மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா - கவிஞர் வாலி
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்; உள்ளத் தனையது உயர்வு
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
(குறள் 622: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
வெள்ளத்தனைய – பெருகி வரும் வெள்ளம்போல
இடும்பை – மிகுதியான துன்பமும்
அறிவுடையான் – அறிவுமிக்கோர்
உள்ளத்தின் – தங்கள் மனத்திலே கொண்டுள்ள
உள்ளக் – ஊக்கமிகு எண்ணத்தினால்
கெடும் – இல்லாது ஒழியும்
பெருகிவரும் வெள்ளம்போல் பேரழிவை ஒத்த துன்பம் வரினும், அறிவுடையோர், தங்கள் மனத்திலே கொண்ட ஊக்கத்தினாலேயே அதைத் துன்பமாகக் கருதாது வினையாற்றும். “வெள்ளத்தனைய மலர் நீட்டம்” என்ற குறளில் நீரின் அளவு என்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல், இங்கு பேரழிவை தரக்கூடிய என்னும் பொருளில் வருவது கவனிக்கத்தக்கது. இரண்டு குறள்களிலும் “உள்ளம்” என்பதற்கு “ஊக்கம்” என்ற பொருளிலேயே செய்யப்பட்டிருக்கிறது.
இரு வேறு கூறுகளில் இங்கே உள்ளம் எனும் மனம் வேறு படுகின்றது என்பதைக் காணலாம்
மனமே வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் என்று முடிவு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக