வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அழிவுக்கு பெயர் வீரமென்றால்  அந்த  வீரம் வேண்டுமா??? 


பெற்றோரை  இழந்து அழும்  குழந்தைகள்  கைகளை இழந்து  கால்களை இழந்து  கண்கள்  பறிபோய்  அவயங்கள் வெட்டுப்பட்டு சிதறி  உடலின் சதைகள்  மரத்தின் உச்சியில் தொங்கும்  நிலை  அதை காக்கைகள்  கொத்தி உருசிக்கும்  காட்சி  வெறிபிடித்த இராணுவம்  கன்னியரை  கற்பழிக்கும்  கூக்குரல்  காப்பாற்ற  ஒரு எம்ஜிஆருமில்லை அணைக்க அன்னை தெரேசாவுமில்லை  - இப்போ சொல்லுங்கள்  போர் தேவையா   வன்முறை வேண்டுமா - இவையெல்லாம்  என் வீட்டு  மகனுக்கு மகளுக்கு தாய்க்கு தந்தைக்கு  மனைவிக்கு  நண்பனுக்கு நடந்திருந்தால் மீண்டும்  போர் வேண்டும் என்பேனா  வன்முறைவழிகளை ஆதரிப்பேனா  அடிக்கு அடி தான்  பதிலென்பேனா   தன்வலி  மாற்றான்  வலியறிந்து  போராடு என்கின்றது தமிழ் அழிவுக்கு பெயர் வீரமென்றால்  அந்த  வீரம் வேண்டுமா???  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக