வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அடியேன்  சிந்திப்பில்  மலர்ந்த பாடல்

தொகையாறு

புது மலர்கள்  மலர்வதுந்தன் கையாலே
புது உலகும்   விரிவதுந்தன்   கையாலே
நீ அழுதால் உலகம் அழவேண்டும் தோழா
நீ அழுதால்  உலகம் அழவேண்டும்

நாளெல்லாம்  அலையாக  ஓயாது வந்து உழைக்கின்றாய்
 ஒரு நாழிகையேனும் நீ நிலையாக நெஞ்சம் மகிழவில்லை
உன்குருதி குடித்தே ஊர்மெச்ச  வாழுகின்றார்  ஆளுகின்றார்
உன்னையுண்ணும் முதலையென முதலாளி பேர்கொண்டோர் 

காடு சூழ்ந்த  நிறமாக  உன் வீடு கிடக்குதங்கே கிடக்குதங்கே
ஆதவனின் விழிப்பாக  ஆளுபவர்  மாளிகையிங்கே  இங்கே
பொங்கியெழு  புது உலகம்  உன்னை கண்டு விழிக்கட்டுமே
உன் வேர்வைக்குத்   தகுந்தபடி  நியாயப் படி அளக்கட்டுமே

செந்தமிழர்  நிலத்தினிலே  உழைப்பாரை  நிந்திப்பதா நிந்திப்பதா
செந்தோழர் கண்ணீரில் மிதப்பதுவும் நீதியாகுமா  நியாயமாகுமா
ஆள்வோரே  பெரியோரே  அணைத்து  காக்க  வாருங்கள் வாருங்கள்
அகிலம் வாழ உழைப்பவர்கள்  நல்லபடி வாழட்டுமே  வாழட்டுமே

செங்கவி
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக