அடி - தொடர் 3
யாழ் புகையிரத நிலையம் அடைந்த மதியும் நண்பர்களும் , அன்றுதான் புகையிரத நிலைய பரபரப்பைக் கண்டார்கள். சச்சி பயணச் சீட்டை ஐவருக்கும் எடுத்துவர எல்லோரும் மேடைக்கு சென்றார்கள் , நேசன் கேட்டான்-- என்ன சனமாடா, உவ்வளவும் எங்கையடா போகுதுகள் ?
சச்சி - சிரித்தபடி, எங்கையாவது கொம்பனிகளில இங்கிலீசு படிச்ச தொழிலாளியளா வேலை செய்வினம் , என்னது இங்கிலீசு படிச்சும் தொழிலாளியோ என்று நேசன் ஆச்சரியமாகக் கேட்டான்.
பின்ன கொம்பனியை தூக்கி இந்தாபிடி எண்டு கொடுப்பாங்களே , அங்கை கணக்கு பார்க்கும்
தொழிலாளிகள் , மேற்பார்வை செய்யும் தொழிலாளிகள்தான் படிச்ச யாழ்ப்பாணத்தாரும் என்று சச்சி
சொல்லி முடித்தான் . அப்ப உத்தியோகம் என்றாங்களே என்றான் பகி, அதுவும் ஒரு தொழில்தான்
கொஞ்சம் மரியாதைக்காக அப்படி சொல்லுவினம் என்றான் மதி.
இப்படி ஐவரும் தம்முள் கதைத்துக்கொண்டிருக்க ஏழுமணி மெயில் எறும்புபோல் ஊர்ந்துகொண்டு வந்து நின்றது . சித்திரா அழுதபடி லேஞ்சியால் (கைக்குட்டை ) தனது கண்ணீரை
துடைத்துக்கொண்டிருந்தாள் அவள் கணவன் மனோ சவுதிக்கு போகின்றான் பிரிவுத்துயர்
குறுந்தொகையை வென்று கண்ணீரானது . இனி ஒன்பது மாதத்தால்த்தான் ஊருக்கு வருவார் மனோ.
ஏற்றிய மீன், கருவாடு , புகையிலை ஏனைய பொருட்களின் காசு வாங்கப் பயணிக்கும் முதலாளிகளையும் ஏற்றிக்கொண்டு மெயில் மெல்ல கோண் எழுப்பியபடி முன்னோக்கி நகர்ந்தது
டாட்டா காட்டும் கைகளால் ஸ்டேசன் நிறைந்தது மெயில் பிரியாவிடையுடன் கிளம்பியது கொழும்பு நோக்கி ----
தொடரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக