வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வானின்  வியர்வை



வெள்ளி நிலவும் 
வெண்பனியும்
சில்லெனும் சாரலும்
கண்டு களிக்க
துள்ளி விளையாடும்
கடலலைகள்

நீல  ஆடையில்
உடல் மறைப்பாள்  ஆழி
 அவள் கார் கூந்தலில்
 வளையும்  பூவாய்
 குடியிருக்கும்
வெள்ளி  அலைகள்
கரை வந்து ஏதோ  சேதி 
சொல்லி சொல்லி
 மீண்டும் ஓடும் அலை
அவள்  தலை  சூட

வானம்இதனை பார்த்து
மகிழ்ந்து கூத்தாடும்
அது ஆடியிளைத்த  
வியர்வை மண்ணில்
பொன்னாகும் முத்தாகும்
பூமிக்கும்   உணவாகும்
மண்ணும்  மகிழும்
மற்று மனதும்  மகிழும்



ம .இரமேசு  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக