தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லை
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லை
திருடித்தான் களவாடித்தான் கொள்ளையடித்துத்தான்
வாழ்வது என்று முடிவெடுத்தவர்களை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது.
என்ன அதிசயம் அல்லது கேவலம் - நாட்டின் சொத்தை கொள்ளை அடித்தார் என்று
சட்டம் தண்டிக்கின்றது அவருக்கு சிறப்பான கவனிப்புகளுடன் கூடிய சிறப்புச் சிறை
கொடுக்கப்படுகின்றது . இதுதான் சம நீதியா - கொழுத்த செல்வத்தில் இருந்து கொண்டு
மேலும் மேலும் ஆசைப்பட்டு மக்களுக்கு செல்ல வேண்டிய பணத்தை தாமே அறிவு பூர்வமாக
கொள்ளையடித்து நாட்டில் பெரிய புள்ளிகளாக நடமாடி கொள்ளைக்காரர்களாக இருக்கும்
வல்லமை கொண்ட கொள்ளையர்களுக்கே கடுமையான தண்டனை கொடுத்து வாட்ட வேண்டும்.
அங்ஙனம் செய்தாலே பின்னால் வரும் ஒரு அரசியலாளன் பயந்து மக்கள் சொத்தில் கை வைக்காது இருப்பான் . இன்று என்ன நாட்டில் நடக்கின்றது ? அரசியலாளர்கள் கொள்ளை அடித்தால் வசதியான கவனிப்புகள் கிடைக்கும் நிலையென்றால் இனி எவர்தான் ஒழுக்கமாக அரசியலில் இருப்பார்கள்? இதற்கு ஏன் சட்டம்? சிறை ? மருந்து வாங்க , பசி வேதனை என்று ஒரு ஏழை எங்காவது திருடினால் அடி உதை இன்னோரன்ன கொடுமைகள் அந்த ஏழைக்கு .
குற்றவாளியான முன்னாள் அரசியலாளருக்கு நாட்டின் பிரதமர் வாழ்த்து செய்தி சொல்கின்றார் என்றால் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் என்ன எண்ணம் ஓடும் . அரசியலில் இருந்து கொண்டு கொள்ளை அடிக்கலாம் ஒன்றும் வெட்கமில்லை என்றே கருத்துக்கொள்வான் - ச்சீ வெட்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக