வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

தாங்குமா தமிழ் நெஞ்சு.

தாங்குமா தமிழ் நெஞ்சு.


காலநிலைக்கு ஏற்ப  உடை அணியவேண்டும்  .
கோவணம்  மானத்தை காக்கும்  துண்டு (உடை)  வெய்யில்  நிறைந்த மண்ணில்
வேறு மேலாடைகள்  தேவையன்று  விழாக்களுக்கு  வேட்டி  அணிந்தார்கள்
சால்வை  போர்த்தினார்கள்  சேர்ட்  அணியும் வழக்கம்  பிந்தி வந்ததே
நாம்  வரலாறுகளை  தெளிவாக அறிந்தாலே  அடுத்த
தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்கலாம் - இங்கே  (டென்மார்க்) அதிகம்  வெய்யில்
எறிக்கும் போது  ஆண்களும் பெண்களும்  சிறிய  காற்சட்டை  அணிந்தே
நடமாடுகின்றார்கள்  காரணம்  காலநிலை  அதற்காகவே ஆடை


 தமிழ்நாட்டில் கோட்டும் சூட்டும் அணிந்து குற்றம் செய்தாலும்
ராஜ மரியாதை கிடைக்கும்  வேட்டி கட்டியவன்  குற்றமே செய்யாவிட்டாலும்
காரணமின்றி  தாக்குதலுக்கு உள்ளாவான்  காவலர்களால், அம்மட்டில்
எண்ணத்தின்  விழிகள்  பழுதாகியுள்ளது தவறான  நினைப்பால்
அல்லாவிடில்  அண்மையில்  வேட்டி  அணிந்து சென்ற  நீதிபதிகளையே
தமிழ் மண்ணில்  விளையாட்டரங்குக்குள்  விடாது தடுப்பார்களா
உடை அணிவது காலநிலைக்கு ஏற்றவாறு தமிழ் நாட்டில் தமிழர்
பாரம்பரிய உடை அணிந்தால்   மறுப்பு  வெறுப்பு என்றால்  எந்தளவுக்கு
அந்நிய  மோகம்  சூறாவளியடித்தாடும் ஆலமரமாய் ஆடுகின்றது.
என்பதை  அறியலாம்.


வெள்ளையர்  மொழி  பேசினால்  மதிக்கிறார்கள் தமிழ் பேசினால்
நின்று பேசவே  அருவருக்கின்றார்கள்  இளையோர்,  குறிப்பாக
இளம் பெண்கள்  தமிழில்  பேசுவோரை  அதீத வியப்புடன் நோக்கும்
தன்மையே  அங்கு காணப்படுகின்றது - ஒரு சமயம்  எனக்கு தெரிந்தவர்
ஒருவர் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை  விடுத்திருந்தேன் அதை எடுத்து
 பேசியவர் ஒரு  பெண் தமிழில் இன்னார்  இருக்கின்றாரா  என்று கேட்டதும்
தொலைபேசி  எதிர்பக்கத்தால் துண்டிக்கப்பட்டது  மறுபடி  அழைத்தேன் 
ஆங்கிலத்தில்  இன்னார் இருக்கின்றாரா  அவருடன் பேசலாமா  என்றதும்
  மிகவும்   மரியாதையுடன் பதில் இனிமையாக வந்தது  இரண்டு தடவைகளும்
  பேசியவர் ஒரே நபர் என்பதை குரலை வைத்து கண்டு பிடித்தேன்  பின்பு  நான்
உரையாடிவரிடம்  கேட்டேன்  தொலைபேசியை எடுத்தவர் யாரென்று
 அவள் எனது மகள்  என்றார் அந்த மனிதர்  உள்ளத்துள்  நினைத்தேன்  நம் மக்கள் 
எப்படி  அசிங்கமான  மனப்பால்  குடித்து வாழ்கின்றார்கள்  என்று
 தமிழ்நாட்டில் தமிழர்களே  தமிழுக்கு எதிரி  எங்கு போய் முடியுமோ, வள்ளுவனும் கம்பனும்  ஔவையும் இளங்கோவும்   மூச்சு விட்மண்ணில்  இன்று  இப்படி ஒரு இழிநிலை தாங்குமா தமிழ் நெஞ்சு.


ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக