ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

saathi

இந்த  பிள்ளைகளில்  எவர்  என்ன  சா - அறியமுடிகின்றதா  இவர்களில்
தேவர்  யாரு  கவுண்டர் யாரு  பிராமணன் யாரு  வன்னியன் யாரு
வண்ணார் யாரு அம்பட்டர் யாரு  வெள்ளாடன் யாரு  கரையான் யாரு
கள்ளர் யாரு  நளவர் யாரு பள்ளர் யாரு  பறையன் யாரு 
யாரு யாரு  எல்லோரும் மனிதர்களாகவே  எனக்கு  தெரிகின்றது
இவர்கள்  வளர இவர்களின்  உறவினரே நீ இன்ன --- என்று  புகட்டி
கெடுக்கின்றார்கள்   இவர்களுக்குள்  நஞ்சை
ஊட்டி  பிரிவினைக்கு  வழி வகுக்கின்றார்கள் அவனோடு  நீ
சேராதே இவனை வீட்டுக்கு  கூட்டி வராதே  அவன் தந்தால்
வாங்கிச்  சாப்பிடாதே  அவன்  அது  இவன் இது  நாங்கள்
வானத்திலிருந்து  குதித்தவர்கள்   கடவுளுக்கும் மேல் என்பார்கள்

தமிழரின் இத்தனை  அழிவுகளுக்கும்   இழப்புகளுக்கும்  அடி ஆழம்
நமக்குள்  தூங்கும்  வர்ணப் பற்றே - எல்லோர் கவடுகளும்
கழுவாது விட்டால்  அசுத்தமே - மனதை  கழுவினால்
எல்லோரும்  மனிதர்களே .

  நீ பிறந்த  சில  மணிநேரங்களிலேயே
ஒரு  வெள்ளைக்கார  தம்பதிகளால்  தத்தெடுக்கப்பட்டு  ஐரோப்பாவிலோ
அமெரிக்காவிலோ  வளர்ந்து வாழ்வாயானால் உனக்கு நீ  என்ன  சாதி  என்று
தெரியுமா  - வெள்ளையர்கள்  எந்த தொழிலும் செய்யத் தயார்  எல்லோரையும்
மதிக்கின்றார்கள்  குறிப்பாக  தொழிலாளர்களை  உயர்பதவிகளில்  இருப்போர்
மகிழ்வித்து மதிக்கின்றார்கள்  ஒரு  கூட்டத்தை  கூட்டினால் தொழிளார்களுக்கு 
உணவு  குடி  எல்லாம் வழங்கியே  தங்கள்  திட்டங்களை  அறிவிப்பார்கள் 
நாலடி  தள்ளி நின்று  சின்னவன்  நாளைக்கு  அதைச்  செய்  இதைச்  செய் என்பதில்லை

இத்தனை  அறிவியல்  சாதனைகளை  நிறுவிய வெள்ளையர்கள்  சாதியை  ஏன்
நிறுவ வில்லை  அவர்களுக்குள்ளும்  பல்வேறு  தொழில்  செய்பவர்கள்
இருக்கின்றார்களே  ஒரு மகன்  இஞ்சினியர்  ஒரு மகள்  துப்புரவுத் தொழிலாளி
மற்றவள்  பெயிண்டர்  இன்னொருவன் வெல்டர்  இன்னொருவன்  வைத்தியர்
அம்மா  சட்டத்தரணி  அப்பா  பேருந்துச் சாரதி  எல்லோரும்  மாலையில்  ஒன்றாகக்
கூடி மகிழ்ந்து  உணவு உண்பார்கள்  இப்படியாக வெள்ளை மக்களின்   ஒவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் இருப்போர் பலவிதமான பணியினை ஆற்றுபவர்களாகவிருப்பார்கள்.

நம் தமிழ் குடும்பங்களுக்குள் மட்டுமே அப்பா  இஞ்சினியர்  என்றால்  பிள்ளையும்
அதே  படிப்பு  அல்லது   சட்டம்  மருத்துவம்  என்று  வரவேண்டும்  என்று  எதிர்பார்ப்பு
ஒரு  வெல்டர் ஆனாலோ  வேறு  உடல்வருத்தி செய்யும் தொழில்  செய்தாலோ
கேவலம் எனக்கருதும்  அறிவற்ற மனப்பாங்கு ஆனால்  வெளிநாட்டில் நன்றாக் கூட்டுகின்றார்கள்
காரணம்  காசு   இங்கு கூட்டினாலும்  உள்ளுக்குள்   அங்கே  பற்றிய  மாயை மீளவில்லை.

இதில்  சம்பள ஏற்றத்தாழ்வே  பிரிவினைக்கு  வித்திடுகிறது  மற்று  சீதனம்
என்ற நடைமுறை  போலி மதிப்பு மரியாதை  பார்த்தல் போன்ற எண்ணங்கள்
பிரிவினையை  ஏற்றத் தாழ்வை  தூபமிட்டு வளர்க்கின்றது அதிலே பழகிப் பழகி
அதை உண்மையென்று  நம்பி  அறிவை  முடமாக்கி வாழ்கின்றோம்  எத்தனை
படிப்பு படித்தென்ன  நம்மவர்கள்  அகம்  சாதி  நஞ்சு  கொண்ட  நாகம் என்றே
ஊர்கின்றது  நஞ்சு  நீங்கி  மனம் சமத்துவத்துக்கு மாறுமா  ? உண்மையை
சிந்திக்க  எத்தனை  அறிவாளிகள்  தயார்.

எனது  பாட்டன்  பேராசிரியர்  க .சோமலிங்கம்  சமத்துவம்  வேண்டுமென்று  சாதிக்கு எதிராக
போராடி  தனது  சாதியினரால்  வெறுக்கப்பட்டு  ஒதுக்கப்பட்டு  மனமுடைந்து
இறந்த  போராளி  என்பது எனது தாயாரால் நான்  அறிந்த  செய்தி, அதை  நான் என்றும்
மறப்பதில்லை  -  வாழ்க நலம் .

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக