சினிமா தியேட்டர்களை அழகாக கட்டி வைத்திருக்கின்றார்கள் - கல்விக் கூடங்களை ?
தமிழ் நாட்டில் பல ஊர்களில் பள்ளிகளில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உட்கார்வதற்கு கதிரைகள் இல்லை, புத்தகங்கள் வைக்க மேசைகள் இல்லை , குடிக்க நீர் வசதி இல்லை, விளையாட மைதானம் இல்லை இதே நிலையே மற்றைய மாநிலக் கிராமங்களிலும் - நடிகையின் செருப்பின் விலையிலும், நடிகன் தலை மயிர் வெட்டும் பணத்திலும் கிராமப்புற மாணவர்களின் ஒரு மாத தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். எந்த அறிவாளியும் கண்டு கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக செய்திகள் இல்லை . பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் வகுப்பறைகள் குளிரூட்டப்பட்டிருக்கின்றது .
இந்தியப் பண்பாடு இம்மாதிரி விடயங்களில் குத்துக்கரணம் அடிக்கின்றது. ஏழைகளின் நிலைமைகளைக் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களின் அலட்சியத்தால் இந்த வசதிகள் அற்ற நிலை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு . மும்பை படவுலக விழாக்களைப் பார்த்தால் யாராவது இந்தியாவை பிச்சைக்கார நாடென்பார்களா ? புரட்சிப்பெண்கள் (நடிகைகள்) அரை நிர்வாணத்தில் அமெரிக்க ஐரோப்பிய நடிகைகளை விஞ்சி விட்டார்கள் . நடிக நடிகையர்கள் சம்பளம் கோடிகளில், முடிவெட்ட அமேரிக்கா , சிங்கப்பூர், லண்டன் என்று பறக்கும் நடிகர்கள் உண்டாம் . அரசியலாளர்களின் இரவுக்கும்மாளங்கள் அதற்கான செலவுகள் பல கோடிகளாம் .
ஆனால் கிராமத்து மாணவர்கள் நிலைதான் கவலைக்கிடம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக