வியாழன், 28 ஆகஸ்ட், 2014


                         அறிவின் அறைகளை  விசாலமாக்கிய  மாமனிதர் 

வானிலிருந்து சோவென்று  மண்ணில்  வந்து  விழுவது  மழையொன்றே  காலநிலைகளுக்கு ஏற்ப  பனியும் அது சார்ந்த வையும்  கொட்டுகின்றன  சில சமயங்களில்  வான் கற்களும்  விழுவதுண்டு அவை எப்போதாவது  சில தடவையே  இப்போதெல்லாம்  மீன்களும்  விழுகின்றன  என்கின்றது  பத்திரிகை 
செய்திகள்
 வரலாறுகள்  கோட்பாடுகள் 
கொள்கைகள் சட்டங்கள் திட்டங்கள்  வானிலிருந்து  கொட்டப்படுவதில்லை  அவை 
மனிதர்களால்  உருவாக்கப்படுபவையே -  அனைத்து  உயிர்களும்  மண்ணில்  வாழ்வதற்கு 
ஐம்பூதங்களே  துணைசெய்கின்றன  அவற்றில் ஒன்று  இல்லை என்றாலும் இல்லை  மண்ணில் உயிர்
இதை உணர்ந்தே  தமிழர்கள்  ஐம்பூதங்களை வழிபட்டார்கள்  என்ற உண்மை  யாவரும்
அறியத்தகுந்தவொன்றே 

உப்புநீரை  குடித்து  பழகியவன்  நந்நீரை  குடிக்க 
நினைக்கமாட்டான்  தான் குடிப்பதும் கொண்டதுமே உயர்வானது என்ற  எண்ணம் 
அவனுக்கு  அவன்  பார்வையில்  மறுமலர்ச்சிக்கு 
புதிய சிந்தனைக்கு  இடமில்லை  சிந்திக்க  வைப்பவர்களை  எளிதாக  முட்டாள் பயலே 
என்று சொல்லிவிட்டு  கச்சல்  தண்ணீரையே  குடிக்கும்  அறிவாளி  அவன்.

இப்படியான  ஒரு காலத்தில்  தோன்றி  அவலங்களை அறிவீனங்களை  ஒழித்து கட்டிய 
மாமனிதரே  ராஜாராம்  மோகன்ராய்  வங்கத்திலே 
ஒரு பெரிய  செல்வந்தர்வீட்டில் பிறந்து  ஆங்கில 
நாடுசென்று படித்து பட்டம்பெற்று  அறிவின் அறைகளை  விசாலமாக்கிய  மாமனிதர்
உடன்கட்டையேறுதல்  என்ற  கொடிய  வழக்கத்தை எதிர்த்து  போராடி வென்றவர் 
கைம்பெண்களை  காப்பாற்றிய  மகான் - இது எங்கள்  மதச்சடங்கு  கொள்கை 
கடவுள் அருளியது இதில்  நீ தலையிடாதே  என்ற அறிவிலிகளின்  கருத்துக்களை தனது  அறிவம்பால் 
தாக்கி  வென்றவர்  ராஜாராம்  மோகன்ராய்  - நீயொரு  முட்டாள்  (லூசுப்பயலே ) என்று  மொழிந்த  லூசுகளை லூசாக்கியவர் (இளக்கியவர் ) கொடுமையை  ஒழித்துக்கட்டியவர்  சிந்தி என்று சொல்பவனை இளக்காரம்  செய்வது  மனித குலத்தில்  என்றும் இருந்துவரும் குறைபாடுகளிலொன்றே 
அன்றைய  காலத்தில்  ஒரு  புரட்சி கருத்தை சொல்லி  சிந்திக்க வைப்பது  மிகவும்  கடினமான 
காரியம்  அதற்கு துணிவும் வேண்டும்  திறமையும்  வேண்டும்,  சகல  வளமும்  அவரிடம் இருந்ததனால்   வென்றார்.  இன்று  சிந்திக்க சொல்பவர்களை கொலைவெறியுடன்  பார்க்கும் 
உயிர்கள்  நிறைந்த காலம், கொலையே  செய்துவிடுவார்கள்,  மனிதாபிமானமற்ற  வழக்கங்களை  கையில் கொண்டிருப்போர் . படுபாதக தீர்ப்புகள்  சிலவமயம் நிரபராதிகளையும்  எமலோகம்  அனுப்புகின்றது என்பதை  காண்கையில்  இளகிய மனங்கள் மிகவும்  வேதனையடைகின்றது 
                                         இன்பமே  சூழ்க எல்லோரும் வாழ்க.
ம.இரமேசு







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக