ஏராளம் ஏராளம்
வில்லெடுத்து அம்பெய்தி விழுத்தியது ஒன்று அது தமிழ்
வில்லெடுத்து அம்பெய்தி விழுத்தியது ஒன்று அது தமிழ்
நல்ல சொல் மறந்து நம் தமிழர் வாழ்வது என் கொல் சொல்
லொள்ளு ஆப்பு மச்சி என்றெல்லாம் எழுதுகிறார் பேசுகிறார்
பண்பில்லை நாகரிகமில்லை வெறுமனே நகைச்சுவையே வாழ்
பக்குவம் நிறையா மண்டைகளுடன் நானே ராசா ராணி நினைப்பு
எழுத்துப்பிழைகள் நிறைய தமிழென்றால் அவ்வளவு அலட்சியம்
நல்லபடி சொன்னால் நீர் என்ன பண்டிதரோ என்று கேள்வி கேட்கின்றார்
தம் நிலைக்கு வெட்கிப்பது இல்லை விசமக்கதைகள் ஏராளம் ஏராளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக