வாழ்க அவர்  பெருமை, ஓங்கட்டும் அவர் புகழ்.  
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா -  கவிஞர்  வாலி

வெள்ளத்தனைய   மலர்   நீட்டம்   மாந்தர்தம்;   உள்ளத் தனையது    உயர்வு

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
                             (குறள் 622: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
வெள்ளத்தனைய – பெருகி வரும் வெள்ளம்போல
இடும்பை – மிகுதியான துன்பமும்
அறிவுடையான் – அறிவுமிக்கோர்
உள்ளத்தின் – தங்கள் மனத்திலே கொண்டுள்ள
உள்ளக் – ஊக்கமிகு எண்ணத்தினால்
கெடும் – இல்லாது ஒழியும்
பெருகிவரும் வெள்ளம்போல் பேரழிவை ஒத்த துன்பம் வரினும், அறிவுடையோர், தங்கள் மனத்திலே கொண்ட ஊக்கத்தினாலேயே அதைத் துன்பமாகக் கருதாது வினையாற்றும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்ற குறளில் நீரின் அளவு என்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல், இங்கு பேரழிவை தரக்கூடிய என்னும் பொருளில் வருவது கவனிக்கத்தக்கது. இரண்டு குறள்களிலும் “உள்ளம்” என்பதற்கு “ஊக்கம்” என்ற பொருளிலேயே செய்யப்பட்டிருக்கிறது.

இரு வேறு கூறுகளில் இங்கே  உள்ளம் எனும் மனம்  வேறு படுகின்றது என்பதைக்  காணலாம்
மனமே  வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்  என்று  முடிவு  கொள்ளலாம்.
அடி  (1)
(முகநூல் கதை)
{ யாழவர் மொழிவழக்கும் தொனிக்கும் }
இறால் போட்டு வைத்த வெந்தையக் குழம்பை நறுக்கரிசிப் பதமான சோற்றுடன் வாட்டின வாழையிலையில்
மாணிக்காச்சி கட்டிக் கொடுக்க, மதி அதனை பவுத்திரமாக
வாங்கி சூட்கேசில் வைத்துக் கொண்டு
செட்டியாமட சந்திக்கு பஸ் பிடிக்க கிளம்பினான். தம்பி இந்தா என்றபடி
வேகமாய் வந்து இருபது ரூபாய்களை
பொக்கற்றில் வைத்தா சிறிய தாய் காமாட்சி - தொடரும்
அடி- தொடர்   2

மகிழ்வுடன் மதி  பஸ்சுக்காக  நிற்க  பகிதர்,  நேசன்,  திரு, சச்சி  ஆகியோரும் வந்து   இணைந்து கொண்டார்கள்  -  சண்முகத்தாருக்கு  கடிதம்  வந்திருந்தது,  எங்கள்  ஊர்பிள்ளைகளுடன்  மதி
வருகிறான்.  பத்துநாட்கள்  உங்கள் வீட்டில் தங்க  வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென  
கேட்டுக்கொள்கின்றேன், என்று   ஒன்றுவிட்ட பெரிய தகப்பன்  முத்தரிடமிருந்து  அந்த கடிதம்  வந்திருந்தது - சண்முகத்தார்  எதற்காக வருகின்றார்கள் என்ற விடயத்தை  சிந்தித்து அறிந்து கொண்டார் . சச்சியைத்தவிர  மற்ற நால்வருக்கும்  ரயிலில் பயணிப்பது  இதுவே  முதல்த்தடவை
அதனால் அவர்கள்  பெரும்  மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் - 784 ஐ  பிடித்து  யாழ்ப்பாணம் 
நகருக்குள்  இறங்கினார்கள் ,  பஸ்டாண்டுக்கு  முன்னால்  இருந்த  ராணி  தியேட்டரில் 
நாளை நமதே  படம்  ஓடிக்கொண்டிருந்தது.  அப்படத்துக்கான  விளம்பரப்பதாகைகள்
வருவோர் போவோரை  அண்ணார்ந்து பார்க்க வைத்துக் கொண்டேயிருந்தது.  காரணம்  பெரிய  உயரத்தில் இரண்டு  எம்ஜிஆர்கள்  நிற்கும்  உயர்ந்த பதாகைகள்  அசத்தியது மக்களை .

வெலிங்டனடியில்  இறங்கியிருந்தால்  இந்நேரம் ஸ்டேசனுக்கு  போயிருப்பம்  வீணா  டவுனுக்குள்ள
இறங்கினது என்று  திரு  அலுத்துக்கொண்டான்  ஐவரும்  ஸ்டேசனை நோக்கி  நடந்தார்கள்  தங்கள்
பொதிகளுடன் --- தொடரும். 

திங்கள், 9 பிப்ரவரி, 2015

நீலவான்  நோக்கி  நீண்ட பரப்பில்  ஒரு பறப்பு


கடுங் குளிரும்  காற்றும் வந்தால்
நெடுந்தூரம் எம்மால் பறக்க முடியாது
எல்லோரும் நாளை மாலை பறக்கின்றோம்
என்ற தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு
ஆமா  சொல்லி விட்டு தத்தம் கூடுகளுக்கு அவை பறந்தன .
எல்லோருக்கும் ஒரே அறிவே,  அவைகளில்
எவரும் பட்டப்படிப்பு  படிக்கவில்லை .
எதிர்க் கேள்வி கேட்கவில்லை. 
அளவான அறிவு அவைகளுக்கு  மனிதன் கணிப்பில் ஐந்து அறிவாம்.
  தமக்குத்   தலைவர்
நல்லதே சொல்லுவார் என்ற
 அசைக்க முடியாத நம்பிக்கை  அவைகளுக்கு .
தென்றலும்  புயலும் வரும் வேளை
தலைவரே முன் சென்று  அனுபவித்து வழிகாட்டுபவர் .
தென்றலைச்   சுகித்து  புயலைக் கண்டு ஒதுங்குபவரில்லை.
நரிக்குணம் நச்சுக்குணம் அறிய அவர் பல்கலைக்கூடம்  சென்றவரில்லை .
நல்லது எதுவோ அதை தெரிந்து கொண்டு வாழ்பவர்.
நெஞ்சினில் நஞ்சு இல்லாதவர்  எங்கள்  பறவை ராசா .


கண்டம் விட்டு கண்டம் பறப்பு 
பசித்தால் என்னம்மா  செய்வது என்றது  ஒரு  குஞ்சு
அதற்கெல்லாம்  தலைவர்  வழிகாட்டுவார்  என்றது தாய்ப்பறவை
இப்போது நீ இந்த  பழத்தை  கொத்தியுண்  என்றுவிட்டு
செட்டைகளை  ஆரோக்கியமாக்கியது தந்தைப்பறவை .
எந்த வித  திசையறி கருவிகளுமின்றி  இருபத்தாறு பறவைகளும்
நீலவானை  நோக்கி  நீண்டு  பறந்தன,  எத்தனை  எத்தனை
அவலங்கள்  இந்தப்பறப்பில்  வல்லூறுகள்  கோட்டான்கள்
என  தம்மை  நோக்கி  வரும்  தாக்குதல்களை  முறியடித்து
பறக்க வேண்டும்,  எந்த சாமிக்கும் தேங்காய் அடிக்கவில்லை 
தீபம் காட்டவில்லை  பறவைகள்  ஆரம்பித்தன பயணத்தை.


மலைகளில்  தங்க  முடியும் ஆனாலும் தவிர்த்தார்  தலைவர்
காரணம் அங்கு இராட்சதப்   பறவைகளின்  வசிப்பிருக்கும் என்ற
சரியான கணிப்பு -  கடலில்  தாழ்ந்து  சில மீன்கள்  கொத்தி 
கரைகளில்  உண்டான.   எங்கெங்கே  எந்த மாதிரி  ஆட்கள் (பறவைகள்)
என்று நன்றாக அறிந்து வைத்திருந்தார்  தலைவர் .
சில கொக்குகள்   புறாக்கள் நட்புடன்  பழகின
உதவின  காகங்கள்  மினுக்குப்  பார்வையுடன் பறந்தன.
ம்  கிளம்புங்கள்   தொடர்ந்தன  பறப்பை.
அதோ  கீரிமலை  தெரிகிறது  அங்கிருந்து  கல்லுண்டாய்
அதிக  தொலைவிலில்லை   ம்  மகிழ்வுடன் பறவுங்கள்
என்றார்  தலைவர்.  இளம்பறவைகள்  இசைபாடிப் பறந்தன.
கல்லுண்டாய்  வெளியில் எங்களுக்கு நாலா  பக்கமும்
நல்ல  உணவுகள் இருக்கும்,  இனிய  மனிதர்கள்  அங்கே .
யாரும்  நம்மை  நோக்கி கல்லைக்கூட  எறிவதில்லை.
ஆசையுடன்  சைபீரியன்  என்று சொல்லி மகிழ்ந்து  பார்ப்பார்கள் .
என்று  அனுபவத்தை  விளக்கியது   தலைமை புதியவர்களுக்கு.


இதோ  வந்துவிட்டோம்  கல்லுண்டாய்  காலாறுங்கள்
வீதியின்  அக்கரை  கடற்கரை  குளிப்பவர்கள்  சென்று 
குளிக்கலாம் என  தலைவர்  அன்பாகச் சொன்னார்  .
அம்மா  அது என்ன  உயரமான  மரங்கள்
என்றது  குஞ்சொன்று,   தலைவர்  குறுக்கிட்டு அவைதான் பனைகள்
அங்குதான் நாம்  உறங்கப்போகின்றோம்  என்றார்.
ஆகா  என்ன  அழகிய  வெளி  என்று  மகிழ்ந்தன  புதிய வரவுகள்.


ம. இரமேசு
தொன்மார்க் 

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சினிமா தியேட்டர்களை அழகாக  கட்டி வைத்திருக்கின்றார்கள் - கல்விக் கூடங்களை ?

தமிழ் நாட்டில் பல  ஊர்களில்   பள்ளிகளில் கல்வி பயிலும்  பிள்ளைகளுக்கு  உட்கார்வதற்கு  கதிரைகள் இல்லை, புத்தகங்கள்  வைக்க மேசைகள் இல்லை ,  குடிக்க  நீர் வசதி இல்லை,   விளையாட மைதானம் இல்லை   இதே நிலையே  மற்றைய  மாநிலக் கிராமங்களிலும் -  நடிகையின்  செருப்பின் விலையிலும், நடிகன்  தலை மயிர் வெட்டும் பணத்திலும்  கிராமப்புற  மாணவர்களின் ஒரு மாத தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். எந்த அறிவாளியும் கண்டு கொண்டு தக்க நடவடிக்கை  எடுப்பதாக செய்திகள் இல்லை . பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பறைகள்  குளிரூட்டப்பட்டிருக்கின்றது .
இந்தியப்  பண்பாடு  இம்மாதிரி  விடயங்களில்  குத்துக்கரணம்  அடிக்கின்றது. ஏழைகளின்  நிலைமைகளைக் கண்டு கொண்டு  நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களின்   அலட்சியத்தால் இந்த வசதிகள் அற்ற நிலை  கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு . மும்பை  படவுலக  விழாக்களைப்   பார்த்தால் யாராவது இந்தியாவை  பிச்சைக்கார நாடென்பார்களா ?  புரட்சிப்பெண்கள்  (நடிகைகள்)  அரை நிர்வாணத்தில் அமெரிக்க ஐரோப்பிய  நடிகைகளை விஞ்சி விட்டார்கள் . நடிக நடிகையர்கள்  சம்பளம்  கோடிகளில்,  முடிவெட்ட  அமேரிக்கா , சிங்கப்பூர்,  லண்டன்  என்று  பறக்கும்  நடிகர்கள்  உண்டாம் . அரசியலாளர்களின்  இரவுக்கும்மாளங்கள்   அதற்கான  செலவுகள்   பல  கோடிகளாம் .
ஆனால் கிராமத்து  மாணவர்கள்  நிலைதான்  கவலைக்கிடம் .
அண்ணாவின் காஞ்சி


காஞ்சி  தந்த  அறிவின் சிகரம்  தமிழர்களின்  அறிவு நாயகன்  அறிஞர்  அண்ணா.  அவர் காஞ்சியிலே
பிறந்து  வளர்ந்து  பெரிய அறிவாளியாகினார்.  குளிப்பதற்கு மட்டும் அண்ணா  அஞ்சினார்  சிறுவயதில்.
மூவேந்தர்கள் தங்களுக்குள் பகைத்து  நாட்டை பறிகொடுத்தவர்கள்,  பல்லவர்கள்  அவர்களை அடக்கி ஒடுக்கி  தெள்ளாற்றில்  வெற்றிகொண்டு  500 ஆண்டுகளுக்குமேல் காஞ்சியை  தலையாகக்  கொண்டு ஆண்டார்கள் - பிரபாகரன்  பெரிய இடம் பெற, ஊர்  மக்களின்  ஆதரவு  பெருந்துணையானது.   அவர்கள்  தமிழ்நாட்டின் கரையோரங்களில்  தொழில் செய்ததனால்  அவர்களுக்கு  ஆதரவுகள் பலமாக  இருந்தது.  எந்த ஆதரவும் இன்றி  தனி ஒருவனாக  நின்று முதல் தாக்குதல் செய்த மாவீரன்   உரும்பிராய் பெற்ற  செல்வம் பொன் சிவகுமாரன்.  போலீஸ் பிடிக்க வருகையில் மாறுவேடம் பூண்டார் பிறகு ஒரு தோட்டக்காரன் காட்டிக்கொடுக்க தற்கொலை செய்தார்  பிடிபடாமல் . நெஞ்சின்  துணிவு  ஒருவனை  மா வீரனாக்குகின்றது  அவன் பொய் உடலுக்கான வாழ் நாள் குறுகிய போதும் உயிரின் மெய்  புகழ் நீண்டு நிலைக்கின்றது . கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து  விளங்கிய  அறிஞர் அண்ணா தனது  அறிவால்  ஆற்றலால்  மக்கள் நெஞ்சில்  நீடித்து  வாழ்கின்றார் . இன்று அண்ணாவின் பிறந்த நாள் .  வாழ்க  அண்ணா  புகழ். வணங்குவோம்  அண்ணாவை  மனதில்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

மாறும் நாள்  வருமா  வருமா

காதல்  என்னும் உயிர்வாழ்வில்
 கலந்து வாழத்துடிக்கும்  உள்ளங்களை
 சாதியென்னும்  பிசாசைக்  காட்டி
 பிரித்து எறியாதே,  பாவமென்னும்
 பெரு மூட்டை  உன்  பிறவிமுழுதும்
  தொடரும்  இது  வாழ்வென்னும்
பாதையில் நான்  கண்ட  அனுபவம்.

சீதையவள்  சித்திரை  நிலவு
பாவையவள்  பருவம்  தீண்டியவன்
பாவ மூட்டை சுமக்காத   பசுந்தளிர்
மாலையவள்  சூடி வாழ்ந்திட
துடிக்கையிலே, கோதையவள் நிறம்
 மாசு என்று   சொல்லி
மகனை மனம் மாற்றச் செய்தாயே
சிந்தனையில்லா  சிறிய மதி மானிடரே
நீர்  மாறும் நாள்  வருமா  வருமா .

செங்கவி
ம.இரமேசு
 

சனி, 31 ஜனவரி, 2015

உணர்வின்  பிரதிபலிப்பை உடனே  காட்டுவது மிருகம்
உணர்வை அடக்கி பொறுமை காப்பதே மனிதம் .
பழிக்குப்பழி  வாங்கல்  மனிதமன்று.
நம்மைக் காயப்படுத்தியவர்  வேறு ஒருவரால்
காயப்படுவார்.  மனிதமில்லாதவரிடம்
அவரின்  செயல்  தைக்கும் பொழுது  மனிதம்
இல்லாது  பிரதிபலிப்பை அடைவார்
அங்கே இருவரும் மிருகங்களே . 

திங்கள், 12 ஜனவரி, 2015

 மெல்லிய இருள் சூழ்ந்த  மாலைப்பொழுது , அன்புத் தீபமொன்று  அணைந்து  ஆறுமாதங்கள்  செல்லாப் பொழுது, தங்கையென்னும் அழகிய  மலரொன்று  வாடி வதங்கி அக்காளுக்காக ஏங்கித்தவிக்கும்  நிலை,  நிழல் கொடுக்கும் மரமாகி  நின்ற  அன்னையும்  அணையும்  தீபமாக  அல்லாடிக்கொண்டிருந்த வேளை, அக்காள்  அணைந்த பொழுது,  எங்கே  அக்கா!எங்கே அக்கா !  என்று கேட்ட  ஐந்து வயது  சிறுமிக்கு,   அக்கா  கடவுளிடம் 
சென்றுவிட்டாள்  என்று  சொந்தங்கள் சமாதானம்  மொழிந்தன, அனுசியா   களவு பொய் அறியா  சிறிய
வயதினள், எல்லோரும் சொன்னதை நம்பியபடி  கால மோட்டி வந்தாள், இதோ  இன்று   அன்னையென்னும்  அன்பு மரமும்  நிழல்  தருவதை  நிறுத்தப் போராடும் வேளை , அம்மாவுக்கு
என்ன  அம்மாவுக்கு  என்ன  என்ற சிறுமிக்கு,  அம்மா  கடவுளிடம் போகப்போகின்றா, என்று  அங்கிருந்தோர்  பக்குவமாகச்   சொல்ல , தான் சேர்த்து வைத்திருந்த சேமிப்பு தொட்டியயை (சல்லி முட்டி)எடுத்து குலுக்கி குலுக்கி  முழு சில்லறையையும் அனுசியா  எடுத்துக்கொண்டு சிறு  தொலைவில் இருந்த  கடைக்கு சென்று  ஒரு  பொம்மை  வாங்க  விரும்பினாள் - பொம்மை விலையோ  20 ரூபாய்  அவள் கையில்  17 ரூபாய்  28 சதமே  இருந்தது.   கடைக்காரனிடம்  கெஞ்சினாள்  பிறகு மிகுதி தருவதாக சொன்னாள்  -  காட்டில்  விளையும் நச்சு மரம்  கடைக்காரன் மனம்,  முடியாது என்று  அறவே  மறுத்துவிட்டான் , நடப்பவைகளை பக்கத்தில் நின்று  கவனித்துக்கொண்டு  நின்றார்  ஆசிரியர்  அருணாசலம்,  சிறுமியை அணுகி  என்ன  ஏது என்று  கேட்டார்,  அவள் சொன்னாள்  - அக்கா  கடவுளிடம் போய்விட்டா  இப்பொழுது  அங்கு செல்ல அம்மாவும்  தயாராகிறா  அக்காவுக்கு  பொம்மை என்றால்   மிகவும்  விருப்பம்  அதுதான்   இந்த அழகான பொம்மையை  வாங்கி  அம்மாவிடம் கொடுக்க  ஆசைப்படுகின்றேன்,  ஏனென்றால்  கடவுளிடம் செல்லும் அம்மா  அக்காவை சந்திப்பா அக்காவிடம் இந்த பொம்மையை கொடுத்தால்  அக்கா மிகவும் மகிழ்வாள்  அதுதான் என்றாள்,     இறந்த அக்காளைவிட 2 வயது   இளையவளான  அந்தச் சிறுமி. ஆசிரியர் தனது  நிலையை  சமாளித்தவாறு  மிகுதிப்  பணத்தை செலுத்தி  அந்த பொம்மையை வாங்கிக்கொடுத்தார் , பொம்மை கிடைத்த மகிழ்வுடன்  வீட்டுக்கு ஓடினாள்  அனுசியா , அங்கு எல்லோரும் ஓவென்று  குளறி  அழுதுகொண்டிருந்தார்கள் -  ஆம்  அனுசியாவின் பொம்மையை வாங்காமலேயே   அம்மா  கடவுளிடம் சென்றுவிட்டார்  .