வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

பின்வரும் குறளுக்கு  அடியேன்  வரைந்த  வரிகள்

"செவியின் சுவையுணரா  வாயுணர்வின் மாக்கள்
  அவியினும்  வாழினும்  என் "

சுடு சோறு  குழம்போடு  சுவைக்கின்ற  தமிழா
கருவோடு  பிறந்த நின்  தமிழுக்கு  காது கொடுடா
நலமான   கருத்தினை    செவிகளால் சுவையடா
இல்லை  நீ இருந்தென்ன வாழ்ந்தென்ன  பயனடா

எருதோடு எருதாக  வாழாதே  என்  தமிழா
ஏற்றங் காண இன்பத் தமிழினை  படியடா
கருத்துடன் தமிழ்க்களம் காணடா கவி பாடியே நீ  ஆடடா
அன்றோ ஏழுலகும் இசையாகும்  உன் பேர் தானடா

பொழுது போக்க  போத்து   சிநேகம் ஏனடா
பழுதாக்கும்  உன்னை பரதேசிகள்  நட்புத் தானடா
மானங் கெடுக்கும்  மதுவை  போதைக்கு நினையாதேடா 
இன்பக் கடலென்னும்  தமிழின் போதையிலே  நீந்தடா 

தமிழ் படித்தால்  ஓடிவரும்  நல்ல பண்பு தானடா
தலை  நிமிர்ந்து  நின்றே மணக்க  வாழலாமடா
பிறந்தான் இறந்தானென்று உலகம் பேசக்கூடாதடா
உன் பிரிவால்  உலகம் துவண்டு அழ வேணுமெடா

(போத்து  = மனக்குற்றம்  உடையோர்
இசை  = புகழ் )

ம.இரமேசு - தொன்மார்க்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக