நீலவான் நோக்கி நீண்ட பரப்பில் ஒரு பறப்பு
கடுங் குளிரும் காற்றும் வந்தால்
நெடுந்தூரம் எம்மால் பறக்க முடியாது
எல்லோரும் நாளை மாலை பறக்கின்றோம்
என்ற தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு
ஆமா சொல்லி விட்டு தத்தம் கூடுகளுக்கு அவை பறந்தன .
எல்லோருக்கும் ஒரே அறிவே, அவைகளில்
எவரும் பட்டப்படிப்பு படிக்கவில்லை .
எதிர்க் கேள்வி கேட்கவில்லை.
அளவான அறிவு அவைகளுக்கு மனிதன் கணிப்பில் ஐந்து அறிவாம்.
தமக்குத் தலைவர்
நல்லதே சொல்லுவார் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கை அவைகளுக்கு .
தென்றலும் புயலும் வரும் வேளை
தலைவரே முன் சென்று அனுபவித்து வழிகாட்டுபவர் .
தென்றலைச் சுகித்து புயலைக் கண்டு ஒதுங்குபவரில்லை.
நரிக்குணம் நச்சுக்குணம் அறிய அவர் பல்கலைக்கூடம் சென்றவரில்லை .
நல்லது எதுவோ அதை தெரிந்து கொண்டு வாழ்பவர்.
நெஞ்சினில் நஞ்சு இல்லாதவர் எங்கள் பறவை ராசா .
கண்டம் விட்டு கண்டம் பறப்பு
பசித்தால் என்னம்மா செய்வது என்றது ஒரு குஞ்சு
அதற்கெல்லாம் தலைவர் வழிகாட்டுவார் என்றது தாய்ப்பறவை
இப்போது நீ இந்த பழத்தை கொத்தியுண் என்றுவிட்டு
செட்டைகளை ஆரோக்கியமாக்கியது தந்தைப்பறவை .
எந்த வித திசையறி கருவிகளுமின்றி இருபத்தாறு பறவைகளும்
நீலவானை நோக்கி நீண்டு பறந்தன, எத்தனை எத்தனை
அவலங்கள் இந்தப்பறப்பில் வல்லூறுகள் கோட்டான்கள்
என தம்மை நோக்கி வரும் தாக்குதல்களை முறியடித்து
பறக்க வேண்டும், எந்த சாமிக்கும் தேங்காய் அடிக்கவில்லை
தீபம் காட்டவில்லை பறவைகள் ஆரம்பித்தன பயணத்தை.
மலைகளில் தங்க முடியும் ஆனாலும் தவிர்த்தார் தலைவர்
காரணம் அங்கு இராட்சதப் பறவைகளின் வசிப்பிருக்கும் என்ற
சரியான கணிப்பு - கடலில் தாழ்ந்து சில மீன்கள் கொத்தி
கரைகளில் உண்டான. எங்கெங்கே எந்த மாதிரி ஆட்கள் (பறவைகள்)
என்று நன்றாக அறிந்து வைத்திருந்தார் தலைவர் .
சில கொக்குகள் புறாக்கள் நட்புடன் பழகின
உதவின காகங்கள் மினுக்குப் பார்வையுடன் பறந்தன.
ம் கிளம்புங்கள் தொடர்ந்தன பறப்பை.
அதோ கீரிமலை தெரிகிறது அங்கிருந்து கல்லுண்டாய்
அதிக தொலைவிலில்லை ம் மகிழ்வுடன் பறவுங்கள்
என்றார் தலைவர். இளம்பறவைகள் இசைபாடிப் பறந்தன.
கல்லுண்டாய் வெளியில் எங்களுக்கு நாலா பக்கமும்
நல்ல உணவுகள் இருக்கும், இனிய மனிதர்கள் அங்கே .
யாரும் நம்மை நோக்கி கல்லைக்கூட எறிவதில்லை.
ஆசையுடன் சைபீரியன் என்று சொல்லி மகிழ்ந்து பார்ப்பார்கள் .
என்று அனுபவத்தை விளக்கியது தலைமை புதியவர்களுக்கு.
இதோ வந்துவிட்டோம் கல்லுண்டாய் காலாறுங்கள்
வீதியின் அக்கரை கடற்கரை குளிப்பவர்கள் சென்று
குளிக்கலாம் என தலைவர் அன்பாகச் சொன்னார் .
அம்மா அது என்ன உயரமான மரங்கள்
என்றது குஞ்சொன்று, தலைவர் குறுக்கிட்டு அவைதான் பனைகள்
அங்குதான் நாம் உறங்கப்போகின்றோம் என்றார்.
ஆகா என்ன அழகிய வெளி என்று மகிழ்ந்தன புதிய வரவுகள்.
ம. இரமேசு
தொன்மார்க்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக