அடி- 6 தொடர்
ஸ்டேசனுக்கு வந்த மதியையும் மற்ற பெடியங்களையும் சண்முகத்தார் மகிழ்வு முகங் காட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . மல்லிகா சின்னம்மா , புட்டும் சம்பலும் முட்டைப்பொரியலும்
செத்தல்மிளகாயும் வெங்காயமும் பொரித்து மீன் பால்ச்சொதியும் வைத்து சாப்பாட்டு மேசையை
அழகாக்கினா . நெல்லுப்பானைக்குள்ளே பழுக்க வைத்த தங்கள் தோட்டத்து வாழைப்பழச் சீப்பை சண்முகத்தார் சாப்பாட்டு மேசையில் கொண்டு வந்து வைத்து விட்டு, தானும் குளிக்க துவாயை எடுத்துக்கொண்டு வாவிக்கு சென்றார் .
என்னடாப்பா எப்படியிருக்கு வாவிக்குளியல் என்று சண்முகத்தார் அன்பாகக் கேட்டார் - நேசன்-- அருமை மாமா நல்லா இருக்குது இப்பிடி குளிக்கிறது இதுதான் முதல்த்தடவை , நானும் தான் என்று மதியும் மற்று எல்லோரும் சொல்லி மகிழ்ந்து தண்ணீரில் முங்கி எழுந்தார்கள், நான் இதைப்போல முன்னம் மலைநாட்டில் குளிச்சனான் அங்கை கொஞ்சம் ஒடுக்கமா வாய்க்கால் போல இருக்கும், இது கொஞ்சம் அகண்டு இருக்குது என்றான் சச்சி - சரி சரி கன நேரம் குளிச்சால் குளிறேறிவிடும் காணும் போங்கோ, போய்ச் சாப்பிடுங்கோ என்றார் சண்முகத்தார், தானும் வாவியில் குளிக்க தயாரான படியே .
தொடரும் ---

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக