அமு நாட்டில ஆசாக் காம்பில
(யாழ் பேச்சு வழக்கில் எழுத்து )
உண்மையாத்தான் கேக்கிறன் நாங்கள் என்ன ஆக்கள் எங்களுக்கெண்டு ஒரு கொள்கை கோட்பாடு ஒண்டுமில்லாத ஆக்கள் - ஏனுப்பிடி சொல்றீர் எண்டு நீங்கள் கேக்கலாம், பின்னைப்பாருங்கோ
அமு நாட்டில ஆசாக் காம்பில அகதியா எங்கள இருத்தினாங்கள், எங்களோட பாகிஸ்தான் பங்களாதேஸ் சீக்கியர் லெபனான் எண்டு எல்லா நாட்டுக்காரரும் அந்தக் காம்பில இருந்தாங்கள் எங்கடை ஆக்கள்தான் அதிகம் ஆட்சியும் அதிகாரமும் எங்கண்டை ஆக்களிட்டத்தான் அந்நியருக்கு சிரிச்சு சிரிச்சு சேவகம் செய்யிறதில எங்களை அழிக்க ஆரால முடியும், அந்தக்காலத்திய பாட்டன் பூட்டன் ரத்தம் சும்மாவே!! ஊரில இருக்கையுக்குள்ள ஒருநாள் அப்புவிட்ட கேட்டன் எங்களுக்கு எப்பிடியணை உவ்வளுவு வயலுகளும் வளவுகளும் வந்ததெண்டு, அதெல்லாம் அப்புக்காத்தா உத்தியோகம் செய்த தன்ர தேப்பன் வாங்கிப்போட்டதுகள் எண்டு கிழவன்
சொல்லிச்சுது அடுத்தநாள் ஆச்சியிட்ட அப்பு சொன்னது உண்மையே எண்டு கேட்டன் மனிசி
அங்காலையும் இஞ்சாலையும் பாத்துவிட்டு, கேசுக்கு காசு கட்ட முடியாத சனங்களிட்ட ஏமாத்தி
மிரட்டி பறிச்சுப் போட்டதுகள் தான் உவ்வளவும் எண்டு ஆச்சி உண்மைய காதுக்குள்ள கறந்துது
வெள்ளைக்காரனோட சேந்து சமைச்சு போட்டதும் எங்கடையாக்கள்தான் அதுபோக கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலெண்டு சகல வேலையும் எங்கட சனத்தின்ர கையில மாதம் சம்பளமா 400 அமுனாட்டு காசும் மாதப்படி 55ம் எண்டு எடுத்துக்கொண்டு பெரிய லெவல் அடிச்சுக்கொண்டு திரிஞ்சின, குறிப்பிட்ட ஆக்களுக்கே நெடுக எப்பிடி வேலை குடுக்கலாம் மற்றாக்களுக்கும் சுழற்சி முறையில வேலை குடுக்கவேணுமெண்டு படங்களில எம்ஜிஆர் நீதி நியாயம் கேட்டு குமுறவது போலை குமுறினார் கட்டையண்ணை, மனிசன் நாட்டில நல்லா படிச்சு உத்தியோகம் செய்த ஆள் அவரும் இன்னும் ரெண்டு மூண்டு பேருமே இங்கிலீஸ் பேசி வெள்ளைக்காரரோட நல்லா கதைக்கிற ஆக்கள், இப்பிடி மனுஷன் நியாயங் கேட்டு கதைச்சுபோட்டுதெண்டு அந்தண்டு இரவே கட்டையண்ணைக்கு இருட்டடி போட்டுவிட்டாங்கள் வேலை செய்ற எளிய நாயளாரோ - மஞ்சல் சிவப்பு பச்சை எண்டு மூண்டு நிறத்தில மூண்டுநேர சாப்பாட்டுக்கும் துண்டு தந்திச்சினம்
காலமை சாப்பாட்டை ஆடிக்கு ஒருதடவை ஆவாணிக்கு ஒரு தடவை எண்டே சாப்பிட்டனான்
வட்டரும் ஜாமும் ரெண்டு வட்ட பணிசும் தருவினை அலுப்புச் சாப்பாடு, பகல் என்னென்னவோ
றைச்சியெல்லாம் காச்சி; சொன்னா நம்பமாட்டியள் ஆறு மாசமா நூடில்ஸ்சைத்தான் சாப்பிட தந்தாங்கள் எண்டைக்காவது ஒருநாளைக்கு எண்டு கூட சோத்தை கண்ணிலும் காட்டயில்லை
ஊரில மாட்டு றைச்சிய கண்ணாலுங் கண்டதில்ல, காம்பிலை கண்டது கடியதெல்லாம்
போட்டாங்கள் ஏன் என்னது எண்டு நாங்கள் கேட்டதுமில்லை பொருள்படுத்தினதுமில்லை
மற்ற நாட்டாங்கள் தங்களுக்கு இன்னது வேணுமெண்டு உரிமையா கேட்டு வாங்கினாங்கள் கலாச்சாரம் பண்பாடு கெடாமல் இருந்தாங்கள் குறிப்பா நல்ல ஒற்றுமையோட மதிப்பா இருந்தாங்கள். எங்களோடை ஐயர்மார் மூண்டு பேர் இருந்தவை ரெண்டுபேர் ஒவருநாளும் தயிருக்குள்ள வெங்காயத்தை போட்டுக்கொண்டு வந்து அதை போட்டே சாப்பிட்டிச்சினம்
மூண்டாவது ஐயர் அவர் குசினியில வேலை செய்தவர், மூண்டு தரம் தண்ணிய தெளிச்சாரோ என்னவோ நல்லா போட்டு பிடிச்சார் மச்சத்தை, எட இப்பிடி ஒரு டேஸ்ட் இருந்திருக்குதெண்டு முன்னம் தெரியாமல் போட்டுதே எண்டபடி கோப்பையில கண்ணுங் கருத்துமா இருப்பார், அவர் மச்சம் சாப்பிர்றதை வேடிக்கை பாக்க நாங்கள் அவரை சுத்தி இருந்து கதை கேக்குறது - டேய் சாமியளே மச்சம் சாப்பிட்டிருக்கின தெரியுமே, அதுபோக இடத்துக்கு ஏற்றாப்போல மாறவேணும், நான் என்ன காரணத்துக்காக மச்சம் சாப்பிர்றன் எண்டு கடவுளுக்கு நல்லாத் தெரியும் இதுகளுக்கெல்லாம் முகானியும் பொறுப்பும் அவர்தான் எண்டு சொல்லி சிரிக்கச் சிரிக்க நல்ல பம்பலா கதைப்பார், அந்த இனிய ஐயா - கை நோகுது நிப்பாட்டுறன் இன்னொருநாள் மிச்சத்தை பாப்பமே, நன்றியுங்கோ வாசிச்சதுக்கு அப்பநான் வரட்டே, டாட்டா .
ம.இரமேசு - தொன்மார்க்
´
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக