தொன்மார்க் (டென்மாக்) சுற்றும் முகநூல்
டேனிஷ் மக்கள் உழைப்பை மட்டுமே தெய்வமாக நம்புவார்கள் தேவாலயம் ( சர்ச்சுக்கு )போக மாட்டார்கள் கடவுள் நம்பிக்கை குறைந்தவர்களே கூடிய விகிதாச்சாரம் - வயதானவர்களே
சேர்ச்சுக்கு செல்பவர்கள், டேனிஸ்காரர்கள் கத்தோலிக்க , புரோட்டஸ்தாந்த் மதங்களை சார்ந்தவர்கள், யோகொவா என்றும் அண்மைக்காலங்களில் சிலர் வீடு வீடாக சென்று பரப்புரை செய்கின்றார்கள் - மிகவும் நட்பாக பழகக்கூடியவர்கள் பெரும்பான்மை டேனிஷ் மக்கள்,
துவேசிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள் - தமிழர்கள் சோமாலியர்கள் துருக்கியர்கள் பாலஸ்தீனியர்கள் அரேபியர்கள் கொசோவியர்கள் போஸ்னியர்கள் ஆப்கானிஸ்தானியர்கள் பாகிஸ்தானியர்கள் சீக்கியர்கள் (சொற்பமாக ) என்று பல்வேறு நாட்டினர் வாழ்கின்றார்கள்
துருக்கியரே முதலில் குடியேறிய அந்நியர் வேலைக்காக வந்து பின்
குடும்பங்களை அழைத்து பெருகினார்கள் அது டேனிஷ் மக்களுக்கு அவர்கள்பால்
வெறுப்பை தந்தது மட்டுமின்றி இணைவாக்கம் செய்யாததும் காரணம் - 1986 இல் கூடுதலாக தமிழர்களும் ஈரானியர்களும் வந்தார்கள் பின்னர்1992 களில் யுகோஸ்லாவியா மாநிலங்களில் இருந்து அகதிகளாக வந்தார்கள் ஏறத்தாழஅதே சமயம் சோமாலியர்களும் பெருக்காய் வந்து குவிந்தார்கள்
இங்கே வந்த அகதிகளில் நம்மவர்களே படித்து நல்ல நிலைகளில் சிறப்பாக வாழ்பவர்கள் அதையிட்டு டெனிஸ் மக்கள் மிகவும் மகிழ்கின்றார்கள் தமிழர்கள் பண்பானவர்கள் கெட்டிக்காரர்கள் நட்பானவர்கள் என்று டெனிஸ் மக்கள் மதிக்கின்றார்கள்.
யூலண்ட், சேலண்ட் , புயின் , லோலண்ட் , லாங்கலாண்ட், போண்ட்கொல்ம் என டென்மார்க் நிலப்பரப்புகள் அழைக்கப்படுகின்றது இதில் யுலண்ட் நீண்ட பெரியநிலப் பரப்பு , புயின் தீவு லாங்கலாண்டும், சேலண்ட்டும் லோலண்டும் அகிதே , கோப்பென்ஹாகன் தலை நகரம் சேலண்டில் அமைந்துள்ளது அனைத்து இடங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள் போன்ட்கொல்மில்
வாழ்கின்றார்களோ என்பது சரியாகத் தெரியவில்லை யுலண்ட் பிரதேசத்திலேயே அதிகம் தமிழர்கள்
வாழ்கின்றார்கள் கேர்ணிங் கொல்ஸ்ரபுறோ ஸ்ரூவர் நகரங்களில் நிறைய தமிழர்கள் வாழ்கின்றார்கள்
நாட்டின் முக்கிய ஏற்றுமதியாக பால் உணவுகள் மற்றும் இறைச்சி விளங்குகின்றது நடு நிசியிலும் காந்தி சொன்னமாதிரி அழகிய பெண் தனியே வீதியில் செல்வாள் யாரும் நெருங்க மாட்டார்கள்
அத்தகைய பண்பாடு உள்ள நாட்டினர் வெளிநாட்டு விசமிகள் சில சமயம் அசிங்கமான செயல்கள் செய்து சிறை செல்வதுண்டு
பெண்ணுக்கு ஆபத்தென்றால் டேனிஷ் ஆண்கள் புலியாய் பாய்ந்து எம்ஜிஆர் போல்
காப்பற்றுவார்கள் அது எந்தப் பெண்ணாக இருந்தாலும் , உதவி கேட்பவர்களுக்கு முடிந்தவரை நியாயம் என்று கருதினால் உதவுவார்கள் சோம்பேறிகள் பிச்சைகாரர்கள் இல்லாத நாடு
போதைவஸ்த்து பாவிக்கும் பேர்வழிகள் எப்போவாவது ஸ்டேசன்களில் நின்று தண்டுவதுண்டு எவரும் காசு கொடுக்கமாட்டார்கள் அவர்களே ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கால் என்பதுபோல்திருட்டுக்களில் ஈடுபடுவதுண்டு தவிர சில வெளிநாட்டினரும் திருடுவதுண்டு, நத்தார் காலங்களில் விடுமுறைக் காலங்களில் திருட்டுக்கள் நடைபெறுவதுண்டு அநேகமாக மாட்டுப்படுவார்கள்
ஆளைவைத்து அடிப்பது வெட்டுவது போன்ற செயல்கள் டென்மார்க்கில் கிடையாது அபூர்வமாக நடக்கலாம் , பழிவாங்கல் எண்ணங்கள் டெனிஸ் மக்களிடம் இல்லை என்றே சொல்லலாம் எங்காவதுஒன்று இரண்டு நடக்கலாம் , நேர்மையானவர்கள் டேனிஷ் மக்கள் சகல பங்கீடுகளும் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் , கார் விற்பனை செய்பவர்களிடம் கவனமாக
இருக்க வேண்டும் அவர்களே சற்று ஏமாற்றுவார்கள், கையூட்டு கமிசன் எதுவும் இல்லை - நகரசபை ஊடாகவே அனைத்தும் வழங்கப்படும்.
அலுவலக வேலைகளை பொறுப்புடன் 100% மக்களுக்கு செய்வார்கள் , யாரையும் வேண்டுமென்று காக்க வைப்பது இழிவாக நடத்துவது கிடையாது எல்லாம் ஒழுங்காகா நடக்கும் மருத்துவத்துக்கு அட்டை வழங்கப்படும் மருந்தை அப்போரிக்கில் (மருந்தகம் ) பணம் செலுத்தி வாங்கவேண்டும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் யாவும் இலவசம் .
விடுமுறை நாட்களான வெள்ளி மாலையிலிருந்து ஞாயிறு காலைவரை
குடித்து வெறித்து மகிழ்வாக இருப்பார்கள் திங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதையிட்டு ஞாயிறு அன்று பெரிதாக மது அருந்தி வெறிக்க மாட்டார்கள் ஞாயிறை நண்பர்கள் உறவினர்களிடம் உலாத்தப் பயன் படுத்துவார்கள் , நடிகனுக்கு பதாகை (கட்டவுட்) வைப்பது பாலூத்துவது போன்ற அடிமுட்டாள் வேலைகளை செய்வதில்லை நடிகர்கள் இசைக்கலைஞர்கள் தலைகிறுக்கி பேசுவதுமில்லை - டேனிஷ் மக்கள் பிறர் கருத்தை உன்னிக் கேட்டு மரியாதையாக தமது கருத்தை பண்பாக முன்வைப்பார்கள் படித்தவன் நான் என்று தலைகிறுக்கி கல்லாதாரை மட்டமாக நினைக்கும் நினைப்பு டெனிஸ் அறிஞர்களிடம் இல்லை
பெரிதாக கல்வித்தகமை இல்லாதவர்களுடனும் மரியாதையுடன் சிரித்துப் பேசி பழகுவார்கள் மதிப்பார்கள் .
தங்கள் மொழியில் உரையாடுவதையே என்றும் பெருமையாக கருதுவார்கள் வேற்று மொழிகளை கலந்து பேசுவது அறவே கிடையாது - நாய் வளர்ப்பதை மதிப்பாக எண்ணுவார்கள்
நாய்கள் மீது கொள்ளை அன்பு அது போடும் கழிவை கையுறைகளை பாவித்து அள்ளி குப்பை போடும் கருப்பு பையில் போட்டு குப்பை தொட்டியில் போடுவார்கள், குப்பை தொட்டிகள் மூடியுடன் ஆங்காங்கே
இருக்கும் நகரை சுத்தப்படுத்தும் நகரசபையின் வண்டிகள் அதிகாலை 4 மணியிலிருந்து முற்பகல்11 க்குள் நகரின் குப்பைகளை அள்ளி அனைத்து இடங்களையும் சுத்தமாக்கி விடும் - குப்பைகளை போட கடைகளில் பைகள் விற்பார்கள் அதற்குள் குப்பைகளை போட்டு பொதுவாக அமைக்கப்பட்ட குப்பைத்தொட்டிகளில்போடவேண்டும் பைகளை நன்றாகக் கட்டவேண்டும் போத்தல்கள் போட தனியே உலோகங்கள் போட தனியே பிளாஸ்டிக்குகளை போட தனியே என்று குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டு எதை எங்கே போடவேண்டும் என்று படம் வரைந்து எழுதப்பட்டிருக்கும்.
பழைய உடுப்புகளை போட ஒரு தொட்டியுண்டு அதை எடுத்து கழுவி சீர்செய்து ஆபிரிக்க நாடுகளில் வறுமையில் வாடுவோருக்கு அளிப்பார்கள், இரண்டாந்தர பழைய சாமான்கள் விற்கும்
நகரசபை கடையிலும் பழைய ஆடைகள் சீர்செய்து விற்பார்கள் தனியாக வாழ்ந்து இறந்தவர்களின்
உடைமைகள் நகரசபையால் எடுக்கப்பட்டு அக் கடைகளில் மலிவாக விற்கப்படும் கோப்பைகள் கரண்டிகள் சோடனை சாமான்கள் என பலதும்.
அவித்த உருளைக்கிழங்கும் பன்றி இறைச்சி மாட்டு இறைச்சி கோழி இறைச்சி போன்றவைகள் முக்கிய உணவுகள் அதிகமாக இறைச்சிகளை வாட்டியே உண்பார்கள்
மீன் இறால் மிகவும் விலை மாலை 6இலிருந்து 8க்குள் முக்கிய உணவு நேரம் அப்பொழுதே
சூடான சாப்பாடு உண்பார்கள் காலையிலும் மதியத்திலும் தவிட்டுப் பாணை உண்பார்கள் அதை
டேனிஷ் மொழியில் றூபுறோத் என அழைப்பார்கள் ஒவ்வொரு நாளும் பச்சை இலை குழைகளை தக்காளியுடன் சேர்த்து தொடக்கவுணவாக உண்பார்கள் (சலாட்) பின்பே முக்கிய உணவை உட்கொள்வர் உண்ணும்போது தொடர்ச்சியாக உண்ணமாட்டார்கள் ஒவ்வொரு வாய்க்கும் இடைவேளை எடுத்து
வைன் அல்லது பியரை ஸ்கோல் என்று சொல்லி உராய்ந்து குடித்துவிட்டே உண்பார்கள் வீடுகளில்விழாக்களில், வேலை செய்யும் இடங்களில் உண்ணும் போது ஏதாவது ஒன்றை படித்தபடிஉண்பார்கள் ரெயிலில் பயணிக்கையில் அனேகமாக புத்தகம் ஒன்றை மேய்ந்தபடி பயணிப்பார்கள்
இனிப்பானவற்றையும் கசப்பானவற்றையுமே விரும்பி உண்பார்கள் உறைப்பை விரும்பார்கள் ஒரு சிலர் இன்று காரம் உண்பவர்களாக இருக்கின்றார்கள் - ஒரு பியரை வாங்கிக் கொடுத்தால்
உயிருள்ளவரை மறவார்கள், பியரும் இசையும் உதைபந்தாட்டமும் என்றால் போதும் மிகவும் மகிழ்வார்கள் இரசிப்பார்கள், பியர் டென்மார்க்கின் தேசிய பானம் - இசைவிழாக்களில் மரண வெறியுடன் சேற்றில் விழுந்து கிடப்பார்கள், தங்கள் நாட்டு பொருள்களையே விரும்பி வாங்குவார்கள் அது உணவோ வேறு எதுவோவானாலும் அந்நிய மோகம் இல்லாதவர்கள் - ஊர்களை, நாடுகளை சுற்றிப்பார்ப்பதில் மிகுந்த நாட்டமுடையவர்கள் படகில் பயணிக்க விரும்புவார்கள் - பணக்காரர்கள் அநேகமாக படகு வைத்திருப்பார்கள் வசந்தகாலங்களில் கடலில் படகுகள் கோலமிடும் அழகு அருமை.
.
நிச்சயித்த திருமணங்கள் டேனிசாரிடம் இல்லை அதெல்லாம் வலது குறைந்தவர்கள் செய்வது என்று சொல்லி சிரிப்பார்கள் காதல் செய்தே மணப்பார்கள், காதலிக்க தெரியாவிடில் நீ என்ன ஆள்
என்று கிண்டல் செய்வார்கள் . பயண சீட்டோ வேறு எதுவோ வாங்க ஒழுங்காக வரிசையில் நிற்பார்கள் முண்டியடிப்பது கண்டதில்லை .
பொருளாதார நோக்கிற்காக சேர்ந்தே வாழ்வார்கள், காரணம் மணமுடித்தால் ஒருவர் வேலை செய்தால் மற்றவர் வேலை அற்றிருந்தால் வேலை இல்லாதவருக்கு உதவிக் கொடுப்பனவு கிடையாது அதனாலேயே மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்வது. இதை அறியாத நம் கமலகாசனும் ஏனையவர்களும் அது ஏதோ எடுப்பு அறிவுத்தனம் என்று நம்பி நம் நாட்டில் தங்களை அமெரிக்க ஐரோப்பியராக கருதுவது வெள்ளையர்கள் போல் வாழ முயல்வது நகைப்புக்கு வழியாகும். வான்கோழி உயர உயர பறந்தாலும் கொக்காகுமா ? ஆகாது இல்லையா.
குலம் கோத்திரம் சாதி பார்ப்பது நாம யாருண்ணு தெரியுமா என்றெல்லாம் பேசுவதில்லை
அவரவரும் தனது சோலியை பார்ப்பார்கள், மற்றவன் காற்சட்டை மிதந்து கிடக்குது, அவள்
அந்த உடையில் வந்தாள் இந்தச் செயினை போட்டாள் என்று பேசுவதில்லை - நம்பிக்கையான
நண்பர்கள் உறவினர்களுடன் மட்டும் புறம் பேசுவார்கள் - டேனிஸ் குடும்பங்களுக்குள் நிறையவே கருவாட்டு வாசமுண்டு(பிணக்குகள்) கருத்துவேறுபாடு வந்து பிடிக்கவில்லை என்றால் மரியாதையாக விலகுவார்கள் பின்னர் நண்பர்களாக பழகுவார்கள் பிரிந்தவரில் ஒருவர் விழாவுக்கு அழைத்தால் சென்று பண்பாக இருந்து கொண்டாடி மகிழ்வார்கள் - விழாக்களில் குழப்பம் செய்தவர் யாராக இருந்தாலும் தான் நடத்தும் அடுத்த விழாவுக்கு அழைக்கமாட்டார்கள் மன்னிப்பு கேட்டால் மன்னிப்பார்கள் ஆனால் அந்நபரில் கவனமாக இருப்பார்கள். பெருந்தன்மையும் அறிவுப் பக்குவமும் நிறைந்தவர்கள்.
எதையும் 100 % சரியாக முறையாக அனுபவிப்பார்கள் - தனது வசதிக்கு அப்பாற் பட்டதை நினையார்கள் - மகனோ மகளோ காதல் செய்வதை அறிந்தவுடன் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவார்கள் அதை பெருமையாக சொல்லி மகிழ்வார்கள், அந்நாளை கேக் செய்து உண்டு மகிழ்வார்கள் - குழந்தையை கொடுத்துவிட்டு ஏமாற்றி ஓடும் அசிங்கத்தை டேனிஷ் ஆண்கள் செய்யமாட்டார்கள் ஒன்றாக வாழ்கையில் மிகுந்த அன்புடன் கைகோர்த்து வீதியில்நடப்பார்கள் முத்தமும்இட்டுக்கொள்வார்கள் அதையாரும்
வேடிக்கை பார்ப்பதில்லை பார்ப்பவர்களை காட்டுமிராண்டிகள்,
பட்டிக்காடுகள் என்பார்கள், தாம் டெனிஸ்காரர் என்று சொல்வதில் பெருமை கொள்வார்கள் சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாழ்வின் இன்பங்களையும் அணுவணுவாக உருசிப்பார்கள். - பணத்துக்கு
அவாப் பட்டு மேலதிக நேரங்கள் (ஓவர் டைம் ) உழைக்க மாட்டார்கள் வாழ்கையை அனுபவிக்க வீட்டுக்கு விரைவார்கள் - காதலியை(துணைவி) தனது நாட்டில் பிடிக்க முடியாது என்னும் பட்சத்தில் தாய்லாந்து பிலிப்பைன் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று நீண்ட கூந்தல்கொண்ட அழகியை மணந்து டென்மார்க்கிற்கு அழைத்து வந்து இன்பமாக வாழ்வார்கள் . ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்கள் வேலையால் வீடுவந்ததும் உடற்பயிற்சி நிலையத்துக்கு (ஜிம்) ஓடுவார்கள் . பெரிய அழகிகள் உடலை கட்டுமஸ்த்தாக எம்ஜிஆர் போல் வைத்திருக்கும் ஆண்களையே காதலிப்பார்கள் .
முன்பு நிறைய இந்திய மாலுமிகள் நான் வசிக்கும் நகருக்கு வருவார்கள் அவர்களைக்கண்டு கதைத்து வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்தேன். இப்போ அதிகம் வருவதில்லை தமிழ்நாடு கேரளா பாம்பே கல்கத்தா கோவா பஞ்சாப் மாலுமிகள் எனது வீட்டுக்கு வந்து மகிழ்ந்து சென்றவர்கள் அவர்களின் முகவரிகள் உண்டு மிகவும் மகிழ்வு தந்த காலங்கள் அவை.
சகல தேவைகளுக்கும் சேவைகள் செய்ய மாநகர சபையிலே பகுதி பகுதியாக அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு காரியம் நடக்கும், வருவாய்க்கேற்ப வரி கழித்த பிறகே சம்பளம் வங்கிக்கு செல்லும்
ஆண்டில் 5 வாரங்கள் விடுமுறை எல்லோருக்குமுண்டு - வேலைசெய்தால் விடுமுறைக்கான கொடுப்பனவை சம்பளத்தில் சொற்பமாக மாதந் தோறும் பிடித்து வைத்து பெருந்தொகையாக பின்னர் கையளிப்பார்கள், சம்பளம் வங்கியில் சரியாக குறித்த தேதியில் விழுந்துவிடும் சில நிறுவனங்கள் 2 கிழமைகழுக்கு ஒரு தடவை என்று சம்பளம் கொடுப்பதுண்டு , மாதச் சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களுமுண்டு அனேகமாக அரச சார்பு நிறுவனங்கள் மாதச் சம்பளமே கொடுப்பது வாடிக்கை .
நிறைய பீசாறியாக்கள் உண்டு இளையவர்கள் பீசாவை விரும்பி உண்பார்கள் துருக்கியர் பாகிஸ்தானியர் அரேபியர் போஸ்னியர் கொசோவோக்காரர்கள் தமிழர்கள் என வெளிநாட்டினர் அதிகமாக
பீசா கடை நடத்துபவர்களாக இருக்கின்றார்கள் - கடலில் தூண்டில் போட்டு மீன் பிடிக்க அனுமதி வேண்டும் (லைசன்ஸ் ) சகல தொழிலுக்கும் படிப்புண்டு மதிப்புண்டு தொழில் வேற்றுமை சாதிப் பாகுபாடுகள் அறவே இல்லை - பொது மலசல கூடங்களை சுத்தமாகப் பேணுவார்கள் தனக்கு பிறகு வருபவரும் தன்னைப்போல் சுத்தமான கழிவறையையே விரும்புவார் என்ற உணர்வு அறிந்து கடமை முடிந்தபின் கழிவறையை ஒழுங்காக சுத்தம் செய்துவிட்டு செல்வார்கள் - தனது அலுவல் முடிஞ்சு போச்சு என்று சுத்தம் செய்யாது ஓடமாட்டார்கள் - சகல இடங்களிலும் இயற்கை உபாதையை கழிக்க கழிவறைகள் கட்டப்பட்டிருக்கும், பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள் - குற்றவாளிகளை காவலர்கள் அடிப்பதில்லை அடிக்க அனுமதியுமில்லை தனி மனிதவுரிமை தன்மானத்துக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த காவல் துறையும், மக்களும் - குற்றவாளி திமிறி ஓட முனைந்தால் மட்டுமே பூட்டு போட்டு மடக்குவார்கள் - காவலர்கள் ஆசிரியர்கள் பெரியவர்கள் எவரும் எளியவர்களுக்கு கன்னத்தில் அறைவது குத்துவது உதைவது இல்லை அப்படி செய்தால் காவலருக்கு சிறையுண்டு - ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு அடிக்க, திட்ட அனுமதியில்லை எங்கும் எதிலும்,பொறுமையும்,நயமும் காட்டுவார்கள் அவ்வாறே பயிற்றப்படுகின்றார்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தியே சேவையாற்றுகின்றார்கள். மாணவர்களை கேள்விகள் கேட்க்க அனுமதிக்கின்றார்கள் அவர்களின் குறும்புகளை இரசித்து நட்பாக மாணவர்களை,வழிநடத்துகின்றார்கள்அதனால் மாணவர்களும் பாடசாலைக்கு செல்ல மகிழ்கின்றார்கள் - காவலர்களிடம் ஒழுங்காக செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டால் ராஜா போல் நடத்துவார்கள் மொத்தத்தில் அற்புதமான அமைதியான நாடு .
ம.இரமேசு - தொன்மார்க்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக