வியாழன், 7 ஆகஸ்ட், 2014

உலகில்  பெரியது எது ?

உலகமா
அதை படைத்தவனா
படைத்தவனை  சுமந்தவனா
சுமந்தவன் உறங்கும்  அலைகடலா
அலைகடலை  அள்ளி  கலசத்துள் அடைத்தவனா
கலசம் உருவாக பயன் பட்ட மண்ணா
அம்  மண்ணில்  தலைவைத்து  உறங்கும் உயிரா
அந்த உயிரை  விரலில்  அணிந்தவளா
அவளை தனக்குள் அடக்கியவனா 
அல்லது அவன்  அடங்கிய  தொண்டரா  என்றால்
தொண்டரே  உலகில்  உயர்ந்தவர் 

ம.இரமேசு - அராலி வடக்கு , வட்டுக்கோட்டை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக