ஞாயிறு, 27 ஜூலை, 2014

சிறை வென்ற செம்மல்  நெல்சன் மண்டேலா 

பொறுமை ஒரு நாள்  புலியாகும்  பொய்யும் புரட்டும் அதற்குப் பலியாகும்  என்ற கூற்றுக்கு ஒப்ப  பொறுமையாக  இருந்து  எகாதிபத்தியத்தை 
செயலிழக்க  வைத்தவர்  மண்டேலா  என்கின்ற  மாபெரும்  போராளி.

   கறுப்பின  மக்களுக்கு   சுதந்திரக்   காற்றை  சுவாசிக்க வழி  செய்த  ஒப்பாரும் 
மிக்காருமில்லாத்   தலைவர்  மண்டேலா,   அதிகார வெறி பிடித்தோரை  தனது  கருத்துக்களால்  துளைத்தெடுத்தவர்,   சிறையில் போட்டாலும்  ஆசை  வார்த்தைகள்  காட்டிய போதும்  கொண்ட கொள்கையில் குறியாய்  இருந்து  விடுதலை வாங்கி  விண்ணுயர்  புகழை அடைந்தவர்  அகிலம் போற்றும் மண்டேலா.
 
  தன்மானம் கொண்ட தரணியின் தனயன் தாழ்ந்த  ஆபிரிக்காவை  தலை நிமிர்த்திய ஆபிரிக்கத்  தலைமகன்  சின்னஞ் சிறியோரையும்  சேர்த்தணைத்து  செருக்களம்  புகுந்த மாவீரன்,  உலக வரலாற்றில்  நீண்டகால  சிறைவாசத்தை அனுபவித்தவர் 27 ஆண்டுகள்  ஆக்கிரமிப்பு வெறி கொண்ட  ஆங்கிலேய  அரசு  மண்ணின்  மைந்தனை  பொய்வழக்குகள் போட்டு சிறையில் வாட்டியெடுத்தது.

  கல்லை  உடைத்தார்  மண்ணை  அள்ளினார்  காலப்போக்கில்  மாறிடுவார்  மண்டேலா  என்று தப்புக்  கணக்கை  போட்டது வெள்ளையர் அரசு  இறுதியில்  வெட்கித்தலை குனிந்தது -  இனத்தை அழிப்போருக்கு  ஆயுத உதவிகள் கொடுத்து ஈழத்தின் அப்பாவி மக்களை சாகடிக்க கொத்துக்குண்டுகளை  கொடுத்த நாடும்(காங்கிரஸ் கட்சி)  காந்தியம்  மனிதாபிமானம்   என்று  மண்டேலாவுக்கு  நீலிக்கண்ணீர் வடிக்கிறது 5 நாள் துக்கம்  என்றுவேறு  சொல்லியது  பெரிய வேடிக்கை .

கொள்கையில்  குறியில்  உறுதியாய் இருப்போரை காலங்களோ  சிறைகளோ  சித்திரவதைகளோ    ஒன்றும்   செய்துவிட  முடியாது. 
 உடலை  வாட்டலாமே தவிர  உள்ளேயிருக்கும்   உண்மையை  தொடவே முடியாது.

  யாரது மண்ணிலே யாரது நாடகம்  எங்கோ இருந்து வந்த  வெள்ளைக்   கொக்குகள்
  கருப்பு மண்ணை  கொள்ளை கொண்டுவிட்டு  அம்மண்ணின்  உண்மையான  பிள்ளைகளை பிடித்து  கொலை செய்தது  கொள்ளை அடித்தது  வெறிச்  செயல்கள் யாவும் செய்தது.

 அடிமைகளாக்கி  அம்மக்களை கூவி விற்று   வியாபாரம்  செய்தது
   இன்றும்  அங்கிருந்து எழும்பவில்லை  ஆதிக்க வாசிகள்
  ஆபிரிக்காவுக்கும்  ஐரோப்பாவுக்கும்  என்ன சம்பந்தம்,   கொள்ளை செய்ய  புறப்பட்ட  கொடிய ஐரோப்பியர்கள்  அங்கிருந்து அள்ளியது ஏராளம்  மேலும் மேலும்  ஆயுத பலமில்லா நாடுகளிலிருந்து  கொள்ளை செய்யவே  விஞ்ஞான 
முறையில் கொள்ளைச்  செயல்கள் நடைபெறுகின்றன,  அணு அறிவும்  ஆயுத அறிவும்  அப்பாவி நாடுகளை அதன் மக்களை  அடிமைப்படுத்துகின்றது.
 
சித்திரக்கூடத்து  தேன்பாகில் விடத்தை  போடும் இழிசெயல் போல்   வெள்ளையர்கள் அணுகுமுறைகள்   ஆங்காங்கே  நடைபெறுகின்றது   பொய்யான  குற்றங்களைச்   சுமர்த்தி  அமைதியான  நாடுகளை  கொடிய ஆயுதங்களைக் கொண்டு  சுடுகாடாக்கி  தங்கள் 
ஆயுதங்களின்  பலத்தை சோதிப்பதும்  ஆணவத்துடன்  எகிறிக்  குதிப்பதும்  ஒரு புறமிருக்க  மறுபுறம்   மனிதாபிமானம் என்று பொய்  பேசுவதும் 
வெள்ளையர்கள் வாடிக்கையாகின்றது  இதையெல்லாம் அவ்வப்போது  பொங்கியெழுந்து  கண்டித்தவரே   நெல்சன் மண்டேலா. 

20 வயதில் குமிறிய  போராட்டம் 
அவரை  அரசியலுக்குள்  அழைத்து  சென்றது  22 வயதில்  அதிகார வர்க்கத்தினால்  தூக்கி வீசப்பட்டார்  காயம் பட்டார்  பயந்து  போய்விடாது  உரிமைக்குரலை  உயர்த்தினார்  அடிமேல் அடி அடித்தால்  அம்மியும் நகரும் என்ற  மென்முறையில்  பற்று வைத்து  போராடினார்.

  ஆரம்பத்தில்  வன்முறைப்  பாதைக்கு சென்றாலும் அதனால்  பயன் விளையாது என்ற உண்மையை  உணர்ந்து அதை ஆரம்பத்திலேயே கைவிட்டார் 
பொறுமையை  மனதில் குடியேற்றினார்  பொங்கியெழும் ஆணித்தரமான கருத்துக்களால்  வாதம் செய்தார் பெரிதாக அவரை   உலகம்  அறியாத  பொழுதுகளில் -  காந்திய வழியில் போராடினார்   பொறுமைக்கு  நிச்சயம் ஒருநாள்  வெற்றி கிடைக்கும் என்று நிரூபித்துக்  காட்டினார்  
 உலக மக்கள் நெஞ்சங்களில்  குடியேறினார்  அமைதியான 
பூப்போன்ற  புன்னகையால்  காண்பவரைக் கவர்ந்தார்.

  இதனால் அன்னாருக்கு  ஆழ்ந்த  அஞ்சலியையும்  மரியாதையையும்  சமர்பிக்கின்றேன்

ஆக்கம் 
அன்புடன் 
ம.இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக