காட்சிகள் இரண்டு ( யாவும் கற்பனையே)
காட்சி 1
கணேசஞானவித்தகசர்மாவின் மகன் கண்டியில் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகையில் அங்கு
ஒரு பெண்ணை காதலித்து விவாகம் செய்தார் அப்பெண்ணும் அங்கு ஆசிரியையாக
பணியாற்றியவரே ஒருநாள் பெண்ணின் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டு
அந்த அறிவாளிப் பிள்ளை ஊர்வந்தான் நேரம் மாலை நேரம், தந்தை தாய் முன் அவளை
அழைத்து சென்று, ஐயனே அம்மையே இவள் பெயர் சம்புகா இவள் இந்திய வழியினளாள்
இவளை யான் திருமணம் செய்துள்ளேன் உங்களை கலந்து ஆலோசிக்க முடியாமல் போய் விட்டது
பொறுத்தருள்க - மற்று இது எனது பிரச்சினை இதில் நானே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியவன் நான் இவளை மணமுடித்ததில் உங்களுக்கு சம்மதம் என்றால் வீட்டினுள்ளே
வருகின்றேன் இல்லை வேறு எங்காவது சென்று வாழ்கின்றேன் - மகனே நீ பெரிய தப்பொன்றும்
செய்யவில்லை முறைப்படி இப் பெண்ணை மணம் முடித்துள்ளாய் எங்களுக்கு ஒரு அறிவித்தல்
செய்திருக்கலாம் அவ்வளவுதான் எனது வருத்தம், மிகவும் மகிழ்கின்றேன் உள்ளே செல்லுங்கள்
மருமகள் மாமனார் மாமியார் தாள் பணிந்து எழுந்தாள் மாமியார் கட்டியணைத்து முத்தமிட்டார்
இருவரும் ஆனந்தமாக உள்ளே சென்று உடைமாற்றி நீராட தயாரானார்கள் .
சம்புகா அடுப்படியில் இரவு பலகாரம் செய்ய தயாரான மாமியாரிடம் சென்று தான் உதவுவதாகவும் நீங்கள் இளைப்பாறுங்கள் மாமி என்றாள் இவற்றை மேசையில் இருந்து
ஏதோ எழுதியபடி அரைக்கண்ணால் கவனித்தான் கதிரவன் அவளின் செயல்களை
அந்த அறிவாளி மறுநாள் அறிவாளிகளின் வரிகள் என்று கிறுக்கினான் கவிதை வரைவதாக எண்ணி
அவள் வந்தாள் அவள் குளித்தாள்
அவள் அடுப்படி சென்றாள்
அவள் சுடுதண்ணீர் கொதிக்க வைச்சாள்
அவள் மா குழைச்சாள்
அவள் இடியப்பம் அவிச்சாள்
அவள் சொதி வைச்சாள்
அவள் சம்பல் அரைச்சாள்
அவள் என்னை சாப்பிட அழைச்சாள்
இதுதான் அந்த அறிவாளியின் புதியபாணி கவிதை அதை வீரகேசரிக்கு அனுப்பி வைத்தான்
அந்த அதிகம் படித்த அறிஞன் .
காட்சி 2
என்ன ஐயா உங்கண்டை பெடியன் ஆரோ முன் பின் தெரியாத பெட்டையை கூட்டிக்கொண்டு வந்து வைச்சு குடும்பம் நடத்துறாராம் எண்டு ஊரிலை கதையடிபடுது உண்மையே
மயில்!! எறிக்கிற வெயிலிலை நீர் மேலை மேலை சூட்டை கிளப்பாதையும் போம் போய் உம்முடைய அலுவலைப்பாரும், தெரியாமத்தான் கேக்கிறன் உமக்கு உம்முடைய முன் பின்
தெரியுமோ, நாலு தலைமுறைக்கு முந்திய உம்முடைய கொப்பாட்டன்ரை பேர் என்னெண்டு
தெரியுமே இந்த லட்சணத்தில வந்திட்டீர் குலம் கோத்திரம் சாத்திரஞ் சாதியெண்டு நீங்கள்
எப்பதான் திருந்தப்போரியள், என்ரை மேன் சட்டப்படி திருமணம் செய்தே குடும்பம் நடத்துறான் ஆரையும் இழுத்துக்கொண்டு வந்தில்லை .
நாகரிகம் எண்றது வெறுமனே கல்வீடும் காருமில்லை மற்ற மனிசரையும் மனிசரா மதிக்கிறது
என குருக்கள் சொல்லிக்கொண்டு இருக்கவும் அவர் டவுனுக்கு போகக் காத்திருந்த பேருந்து
வந்தது - குருக்கள் குருகுலத்தில் பிறந்தாலும் அவர் கோயில் பக்கம் போறதில்லை சாமி நம்பிக்கையுடையவர் ஆனால் சாமி என்று கொண்டு மனிதர்கள் செய்யும் ஆடம்பர அட்டகாசங்களை கண்டு வெறுப்பவர் 30 ஆண்டுகள் முன்னர் கல்லூரியில் பணியாற்றுகையில் மாணவியாக இருந்த
பெண்ணை காதல் செய்து முறைப்படி திருமணஞ்செய்து வாழ்பவர் தனக்குரிய சிந்தனை பிறந்த நாள் முதல் மனிதர்கள் அனைவரும் ஒன்றே பேதம் பார்த்தல் ஏதம் என்னும் அறிவுடன் வாழ்பவர் 2 மகன்களும் 2 மகள்களும் அவருக்கு பிள்ளைகளாக பிறந்து திருமணமாகி நல்லபடி வாழ்கின்றார்கள்
தன்னிலும் குறைந்த பிரிவில் அவர் மணமுடித்ததால் அவரை அவரின் ஆட்கள் ஒதுக்கிவிட்டார்கள்
ஆனால் அவர் அதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை அவரின் தந்தை தாய் சகோதர சகோதரிகள் அவரை ஒதுக்கவில்லை அவர்கள் சாதிபற்றி அலட்டிக்கொள்வதில்லை பழக்க வழக்கம் நல்லதா
சுத்தமாக இருக்கின்றாரா இல்லாதவர் கேட்கும் பட்சத்தில் இரங்கி உதவும் குணமுடையவரா போதும், அப்படியானவரே உலகில் உயர்ந்த சாதியினர் - மற்று !!! எவராயினும் அவர்கள் கவடுகளும் அசுத்த நாற்றமுடையதே சோம்பலின்றி சட்டத்துக்கு உட்பட்ட எத்தொழில் செய்பவராக இருந்தாலும் அவருக்கு தலைவாழை விரிப்போம் உழைப்பவரே வானப்பந்தியில் முதலிருக்கைக்குரியவர்கள்
என்னும் கொள்கையில் வாழ்பவர்களே கணேசன் ஐயா பெற்றோர்கள் .
வணக்கம்.
ம.இரமேசு - தொன்மார்க்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக