நல்லதை நம்மிடம் இருந்து பெற்றவர் நம்மை தெய்வமாக பார்க்கின்றார் - எம்ஜிஆருக்கு மக்கள் கோயில் கட்டி அன்றாடம் விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றார்கள் என்றால் என்ன உணரலாம்
மனிதன் எளியவரை மதித்தால் அவர்கள் இன்னல்களுக்கு உதவினால் தெய்வமாகலாம் என்பதே.. ஆதலினால் அத்வைதமே நமக்குள் இறைவன் வேறு உயிர் வேறு என்னும் துவைதம் எடுபடாது போகின்றது.
மனிதன் மனிதர்களுக்கு தொண்டாற்றுகையில் அவன் சேவைகளை பெற்றோரால் தெய்வமாக
மதிக்கப்படுகின்றான் என்ற உண்மையினை இன்றளவும் உணராமல் தேவாரம் பாடிக்கொண்டிருக்கின்றது ஒரு மனிதநேயமில்லா உயிர்க் கூட்டம் மனித உருவில்.
இரக்கமில்லா போலிகள் இதயத்தை தொடும் உண்மைக் காற்றினை சுவாசிக்க வெறுத்து உண்மைவரும் யன்னல்களை இழுத்து மூடுகின்றார்கள் , உண்மையை சந்திக்க திராணியில்லா உயிர்கள், இவர்கள் படிப்பது சிவபுராணம்.
அறிவாளி என்றால் இன்னொரு உயிர்படும் வேதனைக்கு மருந்தாக உதவுபவனே அறிவாளி
"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்னே" பசியை அடக்கி தவம் புரியும் ஞானிகளும் பசித்தவர்களுக்கு உணவளிக்கும் தொண்டரின் ஆற்றலுக்கு பின்னே என்பது மேற்கண்ட வள்ளுவர் கூற்று .
உண்மையையும் இரக்கத்தையும் உதவும் தன்மையையும் மனத்தில் இருத்தி தர்மத்தின் வழியில் நடக்காதவர்கள் எவரும் எத்தனை எத்தனை புத்தகங்களை புரட்டி புரட்டி படித்தாலும் அவர்கள் இறைவனின் மேடைக்கு கிட்டவும் நெருங்க முடியாது .
ம.இரமேசு - வடக்குராலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக