செங்கவியின் சிந்திப்பில்
உள்ளவர்களுக்கு கொடுத்து புகழை வாங்க முடியாது
இல்லாதவர்களுக்கு கொடுப்பதனால் மட்டுமே நிலையான
புகழை வாங்க முடியும் .
நீ இந்தப் பூமியில் பிறந்தது சிரித்து வாழவே
நடந்ததை நினைத்து அழுது வாழ்வதற்கில்லை.
ஒரு தடியால் கூரையை தாங்கிப்பிடிக்கவும் முடியும்
ஒருவரை அடித்தும் கொல்ல முடியும்
நீ எதற்கு தடியை பயன்படுத்தப் போகின்றாய்.
அன்பும் இரக்கமும் எளியவரை அணைக்கும் குணமும்
இருந்தால் மட்டுமே மனிதன் என்று பெயர் எடுக்கலாம்
வெறும் வித்தகத்தால், பல நூல் மேய்வதால் மட்டும் நல்ல
மனிதன் என்று பெயர் எடுக்க முடியாது.
மலரோ மங்கையோ அழகை இரசிக்கப்பார்
பறிக்க நினையாதே.
ஒருவரை மடக்கி பேசிவிட்டாய் எழுதிவிட்டாய் என்று
புளகாங்கிதம் கொள்ளாதே விரைவில் எங்கோ இடறப்போகின்றாய் .
வாழ்வின் நிம்மதிக்கு பணிவும் பண்பாடும் வேண்டும் இல்லை
இல்லை நிம்மதி .
இரசனை உள்ளவர்களால் மனதை கட்டுப்படுத்துதல் இலகன்று
அவர்கள் செல்வந்தர்களாவது மிக மிக கடினம்
பொறுமையும் மனக்கட்டுப்பாடும் உடையவர்களாலேயே பொருளாதாரத்தில்
உயர்நிலை அடைய முடியும்.
நாக்கை பேச்சுக்கு மட்டுமன்று ஆரோக்கியத்துக்கும் அடக்க வேண்டும் .
அடிமையானவர்களால் எதையும் அடக்க முடியாது
அடக்க முடிந்தவர்களால் எதற்கும் அடிமையாக முடியாது .
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக